இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் சிறைகளில் இல்லை! நீதியமைச்சர்…

இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை. குற்றம் செய்தவர்களே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகள் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென்றும், அரசாங்கத்தை வலியுறுத்தி வருவதுடன் சிறையிலுள்ள தமிழ் கைதிகள் இன்று…

புலிகளின் வரைபடங்களுடன் கொழும்புக்கு தப்பிய கருணா – 11 ஆண்டுகளுக்குப்…

கிழக்கில் இருந்து தப்பி வந்த போது, கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன், ஒரு பயணப்பெட்டி நிறைய விடுதலைப் புலிகளின் முகாம்கள் அமைந்துள்ள வரைபடங்களை எடுத்து வந்ததாகத் தெரிவித்துள்ளார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா. 2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளிடம் இருந்து கருணாவை காப்பாற்றி, கொழும்புக்குப் பாதுகாப்பாக அழைத்துச்…

பிள்ளையான் கைது

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலமளித்த பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். (மேலதிக இணைப்பு)கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தனை, குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். வாக்குமூலம் ஒன்றை பதிவுசெய்துகொள்வதற்காக அவர் இன்று…

ஐ.நா. தீர்மானம் நீர்த்துப் போயுள்ளதா?

ஐ.நா. மனித உரிமை சபையின் 30வது கூட்டத்தொடரில், நாற்பத்தி ஏழு அங்கத்துவ நாடுகளும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா மீதான தீர்மானம், நீர்த்துப் போயுள்ளதா என்ற கேள்வி உலகம் பூரவாகவும் பேசப்படும் விடயம். யார் யார் இவ் தீர்மானத்தை மிகச் சிறந்ததாகவும், நீர்த்துப் போயுள்ளதாகவும், நடுநிலையாகவும் பார்க்கிறார்கள் என்ற கேள்விக்கு…

போர்க்குற்றம் தொடர்பாக உண்மை சொல்பவர்களுக்கு மன்னிப்பு?

போர்க்குற்றச் செயல் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுடன் தொடர்புடையவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியனவற்றுக்கு இடையில் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய உள்ளக விசாரணைப் பொறிமுறைமை…

திசை திருப்பப்படுகிறதா போர்க்குற்ற விசாரணை?

விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போரின் போது போர்க்குற்றங்களும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் இத்தகைய குற்றங்களில் இரண்டு தரப்புகளும் ஈடுபட்டுள்ளதாகவும் ஐநா விசாரணை அறிக்கை உறுதி செய்துள்ள நிலையில் இராணுவத்துக்கு எதிரான விசாரணை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது. இலங்கை இராணுவம்…

எங்கள் மீன் வளத்தை இந்தியா கொள்ளையிடுகின்றது!– டக்ளஸ் தேவானந்தா

எங்களது மீன் வளத்தை இந்தியா கொள்ளையிடுகின்றது என ஈ.பி.டி.பி.யின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். எமது நாட்டின் மீன் வளம் எமது மக்களுக்கே சொந்தமானது. வடக்கு மீனவர்கள் நீண்ட நாட்களாக இது குறித்து குரல் கொடுத்து வருகின்றனர். போர் காரணமாக 30 ஆண்டுகள் கஸ்டங்களை அனுபவித்த மக்களினால்…

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும்!-…

இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதனை தடுக்க சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பிலான பிரச்சினை போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னரே ஆரம்பிக்கின்றது. போர் இடம்பெற்ற காலத்தில் இந்திய மீனவர்கள்…

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வலியுறுத்தியுள்ள முக்கிய விடயங்கள்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தை சுட்டுக்கொன்ற கொலையாளி உட்பட முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற பல்வேறு படுகொலைகளுடன் தொடர்புடைய குற்றவாளிகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்று வாழ்ந்து வருகின்றனர். இவர்களை கைது செய்து இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேசிய அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன…

சிறிலங்கா கடற்படையிடம் சிக்கியது ஆயுதக் கப்பல்! கப்பல் இந்தியாவிடம் சிக்கியிருந்தால்…..!

