தப்பி ஓடிய நித்தியை பிடிக்க முதல்வர் உத்தரவு! ஆசிரமத்திற்கு சீல்!

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருக்கு அருகில் இருக்கும் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவின் ஆசிரமத்தை மூடும் படியும், நித்தியானந்தாவை கைது செய்யும்படியும் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. நித்தியானந்தாவிடம் முன்பு சீடராக இருந்த இரண்டுபேர் அவர் மீது அளித்த பாலியல் புகார்கள் தொடர்பாக செய்தியாளர்கள் சிலர் அவரிடம் கேள்வி கேட்டதைத்தொடர்ந்து உருவான…

சாமியார் நித்தியானந்தா தப்பி ஓட்டம்; போலீசார் வலைவீச்சு!

செய்தியாளர்களை தாக்கிய விவகாரத்தில் நித்தியானந்தா உள்பட 8 பேர் மீது கர்நாடக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நித்தியானந்தாவை தவிர 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக போலீசார் தேடுவதால் பிடதி ஆசிரமத்தில் இருந்து நித்தியானந்தா தப்பி ஓடினார். தலைமறைவான நித்யானந்தாவை தேடி, தமிழகம் உட்பட பல…

உயிரோடு இருந்தால் போட்டியிடுவேன் என சொல்கிறார் கருணாநிதி!

தி.மு.க.,வின் 14வது உள்கட்சி தேர்தல் இம்மாதம் துவங்குகிறது. ஆறு கட்டங்களாக நடக்கும் இத்தேர்தல், ஓராண்டு வரை நடக்கிறது. கிளைக் கழக செயலரில் துவங்கி, கட்சியின் தலைவர் வரை, இந்த ஓராண்டில் நடக்கும் தேர்தலில் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்தலை முன்னிட்டு நடக்கும் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை மே மாத இறுதியில்…

செக்ஸ் புகார் சாமியார் நித்யானந்தாவின் பத்திரிகையாளர் சந்திப்பில் ரகளை!

செக்ஸ் புகார் சாமியார் நித்யானந்தா பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, கன்னட டிவி சானல் நிருபர், நீதிமன்ற சம்மன் பற்றி, கேள்வி எழுப்பியதால், அவரை வெளியேற்ற நித்யானந்தா உத்தரவிட்டார். இதனால், பத்திரிகையாளர் சந்திப்பில் ரகளை ஏற்பட்டது. நித்யானந்தா வழக்கில், சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள ஆர்த்தி ராவ் சென்னையை சேர்ந்தவர். அமெரிக்க குடியுரிமை…

சிதம்பரம் பதவி விலக வேண்டும்: ஜெயலலிதா கோரிக்கை

சிவகங்கை தேர்தல் வெற்றி தொடர்பாக இந்திய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த இடைக்கால மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ள நிலையில், அவர் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும்; இல்லையேல், அமைச்சரவையிலிருந்து அவரை பிரதமர் நீக்க வேண்டும் என, தமிழக முதல்வர்…

பாதுகாப்பு விஷயங்கள்: இந்தியா அமெரிக்கா பேச்சுவார்த்தை

அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லியான் பனேட்டா, இந்தியப் பிரதமர் மற்றும் இதர மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக புதுடில்லி சென்றுள்ளார். இந்திய அமெரிக்க இராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்துவதுடன், எதிர்காலத்தில் ஆப்கானிஸ்தானில் உறுதித்தன்மையை ஏற்படுத்துவதில் இந்தியாவின் பங்கு ஆகியவை பேச்சுவார்த்தைகளில் முக்கியமாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியப் பகுதியில் இந்தியாவை…

கூடங்குளம் போராட்டம்: மனித உரிமைகள் மீறப்பட்டதாக புகார்!

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தவர்களின் அடிப்படை மனித உரிமைகளும், ஜனநாயக உரிமைகளும் மீறப்பட்டுள்ளதாக "கூடங்குளம் போராட்டத்துக்கான சென்னை ஆதரவுக் குழு" எனும் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பொது விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளதாக கூறி ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ…

ஆபாச உடைகள் மீது மோகம்: மனைவியை கொன்ற கணவர் கைது

தனது பேச்சைக் கேட்காமல், ஆபாசமான உடைகளை அணிந்த மனைவியை கணவர் கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இத்தாலியில் இடம்பெற்றுள்ளது. இத்தாலியின் பசேலிகோட்யூஸ் வில்வேஜ் பகுதியை சேர்ந்தவர் சின்ஜ் குல்பிர் (வயது 37). இந்தியரான இவர் கடந்த 10 வருடங்களாக இத்தாலியில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளர். குல்பீரின் மனைவி…

உண்ணாவிரதமிருக்க முடியுமா? ராமதாஸ் கருணாநிதிக்கு சவால்!

தமிழீழம் பற்றி பேசிவரும் திமுக தலைவர் கருணாநிதி முடிந்தால் தனி ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் புதுடில்லியில் உண்ணாவிரதமிருக்கட்டும் பார்க்கலாம் என பாமக நிறுவனர் டாக்டர் ரமாதாஸ் சவால் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும், கருணாநிதி எப்போதும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது…

தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 52 இடங்களில் மத்திய அரசு பணிமனையின் முன்பு அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டங்களில் எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பெட்ரோல் விலை சில நாட்களுக்கு முன் லிட்டருக்கு 7.50 இந்திய ரூபா உயர்த்தப்பட்டது. இதனைக்…

கருணாநிதியின் குடியரசுத் தலைவர் ஆசை!

இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு, முன்னாள் சபாநாயகர் சங்மாதான் இப்போதைக்கு போட்டியில் இறங்கியுள்ளார். காங்கிரஸ் தரப்பிலிருந்து, யார் போட்டியிடப்போகிறார் என்பதை, இதுவரை சோனியா வெளியிடாமல் மவுனம் காத்துவருகிறார். துணை குடியரசுத் தலைவர் அமித் அன்சாரி, பிரணாப் முகர்ஜி, இந்திய மத்திய அமைச்சர் ஷிண்டே, தற்போதைய சபாநாயகர் மீரா குமார் என,…

சக மனிதனின் துக்கம் கண்டு பொங்குகிற யாருமே கம்யூனிஸ்ட்தான் !

"என்னை கடத்தியதும் கம்யூனிஸ்ட்கள், மீட்க உதவியதும் கம்யூனிஸ்ட்கள்தான் என்றார்கள். நான் சொல்கிறேன்... கடத்தப்பட்ட நானும் கம்யூனிஸ்ட்தான். நான் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட். சக மனிதனின் துக்கம் கண்டு பொங்குகிற, போராடுகின்ற யாருமே கம்யூனிஸ்ட்தான்" என்கிறார் இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன். நேற்று…

இலங்கையில் இனப்படுகொலை திட்டமிட்டவகையில் தொடர்கிறது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இலங்கையில் திட்டமிட்ட வகையில் தொடரும் இனப்படுகொலைகளை தடுக்க இந்தியா என்ன நடவடிக்கையை எடுத்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. இலங்கையில் திட்டமிடப்பட்ட இனப்படுகொலைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்று கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி. ராஜா நேற்று நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார். இந்துக் கோயில்கள் இலங்கையில் தாக்கப்படுகின்றன.…

கூடங்குளம் அணு உலை அழுத்த கலன் திறப்பு

கூடங்குளம் முதல் அணு உலையில் அழுத்த கலன் நேற்று திறக்கப்பட்டது. இதற்காக குரேஷியா, ஜெர்மன் வல்லுனர்கள் கூடங்குளம் வந்துள்ளனர். விரைவில் மின் உற்பத்தியை துவங்க பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா, ரஷ்யா கூட்டு முயற்சியுடன் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள்…

ஈழத் தமிழர் குறித்து கருணாநிதி ஆடுவது நாடகம்!

இலங்கை தமிழர்களுக்கு டெசோ மூலம் உதவுவதாக கருணாநிதி நாடகம் ஆடுகிறார் என்று தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். கொடைக்கானல் கே.ஆர்.ஆர். கலையரங்கம் அருகில் அதிமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நகர் மன்றத் தலைவர் கோவிந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர்…

நிறம் மாறிய ஆற்றுநீரால் பொதுமக்‌கள் அச்சம்

தமிழகத்தின் உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூரில் நல்லாறு, பாலாறு இணைந்த கூட்டாறு பாய்கிறது. இந்த ஆற்று நீரின் மூலம் இப்பகுதி மக்கள் தங்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்து வந்தனர். இந்நிலையில் பச்சை மற்றும் நீல வண்ணத்தில் ஆற்று நீர் வருவதால் மருந்து எதுவும் கலக்கப்பட்டிருக்குமோ என பொதுமக்கள் அச்சமடைந்ததுள்ளனர்.

அன்னா ஹசாரே கார்மீது தாக்குதல்: இளைஞர் காங்கிரசார் கைது

மகாராஷ்‌டிரா மாநிலத்தில் ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை ‌மேற்கொண்டுள்ள அன்னா ஹசாரே கார் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் காங்கிரசார் கைது செய்யப்பட்டனர். ஊழலுக்கு எதிரான பிரசாரத்தின் போது ராகுலுக்கு எதிரான கருத்தை அன்னாஹசாரே கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கார்மீது தாக்கு‌த‌ல் நடத்தினர். இதனையடுத்து அன்னா ஹசாரே மற்றொருகாரில்…

ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதான ராசா பிணையில் விடுதலை

15 மாதம் திகார் சிறையில் அடைக்கப்பட்டருக்கும் மாஜி இந்திய மத்திய அமைச்சர் ராசாவின்பிணை மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. சி.பி.ஐ., எதிர்ப்பு தெரிவித்திருந்தும் இவருக்கு சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்கியது. தொலை தொடர்பு துறையில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் தொடர்பாக நாட்டுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம்…

தமிழக முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழக முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதல்வரின் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், காவல்துறை குற்ற ஆவணக் காப்பக டி.எஸ்.பி.யின் மின்னஞ்சல் முகவரிக்கு புதன்கிழமை இரவு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் தமிழக முதல்வரின் போயஸ் கார்டன் வீடு,…

கூடங்குளத்தில் பதற்றம் : கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் உண்ணாவிரதம்

கூடங்குளம் பகுதியில் 144 தடை உத்தரவு விரிவுபடுத்தப்பட்டுள்ளதை கண்டித்து கடற்கரை கிராமங்களில் இன்று மீனவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழுவை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.…