பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
நிறைவடைந்தது மவுலிவாக்கம் மீட்பு பணி: 67 பேர் பலி, 27…
சென்னையில் மவுலிவாக்கத்தில் 11 அடுக்குமாடி கட்டிடம் விபத்துப் பகுதியில் கடந்த 7 நாட்களாக நடந்து வந்த மீட்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மவுலிவாக்கத்தில் பிரைம் சிருஷ்டி என்ற கட்டுமான நிறுவனத்தினர் கட்டிவந்த 11 அடுக்குமாடி குடியிருப்பு கடந்த 28ம் திகதி இடிந்து விழுந்தது. இதனையடுத்து, அன்று…
பாக்கு நீரிணையில் “இந்தியா” என்ற பெயர்ப் பலகை
தென் பாக்கு நீரிணையின் 5வது தீவுப் பகுதியில் “இந்தியா” என்ற மற்றுமொரு பெயர்ப் பலகை நிறுவப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் செல்வதை தடுக்கும் நோக்கிலேயே இந்த பெயர்ப்பலகை நிறுவப்பட்டுள்ளதாக மண்டபம் கரையோர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மண்டபம் மாவட்ட நிர்வாகி கே நந்தகுமாரின் பணிப்பின்பேரில் இந்த…
மோடி வருகையை எதிர்த்து காஷ்மீரில் கடையடைப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரின் சில பகுதிகளில் பிரிவினைவாதிகள் அறிவித்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக பள்ளிக்கூடங்களும் வணிக நிறுவனங்களும் கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஸ்ரீநகரின் சிலபகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தடுக்கும் முயற்சியாக, அதிகாரிகள் பொது மக்களின் நடமாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளனர். பாஜக தலைமையிலான…
குழந்தைகள் இறப்பைத் தடுக்க 4 இலவச தடுப்பு ஊசிகள்: நரேந்திர…
குழந்தைகள் இறப்பு சதவீதத்தைக் குறைக்க 4 தடுப்பு ஊசிகள் மத்திய அரசு திட்டத்தில் புதிதாக சேர்க்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சர்வதேச நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் ரோட்டா வைரஸ், ருபில்லா, போலியோ தடுப்பு ஊசி, ஜப்பானிய…
காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி: பாகிஸ்தான்
பிரதமராகப் பதவியேற்ற பிறகு நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு முதல் முறையாக வெள்ளிக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், "காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி' என்று பாகிஸ்தான் வியாழக்கிழமை கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் தஸ்னீம் அஸ்லாம் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம்…
வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம்: “ஆதாரம் இன்றி கைது செய்யக்கூடாது”
வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க, போதிய ஆதாரமின்றி இந்தச் சட்டத்தின் கீழ் யாரையும் கைது செய்யக் கூடாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்தச் சட்டம் பழிவாங்கும் நோக்கில் சில சமயங்களில் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இந்தத்…
உச்ச நீதிமன்ற நீதிபதி நியமன விவகாரம்: தலைமை நீதிபதியின் கருத்துக்கு…
உச்ச நீதிமன்ற நீதிபதி நியமன விவகாரத்தில் பா.ஜ.க அரசு நடந்து கொள்ளும் முறை குறித்து தலமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்தால் பிரதமர் நரேந்திரமோடி வருத்தம் அடைந்துள்ளார். முன்னதாக முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வக்கீலுமான கோபால் சுப்பிரமணியம் உள்பட 4 பேரை உச்ச நீதிமன்றா நீதிபதிகளாக நியமிக்குமாறு மூத்த…
இந்திய மத்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
கச்சதீவில் மீன் பிடிப்பது தொடர்பாக இந்தியா மற்றும் இலங்கை இடையே எந்த ஒரு ஒப்பந்தமும் இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன், மீனவ நல அமைப்புகள் போராட்டத்தினை தீவிரப்படுத்த முயற்சித்துள்ளன. கச்சதீவை மீட்டு, அங்கு தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமைகள் வழங்க வேண்டும்…
சென்னை கட்டிட விபத்து: விசாரணைக் கமிஷன் நியமனம்
கட்டிட விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்கின்றன சென்னையில் கடந்த சனிக்கிழமை நடந்த 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 53 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளுக்கு…
பன்னாட்டுச் சட்ட விதிகளின்படி கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம்…
தமிழக மீனவர்களின் உயிருக்கும் வாழ்வாதார உரிமைக்கும் உத்தரவாதம் கிடைக்க, கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சத் தீவு தொடர்பான ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை மற்றும்…
இந்திய எல்லைப்புற மக்களுக்கு ராணுவ பயிற்சி : மத்திய அரசு…
இந்திய - சீன எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவலை எதிர்கொள்ளும் வகையிலும், தங்களை தற்காத்துக் கொள்ளவும் அங்கு வாழும் மக்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அண்டை நாடுகளுடன் எப்போதும் நட்புறவையே விரும்பினாலும், அவர்களது ஊடுருவல்களை எந்த நேரத்திலும் சமாளிக்கும் வகையில் இந்தியாவை தயார்…
தமிழகத்தின் கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழிலேயே தீர்ப்பு
தமிழ்நாட்டில் அமைந்துள்ள சார்நிலை மற்றும் கீழ் நீதிமன்றங்களில் இனி வரும் காலங்களில் தமிழ் மொழியில் மட்டும் தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலும் தீர்ப்பு வழங்க வழிவகுக்கும் சுற்றறிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின்…
126 நவீன போர் விமானங்களை பிரான்சிடம் வாங்குகிறது இந்தியா?