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 800க்கும் மேற்பட்ட ஆயுதங்களுடன் அண்மையில் காலி துறைமுகத்திற்கு அருகில் வந்திருந்த ஸ்ரீலங்கா சிப்பிங் நிறுவனத்தின் முகவரான மோஷிப் நிறுவனத்திற்கு சொந்தமான அவன்கார்ட் கப்பல் சம்பந்தமான விசாரணைகளை கடற்படையினரிடமே ஒப்படைத்துள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். இலங்கை தேசியக் கொடியுடன் காலி துறைமுகத்திற்கு அருகில் வந்திருந்த இந்த…

இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுக்களை ஆரம்பித்து விட்டோம்: ரணில் விக்ரமசிங்க

இலங்கையில் ஐந்து தசாப்த காலத்தையும் தாண்டி நீடிக்கும் இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது தொடர்பிலான பேச்சுக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடனும், சிவில் சமூக தரப்புக்களுடனும் புதிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டின்…

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடன் நீக்குங்கள்!- நாடாளுமன்றில் சுமந்திரன் கோரிக்கை

ஐ.நாவில் அரசு எழுத்துமூலம் வழங்கிய வாக்குறுதிகளை செயல்வடிவாக்கி உண்மையாக மனப்பூர்வமாக நிறைவேற்றவேண்டும் என்றும், இந்தச் செயற்பாடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துவதாக அமையவேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வலியுறுத்தினார். அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அரசு வழங்கிய வாக்குறுதிக்கமைய பயங்கரவாதத்…

800 ஆயுதங்களோடு ஆயுதக் கப்பல் ஒன்றை சிங்கள கடல் படை…

இலங்கை கடல் பரப்பில் இருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவில் , சர்வதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற சிறியரக கப்பல் ஒன்றை இலங்கை கடல் படையினர் சற்று முன்னர் பிடித்துள்ளார்கள் என்ற செய்தி அதிர்வு இணையத்திற்கு கிடைத்துள்ளது. குறித்த கப்பலில் சுமார் 800 க்கும் மேற்பட்ட…

ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் இருவரை தடுத்து வைத்து விசாரிக்க…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் விளக்கமறியல் வைக்க கொழும்பு முதன்மை நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. பிரதீப் மாஸ்டர் என்ற எட்வின் சில்வா கிருஸ்ணா கந்தராஜ், காஜன் மாமா என்று அழைக்கப்படும்…

ஒருமித்த நாட்டிற்குள் தீர்வை பெறத் தயாராகவுள்ளோம்!- இரா.சம்பந்தன்

நாட்டை பிரிக்கும்படியான தீர்வை   நாங்கள் கேட்கவில்லை. ஒருமித்த நாட்டிற்குள் சமமான அடிப்படையிலான ஒரு தீர்வை ஏற்க தயாராக இருக்கின்றோம் என்றுதான் கூறிவருகிறோம் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இரா.சம்பந்தன் யாழ்ப்பாணத்திற்கு கடந்த வாரம் விஜயம் மேற்கொண்ட போது இலங்கை தமிழரசுக் கட்சியின்…

வடக்குக் கிழக்கை புலிகள் நிர்வகித்து வந்த காலத்தில் துஷ்பிரயோகங்கள் முழுமையாக…

வடக்குக் கிழக்கு மாகாணங்களை விடுதலைப் புலிகள் நிர்வகித்து வந்த காலப் பகுதியில் துஷ்பிரயோகங்கள் முழுமையாக அற்றுப் போயிருந்தது என்றே கூ ற முடியும். இப்போது நடக்கின்ற துஷ் பிரயோகங்களை பார்க்கின்ற போது எமது மக்கள் மத்தியில் ஒரு அச்சமானதொரு சூழ்நிலை காணப்படுகின்றது. கடந்த ஆட்சிக்காலத்தில் மாத்திரமன்றித் தற்போதும் கேட்பார்…

புதிய நீதிப் பொறிமுறையில் பாதிக்கப்பட்ட மக்களின் பங்களிப்பு உறுதிப்படுத்தப்படாவிட்டால்….?

