பெர்சே 3.0: போலீஸ்காரர்களின் மீதான வழக்கு ஒத்திவைப்பு

பெர்சே 3.0 பேரணியில் குவாங் மிங் டெய்லி படப்பிடிப்பாளரைத் தாக்கியதாக குற்றஞ்சாட்ட போலீஸ்காரர்கள் இருவர்மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சில ஆவணங்களைக் காட்சிக்கு வைக்க கால அவகாசம் தேவை என்று அரசுதரப்பு வழக்குரைஞர்கள் கேட்டுக்கொண்டதை அடுத்து அது ஒத்திவைக்கப்பட்டது. இனி, லான்ஸ் கார்ப்பரல் முகம்மட் அஸ்ரி முகம்மட் சோப்ரி, கான்ஸ்டபள் ஷாருல்…

நேர்காணல்: விழிப்புணர்வினால் மட்டுமே எதிர்ப்புணர்வு சாத்தியம்!

வல்லினம் இணைய இதழுக்காக 'சுவாரம்' எனும் மனித உரிமைக் கழகத்தின் தலைவரான கா. ஆறுமுகம் வழங்கிய சிறப்பு நேர்காணல் செம்பருத்தி வாசகர்களுக்காக இங்கு மீள் பிரசுரம் செய்யப்படுகிறது. (நேர்காணல்: ம. நவீன்- வல்லினம்) 'சுவாரம்' எனும் மனித உரிமைக் கழகத்தில் தலைவரான வழக்கறிஞர் கா. ஆறுமுகம் ஒரு போராட்டவாதியாகவே…

அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் முன்னர் ஹனீப் குழு ‘உண்மையைக் கண்டு…

ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த தேர்தல் சீர்திருத்தங்களுக்குப் போராடும் பெர்சே 3.0 பேரணியின் போது உண்மையில் என்ன நடந்தது என்பதை 'ஹனீப் ஒமார் தலைமையிலான சுயேச்சைக் குழு' ஆழமாக ஆய்வு செய்வதற்காக அரசாங்கம் காத்திருக்கிறது. அதற்கு பின்னரே தவறு செய்துள்ள தரப்புக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். "அந்த சுயேச்சைக்…

பொதுத் தேர்தலுக்குப் பிந்திய குழப்பம் என்பது “தீய அரசியல்” என…

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பக்காத்தான் ராக்யாட்டும் பெர்சே-யும் கலவரத்தை மூட்டும் சாத்தியம் உள்ளதாக கூறப்படுவது "தீய அரசியலுக்கு" நல்ல உதாரணம் எனப் பெர்சே வருணித்துள்ளது. முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டும் நடப்புத் துணைப் பிரதமர் முஹைடின் யாசினும் தெரிவித்துள்ள அந்த ஆரூடங்கள் "கெட்ட எண்ணங்கள்- தவறாக வழி நடத்துகின்றவை"…

பெர்சே தொண்டர்மீதான குற்றச்சாட்டைக் கைவிடுக:என்ஜிஓ-கள் வலியுறுத்து

சுவாராமில் இருந்துகொண்டு பயிற்சி பெற்று வருபவரான டான் ஹொங் காய்மீது யுனிவர்சிடி சயன்ஸ் மலேசியாவுக்குள் அத்துமீறி நுழைந்தார் என்று சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு என்ஜிஓ-கள் சட்டத்துறை தலைவர்(ஏஜி)அலுவலகத்துக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளன. 50க்கு மேற்பட்ட சமூக அமைப்புகள் அம்மகஜரை ஆதரித்துக் கையொப்பமிட்டிருப்பதாகக் கூறிய…

4 பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது

நான்கு பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இன்று மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர்கள் மூவர் மீது கலவரத்தில் ஈடுபட்டதாகவும் ஒருவர் மீது படப் பிடிப்பாளர் ஒருவருக்குக் காயத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. வழக்குரைஞரான ஜி ராஜேஷ் குமார், ராசா பிகேஆர் தொகுதித் தலைவர் ஆர் தங்கம், பிகேஆர் உறுப்பினர்…

பெர்சே விசாரணைக் குழுவிலிருந்து இரு உறுப்பினர்கள் விலகினர்!

