ஈராக் நாட்டினர் 4 பேர் தலைமறைவு: உச்சப்பட்ச பாதுகாப்பில் ஒடிசா

ஈராக்கை சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் 4 நபர்கள் தலைமறைவானதால் ஒடிசாவில் உச்சப்பட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஒரு ஹொட்டெலுக்கு 4 பேர் காரில் வந்துள்ளனர். மேலும் 3 பேர் காரிலேயே அமர்ந்திருக்க ஒரு நபர் மட்டும் ஹொட்டெலின் வரவேற்பு பகுதிக்கு வந்து, தாங்கள்…

கர்நாடகம் முழுவதும் 50 ஆயிரம் கன்னட திருக்குறள் நூல்கள் விநியோகிக்கத்…

கர்நாடகம் முழுவதும் கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்ட 50 ஆயிரம் திருக்குறள் நூல்களை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என காங்கிரஸ் மாநில பொதுச் செயலர் எஸ்.எஸ்.பிரகாசம் தெரிவித்தார்.  இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியது: இந்தியாவின் தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும். மனித குலத்துக்கான நற்செய்தியாக திருக்குறளை…

பெண்சிசுக் கொலையைத் தடுக்க கடும் கட்டுப்பாடுகள் தேவை: சுப்ரீம் கோர்ட்டில்…

டெல்லி: பெண் சிசுக் கொலையைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக நிபுணர்கள் குழு, சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. பெண் சிசுக்கொலை தொடர்பாக ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழு ஒன்றை அமைத்திருந்தது. தற்போது இந்தக் குழு தங்களது அறிக்கையை…

மதுவுக்கு அடிமையானோர் எண்ணிக்கையில் தமிழகம் தான் முதலிடத்தை பிடித்துள்ளது: ராமதாஸ்

2015-16 ஆம் ஆண்டிற்கான தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின் முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் மதுவுக்கு அடிமையானோரின் எண்ணிக்கையும், அருந்தப்படும் மதுவின் அளவும் பெருமளவில் அதிகரித்திருப்பதாக வெளியாகியுள்ள உண்மை அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு முடிவுகளின்படி…

தமிழக பிரச்சினையை தீர்க்க எந்த கட்சிக்கும் திறமை கிடையாது: 56%…

சென்னை: தமிழகத்திலுள்ள பிரச்சினைகளை எந்த கட்சி ஆட்சியாலும் தீர்த்து வைக்க முடியாது என்று பாதிக்கும் லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பில் பங்கேற்ற பெரும்பாலான மக்கள் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளனர். தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து லயோலா கல்லூரி பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில் தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் தலையானது…

உயர்கல்வி நிறுவனங்களில் சாதி, மதவெறி அரசியலை தடுத்திடுக – திருமாவளவன்…

சென்னை: ஹைதராபாத் பல்கலைக் கழக மாணவன் ரோகித் இறப்பு தேசிய அவமானம் என்றும், உயர்கல்வி நிறுவனங்கள் சாதி மத வெறி மற்றும் பாசிச அரசியலின் கூடாரமாவதை தடுக்க வேண்டும் என்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஐதராபாத் மத்திய…

சுபாஷ் சந்திர போஸுக்கு ‘தேசத்தந்தை’ பட்டம் அளிக்க வேண்டும்: மேற்கு…

நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு ‘தேசத்தந்தை’ என்ற பட்டம் அளிக்கப்பட வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். நேதாஜியின் 119-வது பிறந்தநாளையொட்டி மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜீலிங் நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் மம்தா பானர்ஜி இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் பேசுகையில், சுமார்…

தமிழகத்தின் கல்லூரிகளில் ‘சாதிப் பாகுபாடு’: மாணவர் குரல்கள்

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் கடந்த ஞாயிறன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் எதிரொலியாக இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். ரோஹித் வேமுலா என்ற அந்த மாணவனின் தற்கொலைக்கு சாதிப் பாகுபாடே காரணம் என்று மாணவர்கள் கூறுகின்றனர். தலித் வகுப்பைச்…

14 ஐ.எஸ். ஆதரவாளர்கள் கைது

ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைப் போன்று, இந்தியாவிலும் புதிய பயங்கரவாத அமைப்பை ஏற்படுத்த முயன்றதாக அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் 14 பேரை தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது. இதன்மூலம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவர்கள் நிகழ்த்த இருந்த பயங்கரவாதத்…

வள்ளலார் நினைவு இல்லம்: கொடுத்த வாக்கை அரசு நிறைவேற்ற வேண்டும்:…

பாமக நிறுவனர் இராமதாசு அறிக்கை: ’’தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டில் பதவியேற்ற அ.தி.மு.க. அரசு கடந்த 5 ஆண்டுகளில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை  நிறைவேற்றவில்லை என்பதை பொதுமக்கள் நன்றாக  அறிவர். ஆனால், கடந்த முறை தமிழகத்தை ஆண்ட போது அளித்த வாக்குறுதிகளிலும் பலவற்றை ஜெயலலிதா அரசு நிறைவேற்றவில்லை. அரசின்…

ஜல்லிக்கட்டு தடையை நீக்க முடியாது.. சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து…

டெல்லி: 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை, நீக்க வேண்டும் எனக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட 3 மறுசீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 2011ம் ஆண்டு, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசால், காட்சிப்படுத்துதல் பட்டியலில் காளை சேர்க்கப்பட்ட நிலையில், 2014ம் ஆண்டு மே…

