இந்திய கடல் எல்லையைத் தாண்டினால் படகு முடக்கம்: காரைக்கால் மீனவ…

இந்திய கடலில் எல்லையை தாண்டும் படகு முடக்கப்படும், படகின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படுமென காரைக்கால் மாவட்ட மீனவ பஞ்சாயத்தார் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 60-க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படையினர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சிறைபிடித்தனர். அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில்,…

காஷ்மீர்: சுமுகமான தேர்தலுக்கு பாகிஸ்தானே காரணம்

ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்ற  முஃப்தி முகமது சயீதை ஆரத்தழுவி வாழ்த்தும் பிரதமர் நரேந்திர மோடி. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுமுகமான முறையில் தேர்தல் நடந்ததற்கு பாகிஸ்தானும், பயங்கரவாதிகளுமே காரணம் என அந்த மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) மூத்த தலைவர் முஃப்தி…

நாடு முழுவதும் பூரண மது விலக்கு: குமரி அனந்தன்

ஏவிபிவி சார்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில மாநாட்டில் பேசுகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன். உடன் காவேரிப்பாக்கம் லெட்சுமி நரசிம்ம பெருமாள் ஆலயத்தின் சம்பத்குமார் ஜீயர். குஜராத்தில் உள்ளதைப் போன்று பூரண மதுவிலக்கை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி…

பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 1041 பேர் பலி…. ஆனாலும் பீதி…

டெல்லி: பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு நாடு முழுவதும் இதுவரை 1041 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தி நடிகை சோனம் கபூரையும் பன்றிக்காய்ச்சல் தாக்கியுள்ளது. நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த இரு தினங்களில் மேலும் 36 பேர் பலியானதையடுத்து கடந்த ஜனவரி முதல் தேதியில்…

திப்பு சுல்தான் மன்னில் இருந்து ஏவுகணை தன்னைத் தானே அழிக்கும்…

பெங்களூர்: கெய்ன்ஸ் டெக்னாலஜி என்ற இந்திய நிறுவனம் ஏவுகணைகள் தன்னைத் தானே அழித்துக் கொள்ள உதவும் கருவியை கண்டுபிடித்துள்ளது. திப்பு சுல்தான் மன்னில் இருந்து ஏவுகணை தன்னைத் தானே அழிக்கும் கருவி கண்டுபிடிப்பு மைசூரைச் சேர்ந்த கெய்ன்ஸ் டெக்னாலஜி நிறுவனம் ஏவுகணைகள் தன்னைத் தானே அழிக்க உதவும் கருவியை…

இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்

தமிழக மீனவர்கள் 66 பேரை இலங்கை கடற்படையினர் சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர்.இச் செயல் கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கோடியக்கரையில் தமிழக மற்றும் புதுவை மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிங்களப்படையினர் தமிழக மீனவர்கள் 43 பேரை…

தமிழக மீனவர்களை இலங்கை விடுவிக்க நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதலமைச்சர்…

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,  ‘’தமிழக மீனவர்கள் 29 பேர் கடந்த 26-ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படை கைது…

அனைத்துப் பிரச்சனைகளையும் ஒன்பதே மாதத்தில் தீர்த்துவிட முடியாது: நரேந்திர மோடி

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்துப் பேசினார். அப்போது அவர்,   அரசு திட்டங்களின் பெயர்கள் குறித்து விவாதிப்பது தேவையற்றது. அரசு திட்டங்களின் பெயர்களை மாற்றுவது பிரச்சனை அல்ல. வளர்ச்சியே நோக்கம். நாட்டின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவே…

காணாமல் போன என் கணவரை மீட்டுத்தாருங்கள்: தியாகுவின் அலுவலகம் முன்…

தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளரும் கவிஞர் தாமரையின் கணவருமான தியாகு கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். கடந்த ஐந்து மாதங்களாக அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை. வீட்டை விட்டு ஓடிப் போன என் கணவரை மீட்டுத் தாருங்கள் என்று கோரி, தியாகுவின்…

“முதன்மை இந்தியா” என்பதே எனது மதம் : பிரதமர் மோடி

மக்களவையில் இன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "எனது அரசின் ஒரே ஒரு மதம் 'முதன்மை இந்தியா' என்பது, எனது ஒரே ஒரு மதப் புத்தகம் இந்திய அரசியலமைப்புச் சட்டம், எனது ஒரே ஒரு பிரார்த்தனை அனைவரின் நலம்" என்று கூறினார். மேலும், பேசுகையில், நிலம் கையகப்படுத்துவதற்கான வரையறை…

சொன்னதைச் செய்த கெஜ்ரிவால்… மின் மற்றும் தண்ணீர் கட்டணத்தைக் குறைத்து…

டெல்லி : டெல்லியில் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மின்சார கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.இந்தப் புதிய கட்டண வசதி வரும் மார்ச் 1 ஆம் தேதி அமலுக்கு வருகிறது. கடந்த 2013ம் ஆண்டு டெல்லி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி, இலவச…

உ.பி.,யில் தொகுதி வளர்ச்சி நிதியை செலவிடாத அரசியல் தலைவர்கள்

லக்னோ: உ.பி., மாநிலத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பி.,க்கள் எம்.பி., தொகுதி வளர்ச்சி நிதியில் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. மத்திய புள்ளியியல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறி்க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: நாட்டிலேயே உ.பி., மாநிலத்தில் தான் அதிக அளவில்…

