புற்றுநோய் கண்டுபிடிப்பில் சாதனை- மலேசிய விஞ்ஞானி டாக்டர் சிரேனா நிக்…

யூகெவில் இருக்கும் மலேசியா விஞ்ஞானி டாக்டர் சிரேனா நிக் சைனால் புற்றுநோயையை விளைவிக்கும் மரபணு காரணங்களைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு மருந்து அறிவியல் வளர்ச்சிக்குப் பங்களித்ததால் அவர்களுக்குப் பிரான்சிஸ் கிரி மெடல் மற்றும் லெக்சர் 2022 (Francis Crick Medal and Lecture 2022) விருது வழங்கப்பட்டது. கீச்சகத்தில்(Twitter)…

தலிபானை வாழ்த்தியது அரசியல் முதிர்ச்சியின்மை! – இராகவன் கருப்பையா

கடந்த 20 ஆண்டுகளாக ஆஃப்கானிஸ்தான் மக்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்கு அரணாக இருந்த அமெரிக்கா தனது கூட்டுப் படைகளுடன் அந்தாட்டை விட்டு வெளியேறியது ஒரு சோகமான நிகழ்வு. அமெரிக்கத் துருப்புகள் வெளியான மறு கணமே தலிபான் தீவிரவாதிகள் நாட்டைக் கைப்பற்றியதால்  சுதந்திரமாக, உல்லாசமான வாழ்க்கையை அனுபவித்து வந்த அந்நாட்டு மக்களின்…

தீதும் நன்றும் பிறர் தர வாரா – கபட அரசியலில்…

கடந்த ஆகஸ்ட் 16-இல் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் பிரதமர் பதவியைத் துறந்தார். மாமன்னரும் அதை ஏற்றுக்கொண்டு புதிய பிரதமரை நியமிக்கும் வரை முகைதீனையே பராமரிப்புப் பிரதமராக நியமித்துள்ளார். பதவி துறந்த பின், முகைதீன் யாசின் நாட்டுக்கு ஆற்றிய தமது உரையில், சில முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த…

புதிய அமைச்சரவைக்கு திறமைசாலிகள் வேண்டும்!

இராகவன் கருப்பையா -நாட்டின் 9ஆவது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள இஸ்மாய்ல் சப்ரிக்கு அடுத்து வரும் சில தினங்கள் மிகவும் முக்கியமான நாள்களாகக் கருதப்படுகிறது. இவ்வாரத்தில் தனது புதிய அமைச்சரவையை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் அவர் யார் யாருக்கு எந்தெந்தப் பொறுப்புகளை வழங்கவிருக்கிறார் என்பதை அறிவதற்குப் பொது மக்கள் கழுகுப் பார்வையைக்…

இஸ்மாயில் சப்ரி மஹியாடின் செய்யாததை செய்யவேண்டும் – குலா. நாடாளுமன்றத்தில் ஆதரவை நிரூபிக்கவேண்டும்.

இந்த அற்புதமான  மலேசியத்  திருநாட்டிற்குப் புதிதாக 9வது பிரதமராகப் பதவி ஏற்றிருக்கும்  அம்னோ துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ  இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு   எனது  மனமார்ந்த  வாழ்த்துகள். இந்த  கோவிட் 19  நாட்டை  அலைக்கழித்துக்கொண்டிருக்கும் சூழலில்  அவர் ஏற்றிருக்கும் இப்பொறுப்பானது  மிகவும் சவாலும் சோதனைகளும்   நிறைந்ததாக இருக்கும் . அற்புதமான ஒரு வாய்ப்பு இஸ்மாயில் சப்ரிக்கு  எதிர்பாராத விதமாக அமைந்துள்ளது.   இதனை  உறுதிசெய்து கொள்ள, உடனடியாக அவர்  நாடாளுமன்றத்தைக் கூட்டி  தன்னுடைய  பெரும்பான்மை ஆதரவை  நிரூபிக்க வேண்டும். இது மாமன்னரின் விருப்பம்…

கிளாசிக் சுப்பையா காலமானார் – இந்தியச் சமூகம் ஒரு தமிழ் உணர்வாளரை  இழந்தது!