உள்துறை அமைச்சு அமைத்த பெர்சே 3.0 பேரணி விசாரணைக் குழுவிலிருந்து இரு உறுப்பினர்கள் விலகிக் கொண்டுள்ளனர். அந்தக் குழுவின் இரண்டாவது கூட்டத்துக்குப் பின்னர் அதன் தலைவர் முகமட் ஹனீப் ஒமார் அந்தத் தகவலை அறிவித்தார். முன்னாள் போர்னியோ தலைமை நீதிபதி ஸ்டீவ் சிம், பெட்ரோனஸ் நிறுவன விவகாரத் முதுநிலைத்…

துணைப் பிரதமர்: பெர்சே 3.0 பொதுத் தேர்தலுக்குப் பிந்திய குழப்பத்துக்கு…

பக்காத்தான் ராக்யாட் அடுத்த பொதுத் தேர்தலில் தோல்வி கண்டால் வன்முறை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ள கருத்தை துணைப் பிரதமர் முஹைடின் யாசின் ஆதரிக்கிறார். கோலாலம்பூரில் பிஎன் தேர்தல் எந்திரத்தை முடுக்கி வைத்துப் பேசிய அவர்," பெர்சே 3.0 பேரணி தேர்தலுக்குப்…

பெர்சே: வாக்காளர் பட்டியலை உடனடியாத் தூய்மை செய்ய வேண்டும்

வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்த வேண்டும் என பெர்சே விடுத்த முதல் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிறைவேற்றத் தவறி விட்டதாக அந்தக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. "பொது மக்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த போதிலும் வாக்காளர்களைப் புதுப்பிப்பதிலும்வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதிலும் தொடர்ந்து முனைப்புக் காட்டவில்லை," என பெர்சே…

அம்பிகாவுக்கு எதிரான வழக்கில் இறுதி முடிவு செய்வது நீதிமன்றமே என்கிறார்…

பெர்சே 3.0 இணைத் தலைவர் எஸ் அம்பிகாவுக்கும் அவரது இதர 9 குழு உறுப்பினர்களுக்கும் எதிராக மலேசிய அரசாங்கம் தொடுத்துள்ள வழக்கிற்கு சட்ட அடிப்படை இருக்கிறதா இல்லையா என்பதை நீதிமன்றமே முடிவு செய்ய இயலும் என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். அந்த வழக்கிற்கு…

கண்ணீர்-புகைக் குண்டால் தாக்கப்பட்டவர் கண்ணை இழக்கும் அபாயம்

பெர்சே 3.0பேரணியின்போது கண்ணீர்-புகைக் குண்டால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஒருவர், இன்னும் ஆறு மாதங்களில் கண்ணை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளார். கப்பாளா பத்தாசைச் சேர்ந்த அஸ்ருல் வாடி அஹ்மட்டின் பார்வை இன்னும் ஆறு மாதங்களில் மேம்படவில்லை என்றால் அவர் பார்வையை இழக்கலாம் என அவரைப் பரிசோதித்த நான்கு மருத்துவர்கள்…

பெர்சே 3.0 சேதம்: அரசாங்கம் அம்பிகா மீது வழக்கு தொடர்ந்துள்ளது

ஏப்ரல் 28 இல் நடந்த பெர்சே 3.0 பேரணியால் விளைந்ததாக கூறப்படும் சேதத்திற்காக பெர்சே 3.0 இணைத் தலைவர் அம்பிகா மற்றும் ஒன்பது பேருக்கு எதிராக அரசாங்கம் சிவில் வழக்கை தொடர்ந்துள்ளது. மே 15 இல் அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 10 பேரில்…

பெர்சே: அம்பிகாவை மிரட்டுகின்றவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்

பெர்சே, தனது கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் "மிரட்டப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும்" முடிவுக்கு வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. அந்த வகையில் அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தையும் தேசியப் போலீஸ் படைத் தலைவரையும் அது வலியுறுத்தியது. அவர்கள்…

பார் போற்றும் ஒரு பெண்ணுக்கு எதிராக ஈனச்செயல்களா?, கண்டிக்கிறார் சேவியர்

பெர்சே தலைவர் அம்பிகாவிற்கு எதிராகக் கேவலமான ஆர்ப்பாட்டத்தில் இந்தியர்களும் இணைவதா? அவரின் குடியுரிமை மற்றும் பட்டத்தைப் பறிக்கச் சொல்லவும், ஈம சடங்குகளை நடத்தி ஆர்பாட்டத்தில் இறங்கியுள்ளதன் வழி பெர்காசவுக்கும், அம்னோவிற்கும் துணை போன ம.இ.கா மற்றும் பி.பி.பி உறுப்பினர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார்.…

“பெர்சே பேரணி, பேர்கர் கடை, பின் புறத்தைக் காட்டும் உடற்பயிற்சி…

ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பெர்சே 3.0 ஆர்ப்பாட்டம் ஏற்படுத்திய குழப்பம், பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்னால் நடத்தப்பட்ட பேர்கர் கடை, பின் புறத்தைக் காட்டும் உடற்பயிற்சி ஆகியவற்றைக் காட்டிலும் மோசமானது என பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி கூறுகிறார். "நீங்கள் ஒப்பு நோக்கினால்…

