இந்திய நீர்மூழ்கி கப்பலில் தீ : 3 அதிகாரிகள் உட்பட…

மும்பை : இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிக பாதுகாப்பான கப்பல் பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் நீர்மூழ்கி கப்பலுக்குள் இருந்த 3 அதிகாரிகள் உள்ளிட்ட 18 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. ஐஎன்எஸ்…

பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடியது திருமலை

ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வராததால் செவ்வாய்க்கிழமை திருமலை வெறிச்சோடிக் காணப்பட்டது. திருமலை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பஸ்கள் இயக்கப்படாததால் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. கடந்த 38 வருடங்களாக ஆந்திர போக்குவரத்துத் துறை திருமலைக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. திங்கள்கிழமை நள்ளிரவு முதல் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால்…

அமைதிப் பேச்சு: பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்தது இந்தியா

பாகிஸ்தானிடமிருந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு வந்திருந்தாலும், வன்முறையும் பயங்கரவாதமும் இல்லாத சூழலில் மட்டுமே பேச்சுவார்த்தையைத் தொடரமுடியும் என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். எல்லையில் 5 வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா பாகிஸ்தானிடையே அதிகாரிகள் நிலையிலான பேச்சுவார்த்தையை பாதித்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்திய வெளியுறவுத்…

மணிப்பூரை 3 ஆக பிரிக்கக் கோரி தொடர் போராட்டம்: இயல்பு…

மணிப்பூர் மாநிலத்தை 3 ஆக பிரிக்கக் கோரி   தொடர் வேலைநிறுத்தம் நடைபெறுவதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மணிப்பூர் மலைப்பகுதியில் வசிக்கும் நாகா பிரிவினர் தனி மாநிலம் கோரி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதன்காரணமாக அங்கு…

இந்தியாவும் பாகிஸ்தானும் விரும்பினால் ஐ.நா. தலையிடும்: பான் கி-மூன்

இந்தியாவும் பாகிஸ்தானும் விரும்பினால் சமரச நடவடிக்கைகளில் ஐ.நா. பங்கெடுக்கும் என்று தெரிவித்துள்ள ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி-மூன், பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு இரு நாடுகளும் எடுத்துவரும் முன்முயற்சிகளைப் பாராட்டியுள்ளார். இரண்டு நாள் பயணமாக பாகிஸ்தான் செல்லும் அவர், அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசியதாவது: ""எல்லையில் நடந்த…

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்போம்: ஏ.கே.அந்தோனி

எல்லையில்  பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்தார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள, ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி, கொச்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஏ.கே.அந்தோனியிடம் எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து…

அடம் பிடிக்கும் இலங்கையால் பாதிப்பு : பிழைப்பு தேடி கேரளா…

ராமேஸ்வரம்:இலங்கை சிறையில், 56 நாட்களாக வாடும் மீனவர்களை விடுவிக்காமல், அந்நாட்டு அரசு பிடிவாதமாக இருக்கிறது. பயத்தில் மீன் பிடிக்க செல்வதற்கு படகு உரிமையாளர்கள் பலர் முன்வராததால், வேலையின்றி தவிக்கும் தமிழக மீனவர்கள், கேரளாவுக்கு செல்கின்றனர். மீன்வளம் நிறைந்த இந்திய, இலங்கை கடல் பகுதியில், தமிழக மீனவர்கள் குறிப்பாக ராமேஸ்வரம்,…

மணல் மாபியாவை அழிக்க வந்த “பெண் கடவுள்’

இன்று நாடு முழுவதும், பரபரப்பாகப் பேசப்படும் பெயர், துர்கா சக்தி நாக்பால். 28 வயதே நிரம்பிய, இந்த இளம் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் துணிச்சலும், போராட்ட குணமும், அவரை, நாட்டின் மிகப் பெரிய வி.ஐ.பி.,யாக்கி உள்ளது. உ.பி., மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், துணை கலெக்டராக பணியாற்றிய துர்கா, அங்கு,…

காங்கிரஸூக்கு எதிராக ஓரணியில் திரள்வோம்

காங்கிரஸூக்கு எதிராக இதர அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்று குஜராத் முதல்வரும், பா.ஜ.க. தேர்தல் பிரசாரக் குழுவின் தலைவருமான நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசை பதவியிலிருந்து இறக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், பரம்பரை ஆட்சிக்கு நாம்…

எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது பலமுறை சுட்டது. சுமார் 7 மணி நேரம் இந்தத் தாக்குதல் நடந்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் திருப்பிச் சுட்டது. கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு…

ஆந்திரத்தின் 8 வட்டங்களை தமிழகத்தோடு இணைக்க வேண்டும்!

தமிழர்கள் அதிகம் வாழும் ஆந்திரத்தின் 8 வட்டங்களைத் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ஆந்திரத்தை இரண்டாகப் பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் சித்தூர் மாவட்டத்தில் தமிழர் பெரும்பான்மையினராக வாழும்…

கோர்காலாந்து தனி மாநில கோரிக்கை: போராட்டக்காரர்களுக்கு மம்தா கெடு

கோர்காலாந்து தனி மாநிலம் கோரி நடந்து வரும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை 72 மணி நேரத்துக்குள் நிறுத்தாவிட்டால் கோர்கா ஜன முக்தி மோர்ச்சா அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தார். இயல்பு வாழ்க்கை பாதிப்பு: மேற்கு…

ஆந்திராவில் தமிழர் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க ராமதாஸ் கோரிக்கை

ஆந்திராவில் தமிழர் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆந்திரத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சித்தூர் மாவட்டத்தில் தமிழர் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளை தமிழ்நாட்டுடன்…

பாகிஸ்தானிலிருந்து துரத்தப்பட்டார் தாவூத்!

