தமிழகத்தில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க…

சென்னை, அக்.9- தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் பி.அருள்மொழிமாறன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- இந்திய பாராளுமன்றத்தில், 1983-ம் ஆண்டு சட்டவிரோத குடியேற்ற சட்டம்…

டாக்டர் அரவிந்த ரெட்டியை கொன்றது யார்? போலீஸ் குழப்பம்

வேலூரில், டாக்டர் அரவிந்த் ரெட்டியை கொன்றதாக, ஏற்கனவே ரவுடி வசூர் ராஜா உள்ளிட்ட, ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை கொன்றது நாங்கள் தான் என, 'போலீஸ்' பக்ருதீன் கூறியிருப்பது, வேலூர் போலீசார் மத்தி யில் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. பா.ஜ., கட்சியின் மாநில மருத்துவ அணி செயலர்…

அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் கொடுக்கப்படவேண்டும்

இந்திய உச்சநீதிமன்றம் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பணிகளில் மூன்று சத இடங்களை ஒதுக்கித்தருமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உத்திரவிட்டிருக்கிறது. தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் இன்று திங்கள் பல்வேறு காரணங்களினால் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது, அது வருத்ததிற்குரியது, இந்நிலையில் அம்மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யவேண்டியது அரசின் கடமை…

இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல, 100 புத்தக வெடிகுண்டுகள்! –…

இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல, 100 புத்தக வெடிகுண்டுகளை, பயங்கரவாதி அபுபக்கர் சித்திக், தயாரித்து, மறைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவல், அவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூரில் இந்து முன்னணி மாநில செயலர் வெள்ளையப்பன், சேலத்தில், பா.ஜ., மாநில செயலர் ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்டவர்களின்…

இரு நாட்டு மீனவர்களே சந்தித்து பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்:…

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைக்கு இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் சந்தித்து தீர்வு காண வேண்டும் என்று இந்தியாவும் இலங்கையும் உடன்பாடு கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி ஏற்ற பின்பு, முதல் முறையாக இலங்கைக்கு அரசுமுறையாக சல்மான்…

உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தோழர் தியாகு மருத்துவமனையில் அனுமதி

“இலங்கையில் கொமன்வெல்த் - எதிர்ப்பியக்கம்” சார்பில், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும், மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது, அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட…

இந்து இயக்க தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு

தமிழகத்தில் உள்ள இந்து இயக்க தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். போலீஸ் பக்ருதீன் சென்னையில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய தீவிரவாதிகள் புத்தூரில் கைது செய்யப்பட்டனர். போலீஸ் பக்ருதீனிடன் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தில் உள்ள இந்து அமைப்புகளின் தலைவர்களை…

நரேந்திர மோடியைக் கொல்ல முயற்சி: மனித வெடிகுண்டு சதி அம்பலம்

புத்தூரில் பிடிபட்ட தீவிரவாதிகள், பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை மனித வெடிகுண்டு தொழில்நுட்பம் மூலம் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியிருந்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இந்த சதித் திட்டத்துக்கு பயன்படுத்துவதற்காக லேப்டாப் பேக் வடிமைப்பில் வெடிகுண்டு வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. ஆந்திர மாநிலம்,…

வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும்: மோடியின் கருத்துக்கு அத்வானி ஆதரவு

வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளதற்கு அந்தக் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ஆதரவு தெரிவித்துள்ளார். மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்த அத்வானி, இப்போது அவருடைய இந்தக் கருத்தை வழிமொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.…

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மூடப்பட வேண்டும்: ஜனாதிபதி பிரணாப்…

இஸ்தான்புல், அக்.6- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி துருக்கி நாட்டுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் நாளிதழ் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் கட்டமைப்புகள் அனைத்தும் கலைக்கப்படவேண்டும். இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதியின்படி பாகிஸ்தான் நடந்துகொள்ள வேண்டும். தீவிரவாதிகள் இந்தியாவின்மீது…

பா.ம.க. தலைமையில் தனி அணி: 45 ஜாதி சங்கங்களின் தலைவர்கள்…

வரும் தேர்தலில் பாமக தலைமையில் தனி அணி அமைத்து போட்டியிட வேண்டும் என 45 ஜாதி சங்கங்களின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இளவரசன் - திவ்யா காதல் திருமணத்தால் தருமபுரியில் ஏற்பட்ட மாவட்டங்கள்தோறும் ஜாதி அமைப்புகளின் தலைவர்களின் கூட்டத்தை ராமதாஸ் நடத்தினார். அதன் விளைவாக தொடங்கப்பட்ட அனைத்து சமுதாயப்…

புத்தூரில் வீடு சுற்றிவளைப்பு: 2 தீவிரவாதிகள் கைது

ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளை போலீஸார் 12 மணிநேர கடும் போராட்டத்துக்குப் பிறகு சனிக்கிழமை கைது செய்தனர். அவர்கள் இருவரும் திருமலையில் நடைபெறும் பிரம்மோற்ஸவத்தை சீர்குலைப்பதற்காக வெடிகுண்டு வைக்கத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. புத்தூரில் ரயில்வே கேட் அருகில் உள்ள மேகர வீதியில் ஒரு…

