கெடா, பெண்டாங்கில் வெப்பஅலை நிலை 2-ல் உள்ளது

இன்று, தீபகற்ப மாநிலங்கள் ஒன்பதில் வெப்பஅலை நிலை 1-ல் - எச்சரிக்கை நிலை - இருந்தவேளை, கெடா, பெண்டாங்கில் 2-ம் நிலையில் - 37-ல் இருந்து 40 டிகிரி செல்சியஸ் வரை - இருந்தது. மலேசிய அளவியல் இலாகாவின் (மெட்ரோலோஜி) தகவல்படி, இன்று மாலை 5.20 மணி வரை,…

பாத்தாமில் 24 மணி நேரம்கூட இல்லை, ஜொகூர் எம்பி விளக்கம்

பாசீர் கூடாங் வட்டாரம், நச்சு மாசு பிரச்சனையை எதிர்நோக்கியிருக்கும் வேளையில், இந்தோனேசியா, பாத்தாம் சென்றதன் காரணத்தை, இன்று ஜொகூர் மந்திரி பெசார் (எம்பி) ஒஸ்மான் சப்பியான் விளக்கினார். முன்னமே திட்டமிடப்பட்ட பயணம் என்பதால், பாத்தாம் சென்றதாக ஒஸ்மான் தெரிவித்தார். ஜொகூர், இந்தோனேசியா சுற்றுலாத்துறை மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை…

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராக அப்துல் ஃபாரிட் தேர்வு

அப்துல் ஃபாரிட் அப்துல் காஃபூர், 2019/2020-ம் தவணைக்கான மலேசிய வழக்கறிஞர் மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மலேசியாகினியிடம் தெரிவிக்கப்பட்டது. பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த அவர், இதற்கு முன்னர் வழக்கறிஞர் மன்றத்தின் துணைத் தலவராகவும், பினாங்கு மாநில வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். தலைமைச் செயலாளரான ரோஜர் ச்சான்…

மகாதிர் நிலைப்பாட்டை விமர்சனம் செய்க, பிஎச் மற்றும் பிஎன்–னுக்குப் பெர்சே…

தேசியக் கணக்குக் குழுவின் (பிஏசி) தலைவராக, ரொனால்ட் கீண்டியின் பதவியைப் பராமரித்து வரும் டாக்டர் மகாதிரின் செய்கையை விமர்சிக்கச் சொல்லி, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆதரவாலர்களைப் பெர்சே வலியுறுத்தியுள்ளது. இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், மகாதிரின் இந்த நடவடிக்கை, அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் பங்களிப்பை மக்களவையில் குறைத்து…

சுங்கை கிம் கிம்: 24 மணி நேர சுத்திகரிப்பு பணிகள்,…

பாசீர் கூடாங், சுங்கை கிம் கிம் ஆற்றில், நச்சுக் கழிவுகளை அகற்றும் பணிகள், பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நடந்துவருகிறது. நியமிக்கப்பட்ட 3 குத்தகையாளர்களுடன் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு இலாகாவைச் சேர்ந்த ‘ஹஜ்மாட்’ குழு, மலேசிய ஆயுதப்படை, சுற்றுச்சூழல் துறை, வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும்…

டாக்டர் எம் : ஜொகூர் எம்பி பாத்தாம் சென்றது எனக்கு…

ஜொகூர், பாசிர் கூடாங் நச்சுக் கசிவு நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் வேளையில், மாநிலச் சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிப்பதற்காக, ஜொகூர் மந்திரி பெசார் (எம்பி) ஒஸ்மான் சாப்பியான் இந்தோனேசியா சென்றது அதிர்ச்சியளிப்பதாக டாக்டர் மகாதிர் முகமட் கூறியுள்ளார். இன்று புத்ராஜெயாவில், ஊடகச் சந்திப்பின் போது, ஒஸ்மானின் இந்தோனேசியப் பயணம் குறித்து பிரதமரிடம் கேள்வி…