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானிலிருந்து துரத்தியடிக்கப்பட்டுவிட்டார் என்று பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு செயலர் ஷாரியார் கான் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தானில் தாவூத் இப்ராஹிம் இருந்தார் என்பதை பாகிஸ்தான் மறைமுகமாக ஒப்புக்கொள்ளும் விதமாக அவரது பேச்சு அமைந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் பற்றிய புத்தக அறிமுக நிகழ்ச்சி இந்திய பத்திரிகையாளர்கள்…

இந்திய பழங்குடியின மொழிகள் அழிந்துவருகின்றன: புதிய ஆய்வு

இந்தியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருநூறுக்கும் அதிகமான மொழிகள் அழிந்துவிட்டதாக மொழியியல் ஆய்வு நிறுவனம் ஒன்று நடத்திய நாடு தழுவிய மொழிகள் கணக்கெடுப்பு காட்டுகிறது. தற்போது சுமார் 800 மொழிகள் பேசப்படுவதாக இந்த ஆய்வு காட்டுகிறது. நாடெங்கிலும் இருந்து 85 நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்போடு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட…

‘சாவதற்காகவே ராணுவத்தில் சேர வேண்டும் ’- தியாகத்தை கொச்சை படுத்தும்…

பாட்னா: இந்திய ராணுவத்தில் மற்றும் போலீஸ் படையில் சேர்பவர்கள் சாவதற்காகத்தான், மக்கள் ராணுவத்தில் சேர்ந்தால் சாகத்தான் வேண்டும், சாவதற்கு மட்டுமே என்று கொடூரமாக கொச்சைப்படுத்தும் படியான பீகார் அமைச்சரின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் பாக்., எல்லையில் கடந்த செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டனர். இந்த…

இந்திய-பாக்.,எல்லையில் நடந்தது என்ன?

புதுடில்லி; இந்திய - பாக்., எல்லையில் நடந்த தாக்குதலில் பாக்., ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர் என இன்று அமைச்சர் ஏ. கே. அந்தோணி லோக்சபாவில் கூறியுள்ளார். நேற்றைய அறிக்கையில் இருந்து அப்படியே பல்டி அடித்தார். கடந்த 6-ம் தேதி இந்திய- பாக்., காஷ்மீர் எல்லையில் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான்…

இலங்கை கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்குமாறு வலியுறுத்தி சட்ட மாணவர்கள்…

இலங்கையில் நடைபெற இருக்கும் கொமன்வெல்த் கூட்டம் வேறு நாட்டுக்கு மாற்றப்பட வேண்டும். அவ்வாறு இலங்கையில் நடைபெற்றால் கூட்டத்தில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணிக்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி வளாகத்துக்குள் வெள்ளிக்கிழமை…

காங்கிரஸ் கட்சி, இந்தியாவுடன் இருக்கிறதா, இல்லை பாகிஸ்தானோடு சேர நினைக்கிறதா?

"காங்கிரஸ் கட்சி, இந்தியாவுடன் இருக்கிறதா, இல்லை பாகிஸ்தானோடு சேர நினைக்கிறதா?'' என, பா.ஜ., - எம்.பி., யஷ்வந்த் சின்கா எழுப்பிய கேள்வியால், லோக்சபாவில் கடும் அமளி உருவானது. ஜம்மு - காஷ்மீரில், கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியில், இந்திய ராணுவ வீரர்கள் ஐந்து பேரை, பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டுக் கொன்ற…

நாம் தமிழர் கட்சி பிரமுகர் கொலை

திருத்தணி, ஆக. 7– திருத்தணி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பசும்பொன்ராஜா (28). நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மேற்கு மாவட்ட இணை செயலாளராக இருந்தார். கோணிப்பை வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு 4 வயதில் மருதபாண்டி என்ற மகன் உள்ளான். நேற்று முன்தினம் இரவு…

காஷ்மீர் எல்லை பகுதியில் பாக்., ராணுவம் அட்டூழியம்: இந்திய வீரர்கள்…

ஜம்மு: காஷ்மீரில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாக்., ராணுவத்தினர், லஷ்கர் பயங்கரவாதிகள் உதவியுடன், துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும், கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த, ஐந்து இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், ஒரு வீரர் படுகாயமடைந்துள்ளார். இந்த அத்துமீறல் குறித்து அதிர்ச்சி…

ராணுவ செலவை இந்தியா குறைக்க வேண்டும்: நவாஸ் ஷெரீப் வேண்டுகோள்

ஜெட்டா: "ஆயுதப் போட்டியைத் தவிர்க்க, இந்தியாவும், பாகிஸ்தானும் ராணுவ செலவை குறைக்க வேண்டும்,''என, பாகிஸ்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவில் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப், நிருபர்களிடம் கூறியதாவது: ஆயுதப் போட்டி இருக்கும் வரை, அமைதிக்கு வழியில்லை. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். எனவே,…

மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளிகளில் பகவத் கீதை பாடம் :…

போபால் : மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் மாநில அரசு நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளில் பகவத் கீதையை பாடமாக அறிமுகப்படு்த்தியுள்ளது. இதற்கு எதி்ர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி மக்ளின் கவனத்தை திசைதிருப்பவே மாநில அரசு இத்தகயை முடிவை மேற்கொண்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது. மத்திபிரதேச மாநில அரசு வரும்…