1எம்.டி.பி. ஊழல் : RM2.83 பில்லியனை அரசாங்கத்திற்குச் செலுத்த எம்பேங்க்…

எம்பேங்கில் நிலுவையில் உள்ள அனைத்து 1எம்.டி.பி. உரிமைகோரல்களையும் தீர்க்கும் வகையில், RM2.83 பில்லியனைச் செலுத்த எ.எம்.எம்.பி. ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் ஒப்புக்கொண்டது. இந்த விஷயத்தை நிதி அமைச்சு நேற்று பிற்பகல் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 1எம்.டி.பி. தொடர்பான சொத்துக்களை மீட்டெடுப்பதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, அனைத்து தரப்பினரும்…

‘மொழியும் மதமும் வேறுவேறு’  – ந காந்திபன்

தமிழ் பேசுபவர்கள் அனைவரும் இந்துக்கள் அல்ல. இந்துக்கள் அனைவரும் தமிழர்களும் அல்ல. இதுதான் அடிப்படை. ஒரு மொழி சார்ந்த பாடப் புத்தகம் ஒருமதத்தை மட்டும் தூக்கி பிடிக்க வேண்டும் எனக் கட்டாயம் இல்லை. அது எந்த மதம் சார்ந்த மற்றும் மதம் சாரா நபர்களைப் பற்றியும் பேசலாம். ஒரு…

இன்று 2,253 புதிய நோய்த்தொற்றுகள், பேராக்கில் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 2,253 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பெரும்பாலான பாதிப்புகள் கிள்ளான் பள்ளத்தாக்கில் (755 நேர்வுகள்; 33.5 விழுக்காடு) பதிவாகியுள்ளன. அதேவேளையில், பேராக்கிலும் பாதிப்புகளின் எண்ணிக்கையில் (545 நேர்வுகள்; 24.2 விழுக்காடு) அதிகரிப்பு…

என்.ஜி.ஓ. : புகலிடம் கோரி வந்த குழந்தைகளும் திருப்பி அனுப்பப்பட்டனர்

புகலிடக் கோரிக்கையாளர்களில் குறைந்தது இருவராவது, தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு மியான்மருக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக, தன்னார்வத் தொண்டு நிறுவனமான ஆசியப் பசிபிக் அகதிகள் உரிமைகள் வலையமைப்பு (ஏபிபிஆர்என்) கூறியது. இந்த வாரத் தொடக்கத்தில், மியான்மர் கடற்படைக் கப்பலால் அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட மொத்தம் 1,086 மியான்மர் நாட்டினரில், இந்த…

ஜி.இ.15-ல் பெர்சத்துவுடனான ஒத்துழைப்பு – ம.இ.கா. பி.என்.-உடன் விவாதிக்கும்

15-வது பொதுத் தேர்தலை (ஜிஇ15) எதிர்கொள்வதில், பெர்சத்து மற்றும் தேசியக் கூட்டணி உடனான ஒத்துழைப்பைத் தொடரலாமா என்பது குறித்து தேசிய முன்னணி (பி.என்.) தலைவர்களுடன் ம.இ.கா. விவாதிக்கும். அதன் துணைத் தலைவர் எம் சரவணன், தற்போது, இந்த விஷயத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார். "நாங்கள் முன்னேற்றங்களைக்…

தடுப்பூசி வரவுக்குப் பின், பயணக் கட்டுப்பாடுகள் தேவையில்லை

நாட்டில், கோவிட் -19 தடுப்பூசி திட்ட அமலாக்கம், பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கான சிறந்த வழியாக கருதப்படுகிறது. தடுப்பூசி போடத் தொடங்கியதைத் தொடர்ந்து, பொருளாதாரத் துறையை முழுமையாகத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட, அரசாங்கம் இனி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.) செயல்படுத்த தேவையில்லை என மலேசிய அறிவியல் கல்விக்கழகத்தைச் சார்ந்த…

தமிழ்மொழி இந்துக்களுக்குச் சொந்தமானதா? – மலேசிய இந்துச் சங்கத்தின் பிரித்தாளும்…

கடந்த ஜனவரி 24, 2021, கல்வித் துணையமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பை விளக்கி நாளிதழில் விடப்பட்டிருக்கும் அறிக்கை, மலேசிய இந்துச் சங்கத் தலைவர் மோகன் சாணின் அறியாமையை வெளிப்படுத்துவதாக மலேசியத் தமிழர் தேசியப் பேரவை கருதுவதாக அதன் தலைவர் தமிழரண் தெரிவித்தார். அவ்வறிக்கையில், இந்துக்களுக்குச் சொந்தமான தமிழ்மொழியைக் கையகப்படுத்திக் கொள்ள…

