லஷ்கர் தீவிரவாதிகளிடம் நவீன கடற்படை: இந்தியாவை தாக்க பயிற்சி

மும்பை தாக்குதலை நடத்திய தீவிரவாதி அபுஜிண்டால் சமீபத்தில் டெல்லி போலீசாரிடம் பிடிபட்டான். அவனை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். பாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் பற்றி பல்வேறு புதிய தகவல்கள் ஜிண்டால் மூலம் கிடைத்து வருகிறது. லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளிடம் நவீன கடற்படை இருக்கும் தகவலை…

வழக்குகளை பொடி பொடியாக்க நித்யானந்தா ரகசிய யாகம்?

தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளிலிருந்து விடுபடவும், போலீசாரின் நெருக்கடியில் இருந்து தப்பிக்கவும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நித்யானந்தா தனது சீடர்கள் மூலம் ரகசிய யாகம் வழிபாடுகள் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 24-ம் தேதி, நெல்லையப்பர் கோவிலில் ஆனிப் பெருந்திரு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆனித் திருவிழா…

ஒரு அனுபவமே போதும் என்கிறார் அப்துல் கலாம்

இந்திய குடியரசுத் தலைவராக ஒருமுறை பதவி வகித்துவிட்டேன். அந்த அனுபவமே எனக்குப் போதுமானது என்று இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். இந்திய மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், சூரியஒளி, காற்றாலை மூலம் மாற்று எரிசக்தி தயாரிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.…

மும்பாய் தாக்குதல் சூத்திரதாரி அபு ஹம்ஸா கைதானார்

மும்பாய் நகரின் மீது 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களை திட்டமிட்ட முக்கிய இந்திய சந்தேக நபர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அபு ஹம்ஸா என்று அழைக்கப்படும், சையது சபியுதீன், மும்பாய் மீது தாக்குதல் நடத்திய 10 துப்பாக்கிதாரிகளை, தொலைபேசி மூலம் பாகிஸ்தானின்…

குடியரசுத் தலைவர் தேர்தல்: சாங்மாவுக்கு பாஜக, பிரணாபுக்கு சிபிஎம் ஆதரவு

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சி சாங்மாவை ஆதரிப்பதாக அறிவித்தாலும், தேசிய ஜனநாயக முன்னணியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அந்தக் கூட்டணியில் இருக்கும் ஒரு பிரதான கட்சியான ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியால் முன்நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரான பிரணாப் முகர்ஜிக்கு தனது ஆதரவை…

இந்தியாவில் அதிகரிக்கும் இளவயது தற்கொலைகள்

அதிகமானவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாகவும், தற்கொலை செய்துகொள்பவர்களில் 60 சதவீதம் பேர் 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட இளம்பருவத்தினர் என்றும் ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. உலக அளவில் மக்கள் தொகை அடிப்படையில், அதிகபட்சமானவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நாடுகள் குறித்து லான்செட் என்கிற மருத்துவ…

குடியரசு தலைவர் தேர்தலைப் புறக்கணிக்க தேமுதிக முடிவு

நடிகர் விஜயகாந்த தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. அஇஅதிமுக குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னாள் மக்களவைத் தலைவர் பி.ஏ.சங்மாவை ஆதரிக்கப்போவதாகவும், திமுக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கப்போவதாகவும் அறிவித்திருக்கும் சூழலில், தொடர்ந்து தமிழகத்தின் நலன்களைப் புறக்கணிக்கப்படுகின்றன.…

மகள் மீது பாலியல் பலாத்காரம்:பிரெஞ்சு அதிகாரி கைது

தென் இந்திய மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவிலுள்ள பிரெஞ்சு துணைத் தூதரக அதிகாரி பஸ்கால் மசூரியே, தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவி காவல்துறையினரிடம் புகார் செய்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர்…

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை: பிரதமருக்கு ஜெ. கடிதம்

முல்லைப் பெரியாற்றை அடுத்து கேரளாவுடன் இன்னொரு முனையிலும் தமிழகத்திற்குப் பிரச்சினை துவங்கிவிட்டது. கேரள அரசு சிறுவாணியாற்றின் குறுக்கே அணை ஒன்றைக் கட்டவிருப்பதாக செய்திகள் வந்திருப்பதாகவும் அவ்வாறு அணை ஏதும் கட்டப்பட்டால் கோவை மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அச்சம் தெரிவித்தும்…

லட்சக்கணக்கான மக்களின் தேர்வு அப்துல் கலாம்தான்: மம்தா

கொல்கத்தா: இந்திய குடியரசு வேட்பாளராக அப்துல் கலாமை நிறுத்தலாம் என்று கடந்த புதன்கிழமை முலாயம்சிங் யாதவும், மம்தா பானர்ஜியும் சேர்ந்து முடிவு செய்து அறிவித்தனர். மறுநாள் வியாழக்கிழமை முலாயம் சிங் யாதவிடம் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சு நடத்தினார்கள். இதையடுத்து காங்கிரஸ் பக்கம் முலாயம்சிங் யாதவ் சேர்ந்தார். நேற்று பிரணாப்…

