பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
அமெரிக்க உதவி இராஜாங்க செயலரின் விஜயத்துக்கும் ஜெனிவாவுக்கும் தொடர்பில்லை! வெளிவிவகார…
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வாலின் இலங்கை விஜயத்துக்கும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார். தெற்கு மற்றும் மத்திய…
கருணா, பிள்ளையான், கே.பி போன்று பதுமனையும் இலங்கை அரசு இணைத்துள்ளது!-…
கருணா, பிள்ளையான், கே.பி ஆகியோரை தங்கள் பக்கம் இணைத்துக் கொண்டது போன்று பதுமனையும் இலங்கை அரசு தங்கள் பக்கம் இணைத்துக் கொள்ளவுள்ளதாகத் தெரிய வருகிறது. என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ள போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துக்…
தமிழ் கூட்டமைப்புடன் பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்! அரசு…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வினை காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, தெற்கிற்கொன்றையும் வடக்கிற்கொன்றையும் சர்வதேசத்திற்கு இன்னொன்றையும் கூறி, அரசு மக்களை ஏமாற்றி காலத்தை வீணடிக்கக்கூடாது என ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு…
தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்கவுள்ளார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்!
நீண்ட காலமாகக் கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சந்தித்துப் பேசவுள்ளார் என்று தெரிய வருகிறது. இந்தச் சந்திப்பு எதிர்வரும் 12ம் திகதி மகஸின் சிறைச்சாலையில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மகஸின் சிறைச்சாலைக்கு செல்லும் வடக்கு மாகாண முதலமைச்சர்…
ஜெனீவா சவாலை எதிர்நோக்க பல நாடுகள் ஆதரவு!- இலங்கை அரசாங்கம்
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிரான சவால்களை முறியடிக்க பல நாடுகள் ஆதரவளிக்கும் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி மாநாடு ஆரம்பமாகவுள்ளது. சீனா, ரஸ்யா, பாகிஸ்தான், கியூபா, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகள்…
‘இந்தியாவின் தலையீட்டாலேயே 13-ம் திருத்தம் இன்னுமுள்ளது’
சம்பந்தன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் இலங்கையின் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை இல்லாமல் செய்யும் இலங்கை அரசின் முயற்சிகளை இந்திய அரசு தலையிட்டே தடுத்து நிறுத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்ததாக இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினர் ஏ…
ராதிகாவின் வருகை! ஜெனீவாவில் இலங்கைக்கு பாரிய சவால்: ஹெகலிய கவலை
கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசனின் வருகையால், ஜெனீவாவில் பாரிய சவால்களை இலங்கை எதிர்நோக்க வேண்டியேற்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்…
நவநீதம்பிள்ளையின் ஆலோசனைக்குழு இலங்கைக்கு விஜயம் செய்யும் சாத்தியம்!
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் ஆலோசனைக்குழு ஒன்று இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் சாத்தியம் இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. எதிர்வரும் பெப்ரவரி முதல் வாரமளவில் இந்தக் குழு கொழும்பு வரும் எனத் தெரிய வருகிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை பயணத்துக்குப் பின்னர் அங்கு…
மாகாணசபை அதிகாரங்களை திருடுவதா அரசாங்கத்தின் திட்டம்?
இலங்கையில் அதிகார பரவலாக்கலுக்கு எதிரான அரசாங்கத்தின் வேலைத்திட்டமாகவே திவிநெகும திணைக்களம் அமைக்கப்படுவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டுகிறது. அரசியல் அதிகாரத்தை மத்தியில் குவித்துக் கொள்ளும் அரசின் திட்டமே இந்த திவிநெகும சட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பிபிசியிடம்…
வடக்கில் இருந்து படையினரை திரும்ப பெற போவதில்லை!- அரசாங்கம்
ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் எத்தனை யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் வடக்கில் உள்ள 10 ஆயிரம் படையினரை எந்த விதத்திலும் திருப்பி அழைக்க போவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரித்தானியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளினால் முன்வைக்கப்பட உள்ள யோசனை வடக்கில் இராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை…
சர்வதேச சூழலை சாதகமாக மாற்றிக்கொள்ள ஒன்றுபட வேண்டிய காலகட்டம்!-கிழக்கு மாகாணசபை…
தமிழ் மக்களை இரண்டாம் பிரஜையாக மாற்றி ஒடுக்க நினைக்கும் இந்த அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக கனிந்துவரும் சர்வதேச சூழலை சாதகமாக மாற்றிக்கொள்ள வேறுபாடுகளை களைந்து ஒன்றுபடவேண்டிய முக்கிய காலகட்டம் ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட தும்பங்கேணி கொச்சிபாம் பகுதியில்…
ஜனாதிபதி மகிந்த – வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சந்திப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்ரவனிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இருவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். வடமாகாண சபையின் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன், வடமாகாண சபையின் எதிர்கால நிர்வாக செயற்பாடுகள்…
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் இழப்பு ஈழ விவசாயிகளுக்கு இரட்டிப்புத் துயரம்!…
