கேமரன் மலை இடைத்தேர்தல் – ஹராப்பான் வேட்பாளராக எம் மனோகரன்

கேமரன் மலை இடைத்தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக, டிஏபி எம் மனோகரன் அறிவிக்கப்பட்டார். “கேமரன் மலையில், 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிட்ட எம் மனோகரன், மீண்டும் போட்டியிடுவார்,” என்று கோலாலம்பூரில், இன்று, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவரான துன் டாக்டர் மகாதிர் அறிவித்தார். மஇகா-வின் பாரம்பரிய தொகுதியான கேமரன்…

2019 புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

மலேசியாஇன்று வாசகர்கள், நண்பர்கள் அனைவரும், பிறக்கவிருக்கும் 2019-ம் ஆண்டில்  அனைத்து வளங்களையும் பெற, எங்களின் இனியப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். சகோதரத்துவத்தை வளர்ப்போம்! சமத்துவத்தை வழுபடுத்துவோம்!!

‘நான் அனைவரையும் அரவணைத்துச் செல்ல விரும்புகிறேன்’ – அஸ்மினுக்கு அன்வார்…

பிகேஆர் பதவி நியமனங்கள் குறித்த அஸ்மின் அலியின் அறிக்கைக்குப் பதிலளித்த அன்வார் இப்ராஹிம், கட்சியில் தான் அனைவரையும் அரவணைத்துச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார். “நான் அனைவரையும் அரவணைக்க விரும்புகிறேன், அவருக்கு (அஸ்மின்) ஒருசிலர் வேண்டாம். “தலைமைப் பொறுப்புகளில் எனக்கு அனைவரும் சேர்ந்திருக்க வேண்டும்…. அதுதான் வித்தியாசம்,” என்று அவர்…

பிகேஆர் பதவி நியமனங்களுக்கு அஸ்மின் மறுப்பு

பிகேஆர் துணைத் தலைவர் முகம்மது அஸ்மின் அலி, நேற்றிரவு அறிவிக்கப்பட்ட கட்சியின் பிரதான தலைமை பதவி நியமனங்களை மீண்டும் மதிப்பீடு செய்ய, கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம்-ஐ வலியுறுத்தியுள்ளார். கட்சி உறுப்பினர்களின் விருப்பமான, ‘நியாயமான மற்றும் சமமான பிரதிநிதித்துவம்’ என்ற கொள்கையை, அந்த நியமனங்கள் பிரதிபலிக்கவில்லை என அவர்…

மலாய்க்காரர்களின் நலன்களைப் பெர்சத்து பாதுகாக்கும் – டாக்டர் மகாதீர்

இந்த நாட்டில் மலாய்க்காரர்களின் நலன்களைப் பாதுகாக்க, ஒரு மலாய் கட்சி தேவை என அச்சமூகம் இன்னும் நம்புவதால், பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து), மலாய்க்காரர்களுக்கான கட்சியாக உருவானது என அக்கட்சியின் தலைவர், துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். “அவர்கள் (மலாய்க்காரர்கள்) அவர்களைப் பாதுகாக்க ஒருவர் தேவை என…

‘சிம்மாசனத்தை கைவிட்டு’, முழு நேர அரசியல்வாதியாக மாறுங்கள், திஎம்ஜே-வுக்கு கைருட்டின்…

முன்னாள் அம்னோ தலைவர், கைருட்டின் அபு ஹசான், ஜொகூர் பட்டத்து இளவரசரை (திஎம்ஜே), முழு நேர அரசியலில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளார். அம்னோ மூத்தத் தலைவரான தெங்கு ரசாலி ஹம்ஸா மற்றும் முன்னாள் போக்குவரத்து துணை அமைச்சர் தெங்கு அஸ்லான் இப்னி சுல்தான் அபு பக்கார் (பஹாங் சுல்தான்…

பிகேஆர் உதவித் தலைவராக ரஃபிசி நியமிக்கப்பட்டார்

பிகேஆர் கட்சித் தேர்தலில், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவிய ரஃபிசி ரம்லி, கட்சியின் உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை, பிகேஆர் தலைவர், அன்வார் இப்ராஹிம் இன்று ஓர் அறிக்கையின் வழி அறிவித்தார். இன்று, கட்சியின் மத்தியச் செயலவையினரை முடிவு செய்ய, பிகேஆர் மத்திய நிர்வாகக் குழு…

இசி : மஇகா உதவித் தலைவர் 5 ஆண்டுகளுக்குத் தேர்தலில்…

மஇகா உதவித் தலைவர் சி சிவராஜ், டிசம்பர் 13, 2018 தொடக்கம், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடும் தகுதியில் இருந்து நீக்குவதாக, தேர்தல் ஆணையம் (இசி) அறிவித்தது. கடந்த நவம்பர் 30, தேர்தல் நீதிமன்றத்தின் முடிவுகளைக் கருத்தில் கொண்டு – பொதுத் தேர்தலில் சிவராஜ்ஜின் வெற்றியை இரத்து…

