பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
புலிகள் அமைப்பை பலநாடுகளில் கட்டியெழுப்ப முயற்சி!- ரவிநாத் ஆரியசிங்க
விடுதலைப் புலிகள் அமைப்புகள் பலநாடுகளில் செயற்படுவதாகவும் நிதிசேகரித்தல் மற்றும் பணச்சலவை வழியாக தமது கட்டமைப்பையும், செயற்படும் ஆற்றலையும் மீளக் கட்டியெழுப்பும் முயற்சியில் அவர்கள் தொடர்ந்து ஈடுபடுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இந்த அறிக்கையை மேற்கோள் காட்டிய ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத.பி. ஆரியசிங்க, ஐ.நா…
நில அபகரிப்பும் இராணுவ அச்சுறுத்தலும்: சிறிலங்காவினை அம்பலப்படுத்திய ஐ.நாவின் சிறப்பு…
தமிழீழத் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிறிலங்கா அரசினது நில அபகரிப்பு மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களை ஐ.நா சிறப்பு பிரதிநிதியின் அறிக்கை மனித உரிமைச்சபையில் அம்பலப்படுத்தியுள்ளது. கடந்தாண்டு டிசெம்பரில் 2-6 இலங்கைத் தீவுக்கு ( யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு - கிளிநொச்சி) பயணம் செய்திருந்த ஐ.நாவின் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான…
ஐநா விசாரணைக்குழு விவகாரம்! பாராளுமன்ற தீர்மானம் ஐநா நடவடிக்கையை கட்டுப்படுத்தாது!-…
மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவுக்கு எதிரான தீர்மானம் பற்றி எதிர்வரும் 17,18ம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்தை நடத்த அரசாங்கம் விரும்புகின்றது என அமைச்சர் ஒருவர் நேற்று தெரிவித்தார். இந்த வருடம் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வழிவந்த…
தொடர் அழுத்தங்கள் மூலம் இனப் பிரச்சினைக்கான மாற்றத்தினை எதிர்பார்க்கலாம்: திருநாவுக்கரசு
மக்களை ஒன்று திரட்டி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கலாம் என நவசமாஜக் கட்சியின் உப செயலாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிடுவது போல் பௌத்த போதகங்களை பின்பற்றுவதன் மூலம் எமது மக்களையும்…
தமிழீழமே முடிந்த முடிவு! ஆலோசனை வழங்கும் தமிழ் மக்கள்!!
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் கோரப்பட்ட முன்மொழிவுகளிற்கு பல தரப்புக்களிடமிருந்தும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுவரை 150 இற்கும் அதிகமான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூடிய அளவில் புலம்பெயர் தேசங்களினிலிருந்து ஆரோக்கியமான முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த அத்தரப்புக்கள் இந்தியாவிலிருந்து கூட முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தன. அதிலும்…
யுத்தம் முடிவடைந்த பின்னரும் 40 வீதமான பெண்கள் பாதுகாப்பின்றியே உள்ளனர்…
முன்னர் யுத்தம் நடைபெற்ற இலங்கையின் வடக்கு - கிழக்குப் பிரதேசங்களில் இப்போது யுத்தம் முடிவடைந்த பின்னரும் கூட 40 வீதமான பெண்கள் பாதுகாப்பின்றியே உள்ளனர். இதற்குப் பிரதான காரணம் அப்பிரதேசங்கள் இராணுவ மயப்படுத்தப்பட்டிருப்பதே ஆகும். - இவ்வாறு ஆய்வு அறிக்கைகளின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஐ.நா.தெரிவித்திருக்கின்றது. யுத்தப் பிரதேசங்களில்…
சர்வதேச விசாரணைக்கு இடமளித்தால் மட்டுமே தப்பமுடியும்!- ஐ.தே.க எச்சரிக்கை
சர்வதேசத்தை ஏமாற்றிய காலம் கடந்துவிட்டது. சர்வதேச விசாரணைக்கு இடமளித்து ஒத்துழைப்பினை வழங்குவதே ஒரே வழியாகும். அதனைத் தடுத்தால் அத்துமீறிய சர்வதேச விசாரணை இடம்பெறும் என தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இதன் விளைவுகள் மிக மோசமாக அமையுமெனவும் எச்சரித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 26ஆவது கூட்டத்தொடர் நேற்று…
யாழ்ப்பாணம் இருண்ட குடா நாடாக மாற்றம்!