தமிழகத்தைச் சேர்ந்த இயற்கை வேளாண்மை விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் இழப்பு ஈழ விவசாயிகளுக்கு இரட்டிப்புத் துயரை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். நம்மாழ்வாரின் மறைவு தொடர்பாக அவர் விடுத்திருக்கும் இரங்கற் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில், இயற்கை வேளாண்மையின் ஆய்வாளராகவும், செயற்பாட்டாளராகவும், பரப்புரையாளராகவும் தமிழகம் முழுவதும்…
புதிய ஆண்டில் சிங்களத்தை தனிமைப்படுத்துவதிலும் தமிழீழ விடுதலையை முன்னெடுப்பதிலும் நாம்…
தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தில் கடந்துபோன 2013ம் ஆண்டு முக்கியமான சில காலடிகளை முன்னோக்கி வைத்திருக்கின்ற நிலையில், மலர்ந்துள்ள 2014ம் ஆண்டிலும் சிங்களத்தை மேலும் தனிமைப்படுத்தியும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதிலும் நாம் மேலும் சில அடிகளை முன்னோக்கி வைப்போம் என நா.க.த அரசாங்கத்தின் பிரதமர்…
போரினால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் ராதிகா சிற்சபேசன்
இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்துள்ள தமிழரான கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வடக்கே பலதரப்பினரை சந்தித்து பேசியுள்ளார். பங்குத் தந்தை ஜெபமாலையுடன் கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் போரினால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் போயுள்ளோரின் குடும்பங்கள் உட்பட பலரை சந்தித்துள்ள அவர், அம்மக்களின் பிரச்சினைகள்…
தமிழினம் எதிர்பார்த்த விடயங்களில் எதுவித முன்னேற்றங்கள் இன்றி 2013 முடிவு!-…
தமிழ் தேசிய இனம் எதிர்பார்த்த அளவுக்கு அரசியல் தீர்விலோ அல்லது மனித உரிமைகள் விடயங்களிலோ கணிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எதையும் அடையாமல் 2013ம் ஆண்டு முடிவுக்கு வருகின்றது. என வடமாகாணசபை தவிசாளர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். தமிழ் தேசிய இனம் எதிர்பார்த்த அளவுக்கு அரசியல் தீர்விலோ அல்லது மனித உரிமைகள் விடயங்களிலோ…
ராதிகா சிற்சபேசன் எம்.பியை கைது செய்ய சிறீதரன் எம்.பியின் அலுவலகம்…
இன்று மதியம் 13.00 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் கிளிநொச்சி அலுவலகத்திற்கு சென்ற பொலிசார் ராதிகா சிற்சபேசன் இருக்கிறாரா என்ற விசாரணையை நடத்தி உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உறுதிப்படுத்தினார். இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரி ரணவீர தலைமையிலான பெண் பொலிசார் இருவர்…
மலையகத் தமிழர்கள் காணி பெறுவதை அரசு விரும்பவில்லை
இலங்கையில் மலையகத் தமிழர்கள் சொந்தக் காணிகளைப் பெற்றுவிடக்கூடாது என்ற இனவாத நோக்கத்துடன் அரசாங்கம் செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் குற்றஞ்சாட்டுகிறார். தேயிலை மீள்நடுகை நடவடிக்கையிலும் அரசாங்கத்திடமிருந்து ஆக்கபூர்வமான- செயற்திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறுகின்றார். சுமார் ஆறு லட்சம் ஏக்கர் தேயிலைக் காணியில்,…
கனேடிய நா.ம உறுப்பினா் ராதிகா யாழில்: ஈ என மொய்க்கும்…
கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணம் சென்றுள்ளார் என தெரிகிறது. எதிர்வரும் 4ம் திகதி வரை இலங்கையினில் தங்கி நிற்கும் அவர் யுத்த பாதிப்பிற்குள்ளான பகுதிகளையும் நேரினில் பார்வையிட ஆர்வம் கொண்டுள்ளார். இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள அவர் வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயமுள்ளிட்ட பல பகுதிகளையும் நேரினில்…
அரசியல் தீர்வு காண்பதற்கு ஆளும் தரப்பும் கூட்டமைப்பும் நெகிழ்வுடன் செயற்பட…
சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீள விரைவில் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது மிகவும் அவசியம். அரசியல் தீர்வைக் காண்பதற்கு ஆளும்தரப்பும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படவேண்டியது மிக அவசியமாகும் என்று மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். உலகில் கடந்த காலங்களில்…
தமிழரோடு முஸ்லிம்கள் இணைந்து போராடும் தருணம் இது!
இன்றைய இலங்கைச் சூழலில் சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனை கொண்டோர் திட்டமிட்ட வகையில், ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடியொற்றி சிறுபான்மைச் சமூகங்களின் மீது மேற்கொள்ளும் கருத்தியல் மற்றும் பௌதீகத் தன்மை வாய்ந்த தாக்குதல்களைக் கிஞ்சித்தேனும் குறைத்து மதிப்பிட முடியாது. இலங்கையில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் மீதான…
சர்வதேச நாடுகளை தம் பக்கம் இழுக்க அரசாங்கமும் தமிழ் கூட்டமைப்பும்…
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடருக்கு முன்னர் சர்வதேச நாடுகளை தம் பக்கம் இழுப்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் முனைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசாங்கம், அமைச்சர்கள் மட்ட குழுக்களை சர்வதேச நாடுகளுக்கு அனுப்பி, கற்றுக்கொண்ட பாடங்கள்…
தமிழக முகாம்களில் தமிழ் இளைஞர்களுக்கு இரகசிய பயிற்சி
தமிழக முகாம்களில் தமிழ் இளைஞர்களுக்கு இரகசிய பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தின் ராமநாதபுரம் கரையோரப் பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் இரகசிய பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த இளைஞர்கள் விசேட உடற் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 34 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இவ்வாறான…