வேதாவுக்குப் பதிலாக, வேறொரு இந்தியத் தலைவர் ஒற்றுமை அமைச்சராக நியமிக்கப்படுவதைப்…

பொ வேதமூர்த்திக்குப் பதிலாக, தனது கடமைகளைச் சிறந்த முறையில் செய்யக்கூடிய ஓர் இந்தியத் தலைவரை, ஒற்றுமை துறையமைச்சராக நியமித்தால், அதில் பாஸ்-க்குப் பிரச்சனை ஏதும் இல்லை. வேதமூர்த்தி பதவி விலக வேண்டுமென தாங்கள் வலியுறுத்துவது, இனப் பாகுபாட்டினால் அல்ல, மாறாக அவரது பணியை அவர் திறம்படச் செய்யத் தவறியதாலேயே…

முன்னாள் நீதிபதி : உயர் நீதிபதிகள் நால்வரின் சேவை தொடர,…

உயர் நீதிபதிகள் நால்வர், தங்களின் பணியை 70 வயது வரை தொடரும் வகையில், மத்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தியமைக்க வேண்டும் என முன்னாள் நீதிபதி கோபால் ஶ்ரீ ராம் புத்ராஜெயாவிடம் பரிந்துரைத்துள்ளார். நாட்டு நலனுக்கான பரிந்துரை இது என்பதால், மக்கள் அவை மற்றும் செனட் சபையின் 2/3 ஆதரவை…

கைது செய்யப்படலாம் என அஞ்சி, கோயில் கலவரத்தின் சாட்சிகள் வெளிவர…

சீபீல்ட் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயில் கலவரத்தின் சாட்சிகள், போலிஸ் தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடும் எனும் பயத்தில் சாட்சியம் அளிக்க வர மறுப்பதாக ஆர்வலர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று, ஊடகவியலாளர்களிடம் பேசிய எ இளங்கோவன், இச்சம்பவம் தொடர்பில், போலிஸ் சிலரைக் காவலில் வைத்ததன் அடிப்படையில் இதனைக் கூறுவதாகத்…

ஆடிப்-பின் பிரேதப் பரிசோதனை அறிக்கை ஒரு மாதத்தில் தயாராகும்

தீயணைப்பு வீரர் முகமட் ஆடிப் முகமட் காசிம்மின், முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை, ஒரு மாதக் காலத்தில் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரத்தப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று நோயியல் வல்லுநர்கள் நினைத்தால், அந்தக் கால அளவு தேவைப்படும், மேலும் விதிமுறைப்படி, ஒரு மாதம் எடுக்க வாய்ப்புள்ளது என…

கேமரன் மலை இடைத்தேர்தலில் மனோகரன் போட்டியிட வேண்டும், பஹாங் டிஏபி…

எதிர்வரும் ஜனவரி 26-ல் நடைபெறவிருக்கும் கேமரன் மலை இடைத்தேர்தலில், வழக்குரைஞர் எம் மனோகரன் போட்டியிட வேண்டும் என பஹாங் டிஏபி பரிந்துரைத்துள்ளது. கடந்த 2013 தொடக்கம், கேமரன் மலை தொகுதியில் சேவையாற்றி வருவதால், அங்குப் போட்டியிட மனோகரன்தான் தகுதியான வேட்பாளர் என்று பஹாங் டிஏபி தலைவர், லியோங் ங்கா…

வேதமூர்த்தியைப் பதவியிலிருந்து விலக்குங்கள், அரசாங்கத்திற்கு 40 நாள் அவகாசம்

கெராக்கான் ரக்யாட் மலேசியா இயக்கம் (கெராஸ்), தங்களது ஏழு கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு 40 நாள்கள் கால அவகாசம் கொடுத்துள்ளது. இன்று, செனி கிள்ளான் சதுக்கத்தில் கூடிய அவர்கள், தீயணைப்பு வீரர் முகமது ஆடிப் முகமது காசிம் இறப்பிற்கு நீதி கேட்டும் பொ வேதமூர்த்தியைப்…

கோயில் கலவரம் : 6 பேர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்

கடந்த மாதம், சுபாங் ஜெயா, யு.எஸ்.ஜே. 25, ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடந்த கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அறுவர், இன்று பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். முகமட் ஷாரில் டேனியல் சாஜெல், 22, முகமட் சைபுல்லா அப்துல்லா, 31, முகமட் ஹஸ்னீஜாம் ஷா, 29, அக்மால் இஸ்ஸாட்…