எஸ்.ஓ.பி.-ஐ மீறினால் RM10,000 தண்டம், பிடிஆணையின்றி கைது

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) உத்தரவுகளை மீறுபவர்கள், கோவிட் -19 பரவல் தடுப்பு அவசரகாலச் சட்டத் திருத்தத்தின் கீழ், மார்ச் 11 முதல் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வர். மத்திய அரசியலமைப்பின் பிரிவு 150 (3)-இன் கீழ், மாட்சிமை தங்கியப் பேரரசர் வழங்கிய அவசரகால அதிகாரங்களின் அடிப்படையில், தொற்று நோய்களைத்…

முஹைதீன் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க இனி எந்தக் காரணமும் இல்லை –…

அவசரக் காலங்களில் நாடாளுமன்றம் அமர முடியும் என்ற மாட்சிமை தங்கியப் பேரரசரின் அறிக்கையை அடுத்து, பிரதமர் முஹைதீன் யாசின் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க இனி எந்தக் காரணமும் இல்லை என்று பெஜுவாங் கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுக்க, அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா முஹைதீனிடம்…

ஸ்டீவன் கான், சார்லஸ் சந்தியாகோ புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்

கடந்த வெள்ளிக்கிழமை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மலேசியாகினி குற்றவாளி என்ற ஃபெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பான விசாரணைக்கு உதவ, மலேசியாகினி தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கான் மற்றும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ இருவரும் அடுத்த திங்கட்கிழமை புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தனது…

இன்று 1,924 புதிய நோய்த்தொற்றுகள், 12 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 1,924 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இது கடந்த ஜனவரி 4-க்குப் (1,741) பிறகு பதிவான மிகக் குறைந்த எண்ணிக்கையாகும். புதிய வழக்குகளில் ஆறு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை, மீதமுள்ளவை உள்நாட்டில்…

பி.என். தேர்தல் கூட்டத்திற்கு அஸ்மின் தலைமை தாங்கினார்

நேற்று இரவு புத்ராஜெயாவில், கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி தலைமையில், தேசியக் கூட்டணி (பி.என்.) தேர்தல் கூட்டத்தை நடத்தியது. பி.என். கட்சிகளின் அனைத்து தேர்தல் இயக்குநர்கள் வருகையுடன் இந்தச் சந்திப்பு நடந்தது என்று அஸ்மின் கூறினார். "தேர்தல் பணிகள் மூலம், அப்படியே மக்களின் ஆதரவை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பை…

தடுப்பூசி பெற அரை மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவு

தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ், மைசெஜத்தெரா (MySejahtera) விண்ணப்பம் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டதிலிருந்து, கோவிட் -19 தடுப்பூசிக்காக மொத்தம் 637,000 நபர்கள் நேற்றிரவு 9 மணி வரை பதிவு செய்துள்ளனர். தடுப்பூசி திட்டங்கள் உட்பட, கோவிட் -19 பற்றிய தகவல்களைப் பரப்புவதற்கான ஊடகமாகவும் தற்போது மிகவும் பயனுள்ள…

அகோங் : அவசர காலங்களில் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும்

பிரதமரின் ஆலோசனையின் பேரில், அவரது மாட்சிமைக்குப் பொருத்தமானதாகக் கருதப்படும் ஒரு தேதியில் அமல்படுத்தப்படும் அவசர காலங்களில், நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும் என்று மாட்சிமை தங்கியப் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல் முஸ்தபா பில்லா ஷா சுல்தான் அஹ்மத் ஷா நேற்று ஓர் அறிக்கையில் கூறினார். "இந்த விடயம்…

இன்று 3,545 புதிய நோய்த்தொற்றுகள், நெகிரி செம்பிலானில் அதிக தொற்றுகள்…

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 3,545 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். அதிக எண்ணிக்கையிலான புதிய தொற்றுகள் (1,392)  நெகிரி செம்பிலான் பதிவு செய்துள்ளது என்றார் அவர். "நெகிரி செம்பிலானில் பாதிப்புகளின்…