சிறிலங்காவின் புதிய நீதிப் பொறிமுறையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் காத்திரம்மிக்க பங்களிப்பு உறுதி செய்யப்படத் தவறினால், சிறிலங்காவின் வன்முறைக் கலாசாரம் மேலும் பலம்பெறுவதுடன் சமாதானம் மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கான நகர்வுகளும் பாதிக்கப்படும். இவ்வாறு ‘வொசிங்டன் போஸ்ட்’டில், *Nimmi Gowrinathan மற்றும் *Kate Cronin-Furman ஆகியோர் இணைந்து எழுதியுள்ள கட்டுரையில்…

இலங்கையின் உள்ளக விசாரணைக்கு ஜப்பான் உச்ச ஒத்துழைப்பு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள அமெரிக்கத் தீர்மானத்திற்கு உள்ளக பொறிமுறை ஊடாக பதிலளிக்க இலங்கை அரசாங்கத்திற்கு உச்ச ஒத்துழைப்பை வழங்குவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் பியோமோ ஹசீடா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இதனை தெரிவித்துள்ளார். சீர்குலைந்த உள்நாட்டு மற்றும் சர்வதேச…

தமிழ் சினிமா கதாநாயகர்கள் சிறார்களிடையே புகைத்தலை தூண்டுகின்றார்களா?

தென்னிந்தியாவிலிருந்து வரும் திரைப்படங்கள் மூலம் இலங்கையில் தமிழ் சிறார்கள் மத்தியில் புகைத்தல் பழக்கம் தூண்டப்படுவதாக அடிக் என்ற மது மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான தன்னார்வ தொண்டுநிறுவனம் அண்மையில் கூறியிருந்தது. தமிழ்த் திரைப்பட கதாநாயகர்கள் சிகரெட் புகைக்கும் காட்சிகளால் தூண்டப்பட்டு பல சிறார்கள் முதலில் புகைக்கத் துவங்கியதாக கூறியிருந்ததை…

தீர்மானம் அமுல்படுத்தப்படுகிறதா? கண்காணிக்க ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆறு…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆறு பிரதிநிதிகள் குழுக்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளன. ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் இந்தக் குழுக்கள் எதிர்வரும் இரண்டு வருடங்களில் இடைக்கிடை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளன. அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றன என்பது…

இலங்கையில் நடக்கும் விசாரணை நாடகம்! ஈழ மக்களுக்கு நீதி கிடைக்குமா?

இறுதிக்கட்ட போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கை இராணுவத்தினரும், ஆட்சியாளர்களும் முன்நின்று இந்தப் படுகொலையை நிகழ்த்தினார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை. போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா-வில் தீர்மானம் கொண்டு வந்தது…

அழிவின் விளிம்பில் உள்ள ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற உலகத் தமிழர்கள் ஒன்றபட…

ஈழத் தமிழினம் அழிவின் விளிம்பில் இருந்து கதறும் இக்காலக்கட்டத்தில் அவர்களைக் காப்பாற்ற உலகத் தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்கவேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியில் நடைபெறவுள்ள உலகளாவிய சிறப்பு மாநாடு அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து, தக்க முடிவுகளை எடுக்கும் என நம்புகிறேன் என உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.…

தமிழர்கள் திருந்த வேண்டும்!

ஜெனீவாவில் தொடர்ந்து நடைபெற்றுவரும் 30வது மனித உரிமைச் சபையில் கடந்த திங்கட்கிழமை 28 ஆந்தி கதி ஜப்பானைத் தளமாகக் கொண்டு இயங்கும் இன வேறுபாட்டுக்கு எதிரான சர்வதேச அமைப்பு ஸ்ரீலங்கா மீதான பிரேரணையில் சிவில் அமைப்புக்களின் பங்கு என்ற அடிப்படையில் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தனர். இக்ககூட்டத்தை டேவிட் வோலி,…