விபத்துக்குள்ளான கப்பல் கடலுக்குள் மூழ்கிறது

இத்தாலி தலைநகர் ரோம் அருகில், கடலில் பாறை மீது மோதி கவிழ்ந்த கோஸ்டா கான்கார்டியா கப்பல், கரைப் பகுதியில் இருந்து நழுவி கடலுக்குள் சென்று கொண்டிருப்பதால், மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விரைவில், கப்பல் முழுவதும் மூழ்கிவிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கப்பல் செல்ல வேண்டிய பாதையில்…

வெள்ளை மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகைக் குண்டு வீச்சு!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் நேற்று தீடிரென புகை கிளம்பியதால் வெள்ளை மாளிகை மூடப்பட்டது. வெள்ளை மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருபவர்கள் புகைக் குண்டு வீசியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், வெள்ளை மாளிகை தற்போது பூட்டப்பட்டுள்ளது. மாளிகை வளாகத்தில்…

இந்திய மத்திய அரசை எதிர்த்து அந்நாட்டு இராணுவத் தளபதி வழக்கு

இந்திய மத்திய அரசை எதிர்த்து, அந்நாட்டு இராணுவத் தளபதி வி.கே.சிங், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த இத்தனை ஆண்டுகால வரலாற்றில் ஒரு இராணுவத் தளபதி மத்திய அரசை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியிருப்பது இதுவே முதல் முறையாகும். இந்தியாவின் இராணுவத் தளபதியாக உள்ள, வி.கே.சிங் பிறந்த தேதியில் சர்ச்சை…

ஜனநாயகம் மலர தேர்தலே சிறந்தது: பான் கி மூன்

தேர்தல் மூலம் தான் ஒருநாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும் என ஐ.நா. பொதுச்செயலர் கூறினார். எகிப்து, துனீசியா, லிபியா, போன்று நாடுகளில் மக்கள் புரட்சி ஏற்பட்டது. தற்போது ஏமன், சிரியாவில் பிரச்னை பெரிதாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் மேற்கு ஆசியாவின் ஐ.நா.வுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் சார்பில், ஜனநாயக முறை…

கல்லெறி வாங்கிய விஜய்; கடலூரில் சம்பவம்!

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச அரிசி வழங்கும் நிகழ்ச்சி கம்பியம்பேட்டையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியின்போது நடிகர் விஜய் மேடைக்கு வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த சுமார் 500 பெண்கள் உட்பட 2 ஆயிரம் பேர் நடிகர் விஜயிடம் இலவச…

பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார்!

பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலர் காலித் நதீம் லோடி, அந்நாட்டு தலைமையமைச்சர் யூசூஃப் ராஜா கீலானியால் பதவி திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை யாரும் எதிர்பாக்கவில்லை என்றும், அது திடீரென இடம்பெற்றுள்ளது என்றும் கூறுகிறார் பிபிசியின் பாகிஸ்தான் நிருபர் ஆமீர் அஹமது கான். "பாகிஸ்தானின் சிவில் மற்றும்…

பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு : 35 பேர் பலி!

வடகிழக்கு பாகிஸ்தானில் உள்ள பழங்குடியினர் சந்தை தொகுதியொன்றில் குண்டு வெடித்ததில் 35 பேர்ம பலியாகினர், 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது மற்றும் 60 பேர் காயமைடந்துள்ளனர். பாகிஸ்தானின் வடகிழக்கில் அமைந்துள்ள கைபர் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ளது ஜம்ருத் சந்தை. அங்கு எப்பொழுதுமே மக்கள் நடமாட்டம்…

பதவி விலக முடியாது; எதிர்ப்புகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குவேன்:…

சிரிய குடியரசுத் தலைவர் பஷர் அல் அசாத், பதவி விலக முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்ப்புகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியாவில் அசாத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடரும் நிலையில், அங்கு அரபு லீக்கின் 165 பிரதிநிதிகள் அடங்கிய குழு நிலவரத்தை…

