இறைச்சிக்கு குறிவைத்து முடக்கப்படுகிறதா ஜல்லிக்கட்டு?

கடந்தாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாததால் 80 ஆயிரம் காளைகள் விற்கப்பட்டதாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், மாட்டிறைச்சி சந்தையை குறி வைத்தே ஜல்லிக்கட்டு தடை செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். இந்தத் தடையால் நாட்டு மாடுகள் அடியோடு அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். ஏர் பூட்டி நடத்தப்படும் விவசாயம் முற்றிலுமாகக் கைவிடப்பட்டு,…

இறப்புக்கு காரணமான பெட்ரோல் டேங்க்! நேதாஜி உடலை எரித்த கையுடன்…

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கடந்த 1945ஆம் ஆண்டு, 18ஆம் தேதி இரவு விமான விபத்தில் சிக்கி இறந்ததாக உறுதிபடுத்தப்பட்டத் தகவலை பிரிட்டனை சேர்ந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. இது குறித்து நேதாஜியுடன் பயணித்த மற்றொரு இந்திய தேசிய ராணுவத்தை சேர்ந்த ஹபீபூர் ரஹ்மான்கான் அளித்த…

வெளிநாடுகளில் கலப்படமற்ற தமிழை பேசும் தமிழர்கள்! பாண்டிச்சேரி முதலமைச்சர் நெகிழ்ச்சி

வெளிநாடு செல்லும் போது அங்கு தமிழில் பேசுவது இனிமையாக உள்ளதாக பாண்டிச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் தமிழர்களின் பண்பாடு காப்பாற்றப்படுவதுடன், கலப்படமற்ற தமிழ் மொழியை பலர் பேசுவதாக அவர் மகிழ்ச்சி வெளியிட்டார். பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பன்னாட்டு சிறப்பு மாநாட்டில் உரையாற்றும் போதே…

காரைக்குடி, திருவண்ணாமலையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு!!

காரைக்குடி/ திருவண்ணாமலை: காரைக்குடி அருகே கோவிலுரில் நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. போலீஸ் காவலையும் மீறி காளைகளை உரிமையாளர்கள் அவிழ்த்துவிட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் மேல்சோழங்குப்பம், வீரலூர் ஆகிய பகுதிகளில் தடையை மீறி ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. தடையை மீறி மூன்று கிராமங்களில் இந்த ஜல்லிக்கட்டு விழா…

பாலமேட்டில் சீமானை தடுத்த போலீஸ்- ஜல்லிக்கட்டை அலட்சியப்படுத்திய கட்சிகளை புறக்கணிக்க…

மதுரை: தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டை பெற்றுத்தராமல் அலட்சியப்படுத்திய அரசியல் கட்சிகளை தேர்தலில் புறக்கணிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். முன்னதாக பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் வாடிவாசலுக்குள் நுழைய முயன்ற சீமானை போலீசார் தடுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.…

ஜல்லிக்கட்டுக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்… கடும் கொந்தளிப்பில் தென்மாவட்ட மக்கள்!!

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி தென்மாவட்டங்களில் இன்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன பாலமேட்டில் கிராம மக்கள் அமைதி பேரணியில் ஈடுபட்டுள்ளனர். கறுப்பு கொடி ஏந்தி பேருந்து நிலையத்தி்ல் இருந்து வாடிவாசல் நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டை நடத்தாவிட்டால் சட்டசபை தேர்தலை புறக்கணிப்போம் என்று ஆவேசத்துடன் கூறினர்.…

செம்மொழியான தமிழ் எங்கும் ஆட்சிமொழியாக இல்லை! உலகத் தமிழ்ப் பண்பாட்டு…

செம்மொழியான தமிழ் மொழி எந்த நாட்டிலும் அரசகரும மொழியாக இல்லை என உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அகில உலக தலைவர் வி.சு. துரைராஜா தெரிவித்தார். பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பன்னாட்டு சிறப்பு மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். ஈழத்தில்…