மூத்த திமுக தலைவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தமிழகம்: சிறையில் இருந்துவரும் தமிழகத்தின் முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும் மூத்த திமுக தலைவருமான வீரபாண்டி ஆறுமுகம் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. செல்வாக்கு மிகுந்த சேலம் மாவட்ட திமுகவின் செயலாளரான வீரபாண்டி ஆறுமுகத்திற்கு 75 வயது ஆகிறது. கடந்த ஜுன் நான்காம் நாளன்று சேலம் அங்கம்மாள் காலனியில் நடந்த…

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

தமிழகம்: நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் விரட்டியதாக கரை திரும்பிய மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை புகார் தெரிவித்தனர். ராமேசுவரத்தில் இருந்து ஜூன் 16-ம் தேதி, சுமார் 800 விசைப்படகுகள் மீன் பிடிக்கச் சென்றன. இப்படகுகள், மீன்வளம் நிறைந்த இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தன.…

கலாமை ஆதரிக்காத கருணாநிதி: காங்கிரசுக்காக மவுன குருவானார்!

"தமிழரான அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக்க வேண்டும்" என்ற குரல் தமிழகத்தில் இருந்து அல்ல, வடமாநில அரசியல் தலைவர்களிடம் இருந்து தான் எழுந்துள்ளது. "தமிழினத் தலைவர்" என, அழைத்துக் கொள்ளும், தி.மு.க., தலைவர் கருணாநிதி, இவ்விஷயத்தில், 'மவுனகுரு'வாக இருப்பது, தமிழர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.  இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை…

பிரபல நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன் மரணம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரிய பழம்பெரும் நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன் நேற்று மாலை 3.30 மணியளவில் மரணமானார். இவருக்கு கடந்த சில மாதகாலமாக மூச்சுத்திணறல் இருந்து அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரியவந்துள்ளது. கடந்த வாரம் ஓரளவு குணம் அடைந்து…

அப்துல் கலாம்தான் குடியரசுத் தலைவர் வேட்பாளர்: மம்தா பிடிவாதம்

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாம்தான் தங்கள் வேட்பாளர். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி உறுதிபட தெரிவித்தார். காங்கிரஸ் கூட்டணி சார்பில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அல்லது இப்போதைய குடியரசு துணைத்தலைவர் முகமது…

ஜூலை 19-ல் , இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல்

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். தலைமைத் தேர்தல் ஆணையராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட வி.எஸ். சம்பத், பதவியேற்ற 24 மணிநேரத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார். தில்லியில்…

தப்பி ஓடிய நித்தியை பிடிக்க முதல்வர் உத்தரவு! ஆசிரமத்திற்கு சீல்!

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருக்கு அருகில் இருக்கும் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவின் ஆசிரமத்தை மூடும் படியும், நித்தியானந்தாவை கைது செய்யும்படியும் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. நித்தியானந்தாவிடம் முன்பு சீடராக இருந்த இரண்டுபேர் அவர் மீது அளித்த பாலியல் புகார்கள் தொடர்பாக செய்தியாளர்கள் சிலர் அவரிடம் கேள்வி கேட்டதைத்தொடர்ந்து உருவான…

சாமியார் நித்தியானந்தா தப்பி ஓட்டம்; போலீசார் வலைவீச்சு!

செய்தியாளர்களை தாக்கிய விவகாரத்தில் நித்தியானந்தா உள்பட 8 பேர் மீது கர்நாடக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நித்தியானந்தாவை தவிர 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக போலீசார் தேடுவதால் பிடதி ஆசிரமத்தில் இருந்து நித்தியானந்தா தப்பி ஓடினார். தலைமறைவான நித்யானந்தாவை தேடி, தமிழகம் உட்பட பல…

உயிரோடு இருந்தால் போட்டியிடுவேன் என சொல்கிறார் கருணாநிதி!

தி.மு.க.,வின் 14வது உள்கட்சி தேர்தல் இம்மாதம் துவங்குகிறது. ஆறு கட்டங்களாக நடக்கும் இத்தேர்தல், ஓராண்டு வரை நடக்கிறது. கிளைக் கழக செயலரில் துவங்கி, கட்சியின் தலைவர் வரை, இந்த ஓராண்டில் நடக்கும் தேர்தலில் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்தலை முன்னிட்டு நடக்கும் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை மே மாத இறுதியில்…

செக்ஸ் புகார் சாமியார் நித்யானந்தாவின் பத்திரிகையாளர் சந்திப்பில் ரகளை!

செக்ஸ் புகார் சாமியார் நித்யானந்தா பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, கன்னட டிவி சானல் நிருபர், நீதிமன்ற சம்மன் பற்றி, கேள்வி எழுப்பியதால், அவரை வெளியேற்ற நித்யானந்தா உத்தரவிட்டார். இதனால், பத்திரிகையாளர் சந்திப்பில் ரகளை ஏற்பட்டது. நித்யானந்தா வழக்கில், சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள ஆர்த்தி ராவ் சென்னையை சேர்ந்தவர். அமெரிக்க குடியுரிமை…