நக்கீரன் பணிமனை அடித்துநொறுக்கப்பட்டது; அதிமுக மீது குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் நக்கீரன் பத்திரிகையின் சென்னை தலைமை பணிமனை, மாநிலத்தை ஆளும் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், நக்கீரன் பத்திரிகைக்கு எதிராக அதிமுக-வினர் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டங்களின் போது நக்கீரன் இதழ்கள் கொளுத்தப்பட்டதாகவும், நக்கீரன் பத்திரிகையை விற்ற கடைகள் மீ்தும் தாக்குதல்…

தங்கத்தை தேடும் ஆசையில் 25 பேர் பலி!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் தங்கத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக, 25 பேர் பலியாகினர். மேலும், 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள மின்டோனா தீவில் நாப்னாப்பேன் பகுதி உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக தங்க கனிமத்தை தேடும் பணியில்,…

சிங்கப்பூர் அமைச்சர்களின் சம்பளம் குறைக்கப்படுகிறது

சிங்கப்பூரில் அந்நாட்டு தலைமையமைச்சர் லீ சியன் லூங்-கால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு புதிய சம்பள வீதங்களின் அடிப்படையில் அவர் உட்பட அனைத்து அமைச்சர்களின் சம்பளமும் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு குறைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதம் அரசால் அமைக்கப்பட்ட ஒரு குழுவின் பரிந்துரைகளை அடுத்து அமைச்சர்களின் சம்பளங்களில்…

தெற்கு சூடானில் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு

தெற்கு சூடானில் உள்ள பிபோர் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இனங்களுக்கிடையிலான மோதல்கள் ஆரம்பமானதை அடுத்து அங்கிருந்து பல்லாயிரக் கணக்கானோர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி வருகிறார்கள். போட்டிப் பழங்குடியின குழுக்களின் போராளிகள் நெருங்கி வருவதையிட்டு கிராம மக்கள் தமது உயிரை காப்பாற்ற தப்பிச் செல்ல வேண்டும் என்று ஐக்கிய…

கொள்கையில் மாற்றமில்லை என்கிறது வடகொரியா

வடகொரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் கொள்கையில் பெரிய மாறுதலை எதிர்பார்க்க வேண்டாம் என்று அனைத்துலக சமூகத்துக்கு அந்த நாடு தெரிவித்துள்ளது. வடகொரியாவின் தலைவராக இருந்த கிம் ஜாங் இல் மரணமடைந்து அவரது இறுதி நிகழ்வுகள் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பிறகு நாட்டின் அதியுயர் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள அவரது மகன்…

‘தானே’ புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33ஆக உயர்ந்தது

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்கிய 'தானே' என்ற புயலாலும் அப்புயலின் காரணமாகப் பெய்த கடும் மழையாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. புயல் ஏற்படுத்திய பெரும் சேதங்கள் காரணமாய் ஆயிரக்கணக்கானோர் வீடிழந்து, அரசாங்கம் அமைத்துள்ள நிவாரண முகாம்களில் தங்க…

அரபு லீக் பிரதிநிதிகள் கண் முன்னால் லட்சக்கணக்கில் மக்கள் ஆர்ப்பாட்டம்

சிரியாவில் நிலவரத்தை அரபு லீக் பிரதிநிதிகள் ஆய்வு செய்து கொண்டிருக்கும் போதே, அவர்கள் முன்னிலையில், நேற்று முன்தினம் மக்கள் லட்சக்கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 35 பேர் பலியாகினர். சிரியாவில், மக்களுக்கு எதிரான இராணுவ வன்முறை குறித்து, அரபு லீக்…

இலட்சக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் கிம் யாங் இல் உடல்…

மறைந்த வடகொரியத் தலைவர் கிம் யாங் இல்-லின் இறுதிச் சடங்கு அந்நாட்டின் தலைநகர் பியாங்யாங்கில் நடந்துள்ளது. அவரின் பூதவுடலை அடக்கஸ்தலத்துக்கு கொண்டுசெல்லும் மாபெரும் இறுதி ஊர்வலம் பியாங்யாங் வீதிகளைக் கடந்து சென்றபோது, அந்நாட்டு மக்கள் கதறிக் கண்ணீர்விடும் காட்சிகளை பல இடங்களில் காணமுடிந்தது. பனி மூடி வெள்ளை ஆடை…