தைவான் நாட்டில் நேதாஜி உடல் தகனம்.. இந்தியாவுக்கும் தெரியும்: இங்கிலாந்து…

லண்டன்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில்தான் உயிரிழந்தார் என கூறி அதற்கான ஆவணங்களை வெளியிட்ட இங்கிலாந்து இணையதளம் ஒன்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது தொடர்பான தகவல்களையும் தற்போது வெளியிட்டுள்ளது. இந்திய விடுதலைக்காக, வெளிநாடுகளில் இருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். ஆனால் நேதாஜி…

அணுஆயுத போர் வந்தால் இந்தியா, பாகிஸ்தானை சமாளிப்பது கடினம்: அமெரிக்கா…

பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தால், இந்தியாவை குறி வைத்து 130 அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகளை செலுத்த பாகிஸ்தானிடம் வல்லமை இருப்பதாக அமெரிக்க காங்கிரசின் ஒரு அங்கமான சி.ஆர்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, தற்போது பாகிஸ்தானிடம்…

தாக்குதல் திட்டம் முறியடிப்பு.. பதன்கோட் அருகே பாக். தீவிரவாதியை சுட்டு…

சண்டிகர்: இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவனை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். மேலும் இரு தீவிரவாதிகள் திரும்பி பாகிஸ்தானுக்கே ஓட்டம்பிடித்தனர். பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமான படைத்தளத்தில் இரு வாரங்கள் முன்பு 6 தீவிரவாதிகள் ஊடுருவி சரமாரி தாக்குதல் நடத்தினர். பதில் தாக்குதல்…

தமிழக மீனவர்கள் 106 பேரையும் விடுதலை செய்த இலங்கை அரசு!

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 106 மீனவர்களையும் விடுவித்துள்ளது அந்நாட்டு அரசு. ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய பகுதிகளை சேர்ந்த 106 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றபோது எல்லைதாண்டி வந்ததாக அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். பின்னர்…

எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு கடும் தண்டனை…

எல்லை தாண்டும் இந்திய மீனவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கான சட்டம் 6 வாரத்திற்குள் அமல்படுத்தப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கை மீனவர்கள் சங்கத்தை சேர்ந்த 3 பேர் தொடர்ந்த வழக்கு கொலும்பு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இலங்கை அரசு சார்பில் ஆஜரான அட்டனி ஜெனரல், எல்லை…

தமிழ்நாட்டின் உரிமையைப் பறித்து கேரளாவுக்கு துணைபோகும் மத்திய அரசு! வைகோ…

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை, திருப்பூர் மாவட்டங்களின் பாசன நீர் மற்றும் குடிநீர் ஆதாரமாக பரம்பிக்குளம் - ஆழியாறு அணை விளங்குகிறது. பி.ஏ.பி. என்று அழைக்கப்படும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், பரம்பிக்குளம் அணை மற்றும் அதன் துணை அணைகளான தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைகள், கேரளாவின் வனப்பகுதியில்…

சிக்கிம் மாநிலத்தை இயற்கை விவசாய மாநிலமாக அறிவித்தார் பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் இயற்கை விவசாய மாநிலமாக சிக்கிம் அதிகாரபூர்வமாக பிரதமரால் அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கிம் இயற்கை விவசாய விழாவினை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, சிக்கிமில் இனி ரசாயனப் பொருட்களின் விற்பனைக்கும் அதைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். சிக்கிம் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும்…

ஆன்றோர்களே… சான்றோர்களே… தலித் மாணவர்களை விஷம் வைத்துக் கொன்று விடுங்கள்!

ஏதோ ஒரு சாதியை பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொண்டு, தன்னையும் “தங்கள் ஆட்களையும்” தவிர மற்ற அனைவருமே தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்துடனேயே வலம் வந்துக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட உங்கள் அனைவருக்கும் வணக்கம். ’தலித் மாணவர்களை விஷம் வைத்துக் கொன்று விடுங்கள்’ என்ற தலைப்பு உங்களுக்கு அதிர்ச்சியளிக்கலாம். மன்னிக்கவும். இது…

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த சென்ற சீமான் கைது

நாம் தமிழர் கட்சி சார்பில் தடையை மீறி பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடத்திய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் பாலமேட்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக தடை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அதன் ஒருங்கிணைப்பாளரான சீமான் அறிவித்திருந்தார். இதனையடித்து மதுரை மாவட்டத்தில் பலத்த பொலிஸ்…

பனாமா கால்வாயில் கவிழ்ந்த படகு.. பஞ்சாபைச் சேர்ந்த 25 இளைஞர்கள்…

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தசை் சேர்ந்த 25 இளைஞர்கள், அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக படகில் சென்றபோது படகு பனாமா கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்ததாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து விசாரிப்பதற்காக பஞ்சாப் அரசு ஒரு குழுவை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளது. கொலம்பியா நாட்டின் துறைமுக நகரமான டர்போ மற்றும் தென் அமெரிக்க நாடானா…

உலகிலேயே அதிக அளவில் பழங்களை உற்பத்தி செய்வதில் இந்தியாவிற்கு 2-வது…

டெல்லி: உலகிலேயே அதிக அளவில் பழங்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவிற்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது. 2015-ம் ஆண்டிற்கான விவசாய புள்ளிவிபரம் அடங்கிய 'horticultural statistics at a glance 2015' என்ற கையேடு ஒன்றை மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் விவசாயத்தில்…

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இனி இலவச சிகிச்சை: முதல்வரின் அதிரடி…

டெல்லியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துவகைகள் இலவசமாக அளிக்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற மேம்பாலம் திறப்புவிழாவில் பங்கேற்ற முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இதனை தெரிவித்துள்ளார். அவர் அந்த பாலத்தை திறந்து வைத்துவிட்டு பேசுகையில், டெல்லி பொதுப் பணித்துறையினரால்…