திருச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிங்களவர்கள் மீது தாக்குதல்

இலங்கையிலிருந்து தமிழகம் சென்றிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட யாத்ரிகர்கள் மீது திருச்சி அருகே கல்வீசித் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அந்தத் தாக்குதலில் அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் சேதமடைந்து, யாத்ரிகர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை புத்தளம் மாவட்டம் ஷிலா என்ற பகுதியைச் சேர்ந்த 184 சிங்கள…

இலங்கை கால்பந்து அணியை வெளியேற்ற ஜெயலலிதா அதிரடி உத்தரவு

நட்பு ரீதியாக கால்பந்து விளையாட்டில் கலந்துகொள்ள தமிழகத்துக்கு வந்த இலங்கை கால்பந்து குழுவினரை அங்கிருந்து வெளியேற்றுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார். இந்த இலங்கை கால்பந்து அணியை தமிழகத்துக்கு வர அனுமதித்ததற்காக இந்திய மத்திய அரசாங்கத்தையும் அவர் கண்டித்துள்ளார். கொழும்பு றோயல் கல்லூரியின் அணியினர் சென்னையில் உள்ள சென்னை…

இந்தியாவால் அவமதிக்கப்பட்ட தமிழ் விஞ்ஞானிக்கு பெட்னா மாநாட்டில் கவுரவம்!

நியூயார்க்: இந்தியாவால் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தமிழ் விஞ்ஞானி சிவா அய்யா Read More

இந்தியா வல்லரசாக சாத்தியமில்லை: பாலகுருசாமி பேச்சு

கோவை: "இந்தியா பொருளாதாரத்தில், வளர்ச்சி அடைந்த நாடாக இருப்பதை விட, மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடாக இருக்க வேண்டும்'' என, தமிழக திட்ட குழு உறுப்பினர் பாலகுருசாமி பேசினார். கோவை, எஸ்.என்.ஆர்., கலை அறிவியல் கல்லூரி வெள்ளி விழா, கல்லூரி அரங்கில் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினர் தமிழக திட்ட…

கலைப் பரிமாற்றத்துக்காக தமிழகம் வந்த சிங்கள மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்

தமிழகத்தின் திருச்சியில் அமைந்திருக்கும் கலைக் காவேரி நுண்கலைக் கல்லூரியில் கலைப் பரிமாற்ற நிகழ்வு ஒன்றுக்காக இலங்கையில் இருந்து சென்ற பள்ளிக்கூட மாணவர்கள் அங்கு ''நாம் தமிழர் இயக்கத்தினரால்'' நடத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையை அடுத்து நிகழ்வின் இடைநடுவில் வெளியேற நேர்ந்திருக்கிறது. இலங்கையைச் சேர்ந்த இரு பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர்…

இந்தியாவில் இப்படியும் நடக்குது போலீஸ் அட்டூழியம்!

அலகாபாத்: உத்திரபிரதேச மாநிலத்தில் தெருவோரமாக நின்று வியாபாரம் செய்து கொண்டிருந்த காய்கறி வியாபாரியை அடித்து துன்புறுத்தியதுடன், அவரை கீழே தள்ளி மோட்டார் வண்டியை நெஞ்சில் ஏற்றி துவம்சம் செய்த காட்சி அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அலகாபாத் மார்கெட் வீதியில் பலர் தள்ளு வண்டிகளை நிறுத்தி வியாபாரம் செய்து…

கஸாப்பை தூக்கிலிடப் போவது யார்?

மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில், பாகிஸ்தான் பிரஜை முகமது அஜ்மல் அமீர் கஸாப்பின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ள போதிலும், அவரைத் தூக்கிலிடப் போவது யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்யவும், அதன்பிறகு இந்திய குடியரசுத் தலைவரிடம் மனுத்தாக்கல் செய்யவும்…

பத்ம விருதுகள் : இந்திய மத்திய அரசு மீது ஜெயலலிதா…

தமிழ் திரையுலகில் மெல்லிசை மன்னர்கள் என்று அழைக்கப்படும் எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் டி.கே. ராமமூர்த்தி ஆகிய இருவருக்கும் பத்ம விருதுகள் வழங்க வேண்டும் என்று தான் அளித்த பரிந்துரையை இந்திய மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆண்டுக்கான பத்ம விருதுக்கு அவர்களது…

தமிழக சிறப்பு முகாமிலுள்ள கைதிகள் 7 பேர் விடுதலை

தமிழகத்தில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி செந்தூரன் என்ற கைதி நடத்திய உண்ணாவிரதத்தை தொடர்ந்து, அங்கு செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த 7 பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்பவை போன்ற சில…

விடுதலைப் புலிகள் மீதான தடை – தீர்ப்பாயத்தில் வாதிட வைகோவுக்கு…

சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை குறித்த வாதங்களை முன்வைக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு டெல்லி உயர்நீதிமன்ர நீதிபதி வி.கே.ஜெயின் அனுமதித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பது பற்றிய தீர்ப்பாயத்தின் அறிவிப்பை கடந்த 18-ந் தேதி வெளியிட்டது. தீர்ப்பாயத்தின் விசாரணையில் கலந்து…

சிங்கள இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி தொடரும் : இந்திய மத்திய…

