அடுத்து இரு முனைகளில் பெர்சே இயக்கம்

தேர்தல் முறையில் காணப்படுகின்ற 'கவலை அளிக்கும்' நிலையைச் சமாளிப்பதற்கு தேர்தல் சீர்திருத்த போராட்ட அமைப்பான பெர்சே 'வாக்களிப்பு, கண்காணிப்பு' என்னும் இரு முனை இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. "தேர்தல் மோசடிகளை முறியடிக்கும் பொருட்டு வாக்களிக்க முடிந்த அனைவரும் பெரும் எண்ணிக்கையில் வாக்களிக்கச் செல்ல வேண்டும்," என பெர்சே கூட்டுத் தலைவர்…

இப்போதைக்கு பெர்சே 4.0 இல்லை என அம்பிகா உறுதி அளிக்கிறார்

பெர்சே 4.0 பேரணியை நடத்துவதற்கான திட்டம் ஏதும் இப்போதைக்கு இல்லை எனத் தூய்மையான, நியாயமான தேர்தல்களுக்கு போராடும் கூட்டமைப்பின் கூட்டுத் தலைவரான அம்பிகா ஸ்ரீனிவாசன் அறிவித்துள்ளார். "பெர்சே 4.0 பேரணியை நடத்துவதற்கான திட்டம் எதனையும் எனது தரப்பு சிந்திக்கவில்லை," என அவர் மலாய் நாளேடான சினார் ஹரியானிடம் கூறினார்.…

அம்பிகா வீட்டுக்குமுன் மாட்டு பேர்கர்; இந்து சேவை சங்கம் கண்டனம்!

பெர்சே 2.0 இணைத் தலைவரான அம்பிகா ஸ்ரீனிவாசனின் வீட்டுமுன் மாட்டிறைச்சி கொண்ட பேர்கர்களை வேண்டுமென்று சமைத்து விநியோகம் செய்ததோடு அம்பிகாவிற்கும் கொடுக்க முற்பட்ட செயல் சமய துவேசமானது என்று சமய அமைப்பொன்று கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த மே 10-ஆம் தேதி இக்லாஸ் என்ற சில்லரை வணிகர்கள் அமைப்பின் தலைவர்…

பாக் சாமாட்: அந்த ‘இழிவான’ உடற்பயிற்சி அடுத்து என் வீட்டுக்கு…

பெர்சே கூட்டுத் தலைவர் ஏ சமாட் சைட், நடக்கும் நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தால் தமது சகா அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்பு 'உடற்பயிற்சியை' ( ‘butt exercises’ ) நடத்தியவர்கள் அடுத்து என்னைக் குறி வைத்தால் நான் வியப்படைய மாட்டேன் என்று கூறியிருக்கிறார். "அது இழிவானது, கழிசடையான நடவடிக்கை…

பெர்சே ‘ரௌடிகளுக்கு’ எதிராக படை பலத்தைப் பயன்படுத்திய போலீஸ்காரர்களை மகாதீர்…

கடந்த மாதம் நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியின் போது ஆர்ப்பாட்டக்காரர்களுடைய அடாவடித்தனத்தை நிறுத்தவும் சக போலீஸ் அதிகாரிகளுக்கு தீங்கு ஏற்படாமல் இருக்கவும் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படாமல் இருக்கவும் போலீசார் படை பலத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்ததாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். "போலீசார் என்ன செய்ய…

பெர்சே 3.0ல் பங்கு கொண்டது தொடர்பில் தியான் சுவா மீது…

பத்து எம்பி சுவா தியான் சாங் மீது ஏப்ரல் 28ம் தேதி பெர்சே பேரணியில் சம்பந்தப்பட்டது தொடர்பில் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. தியான் சுவா என பரவலாக அறியப்படும் அவர் மீது தாம் தடுத்து வைக்கப்பட்டிருந்த போலீஸ் பயிற்சி மய்யத்திலிருந்து வெளியேறுமாறு டிஎஸ்பி ராஜகோபால்…

‘நல்ல கம்யூனிஸ்ட்கள் மட்டுமே பெர்சே-யை ஆதரிக்கின்றனர்’

