பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
அன்வார்: பெர்சே 3.0 பாதிக்கப்பட்டவர்கள் வில்லன்களாக சித்தரிக்கப்படுகின்றனர்
அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகங்கள் பெர்சே 3.0 பேரணியின் போது பாதிக்கப்பட்ட அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை வில்லன்களாக சித்தரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்வதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். இதுதான் சர்வாதிகார ஆட்சிகளின் இயல்பான குணம் என அவர் சொன்னார். "ஒடுக்கப்பட்டதாலும் கொடூரத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களை கிரிமினல்களாக காட்டுவதற்கு அரசாங்கக்…
“போலீஸ் முரட்டுத்தனத்தைப் பற்றி செய்தி வெளியிட வேண்டாம் என முக்கிய…
போலீஸ் முரட்டுத்தனத்தை காட்டும் சம்பவங்கள் பற்றிய செய்திகளைப் போட வேண்டாம் என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் முக்கிய நாளேடுகளின் உயர் நிலை ஆசிரியர்களுக்கு பெர்சே 3.0க்கு முதல் நாளன்று ஆணையிட்டாரா? அந்தக் கேள்வியை எழுப்பிய பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன், அத்தகைய ஆணை பிறப்பிக்கப்பட்டதற்கான ஆதாரம்…
டாக்டர் மகாதீர்: பெர்சே 3.0 அரசாங்கத்தை வீழ்த்த முயலுகிறது
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பெர்சே 3.0 ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கத்தைக் Read More
அன்வார்: தடுப்புக்களை மீறுமாறு நாங்கள் ஆணையிடவில்லை
டாத்தாரான் மெர்தேக்காவைச் சுற்றிலும் போடப்பட்டிருந்த கம்பி வேலியை உடைக்குமாறு தாமோ அல்லது கட்சித் துணைத் தலைவர் அஸ்மின் அலியோ ஆணையிடவில்லை என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியிருக்கிறார். என்றாலும் தாம் "அந்த முடிவைத் தற்காக்கப் போவதாக" அவர் சொன்னார். ஏனெனில் தடுப்புக்களை அகற்றுவது ஒரு குற்றமல்ல…
மலையாண்டி போலீசாரால் தாக்கப்பட்டார்; புகைப்படக் கருவி பறிக்கப்பட்டது!
நேற்று முன்தினம் கோலாலம்பூரில் நடைபெற்ற பெர்சே பேரணியின் போது தமிழ் நாளிதழான மக்கள் ஓசை புகைப்படக் கலைஞர் பி. மலையாண்டி (வயது 53) காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுடன்; சுமார் 7,000 வெள்ளி பெறுமதியான அவரது புகைப்படக் கருவியை காவல்துறையினர் அபகரித்துச் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் ஜாலான் ராஜா லாவுட்டில்…
போலீசாரே பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார் நஜிப்
கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியின் போது எல்லாத் தரப்புக்களிலும் காயங்கள் ஏற்பட்ட போதிலும் போலீசாரே அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். "நாம் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். பொதுவாக போலீசாரே பாதிக்கப்படுகின்றனர். வன்முறைகள் போலீசாரை குறி வைத்தே மேற்கொள்ளப்படுகின்றன," என…
டாத்தாரான் நீண்ட காலத்துக்கு ஆக்கிரமிக்கப்படும் என அரசாங்கம் அஞ்சியது
டாத்தாரான் மெர்தேக்காவை நீண்ட காலத்துக்கு ஆக்கிரமிப்பதற்கான ரகசியத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்ததால் சனிக்கிழமை பெர்சே 3.0 பேரணிக்கு அந்தப் பொதுச் சதுக்கத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்தது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். "நாட்டின் சுதந்தரத்துடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக…
கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகச் சொல்லப்படுவதை பெர்சே மறுக்கிறது
