புலிகளுக்கு உதவிய நாடுகளை காட்டிக் கொடுப்பேன் என்கிறார் கேபி

கொழும்பு: ஈழப் போரின்போது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு 11 நாடுகள் ஆயுத உதவியைச் செய்தன. ஆயுதங்களுக்குத் தேவையான உதிரிபாகங்களையும் கொடுத்து உதவின. அந்த நாடுகள் குறித்த தகவல்களை முழுமையாக வெளியிடுவேன் என்று கேபி என்ற குமரன் பத்மநாதன் கூறியுள்ளார். இலங்கைக்கு சர்வதேச அளவில் தற்போது நெருக்கடி அதிகரித்து வருகிறது.…

தமிழகத் தீர்மானம் ஒட்டு மொத்த இந்தியாவின் கருத்து அல்ல :…

இலங்கைக்கு எதிராக தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை இந்திய மத்திய அரசு நிராகரித்துள்ளது. தமிழகத்தின் தீர்மானத்தை ஒட்டுமொத்த இந்தியாவின் நிலைப்பாடாக கருதமுடியாது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார். தமிழகத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா கடந்த வாரம்…

இலங்கை ஏற்றுமதியில் பெரும் வீழ்ச்சி

இலங்கையில் ஏற்றுமதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் கணிசமான அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது அரசின் 'மஹிந்த சிந்தனையில்' திட்டமிட்டிருந்த ஏற்றுமதி இலக்குக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி சிறிது கவலை அளிக்கக் கூடிய வகையில் இருந்தாலும், இதிலிருந்து மீள முடியும் என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி…

Ask Najib to Boycott CHOGM

Dear Friends, We've started the petition "Hon. Dato’ Sri Mohd Najib bin Tun Abdul Razak, Prime Minister of Malaysia: Boycott CHOGM 2013 " and need your help to get it off the ground. Will you…

இனவாதிகளின் செயற்பாடுகளே அன்று புலிகள் உருவாகக் காரணம் : விக்கிரமபாகு

தற்போது அரசில் அங்கம் வகிக்கும் கடும்போக்குடைய இனவாதிகளின் செயற்பாடுகளை ஒத்த செயற்பாடு உடையவர்களாலேயே ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு உருவெடுத்தது என இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் அமைந்துள்ள அசாத் சாலி மன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

தமிழகத்தில் புலிகள் இயக்கத்தை தொடங்குவோம்: மாணவ போராட்டக் குழு எச்சரிக்கை

தமிழகத்தில் மாணவர்களே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி, தனி ஈழம் அமைவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்று மாணவர் போராட்டக் குழு எச்சரித்துள்ளது. மதுரை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து அனைத்துக் கல்லூரி மாணவர்கள் நேற்று மாலை பைக் பேரணி தொடங்கினார்கள். இப்பேரணியை வைத்து தொடங்கி வைத்துப் பேசிய மாணவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்…

கடாபியின் குடும்பத்தினருக்கு ஒமான் புகலிடம் வழங்கியுள்ளது

லிபியாவின் முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாக ஒமான் அறிவித்துள்ளது. சர்வதேச போலிஸாரினால் தேடப்பட்டுவருவோர் பட்டியலிலுள்ள இருவரும் இதில் அடங்கியுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன. எனினும், அவர்களை நாடு கடத்துவது தொடர்பான கோரிக்கை குறித்த பேச்சுவார்த்தை அவசியமற்றது எனவும் லிபியா கூறியுள்ளது. கடாபியின்…

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் : பிரித்தானியா

இலங்கையில் 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும்  போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரித்தானியா அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான செயலாளர் அலஸ்டயார் பர்ட் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் தொடர்ந்தும் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன. ஏற்கனவே…

படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல முயற்சித்த 40 சிறுவர்கள் உட்பட…

புகலிடம் கோரி சட்டவிரோதமாக படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற 97 இலங்கையர்கள் அம்பாறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் ஒலுவில் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களில் 39 ஆண்களும், 18 பெண்களும்,…

இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாடத் தடை

சென்னை: "இலங்கை கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள், அலுவலர்கள், கள பணியாளர்கள் கொண்ட அணிகளை, சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாட அனுமதிக்க மாட்டோம்' என, முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்தார். இதை அடுத்து, "சென்னையில் நடக்கும், ஐ.பி.எல்., போட்டிகளில், இலங்கை வீரர்கள் விளையாட மாட்டார்கள்' என, ஐ.பி.எல்., நிர்வாக…

தனி ஈழம் அமையும் வரை எங்கள் போராட்டம் குறையாது இந்திய…

“ஓயாது இனி ஓயாது மாணவர் போராட்டம் ஓயாது! தனி ஈழம் அமையும் வரை எங்கள் போராட்டம் குறையாது மத்திய அரசே! மாநில அரசே! உனக்கு எனக்கு போராட்டமா? தமிழனுக்கான போராட்டமா?” என்று வானதிர மயிலாடுதுறை நகரமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு கரவொலியை எழுப்பி அஞ்சலகத்திற்கு பூட்டுப்போட பேரணி ஊர்வலமாக மாணவர்…

PSM வழங்கும் ‘மக்கள் படும் பாடு’ இரண்டாம் பதிப்பு குறுந்தட்டாக…

மலேசிய சோசலிசக் கட்சி (PSM) வழங்கும் 'மக்கள் படும் பாடு' உரிமை கானங்களின் இரண்டாம் பதிப்பு (காணொளி) குறுந்தட்டாக நாளை வெளியீடு காணவுள்ளது. ‘மக்கள் படும் பாடு 2.0’ குறுந்தட்டு வெளியீடும் நிகழ்ச்சி (28.03.2013-வியாழக்கிழமை) நாளை மாலை மணி 8-க்கு, (Chinese Assembly Hall, 1 Jalan Maharajalela,…

9 வயது சிறுமி உதவிக்காக நடுஇரவில் அழைந்த சோகம்

அமெரிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாண சியெரா நெடுஞ்சாலையில், ஹாலிவுட் நகரை சேர்ந்த  அலிஜேந்த்ரா ரெண்டாரிய (35) என்பவர் தனது 9 வயது மகளுடன் போர்டு எஸ்கேப் காரில் சென்று கொண்டிருந்தார். நள்ளிரவு ஒரு மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் 200 அடி பள்ளத்தாக்கிற்குள் பாய்ந்தது. பின்னர் அங்கிருந்து…

மியான்மர் கலவரத்தில் மேலும் 3 நகரங்கள் நாசம்

மியான்மரில் மெய்த்திலா நகரில் முஸ்லிம் மற்றும் புத்த மதங்களை சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில், முஸ்லிம்களின் குடியிருப்புகள், மசூதிகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இச்சம்பவத்தில் அங்கு 32 பேர் கொல்லப்பட்டனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து அங்கிருந்து வெளியேறினர். எனவே, அங்கு கலவரம் பரவாமல்…

மாதம் 100 கோடி பார்வையாளர்கள்: யூ டியூப் சாதனை

சான் பிரான்சிஸ்கோ: ஒரு மாதத்தில், 100 கோடி பேர், "யூ டியூப்' இணையதளத்தை, பார்வையிடுவதாக, 'கூகுள்' நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த, 2005ல், வீடியோ பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்து, உலகமெங்கும் உள்ள, 'இன்டர்நெட்' பயன்பாட்டாளர்கள் கண்டுகளிக்கும் வகையில், 'பேபால்' நிறுவன ஊழியர்களால், யூ டியூப் இணையதளம் உருவாக்கப்பட்டது. கடந்த,…

சத்தமாக குரைத்து கின்னஸ் சாதனை படைத்த நாய்

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த நாய், அதிக சத்தத்துடன் குரைத்து, கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின், அடிலெய்டு நகரில் வசிப்பவர் பெலின்டா ப்ரீபெய்ன். இவர், கோல்டன் ரெட்ரீவர் வகையைச் சேர்ந்த, சார்லி என்ற, ஆறு வயது நாயை வளர்க்கிறார். உலக சாதனை அகடமி நடத்திய, 'அதிக சத்தத்துடன் குரைக்கும்…

இழந்த உயிர்களை தவிர்த்து ஏனைய அனைத்தையும் தமிழர்களுக்கு வழங்க தயாராம்!