பெர்சே 2.0 பேரணியில் கம்யூனிஸ்ட் அனுதாபிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர் ஹனீப் ஒமார் கூறியுள்ளதை பெர்சே நடவடிக்கைக் குழு உறுப்பினரான ஹிஷாமுடின் ராயிஸ் நிராகரித்துள்ளார். ஹனீப் சொல்வது போல ஏப்ரல் 28 பேரணியில் கம்யூனிஸ்ட்கள் சம்பந்தப்பட்டிருந்தால்  அவர்கள் 'நல்ல கம்யூனிஸ்ட்களாக' இருக்க வேண்டும். ஏனெனில்…

வணிகர்கள் அம்பிகா வீட்டுக்கு முன்பு ‘கடை’ போட்டனர்

Ikhlas என்ற சிறு வணிகர்கள் அமைப்பு பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு வெளியில் இன்று காலை பேர்கர் கடை போட்டது. இரண்டு சனிக் கிழமைகளுக்கு முன்பு பெர்சே பேரணி நடந்த போது தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து ஆட்சேபம் தெரிவிக்கும் பொருட்டு அது அங்கு கடை…

மேலும் நான்கு பெர்சே ஆதரவாளர்கள் கைது

ஏப்ரல் 28ம் தேதி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்ட மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த நால்வரையும் சேர்த்து இது வரை மொத்தம் 16 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய படங்கள் ஊடகங்கள் வழியாக வெளியிடப்பட்டிருந்தன. 20 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட…

‘அது’ ரத்த சேமிப்பு மய்யத்தை தணிக்கை செய்ய டிராகுலாவைத் தேர்வு…

உங்கள் கருத்து: "பெர்சே 3.0ல் கம்யூனிஸ்ட்கள் இருப்பதாக ஹனீப் ஒமார் எண்ணுகிறார். அந்தப் பேரணி புரட்சி முயற்சி என்றும் அவர் கருதுகிறார். அவர் முன்னாள் போலீஸ்காரரும் ஆவார். ஆகவே அந்தக் குழு எந்த அளவுக்கு சுதந்திரமாகச் செயல்பட முடியும் ? பெர்சே 3.0 விசாரணைக் குழுவுக்கு முன்னாள் ஐஜிபி…

பெர்சே 3.0 விசாரணைக் குழுவுக்கு ஹனீப் ஒமார் தலைமை தாங்குகிறார்

பெர்சே 3.0 பேரணியின் போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களை விசாரிக்கும் சுயேச்சைக் குழுவுக்கு முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் ஹனீப் ஒமார் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அறுவர் கொண்ட அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள மற்ற ஐவரில் கல்வியாளர்களும் முன்னாள் நீதிபதிகளும் ஊடகப் பேராளர்களும் அடங்குவர். ஹனீப் இந்த…

பெர்சே 3.0 நிகழ்வுகளை விசாரிக்க La Rue முன் வந்ததை…

ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியில் நிகழ்ந்த சம்பவங்களை விசாரிக்க வெளிநபர்கள் வேண்டியதில்லை என வெளியுறவு அமைச்சர் அனீபா அமான் இன்று அறிவித்துள்ளார். அந்தப் பேரணியின் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல்கள் நிகழ்ந்தன. "நாம் ஆட்சியுரிமை கொண்ட நாடு. பாகுபாடு இல்லாமல் விசாரிப்பதற்கு நமக்கு…

அவர்களிடம் தடிகள் இருக்கலாம், நம்மிடம் கேமிராக்கள் உள்ளன

உங்கள் கருத்து: 'இந்த ஆட்சியாளர்களின் முரட்டுத்தனத்துக்கு எதிராக குடிமக்களுடைய சிறந்த தற்காப்பு, தகவல்களும் அவற்றை அம்பலப்படுத்துவதுமாகும்'    இணைய குடி மக்கள் 'தேடப்படும்' போலீஸ்காரர்களின் படங்களை வெளியிட்டனர் பீரங்கி: எதிர்காலத்தில் பொதுப் பேரணிகளில் கலந்து கொள்ளும் அனைவரும் தங்களது கேமிராக்களையும் கொண்டு வர வேண்டும். ஒருவர் மடக்கப்பட்டு உதைக்கப்பட்டால்…

பெர்சே 3.0 பேரணி, புரட்சி முயற்சி எனக் கூறப்படுவது மீது…

பெர்சே 3.0 பேரணிக்கும் புரட்சி முயற்சிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவது மீது போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது. அந்தத் தகவலை ஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் இன்று வெளியிட்டுள்ளார். பிஎன் தலைமை தாங்கும் கூட்டரசு அரசாங்கத்தை வீழ்த்துவதே அந்தப் பேரணியின் நோக்கம் என பிரதமர்…

நஜிப்பின் வேடிக்கையான விபரிதம்!

