தமிழ்நாடு தனி நாடாக இருந்தால் எவ்வளவோ முன்னேறி இருக்கும்: கருணாநிதி

தமிழ்நாடு தனி நாடாக இருந்திருந்தால் எவ்வளவோ முன்னேறியிருக்கும் என தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் மற்றும் பொருளாதார வல்லுனர் ஜீன் டி ரெஸ் ஆகியோர் எழுதியுள்ள “நிலையில்லா புகழ் - இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்” என்ற நூல் பற்றி கருணாநிதி வெளியிட்டுள்ள…

மாநிலங்களை பிரிக்கும்படி கோரிக்கை வலுக்கிறது: நிஜமானால், மாநிலங்கள் எண்ணிக்கை 50…

புதுடில்லி: தனி தெலுங்கானா மாநிலம் அறிவிப்பை தொடர்ந்து, பல மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் பட்சத்தில், எதிர்காலத்தில் இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை, 50 ஆக உயர்ந்துவிடும். தனி தெலுங்கானா மாநிலம்: ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, தனி தெலுங்கானா…

தெலுங்கானா தனி மாநிலத்துக்கு எதிரான போராட்டம், ஆந்திராவில் விஸ்வரூபம்

புதுடில்லி: தெலுங்கானா தனி மாநிலத்துக்கு எதிரான போராட்டம், ஆந்திராவில் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. ஆந்திர மாநில காங்., - எம்.பி.,க்கள் 10 பேர், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, காங்கிரசிலிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இவர்களை பின்பற்றி, மத்திய அமைச்சர்கள் நான்கு பேர், காங்., தலைவர் சோனியாவிடம், இன்று, ராஜினாமா…

தெலுங்கானா எதிரொலி: வலுப்பெறும் போடோலாந்து, கூர்காலாந்து தனி மாநில போராட்டம்

திபு: தெலுங்கானா தனி மாநிலம் எதிரொலியாக வடகிழக்கு மாநிலமான அசாமில் கர்பி, ஆங்லாங் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இன்று நடந்த வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதே போன்று மேற்குவங்கத்திலும் கூர்காலாந்து ‌தனி மாநில கோரி்க்கை தொடர்பாக போராட்டம் தீவிரமாகியுள்ளது.ஆந்திராவை இரண்டாக பிரித்து…

அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை இந்தியா தளர்த்தியது

இந்தியாவில் பல்-முத்திரை சில்லறை வர்த்தகத்தில் (multi-brand retail) அன்னிய நேரடி முதலீட்டு தொடர்பான சட்டவிதிகளை அரசாங்கம் இலகுபடுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் வெளிநாட்டு நிறுவனங்களையும் ஈர்க்கும் முயற்சியாக அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மொத்த கொள்வனவு, உட்கட்டுமான முதலீடுகள் மற்றும் முதலீட்டுக்கான நகரங்கள் தெரிவு உள்ளிட்ட விடயங்களைக் கட்டுப்படுத்துகின்ற…

புதிய மாநிலங்கள் உருவானால் நாடு பலவீனமாகும்: ஹசாரே கண்டனம்

லக்னோ: "புதிய மாநிலங்கள் உருவாக்கப்படுவதால், நாடு பலவீனம் அடையும்' என, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்தார். உத்தர பிரதேச மாநிலம், அசம்கார் பகுதியில், மக்களிடையே லோக்பால் மசோதா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, "ஜனதந்த்ர யாத்திரை' மேற்கொண்டுள்ளார். அப்போது, அவர் பேசியதாவது: பெரிய…

தெலங்கானா உருவாக்கம் குளறுபடியில்தான் முடியும் – ராம்

சிறிய மாநிலங்களை உருவாக்குவதன் மூலம் அப்பகுதிகளின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்ய முடியும் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளமுடியாதது என்று கூறுகிறார் இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் அரசியல் விமர்சகருமான என்.ராம். சிறிய மாநிலங்கள் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்பதை குறிப்பிட்ட ஒரு உதாரணத்தை வைத்தே முடிவு செய்ய முடியும்…

இஸ்லாமிய அறிஞர் சென்னையில் நிகழ்த்தவிருந்த சொற்பொழிவு ரத்து

அமெரிக்கவாழ் இஸ்லாமிய அறிஞர் சென்னையில் நிகழ்த்தவிருந்த சொற்பொழிவு ரத்தானது தொடர்பில் கண்டங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. ஆப்ரிக்க வம்சாவளி அமெரிக்கரான வர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் ஆமினா வதூத் அவர்கள் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் தனியார் பெண்கள் கல்லூரி ஒன்றில் இஸ்லாம், பாலினம் மற்றும் சீர்திருத்தம் குறித்து உரையாற்றவிருந்தார்.…

