பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
இலங்கை தொடர்பான அறிக்கையை மார்ச் 26ல் சமர்ப்பிக்கிறார் நவி.பிள்ளை
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கையை ஆணையாளர் நவநீதம்பிள்ளை 2014 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் திகதியன்று சமர்ப்பிக்கவுள்ளார். நாடுகளின் பிரிவு அட்டவணையின்போதே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கை விவாதத்துக்காக திறக்கப்படும் போது இலங்கை அரசாங்கத்தின் விமர்சனங்களும் கருத்துக்களும் கோரப்படும். 25வது மனித…
திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி: இன்று மேலும் சில மனித எச்சங்கள்…
திருக்கேதீஸ்வரம் பிரதேசத்தில் இன்று மனித எச்சங்களை தேடும் பணியின் போது மேலும் சில மனித எலும்பு கூடுகளும் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 8:30 மணியளவில் மன்னார் மாவட்ட நீதவான் ஆனந்தி கனகரெட்ணம் முன்னிலையில் இத்தேடுதல் பணிகள் நடைபெற்றது. இதன்போது குறித்த பகுதியில் பாதையின் நடைபாதையின் ஒரு பகுதி…
மாத்தளை புதைகுழி எலும்புகளை சீனாவுக்கு அனுப்பக் கூடாது!- காணாமல்போனோரின் உறவினர்கள்…
இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை நகரில் மருத்துவமனைக் கட்டடமொன்றுக்கான அத்திவாரம் தோண்டும்போது ஓராண்டுக்கு முன்னர் கிடைத்த மனித எலும்புகளை மேலதிக பரிசோதனைக்காக சீனாவுக்கு அனுப்பும் அரசின் திட்டத்துக்கு காணாமல்போனவர்களின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய, காணாமல்போனோரின் உறவினர்கள் தமது எதிர்ப்பை எழுத்துமூலமாக…
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு சிறுபிள்ளைத் தனமானது: அரசாங்கம்
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கம் அமைத்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என்றும், அதில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் எடுத்திருந்த தீர்மானத்தை அரசாங்கத் தரப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. சர்வதேச அரசியல் லாபங்களை கணக்கில் கொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உள்நாட்டுத் தீர்வுக்காக…
தமிழ் கூட்டமைப்பினரும் ஜெனிவா மாநாட்டில் பங்கேற்றால் அது பெரும் சக்தியாக…
தமிழ் மக்களை அடக்கியாள முனையும் இலங்கை அரசுக்கு எதிராக அனைத்துலக சமூகம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இம்முறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் வகையில் மாபெரும் எழுச்சி மாநாடொன்றை ஜெனிவாவில் நடத்துவதற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தயாராகி வருகின்றன. இதன்பிரகாரம் எதிர்வரும் மார்ச்…
இலங்கையில் போரில் இறந்தவர்களை கணக்கெடுக்க வடக்கு மாகாண அரசு முடிவு
இலங்கையில் உள்நாட்டுப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை தனியாகக் கணக்கெடுக்கப் போவதாக வடக்கு மாகாண அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் 37 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போரில் குறைந்தபட்சம் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டதாகவும், 2009இல் இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற கடைசி மாதங்களில் சுமார் 40,000 அப்பாவி மக்கள் இறந்ததாகவும் ஐ.நா.…
ஐநா தீர்மானம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பற்றி மதிப்பாய்வு செய்ய…
இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் குறித்து பெறப்பட்ட முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்வதற்காக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வாலை, அமெரிக்கா அடுத்த மாதம் இலங்கைக்கு அனுப்பவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாத…
நாடு ஆபத்தில் விழும்வரை காத்திருக்க வேண்டாம்: பேராயர் கர்தினால் வேண்டுகோள்
