சென்னை: போதையில் 3 போலீசார் ரகளை: பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் போதையில் இருந்த 3 போலீசாரை பொதுமக்கள் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே சாலையோரம் பொதுமக்கள் நடந்து சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனம் ஒன்று தாறுமாறாக வந்துள்ளது. திடீரென்று இருசக்கர வாகனத்தில் வந்த…

அதிமுக ஆட்சியின் ஊழல்களை புத்தகமாக வெளியிட்டுள்ளது தமிழக காங்கிரஸ்!

அதிமுக ஆட்சியின் ஊழல்களை புத்தகமாக வெளியிட்டுள்ளது தமிழக காங்கிரஸ் கமிட்டி. இன்று சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இவிகேஎஸ்.இளங்கோவன். அப்போது மக்களுக்கு விநியோகிக்க தமிழக அரசு செய்த ஊழல்களைப் புத்தகமாக காங்கிரஸ் கட்சி இப்போது வெளியிடுகிறது என்று…

பதான்கோட் தாக்குதல் சம்பவம்: உளவுத் துறை விசாரணைக்கு பாகிஸ்தான் பிரதமர்…

பதான்கோட் விமானப்படைத் தளத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவித் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக இந்திய அரசு அளித்துள்ள ஆதாரங்களைக் கொண்டு விசாரணை நடத்துமாறு பாகிஸ்தானின் உளவுத் துறைக்கு (ஐ.பி) அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, பாகிஸ்தானின் "தி நேஷன்' நாளிதழில் வெள்ளிக்கிழமை வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: இஸ்லாமாபாதில்…

கடன் தொல்லையால் பரிதாபம்.. மனைவி, மகள், செல்லப் பிராணிகளுடன் தற்கொலை…

நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே கடன் தொல்லை காரணமாக குடும்பத்துடன் விவசாயி வெற்றிவேல் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூடலூரை அடுத்த செறுமுள்ளி கிராமம், முக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வெற்றிவேல். இவரது மகள் பாரதி. 11ம் வகுப்பு படிக்கும் பாரதியை…

பதன்கோட் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதிகள் யார் என்று கண்டுபிடிப்பு

பதன்கோட் விமானப்படை தளத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யார் என்பதை உளவுத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பஞ்சாப் மாநிலம், பதன்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தை தகர்க்கும் முயற்சியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2ம் திகதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 இந்திய ராணுவ வீரர்கள் கொள்ளப்பட்டனர்.…

நிபந்தனையுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி.. ஆனால் காட்சிப்படுத்தக் கூடாத விலங்காக…

டெல்லி: காட்சிப்படுத்தக் கூடாத வன விலங்குகளின் பட்டியலில் இருந்து காளை நீக்கப்படாத போதும் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் (ரேக்ளா ரேஸ்) நடத்துவதற்கு அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையில் முக்கிய அம்சங்களில்…

தமிழ்நாடு: சமரசம் உலவும் இடம்?

தமிழ்நாட்டின் நாகைமாவட்டம் திருநாள்கொண்டச்சேரி என்னும் கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து என்கிற தலித் முதியவர் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி முதுமை காரணமாக மரணமடைந்தார். அவரது சடலத்தை வழக்கமாக இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் பாதை மோசமாக இருந்ததால் அருகில் இருக்கும் வழுவூர் என்கிற ஊருக்குள் இருக்கும் சாலை வழியாக இடுகாட்டுக்கு…

மதக்கலவரத்தால் பற்றி எரியும் மேற்கு வங்கம்! காவல் நிலையங்கள் தீக்கிரை

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் மதப்பிரச்சினையால் பற்றி எரிந்துகொண்டுள்ளது. காவல் நிலையங்களே அங்கு சூறையாடப்பட்டுவருகின்றன. முதல்வர் மம்தா பானர்ஜி உரிய நடவடிக்கை எடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதில் தோல்வியடைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. உத்தர பிரதேச மாநில அமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆசம் கான், ஆர்எஸ்எஸ்…