போரினால் இழந்த உயிர்களை தவிர்த்து ஏனைய அனைத்தையும் தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயார் என அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். போரினால் பறிக்கப்பட்ட சொந்த இடங்களின் உரிமையை மட்டுமின்றி அந்த மக்கள் இதுவரை கண்டிராத அபிவிருத்தியையும் வழங்க முடியுமென மகிந்த ராஜபக்சே சுட்டிக்காட்டியுள்ளார். தேசத்திற்கு மகுடம் …

தி.மு.கவிற்குள் உட்பூசல்; அடுத்த தலைவர் யார்?

இந்தியாவின் பிரபல அரசியல் கட்சியான மு.கருணாநிதியின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்திற்குள் தற்போது உட்பூசல் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கு பொருத்தமானவரை தெரிவுசெய்வது  தொடர்பில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக 'த ஹிந்து' செய்தி வெளியிட்டுள்ளது. தி.மு.கவின் தலைமைத்துவம் தொடர்பில் மு.கருணாநிதியின் புதல்வர்களான…

பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்; ஜெயலலிதா

தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த ஆண்டு நவம்பரில் கொழும்பில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டுமெனக்கோரி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியிருக்கிறார். தொடர்ந்து தமிழர்களுக்கு அந்த நாட்டில் அநீதி இழைக்கப்பட்டுவரும் வேளையில் இத்தருணத்தைப் பயன்படுத்தி போர்க்குற்றங்கள் தொடர்பில் பன்னாட்டு விசாரணைக்கு இலங்கையை ஒப்புக்…

தேவைக்கு ஏற்ப மட்டும் புலிகள் வெளியே வருவார்கள் என்றார் பிரபாகரன்!

விடுதலைப் புலிகள் இல்லாத விடுதலை வேண்டாம். அவர்களே விடுதலைக்காக போராடியவர்கள் அவர்கள் பெற்றுக் கொடுப்பார்கள் என்பதை இன்று உலகம் நம்புகிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் தொடங்கும் போது அவர்களிடம் ஆயுதம் எதுவும் இல்லை. அப்போது பிரபாகரன் தனது அக்காவின் வளையல்களை வாங்கி விற்றார். கூட வந்தவர் தனது உழவு…

அந்நியப்பட்டுபோன மஇகா-விற்கு இந்தியர்களின் ஆதரவு கிடைக்குமா?

கடந்த 12வது பொதுத் தேர்தல் வரை மலேசிய இந்தியர்களின் காவலனாகவும் அவர்களைப் பிரதிநிதிக்கும் ஒரே கட்சியாகவும் மஇகா விளங்கியது. ஆனால், 12-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் சுனாமியில் இந்தியர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில் இந்தியர்களின் அரசியல் பார்வையும் காலத்திற்கு ஏற்ப மாறுதல்…

தமிழர்க்குத் தேவை தனித் “தமிழர் நாடு”

தமிழர் நாட்டு  தன்மானமுள்ள  மாணவ மணிகளே , அன்பு தம்பிகளே , தங்கைகளே , மாணவ கண்மணிகளுக்கு ஆதரவாக களமிறங்கி நிற்கும் பெற்றோர்களே , பொதுமக்களே , உங்கள் அனைவருக்கும் எனது புரட்சிகரமான வாழ்த்துகள் ! அண்மைய செய்திகளின் வழி நாம் அறிவது காங்கிரசு அரசு தமிழர்களின் கோரிக்கைகளை…