நமது நாட்டின் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கும் தமிழ்மொழி மேம்பாட்டுக்கும்  உணர்வுப் பூர்வமாக பங்காற்றிய சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி வாரியங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பின் தலைவர் கிளாசிக் சுப்பையா இன்று மாலை (21.8.2021)  காலமானர். கோவிட்-19 தொற்றால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் செயற்கை சுவாசமுறை வழி தீவிர  சிகிச்சை பெற்று வந்த…

மக்கள் விரும்பும் ஆட்சிக்கு காலம் கணிவது எப்போது? – இராகவன்…

மலேசிய அரசியல் வரலாற்றில் 2ஆவது முறையாக மக்கள் விரும்பாத ஒருவர் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுவும் வெறும் 18 மாதங்களில் இரு முறை நாடு தலைமைத்துவ  மாற்றங்களுக்கு இலக்காகியுள்ளது சரித்திரத்தில் நிச்சயம் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை. கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலின் போது பிரதமராவதற்கானப்…

இலங்கையில் காணாமல் போகும் தமிழ் மொழி; அதிகரிக்கும் சீன மொழி…

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்ற பின்னணியில், இலங்கையின் அரசு அலுவல் மொழியான தமிழ் மொழி சீன தூதரகத்தினால் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இலங்கையில் சீனாவினால் முன்னெடுக்கப்படும் நலத்திட்டங்களில் பெரும்பாலான இடங்களில் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் அதேவேளை, சீன மொழிக்கும் அதே அளவிலான…

பகாங் மாநில, சவ அடக்க உதவியில் இனப்பாகு வேண்டாம்!

இராகவன் கருப்பையா- கோறனி நச்சிலின் கோரத்திற்குப் பலியாகும் பகாங் மாநில மக்களின் சவ அடக்கச் செலவுகளை மாநில அரசாங்கம் ஏற்றுக்குக் கொள்ளும் என இவ்வாரம் வெளியான தகவல் நமக்குச் சற்று ஏமாற்றத்தையே அளிக்கிறது. மரணமடைவோரின் குடும்பங்கள் எதிர்நோக்கும் சுமைகளைக் கருத்தில் கொண்டு மாநில அரசாங்கம் இம்முடிவை எடுத்ததாக மந்திரி பெசார்…

 அன்வார் பிரதமராக வேண்டும் – குலா

முகியாதின் பதவி விலகுவதை முன்னிட்டு, இந்த வேளையில் நாட்டின் நலம் கருதி  எதிர்க்கட்சி தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வாருக்கு ஆதரவளித்து  அந்த பிரதமர்  பதவிக்கு அவரை  பரிந்துரைக்க  பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற   உறுப்பினர்கள் முன் வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறார் முன்னாள் மனித வள அமைச்சர் குலசேகரன். இது  சார்பாக கருத்துரைக்கையில், அன்வார்  மக்களுக்காகப்  பல தியாகங்களைச் செய்தவர்…

ஓரின அரசியல் ஆதிக்கமும், ஊழல் உருவாக்கமும்!  

இராகவன் கருப்பையா - பிரதமர் மஹியாடின் தனது பதவியைத் தொடர்ந்து தற்காத்துக் கொள்வதற்கு என்ன வேண்டுமென்றாலும் செய்யத் தயாராய் உள்ளார் என்பதையே புலப்படுத்துகிறது வெள்ளிக்கிழமை (6.8.2021) மாலை அவர் செய்த அறிவிப்பு. அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தனக்கு ஆதரவளித்தால் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் எனத் தொலைக்காட்சியில்…

அடுத்த பிரதமருக்கு 10 பேர் தயாராகி வருகிறார்கள்!

இராகவன் கருப்பையா - 'புத்திசாலிகள் மற்றவர்கள் செய்யும் தவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள். முட்டாள்கள்தான் சொந்தத் தவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள்,' என ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உள்ளது. ஆனால் ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் கோறனி நச்சிலைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் நம் நாடு இன்னமும் எவ்விதப் பாடமும் கற்றுக் கொள்ளவில்லை…

நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்கும் படலம் உடனடியாக  நிறுத்தப்பட வேண்டும்! –  குலசேகரன்

"நானும் என்னுடைய  அரசியல் செயலாளர் ஜெரமி சுவாவும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால்  நான் கொடுத்த புகாரின் பேரில்   விசாரண நடத்தப்பட வேண்டி அழைக்கப்பட்டிருந்தோம்.  ஜெரமியுடன் ஊழல் தடுப்பு ஆணையம்  4 மணி நேரம் விசாரணை நடத்தியது. அவருடைய  கைத்தொலைபேசியும்  ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.நான் ஒரு மணி நேர  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன் . அப்பொழுது  இந்த  புகாரவை  தீவிரமாக  விசாரிக்க வேண்டுமென  அந்த ஆணையத்தைக் கேட்டுக் கொண்டேன். பணம்…