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நேர்மையான பேச்சுவார்த்தைக்கு கட்சி பேதமின்றி சகலரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அதற்கான பங்களிப்புகளை வழங்க தனிப்பட்ட வகையில் தான் தயாராக இருப்பதாகவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பல அரசாங்கங்களின் கீழ் சர்வக் கட்சி பேச்சுவார்த்தைகள்…
அரசாங்கத்தின் காணாமல்போனோர் கணக்கெடுப்பில் நம்பிக்கையில்லை: எம்.ஏ.சுமந்திரன்
இலங்கையில் கடந்த 30 வருட காலப்பகுதியில் காணாமல் போனோர் தொடர்பில் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பு உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இந்திய செய்தி சேவை ஒன்றுக்கு தகவல் வெளியிடும் போது, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இதன்போது கிராம மற்றும் போரால்…
வட மாகாண முதலமைச்சர் – ஆளுநருக்கிடையில் முறுகல் நிலை தீவிரம்
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறிகுமிடையில் முறுகல் தீவிரமாகியுள்ளது. வடமாகாண பிரதம செயலாளராக உள்ள விஜயலட்சுமி சுரேஸுக்கு இலங்கை தொலைபேசி இலக்கத்தில் இருந்தும், வெளிநாட்டு தொலைபேசி இலக்கத்தில் இருந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளமையை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தலின்போது பதவி விலகுமாறு விஜயலட்சுமி…
போர்க்கால சேத கணக்கெடுப்பு: ததேகூ-வின் நிராகரிப்பும் அரசின் பதிலும்
இலங்கையில் போர்க்கால இழப்புகள் பற்றிய அரசாங்கத்தின் கணக்கெடுப்பு மீதான விமர்சனங்களையும் சந்தேகங்களையும் இலங்கை புள்ளிவிபர திணைக்களம் நிராகரித்துள்ளது. கணக்கெடுப்பு நடைமுறை பற்றிய அறிவின்றியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை நிராகரிப்பதாக நேற்று புதன்கிழமை அறிவித்ததாகவும் புள்ளிவிபர திணைக்களத்தின் தலைமை இயக்குநர் டிசிஏ குணவர்தன பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். இலங்கை…
முன் நாள் புலிகளின் தளபதி ஒருவரை வைத்து மீண்டும் ஆரம்பிக்க…
தற்போது இலங்கை அரசின் பிடியில் உள்ள விடுதலைப் புலிகளின் முன் நாள் தளபதி ஒருவரை வைத்து, அவ்வியக்கத்தை இலங்கையில் மீண்டும் ஆரம்பிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக வடக்கின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமக்கு இது தொடர்பான செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். சர்வோதையா அமைப்பின் ஆண்டு விழாவில்…
இலங்கை தமிழர்களை சிறுபாண்மை இனத்தவர்கள் என்கிறார் செல்வி ஜெயலலிதா !
இலங்கையுடன் இந்திய கடற்படையினர் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடக்கூடாது, இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கிவருகிறது, மற்றும் ஈழத்தில் தமிழர்கள் இன அழிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள் என்பது போன்ற விடையங்களுக்காக குரல்கொடுத்துவரும் செல்வி ஜெயலலிதா அவர்கள், ஈழத்தில் உள்ள தமிழர்களை "சிறுபாண்மை இனத்தவர்கள்" என்று கூறியுள்ளார். பல தமிழர்களும் வேற்றின மக்களும்…
அரசின் போர்க்கால இழப்பு கணக்கெடுப்பை ததேகூ நிராகரிப்பு
இலங்கையில் போர்க்கால இழப்புகள் தொடர்பான புள்ளிவிபரத் திணைக்களத்தின் கணக்கெடுப்பை முற்றாக நிராகரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர்கள் வவுனியா நகரசபையில் கூடி இன்று செவ்வாய்க்கிழமை நடத்திய உயர்மட்டக் கூட்டத்தின்போதே, இந்தக் கணக்கெடுப்பை நிராகரிக்கத் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இதனிடையே, இனப்பிரச்சனை தீர்வு…
திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தோண்டும் பணிகள் திடீர் நிறுத்தம்! இதுவரை…