பதன்கோட் தாக்குதலுக்கு பின்னால் இருப்பது ஐஎஸ்ஐ: சொல்கிறார் முன்னாள் சிஐஏ…

நியூயார்க்: பதன்கோட் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இருப்பதாக முன்னாள் சிஐஏ ஏஜெண்ட் ப்ரூஸ் ரீடெல் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்திற்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அத்தனை பாதுகாப்பான விமானப்படை தளத்திற்குள் தீவிரவாதிகள் எப்படி எளிதில் நுழைந்தார்கள் என்பது…

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழிக்க 57% பேர்…

டெல்லி: பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை இந்தியா அழிக்க வேண்டும் என்று ட்விட்டரில் MyVote.Today@myvote_today நடத்திய கருத்து கணிப்பில் 57% ஆதரவு தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமான படை தளத்துக்குள் நுழைந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. இதனைத் தொடந்து மத்திய அரசு…

முதல்வர் வேட்பாளர்கள்: ரஜினி, விஜய், அஜீத்தை தூக்கியடித்த சகாயம் ஐ.ஏ.எஸ்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் புதுமுக முதல்வர் வேட்பாளர்களில் நடிகர்கள் ரஜினி, விஜய்,அஜீத் விட ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு மக்கள் ஆதரவு அதிகம் கிடைத்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர்களுக்குப் பஞ்சமில்லை. அதிமுகவில் ஜெயலலிதா, திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், தேமுதிகவில் விஜயகாந்த், பாமகவில் அன்புமணி ராமதாஸ், மக்கள்…

பதன்கோட் விசாரணைக்கு உதவ ரெடி.. மோடிக்கு போன் போட்டு உறுதியளித்த…

சண்டிகர்: பதன்கோட் தாக்குதல் தொடர்பான விசாரணையில் ஒத்துழைப்பு அளிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு உறுதியளித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டிலுள்ள இந்திய விமானதளத்தில் தீவிரவாதிகள் 4 நாட்கள் முன்பு ஊடுருவினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர்-தீவிரவாதிகள் நடுவே மோதல் ஏற்பட்டது. இந்திய ராணுவத்தை சேர்ந்த 7…

நவாஸ் ஷெரீப்புடன் பிரதமர் மோடி ஒரு கோப்பை தேநீர் அருந்தியதற்கு…

பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானை ஒருபோதும் நம்ப வேண்டாம் என சிவசேனா எச்சரித்துள்ளது. பதான்கோட் தீவிரவாதத் தாக்குதலுக்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் (United Jihad Council-UJC) பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், பாகிஸ்தான்…

ஆயுத உற்பத்தியே ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் முக்கியக் குறிக்கோள்..…

தும்கூர்: இந்திய நாட்டின் பாதுகாப்பில் பிற நாடுகளின் ஆயத்தங்களை மட்டும் நம்பி இருக்க முடியாது. நமக்குத் தேவையான ஆயுதங்களை நாமே தயாரிக்க வேண்டும், இதனை அடையவே மேக் இன் இந்தியா திட்டம் உருவாக்கப்பட்டது எனப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். கர்நாடக மாநிலத்தின் தும்கூர் மாவட்டத்தில் ஹெச்.ஏ.எல் நிறுவனத்தின்…

பதன்கோட் பதிலடி: 5 தீவிரவாதிகள் சடலங்கள் கண்டெடுப்பு.. 1 தீவிரவாதி…

சண்டிகர்: பதன்கோட் விமானதள தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் ஒருவர் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே தீவிரவாதியை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருவதாக மூத்த தேசிய பாதுகாப்புப் படை (என்.எஸ்.ஜி.) அதிகாரி கூறியுள்ளார். பதன்கோட் விமானபடை தளத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடந்த…

ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை அடுத்த மாதம் திறக்கப்படும்: தருண்விஜய் தகவல்

