பிரதமரை குறை கூற வேண்டாம்: சோனியா

பிரதமர் மன்மோகன் சிங்கை குறை கூற வேண்டாம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டார். கர்நாடகத்தில் அண்மையில் நடைபெற்ற இரு மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதையொட்டி, மண்டியா விஸ்வேஷ்வரய்யா மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நன்றி அறிவிப்புக் கூட்டத்தில்…

மக்களாட்சியா? வாரிசு அரசியலா?

நம் நாட்டுக்குத் தேவை அரசியலமைப்பின்படி செயல்படும் ஜனநாயக ஆட்சியா? அல்லது ஒரே குடும்ப ஆட்சியா? என்பதை வாக்காளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி. வட மேற்கு தில்லி ரோஹிணியில் உள்ள "ஜப்பானிஸ் பார்க்' திடலில் பாஜகவின் பிரமாண்டப் பொதுக்கூட்டம்…

தமிழக மீனவர்களை மத்திய அரசு கைவிட்டுவிட்டது: ஜெயலலிதா

இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாகும் ஏழை தமிழக மீனவர்களை மத்திய அரசு கைவிட்டுவிட்டதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 136 மீனவர்களையும், அவர்களுடைய 29 படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர்…

பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணை அடையுங்கள்: ஷெரீப்பிடம் மன்மோகன் சிங் கண்டிப்பு

தங்கள் மண்ணிலிருந்து செயல்படும் பயங்கரவாதச் செயல்களின் ஊற்றுக்கண்ணை கண்டறிந்து அதை அடைக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை, பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். பயங்கரவாதச் செயல்களுக்கு துணை போவதும், பயங்கரவாத அமைப்புகளுக்கு பயிற்சி, ஆயுத உதவி மற்றும் நிதியுதவி அளிப்பதை…

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் ; 72 மணி நேரத்தில் 3…

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனங்கள் சென்ற கான்வாய் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ராணுவ வீரர் ஒருவர் காயமுற்றார். இதனையடுத்து சனாட் நகர் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் இருந்து 6 கி.மீட்டர் தொலைவில் உள்ள சனாட்டா நகரில் ராணுவ வீரர்கள் தங்களின் வாகனங்கில்…

ராஜபட்சவை சந்திப்பதை தவிர்த்த பிரதமர் மன்மோகன் சிங்

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் வந்துள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அதிபர் ராஜபட்சவை சந்திப்பதை தவிர்த்துவிட்டார். வெள்ளிக்கிழமையன்று ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்ற ராஜபட்ச, இலங்கை திரும்புவதற்கு முன்னதாக, மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசலாம் என்ற எண்ணத்தில் அவரது வருகைக்காக நியூயார்க்கில்…

பயங்கரவாதத்துக்கு துணைபோக வேண்டாம்: பாகிஸ்தானுக்கு மன்மோகன் எச்சரிக்கை!

பயங்கரவாதத்துக்கு துணைபோவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். இல்லையெனில் அதற்கான கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின்படி காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் கோரிக்கையை ஒருபோதும் ஏற்கமுடியாது என்று அவர் திட்டவட்டமாகத்…

பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் திகழ்கிறது: மன்மோகன் சிங்

பாகிஸ்தான் பயங்கரவாதச் செயல்களின் மையமாகத் திகழ்ந்து வருகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். நியூயார்க்கில் வருகிற ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தாம் சந்தித்துப் பேசினாலும் அதனால் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இருக்காது என்று அவர் குறிப்பிட்டார். ஒருவார அரசு முறைப் பயணமாக வாஷிங்டன் வந்துள்ள…

தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்களை பாதுகாக்கும் அவசரச் சட்டம் முட்டாள்தனமானது!

"குற்றவியல் வழக்கில் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவியை பாதுகாக்கும் வகையில் மத்திய அமைச்சரவை கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்புதல் தெரிவித்த அவசரச் சட்டம் முட்டாள்தனமானது; அதைக் கிழித்து எறிய வேண்டும்' என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாகக் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வியாழக்கிழமை…

கத்தாரில் தமிழ் கட்டுமானத் தொழிலாளர் படும் கஷ்டங்கள்

தனிநபர் வருமான அடிப்படையில் உலகிலேயே மிகவும் செல்வந்த நாடுகளில் ஒன்றாக விளங்கும் மத்திய கிழக்கின் சிறு தீவுத் தேசமான கத்தாரில், நேபாள கட்டுமானத் தொழிலாளர்களின் நிலை கவலையளிக்கும் விதத்தில் மோசமாக உள்ளது என்று சர்வதேச தொழிலாளர் நல அமைப்புகள் கவலை வெளியிட்டிருந்தது பற்றி தமிழோசை ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.…

ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காக போராடிய தமிழீழ ஆதரவாளர் தோழர் பழ.நீலவேந்தன் தீக்குளித்து…

தமிழீழ ஈகைச்சுடர் திலீபனின் நினைவு போற்றியும் தமிழகத் தமிழர்களால் சாதியால் ஒடுக்கப்பட்டுவரும் ஆதித்தமிழர்களான அருந்ததியர்களுக்கான 6 சதவீத உள் ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் கடிதம் எழுதி வைத்துவிட்டு பெரியார் சிந்தனைப் பற்றாளர் தோழர் பழ.நீலவேந்தன் தீக்குளித்து இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார். தமிழ் இனத்தில் சாதியால் தமிழர்களாலேயே ஒடுக்கப்பட்டுவரும் அருந்ததியர் மக்களின்…

காஷ்மீர்: ஜம்முவில் தற்கொலைப்படைத் தாக்குதல்

ஜம்முவில் ராணுவ உடையில் வந்த பயங்கரவாதிகள் காவல் நிலையம் மற்றும் ராணுவ முகாம் மீது நடத்திய அதிரடித் தாக்குதலில் லெப்டினன்ட் கர்னல் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர். பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் அமெரிக்காவில் சந்திக்க உள்ள நிலையில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. பாகிஸ்தானில் இருந்து…

மதமோதல்களில் அதிகம் கொல்லப்படுவது யார்?