கொரோனா சவாலுக்கிடையே ஜப்பானின் ஒலிம்பிக்கும் ஒரு  சாதனையாகும்

இராகவன் கருப்பையா -சுயக் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் கோறனி நச்சிலைக் கூடத் தூர நிறுத்தலாம் என நிரூபித்துள்ளார்கள் ஜப்பானியர்கள். 'மனமிருந்தால் மார்க்கம் உண்டு' என்பதற்கு ஏற்ப 'கோவிட்-19' எனும் கொடிய அரக்கனை இரண்டரை வாரங்களுக்குக் காலுக்கடியில் அடக்கி 32ஆவது ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக அரங்கேற்றி முடித்த அவர்களுடைய ஆற்றலை…

அவசரகாலச் சட்டங்கள் ரத்து செய்யப்படவில்லை – கி.சீலதாஸ்

மலேசிய அரசியல்வாதிகள் அடிக்கடி அரசமைப்புச் சட்டச் சிக்கல்களைக் கிளப்புவதில் ஆர்வமுடையவர்களாகத் திகழ்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நெருக்கடி நிலை பிரகடனம் செய்தபோது நாடாளுமன்றமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கோவிட்-19 காரணமாக நெருக்கடி நிலை பிரகடனப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது நினைவிருக்கும். அதன் கடுமையும், கொடுமையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பாதிப்புற்றோரின் எண்ணிக்கையும்…

கோவிட்டின் கொடூரமும் அசையாத அரசியல் தலைவர்களும்

இராகவன் கருப்பையா- இரவு நேரத்தில் தொலைபேசி அழைப்பு வந்தாலே ஒருவித அச்சம் ஆட்கொள்கிறது. காலையில் புவனத்தைப் பார்க்கவே சிலருக்கு பயமாக இருக்கிறது - கைகள் நடுங்குகின்றன. மலேசியாவில் வெகுசன மக்களின் அன்றாட நிலைப்பாடு தற்போது இப்படித்தான் உள்ளது. கோறனி நச்சிலின் கொடூரம் மிக அதிகமான மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் சூழலில்…

கொரோனா தடுப்பூசியைக் கட்டாயமாக்குங்கள் – கவிதா கருணாநிதி

தற்போது கொரோனா தடுப்பூசி அனைவரும் போட வேண்டும் என்ற அரசாங்க ஆலோசனையின் கீழ் நம்மில் பெரும்பாலோர் இந்தத் தடுப்பூசியைப் போட வரிசையில் நிற்கிறோம். இருப்பினும் ஒரு தரப்பினர், இந்தத் தடுப்பூசியைப் போட மறுக்கின்றனர். இது ஒவ்வொருவரின் மனநிலையைச் சாற்றிய ஒன்றாகக் கருதினாலும், எது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது என…

நாடாளுமன்றமா, நாடகமேடையா?

இராகவன் கருப்பையா - ஜூலை 26ஆம் தேதியிலிருந்து 5 நாள்களுக்கு நாடாளுமன்றம் கூடும் என அரசாங்கம் அறிவித்த அன்றே, நடக்கவிருக்கும் இலட்சணத்தை கணித்திருப்பார்கள், அரசியல் விழிப்புணர்ச்சி கொண்ட நாட்டு மக்கள். தற்போது உள்ள 220 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோரின் தரங்கெட்ட போக்கை அறிந்து வைத்திருக்கும் பொது மக்கள் அந்த…

அரசியல் பொறுப்புணர்வு உணர்த்த புரட்சிதான் ஆயுதமா? – கி.சீலதாஸ்

இராமாயண பாலகண்டத்தில் அற்புதமான ஒரு காட்சி. மாமுனிவர் விசுவாமித்திரர் தசரத மன்னனைக் காணுவான் வேண்டி பின்னவனின் அரண்மனைக்குச் செல்கிறார். விசுவாமித்திரரின் வருகையை ஏவலாளியிடம் இருந்து அறிந்த தசரதன் உடனடியாக மாமுனிவரை வரவேற்கச் சென்று அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்ததும், விசுவாமித்திரர் திருப்தியடைந்து, “அயோத்திய மக்களின் நல்வாழ்வு, நாட்டு வளம்”…