ஈராக்கில் கடத்தப்பட்ட 40 இந்தியர்களின் இருப்பிடம் தெரிந்தது: வெளியுறவுத்துறை

புதுடெல்லி, ஜூன். 19- ஈராக்கில் சன்னி கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் சண்டை நீடித்து வருகிறது. கடந்த வாரம் சதாம் உசேனின் சொந்த நகரான திக்ரித்தை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் அடுத்து மொசூல் நகரை கைப்பற்றினர். நேற்று அவர்கள் மேலும் முன்னேறி தல் அஃபாரை கைப்பற்றினர்.…

எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் 2.80 கோடி வேலைவாய்ப்பு: மோடி அரசின் புரட்சிகர…

புதுடில்லி : உள்நாட்டில் எலக்ட்ரானிக் பொருட்களின் தயாரிப்பிற்காக கூடுதல் நிதி ஒதுக்கி, அதன் மூலம் எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து, 2.80 கோடி புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், உள்நாட்டில்…

இலங்கையில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்! – வைகோ கண்டனம்

இலங்கைத் தீவில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக, சிங்கள இனவாத வெறி பிடித்த குழுக்கள், தாக்குதல் நடத்தி வருவது மிகவும் கவலை அளிக்கிறது. இந்த வன்முறையில் ஈடுபட்ட பொதுபலசேனா என்ற அமைப்புக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன். பௌத்த மதத்தின் பெயரில் செயல்படும் இந்த வன்முறைக்குழு, இலங்கைத் தீவில், பௌத்த மதத்தைத்…

இந்திய மீனவர்களுக்கு எதிராக யாழில் பேரணி

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் பிரவேசிப்பதைக் கண்டித்து இன்று யாழில் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் பேரணியானது, இன்று காலை 10.30க்கு நல்லூர் கைலாச பிள்ளையார் கோவில் முன்றலில் ஆரம்பமாகி இந்திய துணைத் தூதரகத்தை நோக்கி சென்றது. இந்திய துணைத்…

உத்தர பிரதேச பள்ளி-கல்லூரிகளில் மாணவிகளுக்கு தற்காப்புக் கலை: முதல்வர் உத்தரவு

லக்னோ, ஜூன் 17- உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வரும் நிலையில், பெண்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் தற்காப்பு கலை பயிற்சி அளிக்க வேண்டும் என்று முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். பெண்களுக்கு உதவி செய்வதற்காக 24 மணி நேரமும் செயல்படும் இலவச ஹெல்ப்லைனை (1090)…

இலங்கை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கவும்: இந்திய அரசிடம் திருமாவளவன் கோரிக்கை

இலங்கை வாழ் இஸ்லாமிய சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு இந்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அளுத்கம மற்றும் பேருவளை ஆகிய நகரங்களில் கடந்த சில நாட்களாக சிங்கள இனத்தைச் சேர்ந்த பௌத்த துறவிகள் முஸ்லிம் மக்கள் மீது…

சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது!

இலங்கையில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர். இலங்கையின் அளுத்கம, பேருவளை ஆகிய இடங்களில் சிங்களர்கள் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் பலியாகி உள்ளனர்.…

உலக வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டும்: வெள்ளையன்

மயிலாடுதுறை,ஜூன்.16– தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் அன்னிய சார்பு கொள்கையே. விதை விற்க கூட அமெரிக்க நிறுவனம், சமையல் எண்ணை இறக்குமதி என்று…

அத்துமீறலை நிறுத்தினால்தான் பாகிஸ்தானுடன் பேச்சு: இந்தியா திட்டவட்டம்

எல்லைப் பகுதியில் அத்துமீறல்களை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜம்மு- காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல்…

டெல்லி செங்கோட்டையில் இஸ்லாமிய கொடி பறக்க வேண்டும்: அல்கொய்தாவின் காணொளியால்…

இந்தியாவுக்கு எதிராக புனிதப் போர் நடத்த காஷ்மீர் இளைஞர்களுக்கு அல்கொய்தா இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்கொய்தாவின் மூத்த தளபதிகளில் ஒருவரான மெளலானா ஆசிம் உமர் என்பவர் ”காஷ்மீர் முஸ்லிம்களுக்கு" என்ற தலைப்பில் பேசிய காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த காணொளியில், பாகிஸ்தான் மற்றும்…

பாகிஸ்தான் எல்லை மீறினால் ராணுவம் பதிலடி கொடுக்கும்: அருண் ஜேட்லி

எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறினால் தகுந்த பதிலடி கொடுக்கும் திறன் இந்திய ராணுவத்துக்கு உள்ளது என்று மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். ஜம்மு-காஷ்மீரில் 2 நாள் சுற்றுப்பயணமாக சனிக்கிழமை ஸ்ரீநகருக்கு சென்ற அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், ""எல்லையில் பாதுகாப்பு தொடர்பான…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனுமதிக்க மாட்டோம்: மத்திய அமைச்சர்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்தார். இதுகுறித்து கர்நாடக மாநிலம், தும்கூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது அவசியமற்றது. எந்தக் காரணத்தைக் கொண்டும் கர்நாடக மாநிலத்துக்கு எதிரான காவிரி மேலாண்மை வாரியத்தை…