இந்தியாவில் இந்த ஆண்டு நடந்த மதமோதல்களில் இதுவரை கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் மதரீதியிலான புள்ளி விவரங்களை இந்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அதன்படி, 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிவரையில் இந்தியாவில் 479 மத மோதல்கள் நடந்திருக்கின்றன. இதில் 66 முஸ்லிம்களும் 41 இந்துக்களும்…

வெற்றுக் கூச்சல்களும், அடாவடி சவால்களும் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றாது: ஞானதேசிகன்

காங்கிரஸ் கட்சியின் தமிழ்மாநிலத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன்  வெளியிட்ட அறிக்கையில், ’’இலங்கையின் வடக்குப் பகுதியில் தேர்தல் நடந்து, ஐனநாயக முறையில் ஓர்  அரசு தேர்ந்தெடுக்கப் பட்டு ஆட்சி செய்ய உள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மகத்தான வெற்றியை இந்தத் தேர்தலில் பெற்றுள்ளது. வாக்களித்த மக்களுக்கு என் வாழ்த்துகள். இலங்கையின் வடக்கு,…

ஒரே மேடையில் அத்வானி, மோடி

மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் அதன் மூத்த தலைவர் எல்.கே. அத்வானியும், அந்தக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டனர். பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டப் பிறகு அவரும், எல்.கே. அத்வானியும் ஒரே மேடையில்…

நேர்மையான நகரம்: இரண்டாமிடத்தில் மும்பை!

ஊழல் குறித்த கணக்கீடுகள் வெளியிடப்படும்போது இந்தியா பெரும்பாலும் முன்னிலை இடங்களில் இருக்கும் இக்கட்டான நிலைமை ஏற்படும். ஆனால், சமீபத்தில் நகரங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் மும்பை வித்தியாசமான முடிவைக் காண்பித்தது. உலக நாடுகளின் முக்கிய நகரங்கள் 16 தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு தெருவில் கைவிடப்படும் பணப்பைகளில் எத்தனை திருப்பி ஒப்படைக்கப்படுகின்றன…

நரேந்திர மோடிக்கு ஆதரவாக களத்தில் குதித்த ரஜினி ரசிகர்கள்! திருச்சியில்…

திருச்சியில் வரும் 26.09.2013 வியாழக்கிழமை நடக்கும் பாஜக மாநாட்டிற்கு அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடி வருகை தருகிறார். இதனையொட்டி ஒவ்வொரு ஊரிலும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வரும் பாஜக தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் பாஜகவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தர…

எம்.பி., எம்.எல்.ஏ. தகுதி நீக்கத்தை தடுக்க அவசரச் சட்டம்?

உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக தகுதிநீக்கம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கு ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. குற்ற வழக்குகளில் சிக்கி 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை உடனடியாகத் தகுதிநீக்கம் செய்யும்…

ஹைதராபாத் இணைப்பு: அத்துமீறல்கள் குறித்து வெளிவராத அறிக்கை

இந்தியா 1947 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட போது, இடம்பெற்ற வகுப்பு கலவரங்களில் சுமார் ஐந்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இது பெரும்பாலும் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் நடந்தது. ஆனால் அதற்கு ஒராண்டுக்கு பிறகு தென் இந்தியாவின் ஹைதராபாத் பகுதியில் இதே போன்று ஏற்பட்ட கலவரங்களும் படுகொலைகளும் வெளி உலகுக்கு…

காந்திஜி வழியைதான் பின்பற்றுகிறார் மோடி:சுப்பிரமணிய சுவாமி

மும்பை: பா.ஜ.க., குஜராத் முதல்வர் பங்கேற்கும் கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு கட்டணம் முறையை நடைமுறைப்படுத்தியது.இம் முறைக்கு பா.ஜ.க., தலைவர் சுப்ரமணிய சுவாமி ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார். கட்டாயப்படுத்தவில்லை:இதில் தவறு என்ன இருக்கிறது? மக்கள் கட்டணம் செலுத்தி பங்கேற்க தயாராக இருக்கிறார்கள். யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. மகாத்மா காந்தியே இந்த முறையை…

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு: ப. சிதம்பரம் நம்பிக்கை

இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளதன் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த்…

மாநில அதிகாரத்தில் மத்திய அரசு குறுக்கீடு: தமிழக முதல்வர் குற்றச்சாட்டு

"மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு குறுக்கீடு செய்யும் போக்கு தொடர்ந்து நீடித்து வருவதாக' தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. தில்லியில் 16-வது தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தமிழக முதல்வர்…

வகுப்புவாத மோதல்களுக்கு மாநில அரசு தான் பொறுப்பு: மன்மோகன்சிங் பேச்சு

புதுடில்லி: அதிகரிக்கும் வகுப்பு மோதல்கள் கவலை அளிப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மன்மோகன்சிங், வகுப்பு ‌மோதல்களை தூண்டிவிடுவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் 16-வது தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம் இன்று டில்லி விஞ்ஞான் பவனில் , பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கூடியது.…