புதுடில்லி: பிரான்ஸ் நாட்டின், 'தாசல்ட் ஏவியேஷன்' நிறுவனம், ரபாலே ரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. நவீன 126 போர் விமானங்களை வாங்க, 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் தொடர்பாக, விமான உற்பத்தியாளர்களிடம் ஏற்கனவே, தொழில்நுட்ப ரீதியிலான பேச்சு வார்த்தைகள்…
சென்னை அடுக்குமாடி இடிந்ததில் இறந்தவர் எண்ணிக்கை 24ஆக உயர்வு
சென்னை அருகே அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 24ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை 24 பேர் உயிருடன் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சுமார் 20 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த 11 மாடிக் கட்டிடம் சனிக்கிழமை பெய்த பெரும் மழையில் இடிந்து விழுந்தபோது 70க்கும்…
இராக்கிலிருந்து 600 இந்தியர்கள் நாடு திரும்ப ஏற்பாடுகள்
இராக்கில் நெருக்கடி இல்லாத பகுதிகளில் இருக்கும் கிட்டத்தட்ட 600 இந்தியர்கள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் இந்த வாரம் துவங்கும் என்று வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருத்தின் தெரிவித்துள்ளார். இராக்கில் இந்தியத் தூதரகம் மேற்கொண்டுவரும் முன்னெச்சரிக்கை முயற்சிகளின் ஒரு பகுதியாக அங்கிருக்கும் இந்தியத் தூதரகத்தின் நடமாடும் அணிகள்,…
பிஎஸ்எல்வி- சி 23 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை சரியாக 9.52க்கு பிஎஸ்எல்வி சி 23 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டில் 5 செயற்கைக் கோள்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த ராக்கெட் ஏவப்படுவதை நேரில் காண்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றே ஸ்ரீஹரிகோட்டா இந்திய…
சென்னை கட்டிட விபத்து: முதல்வர் வருகைக்காக மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டதா?
சென்னை அடுக்குமாடி குடியிருப்பு விபத்து சம்பவத்தில் மீட்புப் பணிகளை நேற்று முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். சென்னை போரூர் மவுலிவாக்கத்தில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த 13 அடுக்கு மாடி கட்டிடம் கனமழையால் இடிந்து விழுந்துள்ளது. இந்நிலையில், முதல்வர் மீட்பு பணியை பார்வையிட வந்தபோது, மீட்பு பணிகளை…
இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல் முயற்சி தொடர்பில் இந்திய தேசிய புலனாய்வு…
தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தூதரகங்கள் மீது தாக்குதல்களை நடத்த இஸ்லாமிய தீவிரவாதிகளால் இலங்கை, மாலைத்தீவு மற்றும் மலேசியாவினூடாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து இந்திய தேசிய புலனாய்வு பிரிவு விசாரணைகளை நடத்தவுள்ளது. தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவர் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.…
முல்லைப் பெரியாறு உட்பட நான்கு அணைகள் தமிழகத்திற்கு சொந்தமானவை: கருணாநிதியின்…
முல்லைப் பெரியாறு. பரம்பிகுளம் உட்பட நான்கு அணைகளும் கேரளாவிற்கு கீழே உள்ள அணைகளின் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், தமிழ்நாட்டிற்கு சொந்தமானவை என்றும், அவை தமிழ்நாட்டினால் பராமரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதியின் கடிதத்திற்கு பதில் அளித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
அருணாச்சல பிரதேசத்தை உரிமை கொண்டாடும் சீனா
அருணாச்சல பிரதேசம் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா வரைபடம் வெளியிட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சீனா தனது அதிகாரப்பூர்வ வரைபடத்தில், அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என தெரிவித்துள்ளது. அதாவது சீனாவின் தெற்கு திபெத்தின் ஒரு பகுதியே அருணாச்சல பிரதேசம் என்று அதில் குறிக்கப்பட்டுள்ளது. இந்த…
சென்னையில் 13 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது! 2 பேர்…
சென்னையில் பெய்த திடீர் கனமழையால் 13 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் இன்று மதியம் சூறாவளி காற்றுடன் திடீர் மழை பெய்தது. இதில் பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை போரூர் மவுலிவாக்கத்தில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த…
அருவிகள், வனங்களை மேம்படுத்த ஜெயலலிதா தலைமையில் பாதுகாப்பு ஆணையம்
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’மனித வளத்தையும், நாட்டின் வளத்தையும் பாதுகாக்கக்கூடிய இயற்கை சார்ந்த பகுதிகளான காடுகள், மலைப் பிரதேசங்கள் மற்றும் அருவிகள் விழும் பகுதிகளைப் பாதுகாக்க பல முனைப்பான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பாரம்பரியமிக்க இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை…
பா.ஜ., புதுமுக எம்.பிக்களுக்கு அறிமுக வகுப்பு
புதுடில்லி: பா.ஜ.,சார்பில் போட்டியிட்டு தேர்வான புதுமுக எம்.பிக்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று துவங்குகிறது. நடந்து முடிந்த 16-வது லோக்சபா தேர்தலில் பா.ஜ.,சார்பில் மொத்தமாக 282 பேர் எம்.பிக்களாக தேர்வாகினர். இதில் சிலர் நான்கு முதல் எட்டுக்கும் மேற்பட்ட தடைவை பார்லி.,, உறுப்பினர்களாக வலம் வருகின்றனர். பிரதமர் நரேந்திரமோடி உட்பட…