சென்னை: ஹரித்துவாரில் பிப்ரவரி மாதத்தில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படும் என்று பாஜக எம்.பி. தருண் விஜய் சென்னையில் தெரிவித்தார். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு சேவாபாரதி அலுவலகத்திற்கு நேற்று மாலை பாஜக எம்.பி. தருண் விஜய் வருகை தந்தார். அவரை சேவாபாரதி நிர்வாகிகள் வரவேற்றனர். சென்னை உள்ளிட்ட 4…

இந்திய மருத்துவத்தையும் யோகாவையும் இணைக்க வேண்டும்

மக்களின் ஆரோக்கிய மேம்பாட்டுக்காக, இந்திய மருத்துவத்தையும், யோகாவையும் இணைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். விவேகானந்தர் யோகா ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், "பன்னாட்டு யோகா ஆராய்ச்சி மற்றும் அதன் பயன்பாட்டு எல்லைகள்' என்ற மாநாடு, பெங்களூரு நகர மாவட்டம், ஜிகினியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டை தொடக்கிவைத்து…

பஞ்சாப் தாக்குதலில் வீரமரணம் அடைந்த காமென்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற…

பதன்கோட்டில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், காமன்வெல்த் போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்ற பாதுகாப்பு படை வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். பதன்கோட் தாக்குதலில் பலியான சுபேதார் பதேஹ் சிங் (51) 1995ம் ஆண்டு டெல்லியில் நடந்த முதல் காமன்வெல்த் துப்பாக்கிச்சுடும் போட்டிகளில் தங்கம் மற்றும்…

இந்தியாவுக்கான ஆயுதங்களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும்: மோடி பேச்சு

கர்நாடகா மாநிலத்தில் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் உருவாகவுள்ள கிரீன்பீல்டு ஹெலிகாப்டர் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கர்நாடகாவில் உள்ள துமாகுரு மாவட்டத்தில் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பில் கிரீன்பீல்டு ஹெலிகாப்டர் தொழிற்சாலை அமையவுள்ளது.இதன் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு…

மடாதிபதிகளும், துறவிகளும் சமூக மேம்பாட்டுக்காகப் பாடுபடுகிறார்கள்:பிரதமர் மோடி

மைசூரில் ஸ்ரீஅவதூத தத்தபீடத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவமனை திறப்பு விழாவில் பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கும் ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமிகள். மடாதிபதிகள், துறவிகள், முனிவர்கள் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காகவே எப்போதும் பாடுபட்டு வருகிறார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதுகுறித்து மைசூரில் சனிக்கிழமை ஸ்ரீகணபதி சச்சிதானந்த…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் இன்று (சனி) காலமானார். அவருக்கு வயது 92. முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த பரதன் டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தங்கியிருந்தார். அவருக்கு கடந்த மாதம் 7ஆம் தேதி பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சுயநினைவு…

பதன்கோட் தாக்குதல்: லெப். கர்னல் உள்பட மேலும் 4 பாதுகாப்புப்…

டெல்லி: பதன்கோட் தீவிரவாதத் தாக்குதலில் இன்று மேலும் 4 பாதுகாப்புப் படையினர் மரணமடைந்தனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 7 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படைத் தளத்தை நேற்று பாகிஸ்தானிலிருந்த ஊடுறுவி வந்த ஐந்து தீவிரவாதிகள் தாக்கினர். அவர்களைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர…

இந்தியா-பாகிஸ்தான் இடையே அணுசக்தி நிலையங்கள் குறித்த பட்டியல் பரிமாற்றம்

டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே அணுசக்தி நிலையங்கள் குறித்த பட்டியல் ஒரே நேரத்தில் டெல்லியிலும், இஸ்லாமாபாத்திலும் உள்ள தூதரகங்கள் மூலம் பரிமாறிக்கொள்ளப்பட்டது. கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி முதல் இந்தியா-பாகிஸ்தான் இடையே இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று அணுசக்தி நிலையங்களை தாக்கிக்கொள்வதில்லை என்று ஒப்பந்தம் செய்து கொண்டன. எனினும்,…