சந்திரபாபு நாயுடு 7 முதல் தில்லியில் உண்ணாவிரதம்

ஆந்திர மாநிலத்தைப் பிரிக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, வரும் 7ஆம் தேதி முதல் தில்லியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். அவர் ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: காங்கிரஸ் கட்சி இந்த நாட்டைச் சீரழித்து விட்டது. ஆந்திர மாநிலத்தை…

தெலங்கானா தனி மாநிலம் அமைக்க எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

தெலங்கானா தனி மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் விஜயவாடா மக்களவைத் தொகுதி உறுப்பினருமான லகடபதி ராஜகோபால் கூறினார். தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தனித் தெலங்கானா…

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு: முக்கிய எதிரி “போலீஸ்’…

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய எதிரியான "போலீஸ்' பக்ருதீன் என்று அழைக்கப்படும் பக்ருதீன் வெள்ளிக்கிழமை பிடிபட்டான். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ரமேஷ், சேலத்தில் கடந்த ஜூலை 19-ஆம் தேதி இரவு அவரது அலுவலகத்தின் முன்…

மத்திய மந்திரிசபையில் இருந்து சிரஞ்சீவி உள்பட 4 மந்திரிகள் ராஜினாமா

ஐதராபாத், அக்.4- தனி தெலுங்கானா குறித்து மத்திய மந்திரிசபை முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் நேற்று ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் அரசியல் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்தன. ஆந்திர மாநில மந்திரிகள் காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டியை சந்தித்து பேசினார்கள். பின்னர் மத்திய மந்திரிசபையின்…

தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒப்புதல்: ஐதராபாத் பொதுதலைநகர்

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளளது. தெலுங்கானா மற்றும் சீமாந்திரா பகுதியின் பொது தலைநகராக ஐதராபாத் இருக்கும் என்று அமைச்சரவை தெரிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஐதராபாத் நகரம் தலைநகராக இருக்கும் என்று மத்திய…

13வது திருத்தம் தொடர்பாக இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது: மன்மோகன் சிங்

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் அறிந்துள்ளதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு நியூயோர்க்கில் இருந்து புதுடெல்லி திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போதே அவர் இதனை…

கோவில்களை விட கழிவறைகளே முன்னுரிமை கொடுத்து கட்டப்பட வேண்டியவை-நரேந்திர மோடி

கோவில்களை விட கழிவறைகளே முன்னுரிமை கொடுத்து கட்டப்பட வேண்டியவை என பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புது தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற இளைஞர் விழாவில் அவர் பேசியதாவது: "ஹிந்துத்துவா' தலைவராக நான் அறியப்படுகிறேன். எனது இந்தத் தோற்றம் இவ்வாறு சொல்வதற்கு அனுமதிக்காவிட்டாலும், என்னுடைய உண்மையான…

2050-ல் மக்கள்தொகையில் இந்தியா முதலிடம் வகிக்கும்

சீனாவைக் காட்டிலும் அதிக மக்கள்தொகையுடன் இந்தியா 2050-ல் முதலிடம் வகிக்கும் என்று பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. பிரெஞ்சு மக்கள்தொகை ஆய்வு நிறுவனத்தின் தகவல்படி 2050ஆம் ஆண்டு 160 கோடி மக்கள்தொகையுடன் இந்தியா முதலிடம் வகிக்கும். மக்கள்தொகையில் தற்போது முதலிடம் வகிக்கும் சீனா 130 கோடி மக்கள்தொகையுடன் இரண்டாவது…

தண்டிக்கப்பட்ட உறுப்பினர்களை பாதுகாக்கும் அவசர சட்டம் வாபஸ்

இந்தியாவின் நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவிகளில் தொடர்ந்தும் நீடிக்க வகைசெய்யும் அவசர சட்டத்தை இந்திய நடுவணரசு புதனன்று திரும்பப்பெற்றுள்ளது. இந்த அவசர சட்டம் முட்டாள்தனமானது என்று இந்திய நடுவணரசின் கூட்டணிக்கு தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி பகிரங்கமாக சாடியதைத்தொடர்ந்து, இந்திய குடியரசுத்…

ராஜிநாமா என்ற பேச்சுக்கே இடமில்லை

குற்றப் பின்னணி உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் பதவி பறிபோகாமல் தடுக்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த விவகாரத்தில் மத்திய அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து பேசியிருந்த பின்னணியில் பதவியை ராஜிநாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.…

டெல்லியில் வேலைக்கார சிறுமியை சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய எஜமானி கைது

வேலைக்கார சிறுமியை வீட்டுக்குள் அடைத்து வைத்து சூடு போட்டும் கத்தியால் தாக்கியும் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய எஜமானியை போலீசார் கைது செய்தனர். தெற்கு டெல்லியின் வசந்த்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டின் பால்கனியில் இருந்து ஒரு சிறுமி உடல் முழுக்க தீ மற்றும் வெட்டுக்காயங்களுடன் தன்னை காப்பாற்றும்படி…