புதுமாப்பிள்ளை தேன் நிலவுக்கு செல்வது போல் மோடி இலங்கை விஜயம்:…

இந்திய பிரதமர் தமிழர்களின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றமை இந்திய வாழ் தமிழ் தேசி இனத்தினருக்கு இழைக்கும் துரோகம். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலை குறித்து யுத்த குற்ற விசாரணை…

பிரிவினைவாதத்தை அரசு அனுமதிக்காது: நரேந்திர மோடி

ஹுரியத் பிரிவினைவாத அமைப்புத் தலைவர் மஸரத் ஆலமை விடுதலை  செய்தது தொடர்பாக மத்திய அரசிடம் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு கலந்து ஆலோசிக்கவில்லை என்றும், பிரிவினைவாதத்தை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார். இந்த விவகாரத்தில், தேவையான நடவடிக்கையை மத்திய அரசு…

“மீனவர்களை நீங்கள் சுட்டால் நாங்களும் சுட வேண்டி வரும்” ரணிலின்…

இந்திய மீனவர்கள் கொலை செய்யப்படுவதனை நியாயப்படுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் இலங்கைப் … பிரமரை சந்தித்த போது தாம் கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். ரணிலின் கருத்து தொடர்பில் இந்திய…

அனைத்து மாநிலங்களிலும் பசுவதைத் தடுப்புச்சட்டம்? மத்திய அரசு தீவிரம்

டெல்லி: பசுவதைத் தடுப்புச்சட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்திலிருந்து சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் குஜராத்தில் கொண்டுவரப்பட்ட பசுவதைத் தடுப்புச்சட்டத்தை அனைத்து மாநிலங்களுக்குமான மாதிரிசட்டமாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பசுவதையைத் தடுப்பது குறித்து…

மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை

  சென்னை மயிலாப்பூர் பாரதீய வித்யா பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சீன மருத்துவர் ஹங்சி சியோவுக்கு பதக்கம் அணிவித்து கெளரவிக்கிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன். மருத்துவ முறைப்படி மேற்கத்திய கழிப்பறைகளைக் காட்டிலும் இந்திய கழிப்பறைகளே சிறந்தவை என சீன மருத்துவ நிபுணர் ஹாங்சி சியோ தெரிவித்தார்.…

பிரதமர் ரணிலுக்கு சுஷ்மா பதிலடி

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் ஊடுருவினால் அவர்களை சுடுவோம் என கூறிய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதிலடி கொடுத்துள்ளார். மீனவர்கள் பிரச்சினையை மனிதநேயத்துடன் அணுக வேண்டும். இத்தாலி கடற்படை வீரர் பிரச்சினையுடன் இதை ஒப்பிடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கை…

தென்மாவட்டங்களில் ஒன்றரை ஆண்டுகளில் 105 கொலைகள்- துணை ராணுவம் கேட்கும்…

சென்னை: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 105 படுகொலைகள் நடந்துள்ள காரணத்தினால் பாதுகாப்புக்கு மத்திய அரசிடம் துணை ராணுவத்தை கோர முடிவு செய்யப்பட்டுள்ளது என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை…

கர்நாடகாவின் மேகதாதுவை நோக்கி செல்ல முயன்ற தமிழக விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர்…

கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவததைத் தடுக்கும் வகையில் முற்றுகையிடச் சென்ற ஆயிரக்கணக்கான தமிழக விவசாயிகள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேகதாதுவில் கர்நாடகா அரசு புதிய அணை கட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் விவசாய அமைப்புகள், பல்வேறு…

இலங்கை பிரதமரின் பேச்சு திட்டமிட்டு பெரிதுபடுத்தப்படுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ளுவோம் என்ற இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டார். ''எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ளுவோம் என்ற இலங்கை பிரதமர்…

இலங்கையில் தமிழர்கள் சம உரிமை பெற மத்திய அரசு நடவடிக்கை…

இலங்கையில் தமிழர்கள் சம உரிமை பெற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு கூறினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி இலங்கைக்கு சென்று அந்த நாட்டில் என்ன பேச உள்ளார்? எந்தெந்த ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்படும்? என்பது…

பாகிஸ்தானில் ஹோலி கொண்டாட்டம்: பாதுகாப்பு அளித்த மாணவர்கள்

சிறுபான்மையினருடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, பாகிஸ்தானில் உள்ள ஒரு ஹிந்துக் கோயிலில் நடைபெற்ற ஹோலிப் பண்டிகை கொண்டாட்டத்துக்கு அந்நாட்டு மாணவர் அமைப்பினர் பாதுகாப்பு அளித்தனர். கராச்சியில் சுவாமி நாராயண் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஹோலிப் பண்டிகைக்கு பாகிஸ்தான் தேசிய மாணவர் கூட்டமைப்பினர் பாதுகாப்பு அளித்தனர்.…

கச்சத்தீவை விட்டுத் தரமாட்டோம்: ரணில் விக்கிரமசிங்க

கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி என்றும், அதை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார். தனியார் தொலைக்காட்சிக்கு ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அளித்த பேட்டி: கச்சச்தீவு இலங்கையின் ஒரு பகுதி. இந்திய அரசும் அது இலங்கைக்குச் சொந்தம் என்றே கருதுகிறது. அதனால், கச்சத்தீவைத்…

தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவோம் என கொக்கரிக்கும் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு…

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அறிக்கை: ’’பாக் நீரிணைப் பகுதியில் இலங்கை எல்லைக்குள் நுழையும் தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவோம் என்று தனியார்  தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இலங்கையின் பிரதமர் சிங்களப் பேரினவாதி ரணில் விக்கிரமசிங்கே கொக்கரித்திருப்பது வன்மையாக கண்டனத் துக்குரியது. 1974 ஆம் ஆண்டு இந்தியா-…

விவசாயிகளுக்கு நான் எதிரி அல்ல: பிரதமர் மோடி

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செüகானுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி. உடன் மத்திய மின் துறை அமைச்சர் பியூஷ் கோயல். நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்தம் விவசாயிகள் நலனுக்கு எதிரானது அல்ல; அதேபோல், நான் விவசாயிகளுக்கு எதிரியும் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மத்தியப்…

பாலியல் புகாரில் சிக்கியவர் அடித்துக் கொலை

திமாப்பூரில் பாலியல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதியை பொதுமக்கள் அடித்துக் கொன்றதையடுத்து அப்பகுதியில் குவிக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர். நாகாலாந்து மாநிலத்தில் பாலியல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபரை, சிறையில் இருந்து வெளியே இழுத்து வந்து பொதுமக்கள் அடித்துக் கொன்றனர். பெண் ஒருவரை கடந்த மாதம் 23-ஆம் தேதி பாலியல்…

கிரானைட் குவாரிகளில் நரபலி: மருத்துவதுறை அறிக்கை அளிக்க சகாயம் உத்தரவு

மதுரை: கிரானைட் குவாரிகளில் பணியாற்றியபோது உயிரிழந்தவர்கள் விவரம் குறித்த அறிக்கையை மருத்துவத் துறை அளிக்கவேண்டும் என ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து சகாயம் விசாரணை மேற்கொண்டுள்ளார். வரும் மார்ச் 15-ம் தேதி விசாரணைக் காலம் முடிவதால், அதற்குள் தாக்கல் செய்வதற்காக இடைக்கால…

கட்சி பதவியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் ராஜினாமா!

ஆம் ஆத்மி கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், முதல்வர் பதவியின் வேலைப்பளு காரணத்தினாலும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்துள்ளார்.கடந்த முறை டெல்லி முதல்வராக பதவியேற்ற 45 ஆவது நாளில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கெஜ்ரிவால், இந்த…

அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது…

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர் என இலங்கைக் கடற்படை அறிவித்துள்ளது இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் மற்றும் படகுகளை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என வடக்கு கடற்படை நிiவேற்று அதிகாரி ரியர் அட்மிரால்…

மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சிக்கு தடை- விற்பனை செய்தால் 5 ஆண்டு ஜெயில்!!

மும்பை: மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி இம்மாநிலத்தில் மாட்டிறைச்சியை வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ 5 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்படும். 1995ஆம் ஆண்டு சிவசேனா- பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டு சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தற்போது 20…

நாடும் மாடும்

மராத்திய மாநிலத்தில் 1995 ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டு நிலுவையில் இருந்த 'விலங்குகள் வதைத் தடைச் சட்டம்' இப்போது அங்கு நிறைவேற்றப்பட்டு, 3.3.15 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்றுள்ளது. இச்சட்டத்தின்படி, பசு, காளைகள் ஆகியனவற்றைக் கொல்வது , விற்பனை செய்வது மட்டுமின்றி, மாட்டுக் கறியை ஒருவர்…

இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராக அவரது சகோதரர் போராட்டம்: அரசியல்…

பிரதமர் மோடியின் மூத்த சகோதரர் பிரகலாத் மோடி. இவர் அகில இந்திய நியாய விலைக்கடை விநியோகஸ்தர்கள் சங்க துணைத் தலைவராக இருக்கிறார். இவர் நியாய விலைக் கடைக்காரர்களின் கோரிக்கைக்காக வியாபாரிகளை திரட்டி மும்பையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார். மும்பை ஆசாத் மைதானத்தில் ஏராளமான வியாபாரிகள் திரண்டனர். அவர்கள் மத்தியில்…

சிறிலங்காவுக்கு இந்தியா 500 கோடி ரூபா ஒதுக்கிடு!!

இந்­தி­யாவின் இந்த ஆண்­டுக்­கான நிதி நிலை திட்டத்தில்  இலங்­கைக்­கான உதவித் திட்­டங்­க­ளுக்கு 500 கோடி ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்ளது. இந்திய பாராளு­மன்­றத்தில்  நிதி­ய­மைச்சர் அருண் ஜெட்லி  இதற்கான அறிக்கையை சமர்ப்பித்­தார். இதில் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்­சுக்­கான நிதி ஒதுக்­கீடு 19சதவீதத்தினால் அதி க­ரிக்­கப்­பட்­டுள்­ளது எனவும் , வெளி வி­வகார…

முஃப்தியின் பேச்சைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் அமளி

ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சயீதின் பேச்சைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, மக்களவையில் இருந்து திங்கள்கிழமை வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள். ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத்  தேர்தல் சுமுகமாக நடந்ததற்கு பாகிஸ்தானும், பயங்கரவாதிகளுமே காரணம் என்று அந்த மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள முஃப்தி முகமது சயீது தெரிவித்த…