அமெரிக்க கப்பல் கேப்டனிடம் விசாரணை: ஆயுதங்கள் பறிமுதல்

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க கப்பலில் இருந்த ஆயுதங்களை க்யூ பிரிவு போலீஸார் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர். மேலும், நுண்ணறிவுப் பிரிவு (ஐ.பி.) அதிகாரிகளும் கப்பலுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தூத்துக்குடி அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்த, அமெரிக்காவை சேர்ந்த அட்வன்போர்டு…

காங்கிரசை முந்துகிறது பா.ஜ.க. : கருத்துக்கணிப்பில் தகவல்

புதுடில்லி: தனியார் டிவி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், அடுத்து வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது. அதேநேரத்தில், ஆட்சியமைப்பதில் மாநில கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் எனவும் தெரியவந்துள்ளது. லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலை பா.ஜ., குஜராத்…

கேரள நக்ஸல் அமைப்பு மிரட்டல்: கூடங்குளம் அணு உலைக்கு கூடுதல்…

கூடங்குளம் அணு உலையை தகர்க்கப் போவதாக வந்த உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து அணு உலை வளாகம் மற்றும் சுற்றுப் பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 2 அணு உலைகள் நிறுவப்பட்டு முதல் உலையில் மின் உற்பத்தி தொடங்குவதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.…

முதல் குற்றவாளி பிரதமர் மன்மோகன் சிங்தான்! பி.சி.பரேக்

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டு வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங்கை முதல் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்று நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் பி.சி.பரேக் பரபரப்பு கருத்தைத் தெரிவித்துள்ளார். நிலக்கரிச் சுரங்க முறைகேட்டில் சி.பி.ஐ. விசாரணையை எதிர்நோக்கியுள்ள பி.சி.பரேக், ஹைதராபாதில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:…

தூத்துக்குடி கடல் பகுதியில் பிடிபட்ட அமெரிக்க கப்பலின் பின்னணி என்ன?…

தூத்துக்குடி கடல் பகுதியில் பிடிபட்ட அமெரிக்க கப்பலின் பின்னணி குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனப் பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியது. இது தொடர்பாக அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் (படம்) தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: தூத்துக்குடி கடல் பகுதியில் "எம்வி…

பசி, பட்டினியால் வாடும் இந்திய மக்கள்: அறிக்கையில் தகவல்

உலகில் பசியுடன் வாடும் மக்களில் கால்வாசி பேர் இந்தியாவில் இருப்பதாக குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் (Global Hunger Index) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2011-2013ம் ஆண்டில் உலகில் 842 மில்லியன் பேர் பசியால் வாடுகிறார்கள். இந்த எண்ணிக்கை 2010-2012ம் ஆண்டுடன் (870 மில்லியன்) ஒப்பிடுகையில் சற்று குறைவு தான்.…

தியாகு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலைப் போராட்டத்தினை நடத்திய தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு அவர்கள் தனது போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளார். 14 நாட்களாக இந்த உண்ணாவிரதப்போராட்டத்தினை அவர் மேற்கொண்டிருந்தார். உடல் நலிந்த நிலையில் அவர் சென்னை இராஜீவ்…

இந்​தி​யாவை வெறும் ​சந்​தை​யா​கக் கரு​தக்​கூ​டாது: நரேந்​திர மோடி

இந்​தி​யாவை வெறும் சந்​தை​யா​கக் கரு​தக்​கூ​டாது என்று பாஜ​க​வின் பிர​த​மர் வேட்​பா​ளர் நரேந்​திர மோடி வலி​யு​றுத்​தி​யுள்​ளார்.​ அமெ​ரிக்​கத் தலை​ந​கர் வாஷிங்​ட​னில்,​​ உலக அள​வில் வளர்ந்து வரும் சந்​தை​கள் தொடர்​பான கருத்​த​ரங்கு திங்​கள்​கி​ழமை நடை​பெற்​றது.​ இதில் பங்​கேற்​ற​வர்​க​ளு​டன் குஜ​ராத் முதல்​வ​ரும் பாஜ​க​வின் பிர​த​மர் வேட்​பா​ள​ரு​மான நரேந்​திர மோடி,​​ ஆம​தா​பா​தில் இருந்து விடியோ…