உத்தரபிரதேசத்தில் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி பதவி நீக்கம்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் நேர்மையான மற்றும் மணல் மாபியாக்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நாக்பாலை(28) அம்மாநில அரசு சஸ்பெண்ட் செய்தது. இதற்கு காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், ஐ.ஏ.ஏஸ். அதிகாரிகள் நடவடிக்கையை ரத்து செய்ய முதல்…

கூர்காலாந்து தனி மாநிலமா?: பிரிக்க விடமாட்டேன் என்கிறார் மம்தா

ஐதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்படுவதை தொடர்ந்து மேற்கு வங்கத்தையும் இரண்டாக பிரித்து கூர்காலாந்து தனி மாநில கோரிக்கை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.இதுதொடர்பாக முதல்வர் மம்தாபானர்ஜி , கூர்காலாந்தை பிரிக்க விடமாட்டேன் என்றார். இந்தியாவின் 4-வது மிகப்பெரிய மாநிலம் என அழைக்கப்படும் ஆந்திர…

தெலங்கானா– ஆந்திராவின் பல பகுதிகளில் எதிர்ப்பு

ஆந்திரப் பிரதேச மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, புதிய மாநிலமாக தெலங்கானா உருவாக்கப்படும் என்று டில்லியில் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியான அறிவிப்பை அடுத்து , ஆந்திரப் பிரதேசத்தின் பல பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட ,…

முல்லை பெரியாறு வழக்கில் கேரள அரசின் போக்கு: சுப்ரீம் கோர்ட்…

புதுடில்லி: முல்லை பெரியாறு அணை விவகார வழக்கி்ல் கேரள அரசின் போக்கிற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.முல்லைப் பெரியாறு வழக்கில் சுப்ரீம் கோர்ட்,ஒரு தீர்ப்பு வழங்கிய பிறகு அதைச் செயல்படுத்தாமல் இருக்க தனியாகச் சட்டத் திருத்தம் மேற்கொண்ட கேரள அரசின் போக்குக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.முல்லைப் பெரியாறு…

மோசமான பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும்

மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்துகளை சந்தைகளில் இருந்து விலக்கிக்கொள்வதை உலக நாடுகள் துரிதப்படுத்த வேண்டும் ஐநாவின் உணவு மற்றும் விவசாயக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் பள்ளியில் சத்துணவு உட்கொண்ட 23 பிள்ளைகள் இம்மாதத்தில் முன்னதாக உயிரிழந்த நிலையில் இந்த அறிவிப்பு வருகிறது. மிக அதிக…

உதயமாகிறது தெலங்கானா

இந்தியாவின் 29வது மாநிலமாக தெலங்கானாவை உருவாக்க மத்தியில் ஆளும் கூட்டணி முடிவு செய்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பு ஹைதராபாத் நிஜாமின் ஆளுகைக்குட்பட்டிருந்த பகுதிகள் தற்போதும் சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கிறது. தமக்கு தனி…

இஸ்ரோ – நாசா இணைந்து செயற்கைகோள் தயாரிப்பு:

பெங்களூரு : ""இஸ்ரோவும், நாசாவும் இணைந்து, செயற்கை கோள்களை தயாரிப்பது குறித்து, பேச்சு நடத்தப்பட்டு வருகிறது,'' என, இஸ்ரோ தலைவர், ராதாகிருஷ்ணன் கூறினார். இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம்) தலைவர், ராதாகிருஷ்ணன் கூறியதாவது: செயற்கை கோள்களை வடிவமைப்பதில், மற்ற நாடுகளுக்கு, நாம், முன் மாதிரியாக திகழ்கிறோம். இதனால்,…

ரூ.20ல் 8 பேர் சாப்பிடலாம்: அமைச்சர் சவால்

கவுகாத்தி : குறைந்த விலையில் நிறைவாக சாப்பிட முடியும் என அரசியல் தலைவர்கள் பலர் தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி வரும் வேளையில் ஒருவருக்கு தலா ரூ.2.50 என்ற விகிதத்தில் ரூ.20ல் 8 பேர் நன்றாக சாப்பிடலாம் என அசாம் மாநில வேளாண்மைத்துறை அமைச்சர் நிலோமோனி சென் தேகா தெரிவித்துள்ளார்.…

இந்திய மாநிலங்கள் துண்டாகும் அபாயம்!