டெல்லி: தமிழகத்தில் எதிர்ப்பு இருந்தாலும் இந்தியாவில் இலங்கை இராணுவத்துக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்று இந்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பல்லம் ராஜூ அறிவித்துள்ளார். இலங்கையில் ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த சிங்கள இராணுவத்துக்கு தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவின் எந்த மூலையிலும் பயிற்சி கொடுக்கக் கூடாது என்பது…

அதிகாரம் படைத்தவர் பட்டியல்: சோனியா காந்திக்கு 6-வது இடம்

நியூயார்க்:  அமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் அங்கீகாரம் படைத்த 100 பெண்மணிகள் பட்டியலில் இந்தியாவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி 6 வது இடத்தையும், ஜெர்மனி நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் முதலிடத்தையும் பிடித்துள்ளனர். போர்ப்ஸ் பத்திரிகை ஒவ்வோர் ஆண்டும் உலகின் அதிகாரம்…

இலங்கை தூதரகத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் : வேல்முருகன்

"தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பதை நாள்தோறும் மேற்கொள்ளும் ரோந்து நடவடிக்கையைப்போல் செய்து வருகிறது சிங்கள கடற்படை" என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு ஒரே தீர்வு கச்சத்தீவை மீட்பதுதான். இல்லையேல், தமிழக மீனவர்கள் தங்களைத்…

இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க. இரட்டை வேடம்!

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு ஊன்று கோலாகவும் உறுதுணையாகவும் இருந்தது மத்தியில் ஆளும் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசுதான். தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்கத் தவறுவதும் இதே அரசுதான். இலங்கை கடற்படையை கண்டித்து இதுவரை தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என…

சிறப்பு முகாம்களை இழுத்து மூடுக – தமிழக முதல்வருக்கு நாம்…

இலங்கையில் சிங்கள பெளத்த இனவாத அரசின் திட்டமிட்ட இன அழித்தலில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள ஏதிலிகளாக தாய்த் தமிழ் மண்ணிற்கு வந்த நம் ஈழத்துச் சொந்தங்களை வதைக்கும் செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடி, அதில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் அனைவரையும் தமிழக முதல்வர் தலையிட்டு…

ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் “பேஸ் புக்’ கணக்கு

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின், 'பேஸ் புக்' கணக்கு கடும் எதிர்ப்பால் ஒரே நாளில் மூடப்பட்டது. நேற்று முன்தினம் தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'கலைஞர் கருணாநிதி' என்கிற பெயரில், பேஸ் புக்கில் புதிய கணக்கை துவக்கினார். துவங்கிய அன்றே சுமார், 2,700 பேர் அந்த பக்கத்தில் இணைந்தனர். துவங்கிய…

இந்தியா எங்கள் எதிரியல்ல: சீனா அறிவிப்பு

சீனாவின் வெளியுறவு துணை மந்திரி ப்யூ-இங், நேபாளம் மற்றும் பூட்டான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் சீனா திரும்பிய  அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்தியாவும் சீனாவும் நட்புறவு நாடுகளே தவிர எதிரி நாடுகள் அல்ல. கடந்த காலங்களில் இருநாட்டு தலைவர்களிடையே…

விண்வெளியில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றிய சுனிதா வில்லியம்ஸ்

டெல்லி: அமெரிக்க விண்வெளி வீராங்கனையும், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவருமான சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றி இந்தியர்களை பெருமைப்படுத்தியுள்ளார். இந்தியா முழுவதும் இன்று 66வது சுதந்திர தினம் கோலாகலமாகவும், உற்சாகத்துடனும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி சர்வதேச விண்வெளி நிலையத்தில்…

இலங்கைத் தமிழருக்கு சம உரிமை: ஜெயலலிதா வலியுறுத்தல்

இலங்கையில், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்த இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி, இன்று சென்னையில் உள்ள கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய முதல்வர் இந்தக்…

வரலாறு காணாத உச்சகட்ட பாதுகாப்பில் இந்தியா

இந்திய நாட்டின் 66வது சுதந்திரதினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக இந்திய உளவுத்துறை அளித்த தகவலையடுத்து, இந்தியா பூராகவும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, மக்கள் அதிகம்…

ராஜபக்சேவுக்கு விருது கொடுத்து இந்தியா கௌரவிக்க வேண்டுமாம்!

கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே தமது நாட்டு பிரச்சனையை மட்டுமல்லாமல் இந்தியாவின் பிரச்சனையையும் சேர்த்து தீர்த்து வைத்துள்ளார் என்பதால் அவருக்கு உயர்ந்த விருது வழங்கி இந்தியா கௌரவிக்க வேண்டுமாம் இவ்வாறு கூறியுள்ளார் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி. இலங்கை தலைநகர் கொழும்பில் அனைத்துலக பாதுகாப்பு குறித்த…

அசாமில் வன்முறைக்கு இதுவரை 73 பேர் பலி

கவுகாத்தி: அசாமில் மீண்டும் துவங்கியுள்ள வன்முறைக்கு மேலும் நான்கு பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம், வன்முறைக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை, 73 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், கோக்ராஜ்கர் மற்றும் தூப்ரி மாவட்ட எல்லைப் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை எண் 31ல், நேற்று அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அசாமின்,…