பெர்சே 3.0 பேரணி புத்ரஜெயாவை கைப்பற்ற மேற்கொண்ட முயற்சி என பிரதமர் நஜிப் விமர்சித்துள்ளது வேடிக்கையாகவும் அதேவேளை விபரிதமாகவும் உள்ளதாக கூறுகிறார் சுவராம் மனித உரிமைக்கழகத் தலைவர் கா. ஆறுமுகம். கடந்த வெள்ளிக்கிழமை குவா முசாங்கில் ஒரேமலேசியா கேளிக்கை நிகழ்வில் உரையாற்றுகையில், "அது புத்ரஜெயாவை கைப்பற்ற மேற்கொண்ட முயற்சி"…

Forget the blame game, focus on Bersih 4.0

- Kuo Yong Kooi Everyone who attended the Bersih 3.0 rally last Saturday were there for national interests. The police will have their version of what is in their national interest, PKR leaders Anwar Ibrahim…

மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடியதை மறைக்கவே பெர்சே வன்முறைக்குத் திட்டமிடப்பட்டது

கடந்த சனிக்கிழமையன்று பெர்சே 3.0 பேரணியில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொண்டது மீது கவனம் செலுத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு அந்தப் பேரணியின் முடிவில் வன்முறைகள் திட்டமிடப்பட்டு கட்டவிழ்த்து விடப்பட்டதா ? இன்று அந்தக் கேள்வியை ஷா அலாம் எம்பி காலித் சாமாட் எழுப்பினார். மக்கள் பெரும் எண்ணிக்கையில்…

ஆயுதம் இல்லாத ஆர்ப்பாட்டக்காரர்களிடம் துப்பாக்கியைக் காட்டுவது- இன்னொரு வழக்கமான நடைமுறையா…

உங்கள் கருத்து: "பொது மக்கள் பங்கு கொள்ளும் பேரணியில் போலீசார் தங்கள் ஆயுதங்களை உருவுவதே கிரிமினல் அச்சுறுத்தலாகும். ஹிண்ட்ராப் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டை ஏஜி என்ற சட்டத் துறைத் தலைவர் சுமத்தியது என் நினைவுக்கு வருகிறது." "போலீஸ் அதிகாரி ஒருவர் ஆர்ப்பாட்டக்காரரை துப்பாக்கியை குறி வைத்ததை நான்…

தாக்கப்பட்ட சன் நிருபருக்கு முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது

சன் நிருபர் ராட்ஸி ரசாக்கிற்கு பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அசுந்தா மருத்துவ மனையில் மருத்துவ சோதனை நடத்தப்பட்ட போது அவருக்கு முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. அதற்கு பின்னர் அவரது தாடை எலும்பில் கம்பி போட்டுக் கட்டப்பட்டுள்ளது. "கோலாலம்பூர் மருத்துவமனை என்னுடைய முகத்தை சோதிக்கவில்லை. என்னுடைய…

பெர்சே 3.0 தொடர்பில் 49 பேர் தேடப்படுகின்றனர்

கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியில் பங்கேற்றது தொடர்பில் தேடப்ப்படும் 49 பேருடைய படங்களை போலீஸ் இன்று வெளியிட்டுள்ளது. குற்றவியல் சட்டத்தின் கீழ் பல்வேறு கிரிமினல் குற்றங்களுக்கான விசாரணைகளில் உதவுவதற்காக அவர்களுடைய வாக்குமூலங்கள் தேவைப்படுவதாக கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் முகமட்  சாலே இன்று நிருபர்களிடம் கூறினார்.…

பிபிசி செய்தியை தணிக்கை செய்ததை ஆஸ்ட்ரோ ஒப்புக் கொள்கிறது

கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணி மீதான பிபிசி செய்தியை தணிக்கை செய்ததை ஆஸ்ட்ரோ ஒப்புக் கொண்டுள்ளது. "தேசிய உள்ளடக்க விதிமுறைகளுக்கு இணங்க" தான் அவ்வாறு செய்ததாக அந்தத் துணைக் கோள தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனம் கூறியது. பிபிசி செய்தி தணிக்கை செய்யப்பட்ட தகவலை அம்பலப்படுத்திய சரவாக்…