மைக்கா ஹோல்டிங்ஸ் பிரச்சனை குறித்த சரவாக் ரிப்போர்ட் அறிக்கையை விசாரியுங்கள்,…

மஇகா மத்திய செயலவை உறுப்பினர், பி புனிதன், மைக்கா ஹோல்டிங்ஸ் பிரச்சனை குறித்த சரவாக் ரிப்போர்ட் அறிக்கையை விசாரணை செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், விசாரணையை விரைந்து மேற்கொள்ளுமாறு, காவற்படை மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இரண்டையும் அவர் கேட்டுக்கொண்டார்.…

போலிஸ் துணைத் தலைவராக ஹமீத் பாடோர் நியமனம்

புக்கிட் அமான் சிறப்பு பிரிவின் இயக்குநர், அப்துல் ஹமீத் பாடோர், தேசியப் போலீஸ் தலைமைத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இன்று, கோலாலம்பூரில், பதவி ஓய்வு பெறும் நூர் ரஷிட் இப்ராஹிமுக்குப் பதிலாக, தேசியப் போலிஸ் படைத் தலைவர், முகமட் ஃபூஸி ஹருண் முன்னிலையில் அவர் அப்பதவியை ஏற்றுக்கொண்டார். போலிஸ்…

பிஎம் : அவசரக்காலம் அறிவிக்கும் நிலை இன்னும் ஏற்படவில்லை

ஜொகூர் கிம் கிம் ஆற்றில், இரசாயணக் கழிவுகள் கொட்டப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட நச்சு மாசு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், பேரிடர் அவசரகாலம் அறிவிக்கும் அவசியம் இல்லை என பிரதமர், டாக்டர் மகாதிர் முகமட் இன்று கூறினார். எனினும், மாசு நிலைமை இன்னும் முடிவடையவில்லை என்பதால், அனைத்து தரப்பினரையும் எச்சரிக்கையுடன் இருக்க…

எம்பி ஜொகூர் : மாசு நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது, அவசரக்கால…

ஜொகூர், பாசீர் கூடாங், கிம் கிம் ஆற்றில் வீசப்பட்ட இரசாயணக் கழிவினால் ஏற்பட்ட மாசு நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதால், அங்கு அவசரக்கால அறிவிப்பு செய்ய தேவையில்லை என ஜொகூர் மந்திரி பெசார் (எம்பி) ஒஸ்மான் சபியான் கூறியுள்ளார். பாசீர் கூடாங் நகராண்மைக் கழகத்தில், சுமார் 3 மணி நேரம்,…

நச்சு இரசாயண மாசு : பாசீர் கூடாங்கில் 111 பள்ளிகள்…

ஜொகூர், பாசீர் கூடாங்கிலுள்ள 111 பள்ளிகளும் உடனடியாக மூடப்படுவதாகக் கல்வி அமைச்சர், டாக்டர் மஸ்லி மாலிக் அறிவித்துள்ளார். மாநிலப் பேரிடர் நிர்வாகக் குழுவின் அறிக்கை மற்றும் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்படுவதாக, இன்றிரவு வெளியிட்ட ஓர் அறிக்கையில் மஸ்லி கூறியுள்ளார். “இதனைத் தொடர்ந்து, அனைத்து மாணவர்கள்,…

இந்திரா காந்தியின் குழந்தையைக் கண்டுபிடிக்க, ஃப்.பி.ஐ. உதவியை நாட எண்ணம்

‘இந்திரா காந்தி எக்‌ஷன் டீம்’ (இங்காட்), இந்திரா காந்தியின் 11 வயது நிரம்பிய மகள், பிரசன்னா டிக்‌ஷாவைக் கண்டுபிடிக்க, அமெரிக்க தூதரகத்தின் மூலம், பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (ஃப்.பி.ஐ.) உதவியை நாட எண்ணம் கொண்டுள்ளது. மலேசிய காவற்படையின் செயற்பாடுகளில் ஏமாற்றமடைந்ததன் காரணமாக, எதிர்வரும் மார்ச் 19-ம் தேதி,…