யாழ்ப்பாணம் தொடர்ந்தும் இருண்ட குடா நாடாகவே காணப்படுகின்றது என பல்கலைக்கழக பேராசிரியர் ஒன்றியத்தின் தலைவர் சந்திரகுப்த தெனுவர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக பேராசிரியர் ஒன்றியம் வெறுமனே சம்பள உயர்விற்காக மட்டும் போராடி வரும் அமைப்பு கிடையாது. ஜனநாயகம், கருத்துச்…
அனைத்துலக விசாரணைப் பொறிமுறை: நவிபிள்ளை அறிவிப்பு! அமெரிக்கா பிரித்தானியா வரவேற்பு!-…
ஐ.நா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இலங்கை தொடர்பில் முழுமையான விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார். தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமைச்சபையின் 26வது தொடரின் ஆரம்ப உரையிலேயே இதனைத் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜெனிவாவில்…
சர்வதேச விசாரணை விடயம்: நாடாளுமன்றத்தில் ஆராய ஜனாதிபதி முடிவு
இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச விசாரணை அழைப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஆராய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார். அரசாங்க தரப்பு செய்திகள் இதனைத் தெரிவிக்கின்றன. இலங்கையின் நல்லிணக்கத்துக்காக போர் முடிவடைந்து கடந்த ஐந்து வருடங்களாக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனவே தமது அலுவர்கள்…
ஈழம்: முள்ளிவாய்க்காலுக்குப் பின் 5 ஆண்டுகள்
முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து மே மாதத்தோடு அய்ந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இனப் படுகொலை நடந்த அந்த நிலத்தில் ஒரு தீபத்தை ஏற்ற அனுமதிக்க முடியாது என்று போர் வெற்றிக் கொண்டாட்டங்களை வெறித்தனமாக நடத்தி தோற்கடிக்கப்பட்ட ஒரு இனத்தை மிகவும் மோசமாக காயப்படுத்தியது ஸ்ரீலங்கா அரசு. ஆனாலும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை…
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மீண்டும் இன்று வெளிச்சத்துக்கு..!
இலங்கை தொடர்பில் மனித உரிமை மீறல் பிரச்சினை சுமார் 3 மாத இடைவெளியின் பின்னர் இன்று ஆரம்பமாகும் 26வது மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் கவனத்துக்கு எடுக்கப்படுகிறது. சுவிட்ஸர்லாந்தின் பெலஸ் ஒப் நேசன் கட்டிடத்தில் இந்த அமர்வு ஆரம்பமாகிறது. இதன்போது இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக் குழுவுக்கு இரண்டு…
ஐ.நா விசாரணைக்கான நிதி ஒதுக்கீட்டைத் தடுக்க இலங்கை மேற்கொண்ட அனைத்து…
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது அரச படைகளினாலும் விடுதலைப் புலிகளினாலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து, விசாரிப்பதற்கான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக்கான நிதி ஒதுக்கீட்டை தடுப்பதற்கு இலங்கை இரகசியமாக முயற்சி மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு அமைய,…
வடமாகாண சபைக்கான பொலிஸ் அதிகாரம்!- பதிலாக விசேட அதிரடிப்படையினர் குவிப்பு
வடமாகாண சபைக்கான பொலிஸ் அதிகாரம் பற்றி விவாதம் சூடுபிடித்துள்ள நிலையில் அவசர அவசரமாக காவல்துறையின் விசேட அதிரடிப்படையினர் வடபுலத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் அதிகாரத்தின் ஒரு பகுதியை வழங்குவது பற்றி அரசு தரப்பில் சமிக்ஞை காட்டப்பட்டுள்ள நிலையில், முதல் தடவையாக வடக்கில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பணியாற்றி வரும்…
ஐநா விசாரணைக் குழு விபரங்கள் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு அறிவிப்பு
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான நியமிக்கப்பட்டுள்ள, விசாரணைக் குழுவின் விபரங்களை, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளார். விசாரணைக் குழுவின் விபரங்கள் அடங்கிய கடிதம் ஒன்று ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தினால், கடந்த வாரம், ஜெனிவாவில் உள்ள இலங்கை வதிவிடப்…
விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணரை பிடிக்க இலங்கை போலீசார்…
விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணரை பிடிக்க இலங்கை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இலங்கை அரசு உஷார் இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப்போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து இலங்கையில் அந்த இயக்கம் மீண்டும் தோன்றாமல் இருக்க அந்த நாட்டு அரசும்,…
இலங்கையும் இந்தியாவும் முட்டிக்கொள்ளப் போகின்றனவா?