மசூத் அஸார்…. அன்று செய்த தவறுக்கு இன்று அறுவடை செய்கிறது…

சென்னை: மெளலானா மசூத் அஸார்.. இந்தியாவை 1999ம் ஆண்டு நடுநடுங்க வைத்த காந்தஹார் விமானக் கடத்தல் சமயத்தில் மத்திய அரசால் விடுவிக்கப்பட்ட 3 தீவிரவாதிகளில் இவனும் ஒருவன். 1999ம் ஆண்டு நேபாளத் தலைநகர் காத்மாண்டிலிருந்து டெல்லிக்குக் கிளம்பிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டது. முதலில் பாகிஸ்தானுக்கும்…

உலகின் முதல் விமானத்தை கண்டுபிடித்தது இந்தியரா? மறைக்கப்பட்ட வரலாறு

அமெரிக்காவை சேர்ந்த ஒர்வில்லி ரைட்(orville Wright) மற்றும் வில்பர் ரைட் (Wilbur wright) சகோதரர்கள் 1903 ஆம் ஆண்டு உலகின் முதல் விமானத்தை இயக்கி காட்டியபோது அவர்களை உலகமே வியந்துபார்த்தது. ஆனால் இவர்கள் விமானத்தை கண்டுபிடிப்பதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவை சேர்ந்த ஷிவ்கர் பாபுஹி தால்பேட் என்பவர்…

பில்லி, சூனியம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஜார்கண்ட்டில் 5 சிறப்பு…

ஜார்கண்ட் மாநிலத்தில் மூடநம்பிக்கை தொடர்பான தாக்குதல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் ஜார்கண்ட் மாநிலத்தில், மந்திரவாதி என சந்தேகப்படும் நபர்களையும், அவர்களின் குடும்பத்தையும், ஒட்டுமொத்தமாக அடித்துக் கொல்வதும், வீட்டோடு தீ வைத்து எரித்துக் கொல்வதும் அடிக்கடி நடந்துவருகிறது. பல…

இன்று ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கி போராடும் Peta அமைப்பின் கோர…

இன்று ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கி போராடும் Peta அமைப்பின் கோர முகம்.... யார் இந்த பீட்டா? -------------------------- PETA- People for the ethical treatment of animals என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது 1980 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் ஆதரவற்ற…

“பிறருடைய பாரம்பரியம், நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்’

பிறருடைய பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். அவ்வாறு இல்லாவிட்டால் வளர்ச்சிக்கு தடை ஏற்படும் என்றும் அவர் கூறினார். சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை ஒட்டி சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் தேசிய இளைஞர்கள் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த விழாவில் காணொலிக்…

முக்கிய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் கைது தீவிரவாதிகள் நவாஸ்ஷெரீப் மீது கடும்…

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தில் கடந்த 2–ந்தேதி 6 பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். சுமார் 80 மணி நேர துப்பாக்கி சண்டைக்குப் பிறகு 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். அவர்கள் பதுக்கி வைத்திருந்த வெடிப்பொருட்கள் குவியல், குவியலாக கண்டு பிடிக்கப்பட்டன. தேசிய விசாரணை குழு…

ஜல்லிக்கட்டு தடை குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து: தடையை…

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மு.க. ஸ்டாலின், திமுக: ஜல்லிக்கட்டு தடையை நீக்க மத்திய அரசு சட்ட ரீதியாக அணுக வேண்டும். தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜக: பொங்கலுக்குள் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க சட்ட ரீதியாக முயற்சிப்போம்.…

தமிழக கோவில்களில் ஆடைக் கட்டுப்பாடு தொடர்பான உத்தரவுக்கு இடைக்கால தடை

தமிழக கோவில்களில் ஆடைக் கட்டுப்பாடு தொடர்பான உத்தரவுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள செண்பக விநாயகர் கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய மனு மீதான தீர்ப்பில், பாரம்பரியமிக்க கோயில்களுக்குள் ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் போன்ற ஆடைகள் அணிந்து…

