பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
இந்தியாவில் 248 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு
கடந்த ஆண்டு, இந்தியாவில் 248 வகை புதிய உயிரினங்கள்(விலங்கினங்கள்)கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்டுள்ள இந்திய விலங்கியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது. புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள மீனினம் ஒன்று இவற்றில் பெரும்பாலானவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும், கிழக்கு இமாயலப் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டவை என்று அந்த ஆய்வகத்தின் இயக்குநர் டாக்டர் கே வெங்கட்ராமன்…
அரசியல் பிரச்னைக்கு தீர்வு காண உதவி: இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை
இலங்கையில் நல்லிணக்கப் பணிகளை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதில் இந்தியாவின் உதவியைக் கோரியுள்ளதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் கூறியுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசிய அவர், இலங்கையின் கண்டி நகரில் இதுகுறித்து சனிக்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் பேசினார். அப்போது,…
பாதுகாப்புத் துறை: அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதில் எச்சரிக்கை தேவை:…
முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும்போது மத்திய அரசு எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் யாதவ் கூறியுள்ளார். முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரான அவர் மும்பையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ""உள்கட்டமைப்புத்துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு எங்களது…
கர்நாடகத்தில் மாணவர்களிடையே கைபேசியை தடைசெய்ய பரிந்துரை
இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களிடையே கைபேசி பாவனையை தடைசெய்ய வேண்டும் என்று மாநில சட்டசபை உறுப்பினர்கள் குழுவொன்று பரிந்துரை முன்வைத்துள்ளது. பெண்களுக்கு எதிராக நடக்கும் பல்வேறு பாலியல் தொந்தரவுகள் மற்றும் வன்முறைகளுக்கு கைபேசி பயன்பாடு முக்கிய காரணமாக இருந்துள்ளதாகவும் பெண்கள் மற்றும் சிறார் நல்வாழ்வுக்கான அனைத்துக்…
‘ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசியல்…
புதுடில்லி:'ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசியல் சட்டத்தின், 370வது பிரிவை, ரத்து செய்ய வேண்டும்' எனக்கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அரசியல் சட்டத்தின், 370வது சட்டப்பிரிவு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கிறது. 'இந்தச்…
அமெரிக்கா வருமாறு மோடிக்கு ஒபாமா முறைப்படி அழைப்பு
வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்கா வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக ஒபாமா அனுப்பிய அழைப்பிதழ் கடிதத்தை அந்நாட்டு வெளியுறவுத்துறை துணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ், தில்லியில் மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்து வழங்கினார். இச் சந்திப்பின் போது, தேசியப்…
இலங்கை மீதான ஐநா விசாரணை: ‘இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை’
இந்தியா வந்திருக்கும் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இன்று வெள்ளிக்கிழமை புதுடில்லியில் சந்தித்து பேசினார். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில் இந்திய மீனவர்கள் விவகாரம், இலங்கை உள்நாட்டு போரில் பாதிப்படைந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் மற்றும் இருநாட்டு…
இந்து தலைவர்கள் கொல்லப்படும் சம்பவங்கள்: குடியரசுத் தலைவரிடம் சுப்பிரமணியன் சுவாமி…
தமிழகத்தில் இந்து தலைவர்கள் கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் முறையிட்டதாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவரது மாளிகையில் சுப்பிரமணியன் சுவாமி வியாழக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "இந்திய அரசியல்வாதிகளால் வெளிநாடுகளில்…
சாவின் விளிம்பிலுள்ள பொருளாதாரத்துக்கு சஞ்சீவினி மருந்து: மோடி பாராட்டு
மக்களவையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ள பட்ஜெட், சாவின் விளிம்பில் இருக்கும் இந்தியப் பொருளாதாரத்துக்கு சஞ்சீவினி மருந்தைப் போல புத்துயிர் அளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: ஏழைகள் மற்றும் சமுதாயத்தில் பின்தங்கியிருப்பவர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கை…
இந்திய பட்ஜெட் : பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என அரசு…
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதல் நிதிநிலை அறிக்கையை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். வரிவிலக்குக்காக வரையறுக்கப்பட்ட விளிம்பினை உயர்த்தி, மக்களின் வரி சுமை குறைக்கப்பட்டுவதாக இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பல புதிய திட்டப்பணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த…
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இந்தியர்களா?