சனிக்கிழமை நிகழ்ந்த பெர்சே 3.0 ஆர்ப்பாட்டத்தின் போது பங்கேற்பாளர்கள் மீதான கட்டுப்பாட்டை ஏற்பாட்டாளர்கள் இழக்கவில்லை என பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறுகிறார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வெடிக்க போலீஸார் முடிவு செய்த பின்னரே வன்முறை மூண்டதாக அவர் சொன்னார். "எந்தத் தரப்பும் வன்முறையில்…
நஜிப் சன் நிருபரிடம் ‘குறைந்த தொனியில்’ மன்னிப்பு கேட்டார்
சனிக்கிழமையன்று ஏழு போலீஸ் அதிகாரிகளினால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சன் நாளேட்டின் நிருபர் ராட்ஸி ரசாக்கிடம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 'குறைந்த தொனியில்' மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. "நான் நடந்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என நஜிப் சொன்னதாக ராட்ஸி தெரிவித்தார். காயமடைந்த ராட்ஸியைக் காண்பதற்கு நேற்று…
Police free Tian Chua and 511 other protesters
Police today said all 512 people arrested during a demonstration for free and fair elections, including a senior opposition lawmaker, have been freed. "We have released all of them," national police spokesman Ramli Yoosuf told…
சன் ஏட்டின் நிருபர் நெஞ்சு எலும்பு முறிவுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்
கோலாலம்பூரில் நேற்று நிகழ்ந்த பேரணிக்கு பின்னர் சன் நாளேட்டின் நிருபர் ஒருவர் நெஞ்சு எலும்பு முறிவுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு உட்காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. ராட்ஸி ரசாக் என்ற அந்த நிருபர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக அவரதுசகாவான அல்யா அல்ஹாட்ஜ்ரி கூறினார். "நான் இன்று பிற்பகல்…
துணைப் பிரதமர்: குழப்பத்துக்குப் பெர்சே பொறுப்பேற்க வேண்டும்
நேற்று சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கும் மனிதர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கும் பெர்சே ஏற்பாட்டாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டாத்தாரான் மெர்தேக்காவுக்குப் பதில் மெர்தேக்கா அரங்கத்தில் தங்கள் பேரணியை அவர்கள்நடத்துவதற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை அவர்கள் நிராகரித்து விட்டதாக அவர் குற்றம் சாட்டினார். தி…
குழப்பத்தைத் “தூண்டி விட்டதாக” அஸ்மின், அன்வார் மீது பத்திரிக்கைகள் பழி…
நேற்று நிகழ்ந்த மோதல்களின் போது சேதமடைந்த போலீஸ் காரின் படங்கள் இன்றைய ஞாயிற்றுக்கிழமை பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பெரும்பாலும் அமைதியாக நடைபெற்ற பெர்சே 3.0 பேரணி வன்முறையில் முடிந்ததற்கு இரண்டு முக்கிய நாளேடுகள் பிகேஆர் தலைவர்களே காரணம் எனச் சுட்டிக் காட்டின. டாத்தாரான் மெர்தேக்காவுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு…
பிகேஆர்: பெர்சே பேரணியின் போது ஊடகங்கள் தாக்கப்பட்டதற்கு நஜிப் பொறுப்பேற்க…
நேற்று நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணி குறித்த செய்திகளை சேகரித்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்பட்ட "முன்பு எப்போதும் நிகழ்ந்திராத" தாக்குதல்களுக்கும் அவர்கள் கைது செய்யப்பட்டதற்கும் பிகேஆர் பிரதமரைச் சாடியுள்ளது. "போலீஸ் படை திட்டமிட்டும் வேண்டுமென்றே பத்திரிக்கையாளர்களைத் தாக்கியுள்ளது என்பது வெள்ளிடைமலை," என அது கூறியது. "போலீஸ் தலைமைத்துவம்,…
Bersih 3.0 rally: Pressmen harassed, some arrested!