ஜல்லிக்கட்டு அனுமதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: அவசர விசாரணைக்கு…

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உச்ச நீதிமன்றம் அவசர மனுவாக ஏற்றுள்ளது. தமிழகத்தில் பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா என்ற சந்தேகம் இருந்த நிலையில், மத்திய அரசு கடந்த 8ம் திகதி, ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.…

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அனைத்துலக சிறப்பு மாநாடு புதுச்சேரியில்…

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் கனடா தலைமையகமும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் இந்தியாவும் இணைந்து 2016 ஜனவரி 16,17 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாள்களில் சிறப்பு மாநாட்டினைப் புதுச்சேரி வள்ளலார் சாலையில் உள்ள வேல். சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடத்துகின்றன.  "அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் எதிர்நோக்கும்…

எந்திரன் (ரோபோ) விவசாயி பாலாஜி !

“ஆயிரம் பேருடைய அறிவும் திறமையும் சிட்டி ரோபோவுக்கு புரோகிராம் செய்யப்பட்டிருக்கு. இவனால எல்லா வேலையும் செய்ய முடியும்.” – பாலாஜியின் அலைபேசியை அழைக்கும்போது எந்திரன் படத்தில் ரஜினி பேசிய வசனம் ரிங் டோனாக ஒலிக்கிறது. பேசத் தொடங்கினால் வார்த்தைக்கு வார்த்தை ரோபோ புராணம் பாடுகிறார். அடுத்த ஆண்டு மலேசியாவில்…

மேட்டூர் அணையில் கர்நாடகா கழிவுநீர் கலப்பதை தமிழக அரசு தடுக்க…

கொங்குநாடு ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வி.எம்.ஜி & வி.எம்.கே திருமண மண்டபத்தில் இன்று (10.01.2016) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் G.K.நாகராஜ் கலந்து கொண்டார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேட்டூர் அணைக்கு கர்நாடகாவிலிருந்து கழிவுகள் கலந்த நீர் வருவதால் அணைநீர்…

பதான்கோட் தாக்குதல்: தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது… பாக்.கிற்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு சாதகமாக செயல்படக் கூடாது என பாகிஸ்தானிற்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமானப் படை தளத்தில் கடந்த வாரம் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள்…

தமிழக கலைத்துறைக்கு கிடைத்த கவுரவம்

உலக அளவில் பார்க்க வேண்டிய சிறந்த 52 இடங்களில் தமிழகத்திற்கு 24வது இடத்தை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அளித்துள்ளது. தமிழர்களுடைய கலைத்திறமைக்கும் பரந்த மனதிற்கும் மதிப்பளிக்க சில சந்தர்ப்பங்களில் இந்தியா தவறினாலும், உலக அரங்கில் மதிப்பளிக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு கிடைத்த பெரிய கவுரவமே. அமெரிக்காவின் முதன்மை பத்திரிகையான ’நியூயார்க் டைம்ஸ்’…

முல்லை பெரியாறு அணையில் கேரள போலீஸ் பாதுகாப்புக்கு தமிழக விவசாயிகள்…

தேனி: முல்லை பெரியாறு அணையில் கேரள கமாண்டோ போலீஸ் பாதுகாப்பில் ஈடுபடுவதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். முல்லைப் பெரியாறு அணையில் நாளை முதல் ஒரு டி.எஸ்.பி., 2 இன்ஸ்பெக்டர்கள், 85 போலீசார் அடங்கிய கேரள சிறப்பு கமாண்டோ போலீஸ் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என கேரள…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. வெளிநாட்டினர் பெரும் ஆர்வம்.. விறுவிறுப்பான முன்பதிவு

மதுரை: ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போனது மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர். இங்கு வருடா வருடம் நடைபெறும் பொங்கல் ஜல்லிக்கட்டு விழாவுக்கு பெரும் திரளான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனதால் பெரும் சோகத்துடன் காணப்பட்ட அலங்காநல்லூர் தற்போது படு பரபரப்பாக காணப்படுகிறது.…