நஜிப்: தனியார்மயமாக்கல் என்பது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வல்ல

நாடாளுமன்றம் | பொதுத்துறை பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க, தனியார் மயமாக்கலை ஊக்குவிக்கும் பிரதமர் டாக்டர் மகாதிரின் ஆலோசனைக்கு, அது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வல்ல என முன்னாள் பிரதமர் நஜிப் கூறியுள்ளார். டாக்டர் மகாதிர் பரிந்துரைக்கும் தனியார்மயமாக்கல் திறம்பட அமைய, பல காரணிகளைச் சார்ந்திருக்கிறது என நஜிப் தெரிவித்தார். "மாஸ்…

மதியழகனின் நிலங்களின் நெடுங்கணக்கு குறுநாவல் வெளியீடு

நம் நாட்டில் தொடர்ந்து சமூகக் கதைகள்தான் எழுதப்பட்டு வருகின்றன. மிகவும் அபூர்வமாகவே மர்மம், துப்பறிதல், ஹாரர், த்ரில்லர் வகை கதைகள் எழுதப்படுகின்றன. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மதியழகன் முனியாண்டி நிலங்களின் நெடுங்கணக்கு என்கிற தலைப்பில் த்ரில்லர் வகை குறுநாவல் ஒன்றை எழுதியுள்ளார். இந்நூலின் அறிமுக விழா வரும்…

ரந்தாவ் இடைத்தேர்தலில், பிஎச் வேட்பாளராக எஸ் ஶ்ரீராம்

ரந்தாவ் இடைத்தேர்தல் | ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக டாக்டர் எஸ் ஶ்ரீராம் மீண்டும் களமிறங்கியுள்ளார். நேற்று, பெட்டாலிங் ஜெயாவில் இருக்கும் பிகேஆர் தலைமையகத்தில், அக்கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் இதனை அறிவித்தார். கடந்தமுறை, அவர் போட்டியிடும் தகுதியை இழந்தது மட்டும் அதற்குக் காரணமல்ல, மாறாக,…

இந்து மதத்தை அவமதித்தார், ஆடவர் ஒருவரைப் போலிஸ் கைது செய்தது

சமூக ஊடகங்களில், இந்துமதம் பற்றி தவறான செய்திகளைப் பரப்பிய 52 வயது ஆடவர் ஒருவரைப் போலிஸ் கைது செய்தது. வழக்கு விசாரணைக்கு உதவ அவர் தடுத்து வைக்கப்படுவார். நேற்றிரவு, அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதை, காவல்துறை தலைவர், முகமட் ஃபூஸி ஹருண் இன்று ஓர் அறிக்கையில் உறுதி செய்தார்.…

ரோமானியச் சட்டம் : திஎம்ஜே மக்கள் பிரதிநிதி அல்ல, டாக்டர்…

ரோமானியச் சட்டம், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐசிசி) இணைய முடிவெடுத்ததன் தொடர்பில், மத்திய அரசாங்கம், மலாய் ஆட்சியாளர்களைக் கலந்து ஆலோசிக்கவில்லை என்று கூறி, ஜொகூர் பட்டத்து இளவரசர், துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் வெளியிட்ட அறிக்கைக்கு, எந்தவொரு ஒளிவுமறைவும் இன்றி, பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் இன்று கருத்து…