KUALA LUMPUR: Police have been accused of manhandling and assaulting media personnel during the Bersih 3.0 rally today, with several reports of mainly videographers and photographers being arrested while attempting to record incidents of alleged…
222 பேர் கைது: போலீசார் நடவடிக்கை எடுக்குமாறு “கட்டாயப்படுத்தப்பட்டனர்”
பெர்சே 3.0-இல் சம்பந்தப்பட்டதற்காக இன்றிரவு மணி 7.20 வரையில் மொத்தம் 222 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த எண்ணிக்கையை போலீசார் தங்களது முகநூல் பக்கத்தின் வழி வெளியிட்டுள்ளனர். பிற்பகல் மணி 2.55 வரியில் பேரணி கட்டுக்குள் இருந்ததாக இன்று மாலை கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் முகமட் சாலே…
பெர்சே 3.0 பேரணியில் 250,000 பேர் பங்கு கொண்டனர்; அது…
பெர்சே 3.0 பேரணி பெரிய வெற்றி என தேர்தல் சீர்திருத்த போராட்ட அமைப்பான பெர்சே 2.0 கூறுகிறது. உண்மையான தேர்தல் சீர்திருத்தங்களுக்கான வேண்டுகோள் விடுக்கும் நடத்தப்பட்ட அந்தப் பேரணியில் 250,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதாக அது தெரிவித்தது. "அந்த வகையில் அது பெரிய வெற்றி," என தூய்மையான…
வெளிநாடுகளிலும் பெர்சே 3.0 பேரணிகள்
கோலாலம்பூரில் நடத்தப்பட்ட பெர்சே 3.0 பேரணிக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர். டத்தாரான் மெர்தேக்காவைச் சுற்றிலும் 100,000க்கும் மேற்பட்டவர்கள் திரண்ட வேளையில் உலகம் முழுவதும் 35 நாடுகளில் உள்ள 85 நாடுகளில் மலேசியர்கள் ஒன்று கூடி பெர்சே 3.0டன் தங்கள் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொண்டனர்.…
ஜோகூரில் 3,000க்கும் மேற்பட்டவர்கள் கூடினர்
ஜோகூர் பாருவில் உள்ள டத்தாரான் பண்டாராயாவில் குந்தியிருப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ள மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பெர்சே ஆதரவாளர்கள் திரண்டனர். கூட்டத்தினர் "Rakyat Melayu Rakyat Malaysia, Rakyat Cina Rakyat Malaysia, Rakyat India, Rakyat Malaysia," என முழங்கினர். அதே வேளையில் டத்தாரான் பண்டாராயாவிலிருந்து 7 கிலோமீட்டர்…
பெர்சே: சில ஆர்ப்பாட்டக்காரர்களின் நடத்தை “வழக்கத்திற்கு மாறாக உள்ளது’
பெர்சே 3.0 பேரணியின் போது தனது ஆதரவாளர்களில் சிலர் வன்முறையாக நடந்து கொண்டதாகக் கூறப்படுவது குறித்து தான் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தேர்தல் சீர்திருத்தப் போராட்ட அமைப்பான பெர்சே இன்று கூறியுள்ளது. அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் வன்முறையாக நடந்து கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் "வழக்கத்திற்கு மா றானவை" என பெர்சே…
சந்திக்கும் இடங்களில் காணப்படும் நிலவரங்கள்
வழக்குரைஞர் மன்றக் கட்டிடத்துக்கு முன்பு ஜாலான் லெபோ புசாரில் அமைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புக்கு முன்பு மஞ்சள் நிற உடை அணிந்திருந்த 40 பேர் முகாமிட்டுள்ளனர். அவர்கள் முள்வேலிகளிலும் சாலைத் தடுப்புக்களிலும் பெர்சே, லினாஸ் எதிர்ப்பு, டத்தாரானை ஆக்கிரமிப்போம் ஆகிய இயக்கங்களின் பதாதைகளைப் போர்த்தியுள்ளனர். ஜாலான் பார்லிமெண்ட்டுக்குச் செல்லும் ஜாலான்…
பெர்சே 3.0: நகருக்குள் செல்லும் சாலைகளில் போலீஸ் தடுப்புகள் போடப்பட்டுள்ளன
இன்று பிற்பகல் மணி 2.00 க்கு டாத்தாரான் மெர்தேக்காவில் பெர்சே 3.0 குந்தியிருப்பு போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு செல்லும் மக்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் நகரின் மையத்திற்குச் செல்லும் சாலைகளில் போலீசார் தடுப்புகளை போட்டுள்ளனர். அம்பாங் எலிவேட்டட் ஹைவே, ஜாலான் துன் ரசாக், ஜாலான் மகாமெரு, ஜாலான் புடு, ஜாலான்…
Suaram: Respect People’s Right to Assembly and Free…
-Nalini.E, April 27, 2012 The Universal Rights to Assembly and Free Speech Must be Respected! SUARAM strongly condemns any attempt by the police or the ruling party to stop the BERSIH 3.0 Sit and…