விருதுநகரில் களம் காணும் வைகோ வெற்றிக்கனியைப் பறிப்பாரா?

மறுமலர்ச்சி திமுக பொதுச் செயலர் வைகோ போட்டியிடும் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. கடந்த முறை வெற்றி வாய்ப்பை சுமார் பதினாறாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தவறவிட்ட வைகோ, இந்த முறை பா.ஜ.க., தே.மு.தி.க., ஆகிய கட்சிகளுடன் இணைந்து மீண்டும் போட்டியிடுகிறார். பா.ஜ.க. கூட்டணியின் நட்சத்திர…

அதிமுகவுக்கு ஆதரவளிப்பது ஏன்? சீமான் பேச்சு

அதிமுகவுக்கு ஆதரவளிப்பது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான். கோவை ராஜ வீதி தேர்நிலை திடலில் “நாடாளுமன்ற தேர்தலும் நமது நிலைப்பாடும்” என்ற தலைப்பில் சீமான் பேசினார். அப்போது, இலங்கை நம் நட்பு நாடு என்கிறது பாஜக. இலங்கை நம் நட்பு…

இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவியதாகக் கூறி வழக்கு

இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் இந்திய இராணுவம், இலங்கை இராணுவத்துக்கு துணையாகக் களத்தில் செயற்பட்டது என்று குற்றஞ்சாட்டி அதனை விசாரிக்கக் கோரி பொதுநல வழக்கு ஒன்று இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்படி நடந்திருந்தால், நாடாளுமன்ற அனுமதி இல்லாமல் மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடிய அப்படியான நடவடிக்கை இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது…

திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்திய திருநங்கையர் ஆண், பெண் என குறிப்பிடப்படும் பாலினங்களைப் போல, திருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என கூறி இந்திய உச்சநீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. திருநங்கைகளுக்கும் சமத்துவம் அளிக்கும் வகையில் வழிவகை செய்யக் கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணையில்,…

அம்பேத்கரை அவமதிக்கிறார் ராகுல்: மோடி தாக்கு

தலித்துகளின் நலன்களுக்கான சட்டங்களை நிறைவேற்றியது காங்கிரஸ்தான் என்று தெரிவித்து, சட்ட மேதை அம்பேத்கரை அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அவமதித்து விட்டதாக பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி திங்கள்கிழமை குற்றம்சாட்டியுள்ளார். அம்பேத்கரின் 125வது பிறந்த தினத்தையொட்டி, குஜராத் தலைநகர் காந்திநகரில் அவரது உருவப்படத்துக்கு மாலை…

மோடி நினைப்பது வெற்றியடைய வேண்டும்: ரஜினி

நரேந்திர மோடியும் நானும் பரஸ்பர நலம் விரும்பிகள், அவர் நினைப்பது வெற்றியடைய வேண்டும் என சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும்,…

தமிழ்நாட்டில் மோடி அலை வீசுகிறதா?

இந்தியா சந்திக்கும் இந்த 16வது நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் வியூகம் வித்தியாசமானது. பிரதமர் பதவிக்கான வேட்பாளராக குஜராத்தின் முதல்வர் நரேந்திர மோடியை தங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறி்வித்திருக்கும் பாரதிய ஜனதாக் கட்சி, இந்தியா முழுவதுமே மோடியின் அலை வீசுவதாக தொடர்ந்து கூறிவருகிறது.…

இலங்கையிலும் நரேந்திர மோடி அலை- மோடியுடன் இலங்கை அரசாங்கம் பேச்சு

இந்தியப் பொதுத் தேர்தல் ஆரம்பமாகியுள்ள நிலையில் பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் அலை இலங்கையிலும் வீசி வருகிறது. இதற்கு காரணம் பாரதீய ஜனதாக் கட்சிக்கு தமிழகத்தில் வைகோ போன்றவர்களின் ஆதரவு கிடைத்தமையால் ஆகும். இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா கருத்து…

இலங்கைத் தமிழரின் நலனுக்கு முன்னுரிமை! – மோடி உறுதி

இலங்கை, மலேசியா, பிஜி போன்ற நாடுகளில் உள்ள தமிழ் மக்களின் நலத் திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று, பாரதீய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், இதனை நிறைவேற்றும் என்றும் உறுதியளித்துள்ளார். சென்னையில் நேற்று…

‘தமிழகக் கட்சிகளுக்கு மக்களைப் பற்றி யோசிக்க நேரம் இல்லை’ –…

''தமிழகத்தில் உள்ள இரண்டு கட்சிகளுமே ஒருவரை ஒருவர் எப்படி அழிப்பது என்றுதான் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். மக்களைப் பற்றிக் கவலைப்பட இவர்களுக்கு நேரமில்லை'' என பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் தோன்றியுள்ள இந்த மூன்றாவது கூட்டணியைப் பார்த்து இந்த இரண்டு கட்சிகளும் பயந்து போயுள்ளதாகவும்…

2014 இந்திய பாராளுமன்றத் தேர்தலில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியவை.

தேசிய இனங்களின் மீதான வன்முறையும், அடக்குமுறையும், சுரண்டலும் மிக அதிகமாக ஏவப்பட்டுக்கொண்டிருக்கின்ற காலத்தில் இந்திய பாராளுமன்றத்  தேர்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம். இச்சமயத்தில் எவற்றினை மையமாக வைத்து இத்தேர்தலை தமிழ்த் தேசிய மக்கள் எதிர்கொள்ளவேண்டும் என்பதை விவாதிப்பது மாற்று அரசியல் இயக்கங்களின் மிகமுக்கியமான மற்றும் அவசியமான அரசியல் கடமையாகிறது.   தேர்தல் காலங்களில்,…

ரஜினியை சந்திப்பது ஏன்? நரேந்திர மோடி விளக்கம்!