அன்வார் பெர்சே 3.0 மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

தெரு ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கு கொண்டதாக அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், துணைத் தலைவர் அஸ்மின் அலி அந்தக் கட்சியின் உச்ச மன்ற உறுப்பினரான பத்ருல் ஹிஷாம் ஷாஹ்ரின் ஆகியோர் மீது இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.…

பிகேஆர் தலைவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு: கடும் பாதுகாப்பு நடவடிக்கை

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், துணைத் தலைவர் அஸ்மின் அலி மற்றும் கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் பாட்ருல் ஹிசாம் ஷஹாரின் ஆகியோர் மீது அமைதியாகக் கூடுதல் சட்ட விதிகளை மீறினர் என்று கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகின்றனர். கோலாலம்பூர், ஜாலான் டூத்தா பகுதிகள் போலீசாரால் சுற்றிவலைக்கப்பட்டுள்ளது. அன்வார்…

பெர்சே: எங்களைப் பயமுறுத்திப் பணிய வைக்க முடியாது

ஒழுங்கான, நியாயமான தேர்தல்களுக்கு அறைகூவல் விடுக்கும் கூட்டமைப்பான பெர்சே-இன் தொடர் விளக்கமளிப்புக் கூட்டங்கள் திட்டமிட்டபடி நாடு முழுக்க தொடர்ந்து நடக்கும்.  கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என அண்மையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் அவை தொடர்ந்து நடக்கும் என அக்கூட்டமைப்பின் இணைத்தலைவர்  அம்பிகா ஸ்ரீநிவாசன் இன்று கூறினார். “என்னைக் குறிவைத்தே…

பெர்சே 3.0 தொடர்பில் அன்வார், அஸ்மின் மீது குற்றம் சாட்டப்படும்

பெர்சே 3.0 பேரணி தொடர்பில் பிகேஆர் கட்சியின் இரண்டு மூத்த தலைவர்களான அன்வார் இப்ராஹிம், அஸ்மின் அலி மீது நாளை நீதிமன்றத்தில்  குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் குற்றவியல் சட்டத்தின் 188வது பிரிவை (அது 109வது பிரிவுடனும் அதே சட்டத்தின் 34வது பகுதியும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டும்)…

அம்பிகாவின் வீட்டின்முன் இரு-நாள் சந்தை

அறுபது சிறு வியாபாரிகள் பெர்சே 3.0 இணைத் தலைவர் அம்பிகாவின் புக்கிட் டாமன்சாரா வீட்டின்முன் எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள்களில் சிறு கடைகள் போட திட்டமிட்டுள்ளனர். கோலாலம்பூர் சிறு கடை வியாபாரிகள் நடவடிக்கை மன்றத்தின் தலைவர் ஜமால் முகமட் யுனுஸ் அவர்களின் நடவடிக்கையை "பெர்சே…

அம்பிகாவுக்காக நடத்தப்பட்ட கூட்டத்தின் மீது முட்டைகளும் கற்களும் வீசப்பட்டன

பெர்சே 2.0 கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனுக்கு ஆதரவாக  மலாக்கா மெர்லிமாவில் நடத்தப்பட்ட தேநீர் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த இரண்டு டிஏபி சட்டமன்ற உறுப்பினர்களையும் கட்சி ஆதரவாளர்களையும் கும்பல் ஒன்று தாக்கியுள்ளது. தொடர்பு கொள்ளப்பட்ட போது ஆயர் குரோ சட்டமன்ற உறுப்பினர் கோ போய் தியோங் அந்தத்…

மலேசியர்களை குறைவாக மதிப்பிட வேண்டாம் என்கிறார் அம்பிகா

பெர்சே 3.0 பேரணி முடிந்து மூன்று வாரங்கள் கடந்திருக்கலாம். ஆனால் அதற்கு ஆதரவு காட்ட பெரும் எண்ணிக்கையில் வந்த மலேசியர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவிப்பதற்கு இன்னும் காலம் கடக்கவில்லை என்கிறார் ஏற்பாட்டாளர்களின் கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன். அந்த பேரணியிலிருந்து அவர் கற்றுக் கொண்ட பாடம் என்னவென்று கேட்கப்பட்டதும் மலேசியர்களைக்…

அம்பிகாவின் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைவதற்கு முயற்சி செய்யப்பட்டதா என சந்தேகிக்கப்படுகிறது

பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனுடைய அலுவலகத்துக்குள் செல்வதற்கான நுழைவு கார்டுகள் செலுத்தப்படும் கட்டுப்பாட்டு பெட்டி சிதைக்கப்பட்டுள்ளது. அதனால் டமன்சாராவில் உள்ள அம்பிகாவின் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதா என்னும் சந்தேகம் தோன்றியுள்ளது. நுழை வாயிலுக்குள் செல்வதைக் கட்டுப்படுத்தும் அந்தப் பெட்டி உடைக்கப்பட்டிருந்தது இன்று காலை எட்டு…