13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில், கருத்து முரண்பாடுகள் தோன்றுவதற்கான அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெளிவாக எடுத்துக் கூறிவிட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ்…
இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பில் சாட்சியமளிக்க தயாராக உள்ளேன்!- எரிக் சொல்ஹெய்ம்
போர்க்குற்றங்கள் தொடர்பாக, இலங்கைக்கு எதிராக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ, எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்திலோ சாட்சியமளிக்கத் தான் தயார் என்று நோர்வேயின் முன்னான் சிறப்பு தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். கொழும்பு சிலோன் ருடே என்ற ஆங்கில வார இதழுக்கு அளித்துள்ள செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.…
தமிழர்களிடம் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஐந்து யோசனைகள்!
இனப்பிரச்சினை தீர்வுக்காக தமக்கு ஐந்து யோசனைகள் கிடைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது தனிப்பட்டவர்கள் மற்றும் குழுக்களிடம் இருந்து இந்த யோசனைகள் கிடைத்துள்ளதாக கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இனப்பிரச்சினை தீர்வுக்கான யோசனைகளை தாம் வரவேற்பதாக அறிவித்திருந்தார்.…
ஐ.நா விசாரணையில் துணிந்து சாட்சியமளிக்க வேண்டும்: விநாயகமூர்த்தி எம்.பி
வட கிழக்கு மாகாணங்களில் படையினரின் தேவைகளுக்காக நிலச் சுவீகரிப்பு உச்ச அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இலங்கை அரசாங்கத்தின் மூலம் அல்லது இந்திய அரசாங்கத்தின் மூலம் இப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என நம்ப முடியாது. ஐ.நா சபை ஊடாக அல்லது சர்வதேசத்தின் ஊடாக மட்டுமே தீர்க்க முடியும் என…
தமிழ்மொழி மற்றைய மொழிகளுக்கு சமாந்தரமாக அமுல்படுத்த வேண்டும்!
தமிழ்மொழி மற்றைய மொழிகளுக்கு நிகராக சமாந்தரமாக அமுல்படுத்த வேண்டும் என்ற ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர் பாஸ்கராவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை கொழும்பு மாநகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அண்மையில் கொழும்பு மாநகர சபையில் தமிழ் மொழியானது மற்றைய மொழிகளுக்கு உள்ள அந்தஸ்துடனும் மற்றைய மொழிகளுக்கு சமாந்தரமாகவும் நிறைவேற்றபட வேண்டும்…
ஐநா மனித உரிமைகள் பேரவை 26 வது அமர்வு! இலங்கை…
இலங்கையில் இடம்பெயர்ந்தோர் தொடர்பான ஆய்வை மேற்கொண்ட ஐ.நா. வின் சிறப்பு அறிக்கையாளர் சலோகா பெயானியின் அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26வது கூட்டத்தொடர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், எதிர்வரும் 12ம் திகதி இலங்கையில் போரினால் உள்நாட்டில்…
இலங்கை இந்தியா உறவுக்குள் தமிழீழம் சிறைப்பட்டுக் கிடக்கிறது – ஆங்கில…
இலங்கையுடன் இந்தியா எந்த தருணத்திலும் முரண்பட்டுக் கொள்வதை விரும்பாது. யுத்தம் நிறைவடைந்த பின்னர், இலங்கையின் பல்வேறு தொழில்துறைகளில் இந்தியா கால்பதித்துள்ளது. இந்தியாவின் நூற்றுக் கணக்கான நிறுவனங்கள் இலங்கையில் தொழில்புரிய தொடங்கியுள்ள நிலையில், இலங்கையுடனான உறவு இந்தியாவின் பொருளாதாரத்துக்கும் முக்கியமானதாக அமைந்துள்ளது. மேலும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ தொடர்புகளும்…