‘நாங்கள் வேதாவை ஆதரிக்கிறோம்’ – சித்தி காசிம் பிரதமரிடம் மனு

இன்று காலை, சுமார் 50 பேர் கொண்ட குழு ஒன்று, வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் சித்தி காசிம் தலைமையில், புத்ரா ஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், ஒற்றுமை துறையமைச்சர் பொ வேதமூர்த்திக்கு ஆதரவு தெரிவித்து ஒரு குறிப்பாணையை ஒப்படைத்தது. பிரதமர் துறையமைச்சரான வேதாவுக்குத் தங்கள் ஆதரவைக் காட்ட,…

ரஃபிசி ஹராப்பானுக்கு உதவ வேண்டுமே ஒழிய, ஒதுக்கக்கூடாது

நாட்டை நிர்வகிப்பதில், ரஃபிசி ரம்லி பக்காத்தான் ஹராப்பானுக்கு உதவி செய்ய வேண்டுமே ஒழிய, அக்கூட்டணியை விமர்சிக்கக் கூடாது என தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் ரெட்ஷுவான் யூசோஃப் கூறியுள்ளார். "ரஃபிசி கெட்டிக்காரர், அவர் எங்களைத் தவறாக வழிநடத்தாது, ஒரு நல்ல திசையில் நாட்டை நிர்வகிக்க உதவ வேண்டும்," என…

‘பெர்சத்து, அம்னோ அகதிகளை எங்களின் உளமார்ந்த பரிசாக ஏற்றுக்கொள்ளுங்கள்’

அம்னோ துணைத் தலைவர் முகம்மட் கலீட் நோர்டின், முன்னாள் அம்னோ தலைவர்களை ஏற்றுக்கொண்ட பெரிபூமி பெர்சத்து மலேசியா கட்சிக்கு (பெர்சத்து) நன்றி தெரிவித்தார். இந்த ‘அம்னோ அகதிகள்’ வைரஸ் போன்றவர்கள், இதற்கு முன்னர் அம்னோவைச் சீரழித்தது போல, அவர்கள் பெர்சத்துவையும் அழிப்பார்கள் என்று அவர் கூறினார். "பெர்சத்து, நான்…

சரவாக்கில் 5 வெட்டுமரக்காரர்கள், இந்தோனேசிய இராணுவத்தினரால் கடத்தப்பட்டனர்

கடந்த வாரம், சரவாக், செரியன்-கலிமந்தான் எல்லைக்கு அருகே, இந்தோனேசியத் துருப்புக்கள் என அடையாளம் கூறிக்கொண்டு, ஆயுதமேந்தியிருந்த ஒரு குழுவினரால், 5 மலேசிய வெட்டுமரக்காரர்கள் கடத்தப்பட்டனர். இச்சம்பவம், கடந்த டிசம்பர் 11-ம் தேதி, எல்லைக்குச் சுமார் 400 மீட்டரில், கம்போங் டானாவ் மெலிக்கின், வோங் ரங்காய் காட்டிற்கு அருகே நடந்துள்ளதாக…

இன, மதத் தீயைப் பற்றவைப்பது சுலபம், அணைப்பது கடினம் –…

ஒருவருக்கொருவர் இடையே பகைமையை வளர்க்க வேண்டாம், குறிப்பாக மத, இனம் சம்பந்தப்பட்ட விஷயங்களில், அது இத்தனை ஆண்டுகள் கட்டிக்காக்கப்பட்ட சமாதானத்தைப் பாதிக்கும் என நாட்டு மக்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது. சண்டைக்கான தீயைப் பற்றவைப்பது எளிதானது, ஆனால் அதனை அணைக்க நீண்ட காலம் பிடிக்கும் எனத் தற்காப்பு அமைச்சர், முகமட் சாபு…

‘வேதாவைக் குற்றம் சொல்வது, சுசூகி கோப்பையை மலேசியா இழந்ததற்கு சைட்…

கடந்த மாதம், சுபாங் ஜெயாவில் உள்ள சீஃபீல்ட் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் கலவரம் தொடர்பில், ஒற்றுமை அமைச்சர் பி. வேதமூர்த்தி மீது முழு குற்றம் சாட்டுவது நியாயமல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் கூறியுள்ளார். அது, கடந்த வாரம் வியட்நாமில் நடைபெற்ற ஏ.ஃப்.ஃப். சுசூகி…

அன்வார்: குற்றம் சொல்வதை நிறுத்திவிட்டு, வாழ்க்கை செலவினங்கள் மீது கவனம்…

பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள், அறிக்கைகள் வழி ஒருவரையொருவர் பகிரங்கமாக விமர்சித்து வரும் வேளையில், அதன் தலைவர் அன்வார் இப்ராஹிம், சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு அழைப்பு விடுத்துள்ளார். "தலைவர்கள் சூழலை சரி செய்ய வேண்டும், எதிர்மறை அறிக்கைகள் விடுவதைத் தவிர்க்க வேண்டும். "கட்சிக்குள்ளோ அல்லது அவர்களுக்குள்ளாகவோ நடக்கும் பகிரங்க தகராறுகளை…