தியாகு உண்​ணா​வி​ர​தத்​தைக் கைவிட ​கரு​ணா​நி​திக்கு மன்​மோ​கன் சிங் கடி​தம்

இலங்​கை​யில் நடை​பெ​ற​வுள்ள காமன்​வெல்த் நாடு​கள் மாநாட்டை இந்​தியா புறக்​க​ணிக்க வேண்​டும் என்​பதை வலி​யு​றுத்தி உண்​ணா​வி​ர​தப் போராட்​டத்தை மேற்​கொண்டு வரும் தியாகு தனது போராட்​டத்​தைக் கைவிட வேண்​டும் என்று திமுக தலை​வர் கரு​ணா​நி​திக்கு பிர​த​மர் மன்​மோ​கன் சிங் கடி​தம் எழு​தி​யுள்​ளார்.​ திமுக நாடா​ளு​மன்​றக் குழு தலை​வர் டி.ஆர்.பாலு திங்​கள்​கி​ழமை பிர​த​மர்…

தோழர் தியாகுவின் உடல் நிலை கவலைக்கிடம்

இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தோழர் தியாகு அவர்கள் சென்னையில் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். இன்று 14 ஆவது நாளாகவும் தோழர் தியாகு உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றார். சாகும் வரையான உண்ணாவிரதத்தை கைவிட திரு.தியாகு அவர்கள்…

சொந்தப் பணத்தை செலவிடாத சோனியா, ராகுல்: லோக்சபா தேர்தலில் ரூ.380…

புதுடில்லி: லோக்சபா தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த லோக்சபா தேர்தலில், தன் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய, காங்கிரஸ் கட்சி எவ்வளவு பணத்தை செலவழித்தது என்ற விவரம் தெரிய வந்துள்ளது. அதில், அக்கட்சியின் தலைவர் சோனியாவும், அவர் மகனும், துணைத் தலைவருமான, ராகுலும்…

மத்திய அரசின் பலவீனமான கொள்கைகளால் சீனா, பாகிஸ்தான் அத்துமீறுகின்றன: ஆர்.எஸ்.எஸ்

மத்திய அரசின் பலவீனமான கொள்கைகளாலேயே சீனாவும் பாகிஸ்தானும் மீண்டும் மீண்டும் நம் நாட்டில் அத்துமீறுகின்றன என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் ஜி பாகவத் கூறியுள்ளார். ஆண்டுதோறும் விஜயதசமி அன்று அந்த அமைப்பின் தலைமையகமான நாகபுரியில் அமைப்பின் தலைவர் விஜயதசமி பேருரை நிகழ்த்துவது வழக்கம். இந்த வருட விஜயதசமி பேருரையில்…

மத்திய பிரதேசத்தில் கோர சம்பவம் ; தசரா விழா நெரிசல்:…

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் தசரா திருவிழாவுக்கு கூடிய பக்தர்கள் மத்தியில் நெரிசல் ஏற்பட்டதால் அதில் சிக்கி 109 பேர் பலியாயினர். 200 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இன்னும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்தியாவில் ஒடிசா, ஆந்திர மாநில புயலில் பெரும் உயிர்ச்சேதம் எதுவும் இல்லாமல் கரைகடந்தது…

ஜாதி ரீதியாக அணி சேருவதை தடுக்க வேண்டும்: திருமாவளவன்

ஜாதி ரீதியாக அணி சேருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை மறைமலை நகரில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஜாதி…

நவீன ஆயுதங்களுடன் அமெரிக்க கப்பல் சுற்றிவளைப்பு

இந்திய கடல் பகுதிக்குள் நவீன ஆயுதங்களுடன் நுழைந்த வெளிநாட்டுக் கப்பலை கடலோரக் காவல் படையின் தூத்துக்குடி பிரிவினர், சனிக்கிழமை அதிகாலை சுற்றி வளைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. இந்திய கடலோரக் காவல் படையின் தூத்துக்குடி பிரிவுக்குச் சொந்தமான "நாயக்தேவி' என்ற ரோந்துக் கப்பலில் வீரர்கள் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 30…

பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க சாதகமான சூழல் இல்லை

பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கான சாதகமான சூழல் ஏற்படவில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். இந்தோனேசிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, சனிக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங்குடன் சிறப்பு விமானத்தில் தில்லி திரும்புகையில் செய்தியாளர்களுக்கு சல்மான் குர்ஷித் அளித்த பேட்டி: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான…

வைட்டமின் மாத்திரைகளுக்கு கடும் தட்டுப்பாடு

வைட்டமின் சத்து மாத்திரைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால் அவ்வகையான மாத்திரைகளை நோயாளிகளுக்குப் பரிந்துரைப்பதை மருத்துவர்கள் குறைத்துள்ளனர். குறிப்பாக வைட்டமின் சி சத்து மாத்திரைகளுக்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வைட்டமின் சி மாத்திரை ஒன்று ரூ. 1.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் விலை 50…

வலுக்கட்டாயமாக சந்திரபாபு நாயுடு வெளியேற்றம்

தில்லியில் உள்ள ஆந்திரப் பிரதேச அரசு விருந்தினர் இல்ல வளாகத்தில் கடந்த ஐந்து நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அவரது கட்சித் தொண்டர்களையும் அப் பகுதியில் இருந்து போலீஸார் வெளியேற்றினர். இதையடுத்து, உடல்நிலை பலவீனமாகக் காணப்படும்…

உலக முட்டை தினம்: 50,000 முட்டைகள் இலவசமாக விநியோகம்

உலக முட்டை தினத்தையொட்டி, முட்டை நுகர்வின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் நகரில் வெள்ளிக்கிழமை 50 ஆயிரம் அவித்த முட்டைகள் பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் இலவசமாக விநியோகிக்கப்பட்டன. தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் நடந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்து, இலவச…

தியாகு, உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்: தா.பாண்டியன் கோரிக்கை

சென்னை, அக்.11-  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முற்போக்கு சிந்தனையாளரும், தமிழ் ஆர்வலருமான தோழர் தியாகு, தொடர்ந்து 8-ம் நாளாக உண்ணாவிரதம் இருந்து வருவது வேதனையைத் தருகிறது. இந்திய அரசு இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என,…

உ.பி.,யில் துப்பாக்கி: மக்களிடம் 11 லட்சம்; போலீசாரிடம் 2.25 லட்சம்

லக்னோ: பொதுநல வழக்கு மூலம் மாநிலத்தில் போலீசாரை காட்டிலும் பொது மக்களிடம் அதிகளவில் துப்பாக்கிவைத்திருப்பதை அறிந்த அலாகாபாத் நீதமன்றம் வரும் காலங்களில் புதிய உரிமம்வழங்குவதற்கு தடை விதித்துள்ளது. உ.பி., மாநிலத்தில் பொதுமக்களிடம் மக்களிடம் புழங்கும் ஆயுதம் குறித்து ஜிதேந்தர் சிங் என்பவர் அலாகாபாத் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல்…

ராகுல் நிச்சயம் பிரதமராவார்: சொல்கிறார் ராஜீவை துப்பாக்கியால் அடித்த சிங்கள…

ராகுல் பிரதமராவது நிச்சயம் என்று இலங்கை முன்னாள் கடற்படை சிற்பாய் விஜித ரோஹண விஜிதமுனி ஜோதிடம் பார்த்து கூறியுள்ளார். 1987ம் ஆண்டு இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியைத் தாக்கிய இலங்கைச் சிப்பாய் தற்போது ஜோதிடராகவும், இசைக் குறுந்தகடுகளை விற்பவராகவும் தொழில் புரிந்து வருகிறார். விஜித ரோஹண விஜிதமுனி(48) முன்னாள் கடற்படை…

லல்லுவுக்கு கிடைத்த 5 ஆண்டு சிறை தண்டனையை பேராசைக்கார அரசியல்வாதிகள்…

கொல்கத்தா, அக்.10- பீகாரின் முதல் மந்திரியாக ராஷ்டீரிய ஜனதா தளத் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் இருந்த போது மாட்டுத்தீவணம் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சி.பி.ஐ. கோர்ட் அவருக்கு 5 ஆண்டு சிறைதண்டனை விதித்தது. இதையடுத்து அவர் ராஞ்சி பிர்சா…