பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக ஜெயலலிதா அமெரிக்கா செல்கிறார்! சுப்பிரமணியன்…
ஜெயலலிதா எந்த நேரத்திலும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லலாம் என்று பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் யூலை 1ம் திகதி சென்னை வர்த்தக மையத்தில் நடந்த இஃப்தார் நோன்பில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை. முதல்வர் அனுப்பிய செய்தியில் உடல்நிலை சரியில்லை என்பதை…
விம்பிள்டன் ஒரே சீசனில் வரலாறு படைத்த 3 இந்தியர்கள்..சானியா, லியான்டர்,…
லண்டன் : விம்பிள்டன் டென்னிசில் ஒரே சீசனில் இந்தியாவை சேர்ந்த 3 பேர் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிகவும் பாரம்பரியான விம்பிள்டனில் நேற்று முன்தினம் நடந்த மகளிர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை பட்டம் வென்றது.…
முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் முயற்சிக்கு,…
மதுரை: முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் முயற்சிக்கு, மூன்றாவது முறையாக மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதால் கேரளாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 2014 நவம்பரில் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டது. இதனால், புதிய அணை கட்டும் விவகாரத்தை…
காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவைக்…
ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு சிறப்புச் சலுகைகள், உரிமைகள் அளிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் ஆதரவு அமைப்பு வழக்குத் தொடுக்க முடிவு செய்திருக்கும் நிலையில், அந்த அரசமைப்புச் சட்டப் பிரிவைக் காக்க தேசிய மாநாட்டுக் கட்சி (என்சி) தீவிரமாகப் போராடும் என்று அக்கட்சியின்…
தமிழகத்தில் பூரண மது விலக்கு பாமகவால் மட்டுமே சாத்தியம் :…
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பதை பாமகவால் மட்டுமே சாத்தியப்படுத்த இயலும் என்று, அக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார். பாட்டாளி மக்கள் கட்சியின் கொங்கு மண்டல அரசியல் மாநாடு கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.தங்கவேல் பாண்டியன் தலைமை வகித்தார்.…
நரேந்திர மோடி இந்தியாவிற்கு பிரதமரா? இந்தி மொழி பேசும் மக்களுக்கு…
திருச்சியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வட்டார பிரதிநிதிகளின் மாநாடு தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.சி.பாபு தலைமையில் வயலூர் முத்துலெட்சுமி திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.…
காஷ்மீர் விவகாரம்: அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு
ரஷியாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் நடத்திய ஆலோசனையின்போது, காஷ்மீர் விவகாரத்தை அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேசித் தீர்க்க கருத்தொற்றுமை ஏற்பட்டது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், காஷ்மீர் விவகாரம் இடம்பெறவில்லை என எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில்,…
127 கோடியைத் தாண்டியது இந்திய மக்கள்தொகை!
இந்தியாவின் மக்கள்தொகை 127 கோடியைத் தாண்டியது. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக, வரும் 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியா மாறும் என்று கருதப்படுகிறது. உலக மக்கள்தொகை தினமான (ஜூலை 11) சனிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி, இந்தியர்களின் எண்ணிக்கை 127,42,39,769 ஆகும் என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின்…
அரசு தோட்டத்தில் விளையும் ‘கிரீன் டீ’ வாங்க மறுக்கும் வணிக…
தமிழக அரசு உற்பத்தி செய்யும், 'கிரீன் டீ'க்கு, நல்ல வரவேற்பு இருந்தாலும், லாபம் குறைவு என்பதால், அதை வாங்கி விற்க, வணிக நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன. அதனால், குறைந்த விலை கிரீன் டீ, அதிகம் பேரை சென்றடையவில்லை. உடலை சுத்திகரிக்கும், 'ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்' அதிகம் இருப்பதாக, டாக்டர்கள் பரிந்துரைப்பதால்,…
மோடி – நவாஸ் பேச்சுவார்த்தை: பான் கீ மூன் பாராட்டு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் ரஷியாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டையொட்டி சந்தித்துப் பேசியதற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை கடந்த ஓராண்டாக தடைப்பட்டிருந்த நிலையில், தற்போது நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக்…
தமிழக மீனவர்களை விடுதலை செய்ய ஏன் முயற்சிக்கவில்லை? : மோடியிடம்…
இந்தியப் பிரதமர் மோடி, நட்பு நாடான இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை விடுவிக்க அக்கறை செலுத்தவில்லையென தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது. தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் சிறையில் உள்ள குஜராத் மீனவர்களை விடுதலை செய்வதற்காக "எதிரி" நாடான பாகிஸ்தானின் பிரதமர்…
பொருளாதார வளர்ச்சியில் சீனாவை பிடரியில் அடித்து இந்தியா முன்னேறும்.. 2016-ல்..-…
வாஷிங்டன்: 2016-ம் ஆண்டு பொருளார வளர்ச்சியில் இந்தியா சீனாவை முந்திவிடும் என்று சர்வதேச நிதியமான ஐ.எம்.எப். விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டில் சீனா 6.03 சதவீதமாக இருக்கும் போது இந்தியாவின் பொருளாதார வளரச்சி 7.05 சதவீமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து 2-வது ஆண்டாக…