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாபூர் கொத்தனூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நான் பிரதமரானால் கர்நாடகாவை விட்டு வெளியேறிவிடுவதாக முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறி உள்ளார். அப்படி அவர் வெளியேறும் போது குஜராத்திற்கு வரும்படி…

யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாதுஎன்பதை வலியுறுத்த வேண்டிய கட்டாயத்தில்…

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி 13.04.2014 ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிக்கை வருமாறு: இந்தியாவின் பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் அவர்கள் (அண்மையில் தனது 99 வயதில் மறைந்தவர்)  2002-இல் மோடி ஆளும் குஜராத்தில் நடைபெற்ற திட்டமிட்ட இஸ்லாமியச் சிறுபான்மையினரைக் குறி வைத்துத் தாக்கிய இன அழிப்புப்பற்றி…

நரேந்திர மோடி இன்று சென்னை வருகை: ரஜினியைச் சந்திக்கிறார்

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) சென்னை வருகிறார். மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே உள்ள ஏ.எம். ஜெயின் கல்லூரி மைதானத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகிறார். மீனம்பாக்கம்…

அ.தி.மு.க., ஓட்டு வங்கி சிதறும்! இ.யூ.முஸ்லீம் லீக் தலைவர் “பகீர்’

தஞ்சாவூர்: "அ.தி.மு.க., ஓட்டு வங்கியில் இருந்து, ஓட்டு சிதறி, பா.ஜ.,வுக்கு போய் சேரும்,'' என, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநிலத்தலைவர் காதர்மொய்தீன் தெரிவித்தார். தஞ்சையில், அவர் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில், ஐந்தரை கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், 25 சதவீத ஓட்டு, தி.மு.க., ஓட்டு…

முதல்வர் பதவியில் இருந்து விலகியது தவறு: கேஜரிவால் ஒப்புதல்

முதல்வர் பதவியில் இருந்து விலக எடுத்த முடிவு தவறானது என்று ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 28 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் துணையுடன் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியைப்…

காவிரி: கர்நாடகத்தின் புதிய பணிகளுக்கு தடை கோருகிறது தமிழகம்

கர்நாடக மாநில அரசு, காவிரி ஆற்றில் புதிய திட்டங்களை நிறைவேற்ற திட்டப்பணிகள் மேற்கொள்வதை தடை செய்யக் கோரி தமிழக அரசு இந்திய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு தரப்பில் இந்திய உச்சநீதிமன்றத்தில் வெள்ளிகிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், கர்நாடக மாநில அரசு காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு…

தமிழர்கள் வாழவேண்டுமெனில் ஜெயலலிதா பிரதமராக வேண்டும்: சீமான்

தமிழர்கள் வாழ்வதற்கு ஜெயலலிதா பிரதமராக வரவேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியுள்ள அவர், எம்.ஜி.ஆர். வழியில் ஈழத்தமிழர்கள் வாழ்வுக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கும் கட்சி அதிமுக. அதனால் தான் சட்டப்பேரவை தேர்தலின் போது அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம்…

பாலியல் பலாத்காரத்துக்கு தூக்கில் போடுவதா?: முலாயம்

 "பாலியல் பலாத்கார குற்றத்துக்கு இளைஞர்களை தூக்கில் போடுவது தவறு' என சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பெண்ணுரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாதில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் முலாயம் சிங்…

தான் திருமணமானவர் என்பதை பகிரங்கப்படுத்தினார் மோடி

நரேந்திர மோடி   பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி முதல் முறையாக, தான் திருமணமானவர் என்பதை வெளிப்படியாக ஒப்புக்கொண்டுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டிடுவதற்காக அவர் தாக்கல் செய்த மனுவிலேயே தனது மனைவி தொடர்பான தகவல்களை முதல் முறையாக, அதிகாரப்பூர்வமாக, பகிரங்கமாக பதிவு செய்திருக்கிறார்.…

கன்னத்தில் அறைவிட்ட நபரை சந்தித்த கெஜ்ரிவால்!

அரவிந்த் கெஜ்ரிவால் தன் கன்னத்தில் அறைவிட்ட ஆட்டோ ஓட்டுநரை நேரில் சந்தித்துள்ளார். டெல்லியில் சுல்தான்புர் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, லாலி என்ற ஆட்டோ ஓட்டுநர் அவரை நெருங்கி மாலை அணிவித்த பின்னர் அவரது கன்னத்திலும் தாடையிலும் ஓங்கிப்…

பாஜக கூட்டணி வென்றால் நதிநீர் பிரச்னைகள் தீரும்: வைகோ

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் அனைத்து நதிநீர் பிரச்னைகளும் தீர்க்கப்படும் என, மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த வைகோ, நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி: அதிமுக, திமுக இல்லாத…

மணப்பெண் கொடுங்கள் வாக்களிப்போம்!: ஹரியாணா இளைஞர்கள் கோரிக்கை

எங்களது வாக்குக்கு பிரதிபலனாக எங்களுக்கு மணப்பெண் கொடுங்கள்' என்று வித்தியாசமாக ஹரியாணா இளைஞர்கள் வேட்பாளர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஹரியாணா மாநிலத்தில் இன்றளவும் பெண் சிசுக் கொலை சர்வ சாதாரணமாக நடந்து வருவதாக பல்வேறு ஆய்வுகள் குற்றம்சாட்டுகின்றன. அதனால், அந்த மாநிலத்தில் பாலின விகிதாசாரத்தில் 1,000 ஆண்களுக்கு, 879 பெண்கள்…