தமிழகம் வந்த மன்மோகன் சிங்குக்கு கடும் எதிர்ப்பு

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்த இந்தியப் தலைமையமைச்சர் மன்மோகன் சிங்குக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்பாட்டம் செய்ய முயன்றவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழகச் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரான விஜயகாந்த் தலைமையில் அவரது கட்சியினர் கருப்புக் கொடி ஆர்பாட்டம் செய்வதாக முன்பே அறிவித்திருந்த நிலையில், இப்…

ஆங் சான் சூச் சியின் இயக்கம் மீண்டும் அரசியல் கட்சியானது

ஆங் சான் சூச் சி தலைமையிலான மியன்மார் எதிர்க்கட்சிக் குழு ஒரு அரசியல் கட்சியாக மீண்டும் உத்தியோகபூர்வமாக பதியப்பட்டுள்ளது. ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணி என்ற கட்சி, வரும் காலங்களில் தேர்தல்களில் போட்டியிட இதன் மூலம் அனுமதி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த மியன்மார் பொதுத்தேர்தலை ஜனநாயக விரோதமானது என்று…

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு; 63 பேர் பலி, 200 பேர்…

ஈராக் தலைநகர் பாக்தாதில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் குறைந்தது 63 பேர் கொல்லப்பட்டு, சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர். நகரின் ஷியா மற்றும் சுன்னி இன மக்கள் வசிக்கும் 13 இடங்களில் 14 குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன என்று ஈராக் உள்துறை அமைச்சகம் பிபிசியிடம் தெரிவித்தது. இத்…

சிதம்பரம் சிறையில் இருக்கவேண்டியது வரும்; எச்சரிக்கிறார் ஹசாரே

இந்தியாவில் லோக்பால் அமைப்பிற்குள் சி.பி.ஐ., வரும் பட்சத்தில் இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் சிறைக்குப் போக வேண்டியது வரும் என ஊழலுக்கு எதிராக போராடிவரும் காந்தியவாதி அன்னா ஹசாரே கூறியுள்ளார். திருத்தப்பட்ட லோக்பால் தீர்மானத்திற்கு இந்திய மத்திய அமைச்சர‌வை ஒப்புதல் வழங்கிவிட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றுதவற்காக நாடாளுமன்ற கூட்டத்தொடர்…

அமெரிக்கப் படைகள் ஈராக்கில் இருந்து முற்றாக வெளியேறின

ஈராக் முன்னாள் தலைவர் சதாம் ஹூசேனை ஆட்சியில் இருந்து அகற்றக் காரணமாக இருந்த ஈராக்கிய ஆக்கிரமிப்பு நடைபெற்று சுமார் 9 ஆண்டுகள் முடிவடையப் போகும் நிலையில் ஈராக்கில் நிறுத்தப்பட்டிருந்த கடைசி தொகுதி அமெரிக்க இராணுவத் துருப்புக்கள் எல்லையைக் கடந்து குவைத்துக்கு சென்றனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட…

சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா

தமிழக முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, இதுவரை தனது உடன்பிறவா சகோதரி என அழைத்து வந்த சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார். சசிகலாவின் கணவர் எம். நடராஜன், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தினகரன் உள்ளிட்ட மேலும் 13 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்…

கேரளாவுக்கு பதிலடி கொடுக்கிறது தமிழக அரசு!

தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம், இன்று காலை நடக்கிறது. உச்சநீதிமன்றம் உத்தரவு காரணமாக, முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக நிறைவேற்றப்படும் தீர்மானம், கடுமையாக இருக்காது என்று கூறப்படுகிறது. முல்லைப் பெரியாறு பிரச்னை தீவிரமடைந்து வருவதால், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும், இவ்விஷயத்தில் ஒரே கருத்தைக் கொண்டுள்ளன என்பதை நிலைநிறுத்த…