டார்ஜிலிங் : தெலுங்கானா பிரிக்கப்பட்டு தனிமாநில அந்தஸ்து பெரும்பட்சத்தில் கூர்காலாந்தையும் பிரிக்க கூர்கா ஜன்முக்தி மோர்சா அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி மேற்குவங்கத்தின் டார்ஜிலிங் பகுதியில் 3 நாள் கடையடைப்பு போராட்டத்திற்கும் அவ்வமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதே போன்று மகாராஷ்டிராவில் இருந்து விதர்பா பகுதியை பிரித்து தனி…

பிரதமரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும்: அன்னாஹசாரே

கோண்டா, (உத்தரபிரதேசம்), ஜூலை 29– அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் அதிபரை மக்கள் நேரடியாக தேர்ந்து எடுக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அதிகாரம் வாய்ந்த பதவியான பிரதமரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் தேர்ந்து எடுக்கிறார்கள். இந்த நிலையில் சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே பிரதமரை மக்களே நேரடியாக தேர்ந்து…

ராஜ்யசபா எம்.பி.,க்கு விலை ரூ.100 கோடி ! காங்கிரஸ் எம்.பி.,…

புதுடில்லி : நாட்டில் உள்ள பிரபலங்கள் ராஜ்யசபா எம்.பி.,யாக வேண்டுமென்பதற்காக 100 கோடி வரை செலவிட தயாராக இருப்பதாக காங்., கட்சியை சேர்ந்த சவுத்திரி பிரேந்திரசிங் எம்.பி., என்பவர் கூறியுள்ள தகவல் டில்லி அரசியலில் கல கலப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் மாநில வாரியாக எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் எம்.எல்.ஏ.,க்களின்…

பரிட்கோட் மகாராஜாவின் உயிலில் மோசடி; சொத்துக்கள் அவரது மகள்களுக்கே

இந்தியாவின் முன்னாள் மகாராஜா ஒருவரின் சொத்துக்களுக்கான வாரிசுரிமையை அவரது மகள்கள் இரண்டு பேர் வென்றுள்ளனர். சுமார் 20 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கான வாரிசுரிமையைக் கோரி 21 ஆண்டுகளாக நடந்துவந்த நீதிமன்ற போராட்டத்தில் பரிட்கோட் மகாராஜாவின் மகள்மார் இருவரும் வெற்றிபெற்றுள்ளனர். பரிட்கோட் மகாராஜா ஹரிந்தர் சிங் பிராரின்…

விவசாய பொருட்கள் விலை: பிரதமர் மன்மோகன் கவலை

புதுடில்லி : அதிகரித்து வரும் பணவீக்கத்தால், விவசாய விளைபொருட்கள் விலை உயர்ந்து வருவதற்கு கவலை தெரிவித்துள்ள, பிரதமர் மன்மோகன் சிங், இப்பிரச்னைகளைத் தீர்க்க, பொருளாதார நிபுணர்கள், தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளார். டில்லியில், தேசிய பொருளாதார ஆராய்ச்சிக் குழுவினர், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து…

மெட்ராஸ் கஃபே! இதுவா சட்டம் – ஒழுங்கு? – சீறும்…

பிரபல நடிகரான ஜான் ஆப்ரஹாம் நடித்து இயக்கியுள்ள "மெட்ராஸ் கபே' திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் ஆகஸ்டில் வெளியாகிறது. மும்பையில் தணிக்கை செய்யப்பட்டதிலிருந்தே சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது மெட்ராஸ் கபே.! இந்தப் படத்தை தடை செய்ய வேண்டுமென்கிற அளவுக்கு தமிழீழ உணர்வாளர்களிடம் ஆவேசம் தெறிக்கிறது. இதன் ஒருகட்டமாக சென்னை…

காஷ்மீர்: பாத்கம் மாவட்டத்தில் கொந்தளிப்பை அடுத்து ஊரடங்கு உத்தரவு

இந்திய ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீரில் பாத்கம் மாவட்டத்தில் பெண்ணொருவரின் உயிரிழப்பு தொடர்பாக பரவலான கொந்தளிப்பு எழுந்ததை அடுத்து அம்மாவட்டத்தின் பல பகுதிகளில் அதிகாரிகள் மீண்டும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளனர். பொலிஸ்காரர் ஒருவர் தலையில் அடித்ததால் இந்தப் பெண் இறந்தார் என்று குற்றம்சாட்டப்படுகிறது. ஃபாத்திமா என்ற இந்த 57 வயதுப்…