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இந்தியர்களும் இணைந்துள்ளதாக திடுக்கிடும் தகவல் ஒன்றை உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஈராக்கில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி உலகையே உலுக்கி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இந்தியாவிலிருந்து 18 பேர் சேர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை உளவுத்துறை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த 18 பேர் சிரியாவிலும் ஈராக்கிலும் ஆயுத…
ஆயுட்கைதி விடுதலை: மாநில அரசுகளின் பதில் கோருகிறது உச்சநீதிமன்றம்
ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு உள்ளதா என்பது குறித்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் கோரியுள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கபட்டவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு உரிமை உள்ளதா என்பது தொடர்பில் நடைபெற்று…
சோமாலியக் கடற்கொள்ளையர்கள் பிடியில் ஒரு தமிழர்
சோமாலியக் கடற்கொள்ளையர்களின் பிடியில் கடந்த 44 மாதங்களாக இருக்கும் தமிழர் ஒருவரை விடுவிக்க மாநில அரசு உதவ முன்வர வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும், செயல்பாட்டாளர்களும் கோரியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் பகுதியைச் சேர்ந்த டெனிசன் உட்பட 15 பேர், 28.9.2010 முதல் கடற்கொள்ளகியர்களின் பிடியில் உள்ளனர் என்றும்,…
தேசிய மொழிகள் அனைத்தையும் ஆட்சி மொழியாக்க வேண்டும்: மத்திய அரசுக்கு…
இந்தியாவில் உள்ள 22 தேசிய மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் ச.ராமதாஸ், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியது: சென்னை அருகே 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு தமிழக…
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் தமிழக மாடலே சிறப்பானது: மக்களவையில் தம்பித்துரை…
மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்து இன்று விவாதம் நடைபெற்று வருகிறது.. இந்த விவாதத்தில் பல்வேறு அரசியல் கட்சி எம்பிக்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து உரையாற்றி வருகின்றனர். இந்த விவாதத்தில் பேசிய அதிமுக எம்பி தம்பித்துரை, விலைவாசி உயர்வை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.…
இந்து மக்கள் கட்சியினர் ஆயுதம் வைத்துக் கொள்ள வேண்டும்: அர்ஜூன்…
இந்து மக்கள் கட்சியினர் இந்து தர்மத்தின்படி ஆயுதம் வைத்துக்கொள்ள ஆயுதங்கள் வழங்கப்படும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். பாரதப் பிரதமராக நரேந்திரமோடி பொறுப்பேற்றதற்கு பழனியாண்டவருக்கு நேர்த்திக்கடன் செலுத்தும்பொருட்டு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் செவ்வாய்க்கிழமை பழனிக்கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு செய்தார். முன்னதாக…
குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மகளிர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைகள் கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதை கண்டித்து அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மயிலாடுதுறையில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை சோழம்பேட்டை ஊராட்சியில் கடந்த 24.06.2014 அன்று…
கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும்: உமாபாரதி
கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற "கங்கா மந்தன்' நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணி தொடர்பாக பாஜக தேசிய கவுன்சில் குழு கூட்டத்தில் பேசினேன். அப்போது…
வறுமைக் கோடு என்பதை விட சாகாக் கோடு என்பதே சரி
இந்தியாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக இந்தியாவின் வறுமை அளவுகோல் சம்பந்தமாக ஆராய்ந்த அரசாங்கத்தின் நிபுணர் குழுவிருடைய பரிந்துரை காட்டுகிறது. மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையிலான நிபுணர் குழு இந்தியாவில் வறுமைக் கோட்டின் அளவை மீண்டும் வரையறுத்துள்ளது. கிராமப்புறங்களில் நாளொன்றுக்கு…
ஷாரியா நீதிமன்ற உத்தரவுகள் சட்டத்துக்குட்பட்டு அமையவில்லை
இந்தியாவில், ஷாரியா நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் சட்டவிதிமுறைக்கு உட்பட்டது கிடையாது என்று இந்திய உச்சநீதிமன்றம் இன்று திங்கட்கிழமை கூறியிருக்கிறது. இந்த ஷாரியா நீதிமன்றங்கள் சில சந்தர்ப்பங்களில் தனி மனித உரிமைகளில் தலையிடுவதாக உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதி சி.கே.பிரசாத் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்ற வழக்கின் விசாரணையில், மதம்…
முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்குச் சொந்தம்
முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப் பள்ளம், துணக்கடவு ஆகிய அணைகள், தமிழ்நாட்டினால்தான் இயக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன என்றும், இந்த அணைகள் தமிழ்நாட்டிற்குச் சொந்தமானவை என்ற கோரிக்கையும் அணைப் பாதுகாப்புத் தேசியக் குழுவினரால் ஏற்கப்பட்டுள்ளன என்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ள ஜெயலலிதா, தி.மு.க.…
கடைசி சீக்கிய மகாராஜா: ‘சோகமாக முடிந்த அத்தியாயம்’
இந்தியாவின் சீக்கிய இராச்சியத்தின் கடைசி ஆட்சியாளரின் உடல், கிழக்கு இங்கிலாந்தில் சஃபொல்க் (Suffolk) வட்டாரத்தில் உள்ள அமைதியான ஒரு நாட்டுப்புறக் கிராமமான எல்வெடின்-இல் (Elveden) 1893-இல் புதைக்கப்பட்டது. இப்போது நூறாண்டுகள் கடந்து, அவரது உடலை இந்தியாவுக்கு மண்ணுக்கு அனுப்பவேண்டும் என்கின்ற கோரிக்கை பிரிட்டனிலுள்ள சீக்கிய சமூகத்திடமிருந்து கிளம்பியிருக்கின்றது. லாஹூர்…
இந்தியர்களை மீட்க உதவிய சதாம் உசேன்!
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் ஈராக்கில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க சதாம் உசேனின் பாத் கட்சியினர்தான் இந்திய அரசுக்கு உதவி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியர்களை மீட்பதில் ஈராக் அரசும், ஈராக் ராணுவமும் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு தராததால், மறைந்த சதாம் உசேனின் பாத் கட்சியைச் சேர்ந்தவர்களிடம் இந்திய அரசே…