ராமேஸ்வரம் – இலங்கை இடையே பாலம், சுரங்கப்பாதை.. ரூ.22,000 கோடியில்…
டெல்லி: இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில், ராமேஸ்வரத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சாலை அமைக்கும் திட்டத்தை, மத்திய அரசு துவங்கவுள்ளது. 22,000 கோடி ரூபாய் செலவில் அமையும் இந்த திட்டத்தின் கீழ், கடலுக்கு அடியில் சுரங்கப்பாதையும், கடலுக்கு மேல் பாலமும் அமைக்கப்பட உள்ளது.…
தூக்கு தண்டனையை அறவே ஒழிக்க வேண்டும்.. மத்திய அரசுக்கு அப்துல்…
டெல்லி : தூக்கு தண்டனையை இந்தியாவில் அறவே ஒழிக்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சட்ட ஆணையத்துக்கு அவர் அளித்துள்ள பரிந்துரையில், சமூக, பொருளாதார அடிப்படையில், இந்தியாவில் கொடிய குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையான தூக்கு தண்டனை முறையை ஒழிக்க வேண்டும் என்று…
மாணவர்களை “மங்குனி”களாக மாற்றும் ஸ்மார்ட் போன்கள்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்
ஹூஸ்டன்: ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் கற்கும் திறன் குறைபாடு ஏற்படுவதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். ஸ்மார்ட் போன் என்றால் ஸ்டைல், நாகரீகம், அப்டேட்டட் பெர்சன் என்ற நிலையெல்லாம் மாறி அதனால் நாம் மக்கு மங்குனிகளாக மாறி விடுகிறோம் என்று சொன்னால் அதிர்ச்சியாகத்தானே இருக்கும். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில்…
காதலர்களை குறிவைக்கும் ஜாதி வெறியர்கள்
மொழி, மதம், ஜாதி ஆகியவற்றை தாண்டி இருமனமும் இணைவது தான் காதல் என்ற விளக்கம் கொடுக்கும் காலம்மாறிப்போய் வெவ்வேறு ஜாதியினர் காதல் கொண்டால் மரணம் தான் பரிசு என்ற காலத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறோம். ஆம், தமிழகத்தில் அப்படி ஒரு அவலம் தான் சமீபகாலமாக அரங்கேறிவருகிறது. தருமபுரி இளவரசனின் காதல்…
மது என்னும் கொடிய பாதையில் பயணிக்கும் தமிழகம்: அதிர்ச்சி தகவல்கள்…
சில தினங்களுக்கு முன் திருவண்ணாமலை பகுதியில் சில குடிகார மிருகங்கள் 4 அல்லது 5 வயதே ஆன சிறுவனுக்கு மதுவை கட்டாயப்படுத்தி அருந்த செய்தனர். அது மட்டுமின்றி அதை பதிவு செய்து இணையத்திலும் பதிவேற்றம் செய்தனர் அந்த நாசக்காரர்கள். இது ஒரு பெரிய அதிர்வலையை எற்படுத்தியது. இந்த பரபரப்பு…
டாஸ்மாக் மதுபான வகைகளின் நச்சுத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ள உயர்நீதிமன்றம்…
டாஸ்மாக் மதுபான வகைகளில் கலந்துள்ள நச்சு தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர்நீதி மன்றம் டாஸ்மாக் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபானங்களில் நச்சுத்தன்மை அதிகரித்துள்ளதால் உயிரிழப்பு ஏற்படுகிறது என புகார் கூறப்பட்டதையடுத்து நச்சுத்தன்மை எவ்வளவு உள்ளது என்பது குறித்து கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என…
ராஜிவ் கொலை வழக்கில் 3 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்:…
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையில் தண்டனை பெற்றவர்களை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991 மே 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த கூட்டத்தில், மனித வெடிகுண்டுக்கு பலியானார். இந்த படுகொலை…
எம்.ஜி.ஆ.ர் மூலம் தி.மு.க.வை உடைத்த இந்திரா காந்தி? கருணாநிதியின் பேட்டியால்…
எம்.ஜி.ஆர். மூலம் தி.மு.க.வை இந்திரா காந்தி உடைத்ததாக தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைமுகமாக பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், மாநில சுயாட்சி விவகாரம், மொழி விவகாரம், ஒடுக்கப்பட்ட மக்கள் நலன்களில் காட்டிய தொடர் அக்கறை, சர்வ வல்லமை படைத்த மத்திய அரசை…
குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா
ஐதராபாத்: குற்றச் செயல்களை தடுப்பதற்கும், போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதை கண்காணிப்பதற்காகவும், அவர்கள் உடலில் கண்காணிப்பு கேமராவை தொங்கவிடும் நடைமுறை, ஐதராபாத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் சாலைகளில் நெரிசல் அதிகரித்து காணப்படும் நேரங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவது வழக்கம். மேலும் அந்த நேரத்தில் சாலை விதிகளை…
வெயிலால் உயிரிழப்பு இரு மடங்காகும்
ஆமதாபாத்: இந்திய நகர்ப்புறங்களில், 2080ல், வெயிலின் வெப்பத்தால் உண்டாகும் உயிரிழப்பு, இரு மடங்காக உயரும் என, ஆமதாபாத் இந்திய நிர்வாக மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இம்மையம் வெளியிட்ட ஆய்வறிக்கை விவரம்:இந்தியாவின், 57 நகர்புறங்களில், அதிகரித்து வரும் வெப்பம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில்,…
குடும்பக் கட்டுப்பாடு செய்து முஸ்லீம்கள் நாட்டுக்கு உதவவேண்டும்…சிவசேனா அறிவுரை..
மும்பை: குடும்ப கட்டுப்பாட்டின் அவசியத்தை முஸ்லிம் மக்கள் உணர்ந்து நாட்டுக்கு உதவ வேண்டும் என்று சிவசேனாவின் பத்திரிகையான சாம்னா செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் தற்போது முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருவதாகவும், இது நாட்டின் ஒற்றுமையை பாதிக்கலாம் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து சிவசேனா…