பொருளாதாரத்தை வலுப்படுத்த கடும் நடவடிக்கை: பிரதமர் மோடி

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வரும் ஆண்டுகளில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசு நாட்டின் பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் தள்ளிவிட்டுச் சென்றுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மோடி பிரதமராக பதவியேற்று 3 வாரங்கள் ஆகியுள்ள நிலையில், அவர்…

நவாஸ் ஷெரீப்புக்கு மோடி பதில் கடிதம்: வன்முறையில்லாத அமைதியான சூழ்நிலையில்…

புதுடெல்லி: வன்முறைகள், குழப்பங்கள் இல்லாத அமைதியான சூழ்நிலையில், இரு தரப்பு உறவுக்கான பேச்சுவார்த்தையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமருக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். தனது இந்தியப் பயணம் திருப்திகரமாக அமைந்ததாக ஜூன் 2ம் தேதி மோடிக்கு, ஷெரீப் கடிதம் எழுதினார். அதற்கு நன்றி தெரிவித்து,…

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண நடவடிக்கை: நிர்மலா சீதாராமன்

சென்னை, ஜூன் 14- நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் இடம்பெற்றவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனும் ஒருவர். இவர் மத்திய வர்த்தக துறை இணை மந்திரியாக உள்ளார். மத்திய மந்திரியாக பதவி ஏற்றபின் முதல்முறையாக இன்று சென்னை வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.…

அனல்பறக்கும் ஆந்திரா: ஒரே நாளில் 160 பேரை விழுங்கிய வெயில்

ஆந்திராவில் வெயில் கொடுமையை தாங்க முடியாமல் ஒரே நாளில் 160 பேர் பரிதாபமாய் உயிரிழந்துள்ளனர். ஆந்திரா மாநிலத்தில் கடுமையாக வெயில் கொளுத்துவதால் மக்கள் வீட்டினுள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் நேற்று கிழக்கு கோதாவரியில் 34 பேரும், விஜயநகரத்தில் 16 பேரும், மேற்கு கோதாவரியில் 12 பேரும், விசாகப்பட்டினத்தில் 8…

காவிரி விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை: மத்திய அமைச்சர் உமா…

மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தில் வியாழக்கிழமை பேட்டியளித்த அத்துறையின் அமைச்சர் உமா பாரதி, இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்புடைய விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவின்படி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய நீர்வளம், நதி நீர் வளர்ச்சி,…

தாய்மொழிக்கு எதிரான போராட்டத்தை அனுமதிக்க கூடாது: தா. பாண்டியன்

தாய்மொழிக்கு எதிரான போராட்டத்தை அனுமதிக்கக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் வலியுறுத்திóயுள்ளார். இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தாய்மொழியான தமிழை கட்டாயம் கற்பிக்க வேண்டும் என சட்டம் இயற்ற வேண்டிய நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…

நாடாளுமன்றத்தை கலக்கிய நேதாஜியின் பேரன்

திரினமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பியும் நேதாஜியின் கொள்ளு பேரனான சுகதா போஸ் தனது முதல் நாடாளுமன்றப் பேச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய அவரின் பேச்சை கட்சி பாகுபாடின்றி அனைவரும் பாராட்டியுள்ளனர். சுகதா போஸ் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கொள்ளு பேரன் ஆவார். சுகதா போஸின்…

வறுமை ஒழிப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு: பிரதமர் மோடி உறுதி

நாட்டில் வறுமை ஒழிக்கப்படும். பெண்களின் பாதுகாப்புக்கு  முக்கியத்துவம் கொடுக்கப்படும். பெண்களுக்கு எதிராக குற்றங்களை இழைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது புதன்கிழமை 2ஆவது நாளாக விவாதம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர…

கொழும்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து கூற இந்தியா மறுப்பு

கொழும்பில் இந்திய மத்திய மற்றும் தமிழக அரசாங்கங்களுக்கு எதிராக நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு கருத்து கூற மறுத்துள்ளது. இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது. இதன்…

வேதனைகளை தாங்கி வந்துள்ள தமிழக மீனவர்கள்

இலங்கை கடற்படையினரால் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 85 பேரில் 32 பேர் நேற்று இராமேஸ்வரம் திரும்பியபோது வேதனைகளையும் சோகக்கதைகளையும் தாங்கி வந்ததாக தெ ஹிந்து தெரிவித்துள்ளது. மண்டபம் பிரதேசத்துக்கு அவர்கள் வந்தபோது தாம் இலங்கை கடற்படையினரிடம் வாழ்க்கையை தொலைத்து விட்டு வந்துள்ளதாக…

சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்: அமைச்சர்களுக்கு மோடி கெடு

தங்களது சொத்து விவரங்களை அடுத்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய அமைச்சர்களாக நியமிக்கப்படுவற்கு முன்னதாக அமைச்சர்கள் நிர்வகித்து வந்த அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், தொழில் நிறுவனங்கள், கடன் பத்திரங்கள், கையிருப்பு ரொக்கம், நகைகள், பங்கு…