அம்னோ-பாஸ் ஒத்துழைப்பை தலிபானோடு ஒப்பிடுவதா? பிஎச்-க்கு மலாய்க்காரர் ஆதரவு சரிய…

பேராக் டிஏபி தலைவர், ங்கா கோர் மிங், அம்னோ-பாஸ் ஒத்துழைப்பைத் தலிபானோடு ஒப்பிட்டு பேசியது, மலாய்க்காரர்களின் ஆதரவைப் பக்காத்தான் ஹராப்பானுக்கு (பிஎச்) எதிராக மாற்ற வாய்ப்புள்ளது என்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளது. “ங்காவின் அறிக்கை, பிஎச்-க்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். கடந்த பொதுத் தேர்தலில், பிஎச்-க்குக் கிடைத்த…

ரந்தாவ் வேட்பாளர் யார்? – நாளை அல்லது நாளை மறுநாள்…

ரந்தாவ் இடைத்தேர்தல் வேட்பாளர் யார் என்பதை இன்னும் ஓரிரு நாட்களில் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) அறிவிக்கும். மலாய்க்காரர், இந்தியர் என்ற கட்டுப்பாடின்றி, மாநிலத் தலைமைத்துவம் 6 பெயர்களை மத்தியத் தலைமையிடம் கொடுத்துள்ளது என அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். “நேற்று, பிஎச் தலைமைத்துவம் கலந்துபேசிவிட்டது, நாளை அல்லது நாளை மறுநாள்,…

வேதா : அனைத்து இனங்களுக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்

இனப்பாகுபாடின்றி, ஒடுக்குமுறையின்றி, சமமான வேலை வாய்ப்புகள் அனைத்து மலேசியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் பி வேதமூர்த்தி கூறினார். தனியார் துறைகளில் வேலைக்கு விண்ணப்பிக்கும் மலாய்க்காரர்களும் இந்தியர்களும் அதிக ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றனர் எனும் அண்மைய ஆய்வு ஒன்றிற்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார். “மலேசியாவில் ஒடுக்குமுறைக்கு…

மாட் சாபு : அம்னோ-பாஸ் ஒத்துழைப்பால், ரந்தாவ் சட்டமன்றத்தை வெல்வது…

பாஸ் - அம்னோ இடையிலான ஒத்துழைப்பால், பாரிசான் நேசனலிடம் இருந்து ரந்தாவ் சட்டமன்றத்தை, பக்காத்தான் ஹராப்பான் வென்றெடுப்பது கடினமானது என்று அமானா தலைவர் மாட் சாபு கூறியுள்ளார். அந்த இரு கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, அக்கூட்டணிக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது, அதேசமயம் இடைத்தேர்தலில் இனவாத பிரச்சினைகளை அவர்கள் எழுப்பக்கூடும்…

டாக்டர் எம்: கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்க…

ஆங்கிலத்தில் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்கள் கற்பிக்கும் அணுகுமுறையை அரசாங்கம் அனுமதிக்கிறது, அதேசமயம் தேசிய மொழியில் கற்பிக்கப்படுவதும் தொடரும் எனப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் கூறினார். "மலேசியர்களில் சிலர் இப்பாடங்கள் ஆங்கிலத்தில் போதிக்கப்படுவதை விரும்புகிறார்கள், சிலர் அதனை எதிர்க்கிறார்கள். எனவே, அரசாங்கம் இவ்விஷயத்தில் நடுநிலையாக இருக்க விரும்புகிறது."…

‘கட்டாயம்’ என்ற சொல்லை அகற்றிவிட்டு, மரணத் தண்டனையை நிலைநிறுத்தவும்

மலேசிய இக்ராம் அமைப்பு (இக்ராம்) கட்டாய மரண தண்டனையைத் தடை செய்ய வேண்டும் எனும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஆனால், மரண தண்டனையை நிலைநிறுத்த வேண்டும் என்று அரசாங்கத்திற்கு அது அழைப்பு விடுத்துள்ளது. ‘கட்டாயம்’ எனும் சொல்லை அதிலிருந்து விலக்கிவிட்டால், அக்குற்றத்திற்கு, நீதிமன்றம் வேறு தண்டனை வழங்க…