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் நேற்றுத் திடீரென நிறுத்தப்பட்டன. வரும் சனிக்கிழமை வரை தோண்டும் பணிகள் இடம்பெறமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீட்கப்பட்ட 11 மண்டையோடுகளும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை, குடிதண்ணீர் குழாய் இணைப்பு வேலைகளுக்காக…
ஐக்கிய நாடுகளுக்கு விளக்கமளிக்கும் இலங்கையின் பிரதிநிதியில் மாற்றம்! லலித் வீரதுங்க…
இலங்கையில் நல்லிணக்கம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் விளக்கமளிக்கவுள்ளார். இலங்கையின் ஆங்கில செய்திதாள் ஒன்று இதனை குறிப்பிட்டுள்ளது. சிவில் சேவையாளர் என்ற அடிப்படையில் லலித் வீரதுங்கவின் விளக்கங்கள் சர்வதேச அழுத்தங்களை குறைக்கக்கூடு;;;ம் என்ற அடிப்படையிலேயே…
ஆளுநரை நீக்கமுடியாது: கூட்டமைப்பு மீது மகிந்த பாய்ச்சல்
வடமாகாண ஆளுநரான ஜீ.ஏ. சந்திரசிறியை மாற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முடியுமாகவிருந்தால் ஏன் வடமாகாண ஆளுநரை நீக்கக் கோர வேண்டுமென்றும் ஜனாதிபதி மகிந்த…
ஜனாதிபதி மகிந்தவிற்கும் – சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோருக்கும் இடையில் இந்த…
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று இந்த வாரம் இடம்பெறும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமாகாண சபை மற்றும் வட மாகாண ஆளுநர் உள்ளிட்ட பல விடயங்கள்…
சர்வதேசத்தின் அழுத்தமே ஜனாதிபதியின் அழைப்பு! அரசாங்கத்தை நம்பத் தயாரில்லை!- செல்வம்…
சர்வதேச அழுத்தங்களின் காரணமாகவே ஜனாதிபதி கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் வெளிப்படைத் தன்மையில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வடமாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்கும் வரை அரசாங்கத்தை நம்பத் தயாரில்லை எனவும் அவர் கூறினார்.…
தமிழர்களை ஒடுக்க வேறு வடிவங்களில் முயற்சி: கிழக்கு மாகாண சபை…
ஆயுதங்களினால் தமிழ் மக்களை அடக்க முயன்றவர்கள், தற்போது, வேறு வடிவங்களில் அவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். குருக்கள் மடம் கலைவாணி வாசகர் வட்டத்தினால் சிறுவர் நூலகத் திறப்பு விழா நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு…
தீர்வை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையாக இருந்தால், ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்க மாட்டோம்!-…
இலங்கையில் 13-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் வரையறைக்குள் மட்டும் குறுகி நிற்காமல், அதனையும் தாண்டிய அரசியல் தீர்வுத் திட்டம் பற்றி ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் அதில் பங்கெடுப்பது பற்றி நிச்சயமாக பரிசீலிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறுகிறார். 13-ம் திருத்தத்துக்குப் பின்னர் ஆட்சிக்கு…
இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் இந்தியா உள்பட 3…
இலங்கையில் நடைபெற்றது போர்க் குற்றமல்ல, அது ஒரு திட்டமிட்ட இனப் படுகொலை. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பும் உதவியும் இல்லாமல் இப் படுகொலை நடந்திருக்க முடியாது என்று மக்கள் தீர்ப்பாயம் தெரிவித்தது. டில்லி செய்தியாளர் மன்றத்தில் நேற்று சனிக்கிழமை அந்த அமைப்பின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்…
தமிழ் மொழியை ஓரங்கட்டி சீன மொழியை அரவணைக்கும் இலங்கை
இலங்கையில் தற்போது சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது என்பதை விளம்பர, பெயர்ப்பலகைகள் கூட உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. சீனாவின் ஆதிக்கமும், சீன மொழியும் வியாபித்து வந்தாலும், தமிழ் மொழி இங்கே ஓரங்கப்பட்டப்படுவது தமிழர்கள் மத்தியில் மனவேதனையையும், அதிருப்தியையும், கசப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் நாலாபக்கமும் சீன மொழியும், சீன சந்தைகளும், சீனர்களும்…