மீத்தேன் திட்டம் செத்த பாம்பல்ல அது ஒரு தூங்கும் நாகம்:…

“மீத்தேன் திட்டம் என்பது செத்த பாம்பல்ல அது ஒரு தூங்கும் நாகம்” என கூறியுள்ளார் மே பதினேழு இயக்க  ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். நிலம் கையகப்படுத்தல் அவசர சட்டம் குறித்து சமூக வலைதளத்தில் மேலும்  கருத்து தெருவிக்கையில் ”மீத்தேன் திட்டம் செத்த பாம்பு” என அதிமுக அரசின் முதல்வர் சட்டசபையில்…

இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளில் இந்திய முஸ்லீம்கள் அவ்வளவாக சேர்வது இல்லை

டெல்லி: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு அனுதாபம் காட்டுபவர்களை இந்திய அரசு ஒன்றும் செய்யவில்லை என்று பலர் குறை கூறுகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்புகளில் சேர முயற்சிப்போரை இரும்புக் கரம் கொண்டு அடக்கி வரும் உளவுத் துறை தனது செயல்பாடுகளை மாற்றியுள்ளது. முன்பு எல்லாம் வெளிநாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்புகளுடன்…

தனியார் பெரு நிறுவனங்களுக்காக மோடி அரசு செயல்படுகிறது: வைகோ குற்றச்சாட்டு

தில்லியில் நாடாளுமன்றச் சாலையில் சமூக ஆர்வலர் மேதா பட்கர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர். தனியார் பெரு நிறுவனங்களின் நலன்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்ட மசோதாவை நிறைவேற்ற…

மதமாற்றத்தில் ஈடுபட்டவர் அன்னை தெரசா: பாஜக

கிறிஸ்தவ மதத்தை பரப்புவதே தனது நோக்கம் என்பது அன்னை தெரசாவே ஒப்புக் கொண்ட உண்மை என பாஜக எம்.பி.யும் அக்கட்சியின் மூத்த தலைவருமான மீனாட்சி லேகி கூறினார். அன்னை தெரசாவின் சேவையின் பின்னணியில் கிறிஸ்தவ மதமாற்றமே முக்கியமானதாக இருந்தது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியிருந்த நிலையில்,…

தமிழகத்தில் அரசியல் கலாச்சாரம் கெட்டதற்கு திராவிட இயக்கமே காரணம்! –…

சென்னை: தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இல்லாமல் போனதற்கு காரணமே திராவிட இயக்கம்தான் என்ற கசப்பான உண்மையை வேதனையோடு ஒப்புக்கொள்ள வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வட மாநிலங்களில் அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது அரசியலை…

அன்னை தெரசாவை விமர்சிக்காதீர் : அரவிந்த் கேஜ்ரிவால்

டெல்லி: அன்னை தெரசா புனித ஆத்மா. எனவே அவரை விமர்சிக்க வேண்டாம் என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்து தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம், பஜீரா கிராமத்தில் ஆதரவற்ற பெண்கள், குழந்தைகளுக்கான தன்னார்வ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில்…

கச்சத்தீவை மீட்கும் வழக்கில் சாதகமான தீர்ப்பைப் பெறுவோம்: முதல்வர் பன்னீர்செல்வம்

கச்சதீவை மீட்க உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பைப் பெறுவோம் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து நேற்று திங்கட்கிழமை அவர் பேசியபோது: தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் போதெல்லாம்,…

ஈராக்கில் வாடும் 39 இந்தியர்கள் ; மீட்டு தர சுஷ்மாவிடம்…

புதுடில்லி: கடும் துப்பாக்கி சப்தம் இடையே வாழும் ஈராக்கில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை காப்பாற்றி மீட்டு வர வேண்டும் என, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மாவிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். ஈராக்கில் போராளிகள் தங்களின் ஆயுத செல்வாக்கை பயன்படுத்தி பல்வேறு இடங்களை தங்கள் கைவசம் வைத்துள்ளனர்.…

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் விடுதலை!

டெல்லி: ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் விடுதலை செய்யப்பட்டார். அவர் இன்று சொந்த ஊர் திரும்புகிறார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள வாரியன்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் (வயது 47). இவர் ஏசு சபையின் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து, தமிழகத்தில் இலங்கை…

மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: இந்திய தூதரை நேரில் அழைத்தும்…

பெய்ஜிங்: பிரதமர் நரேந்திர மோடி அருணாசலப் பிரதேசத்துக்கு பயணம் மேற்கொண்டதற்கு இந்திய தூதரை நேரில் அழைத்தும் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன்தினம் அருணாசலபிரதேசம் உதயமான 23வது ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் ரயில் மற்றும் மின் திட்டங்களையும் மோடி தொடங்கி வைத்தார். மோடியின்…

10 ஆண்டு சுணக்கத்தை 10 மாதங்களில் போக்க முடியாது

புதுடில்லி: ''கடந்த 10 ஆண்டுகளாக சோம்பிக் கிடந்த நாட்டின் பொருளாதாரத்தை, 10 மாதங்களில் சுறுசுறுப்பாக்க முடியாது,'' என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது, 'மோடியின் ஒன்பது மாத ஆட்சியில், தொழில் துறையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை,' என, எச்.டி.எப்.சி., தலைவர்…