இன்று 2,468 புதிய நோய்த்தொற்றுகள், 14 இறப்புகள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 2,468 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு  தெரிவித்தது. சிறைகள் மற்றும் குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் புதிய நேர்வுகளின் எண்ணிக்கை 175 (7.1 விழுக்காடு) ஆகும். குறிப்பாக, பேராக், பத்து காஜாவில் உள்ள சிறை…

கோவிட் -19 தடுப்பூசி பெற மலேசியர்கள் இப்போது பதிவு செய்யலாம்

மலேசியர்கள் இப்போது, மைசெஜாத்தெரா (MySejahtera) பயன்பாட்டின் வழி, கோவிட் -19 தடுப்பூசி பெற பதிவு செய்யலாம். தடுப்பூசிக்கான பதிவு iOS மற்றும் Android ஆகியப் பதிப்புருக்களில் கிடைக்கிறது. இருப்பினும், பயனர்கள் மைசெஜாத்தெரா பயன்பாட்டை அவ்வாறு செய்வதற்கு முன்பு புதுப்பிக்க அல்லது பதிவேற்ற வேண்டும். தடுப்பூசி பொத்தானை அழுத்திய பிறகு,…

மலேசியாகினி நீதிமன்றத் தண்டம் RM500,000-ஐ செலுத்தியது

வாசகர்கள் தெரிவித்த கருத்துக்கள் நீதிமன்ற அவமதிப்பை ஏற்படுத்தின என்றக் குற்றத்திற்காக, மத்திய நீதிமன்றம் விதித்த RM500,000 தண்டத்தை மலேசியாகினி இன்று செலுத்தியது. அதனை மலேசியாகினியின் தலைமை நிர்வாக அதிகாரி பிரேமேஷ் சந்திரன், இன்று காலை புத்ராஜெயாவில் உள்ள நீதி அரண்மனையில் செலுத்தினார். பொது நன்கொடைகளின் வழி, அப்பணம் சேகரிக்கப்பட்டது;…

182,520 கூடுதல் டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகளை மலேசியா நாளை…

மலேசியா 182,520 கூடுதல் அளவிலான ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசியை, நாளை (புதன்கிழமை) பெறும், இது இன்னும் தடுப்பூசிகள் கிடைக்காத மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும் எனத் தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார். பெல்ஜியத்தில் வெளியிடப்பட்ட இந்தத் தடுப்பூசி, சிங்கப்பூரிலிருந்து, கோலாலம்பூர் சர்வதேச…

பள்ளிகள் திறக்கப்படும் முன் 55,000 ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி – அரசாங்கம்…

கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் உத்தரவாதச் சிறப்புக் குழு (ஜே.கே.ஜே.ஏ.வி.) முதல் கட்ட நிலையில், குறைந்தது 55,539 ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி வழங்குவதை உறுதிசெய்ய முயற்சித்து வருகிறது. தற்போது, ​​தடுப்பூசியின் முதல் கட்டத்தில், மருத்துவ முன்னணி ஊழியர்கள், அமலாக்கப் பணியாளர்கள், மக்கள் நலன்புரி அதிகாரிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்…

‘நாடாளுமன்றத்தைக் கூட்டுக’ – சுயாதீன பரிந்துரைக் குழுவின் பி.எச். பிரதிநிதிகள்

அவசரக்கால நிலைப்பாடு குறித்த சிறப்பு சுயாதீனக் குழுவில், உறுப்பினர்களாக உள்ள பக்காத்தான் ஹராப்பானின் (பி.எச்.) மூன்று பிரதிநிதிகளும், அவசரநிலை தொடர்ந்த போதிலும், அரசாங்கம் உடனடியாக நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். இன்று வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், பேரரசருக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட அக்குழு, கடந்த…

`மியான்மர் கைதிகளைத் திருப்பி அனுப்பாதீர்கள்` – என்.ஜி.ஓ.க்கள் நீதிமன்ற தலையீட்டைக்…

1,200 கைதிகளை மியான்மருக்குத் திருப்பி அனுப்புவதைத் தடுக்கும் முயற்சியில், இரண்டு மனித உரிமைகள் குழுக்கள் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில், நீதி மறுஆய்வைத் தாக்கல் செய்துள்ளன. இந்த வழக்கை, எம்னெஸ்டி இன்டர்நேஷனல் மலேசியா (Amnesty International Malaysia) மற்றும் அசைலம் அக்சஸ் மலேசியா (Asylum Access Malaysia) இரண்டும் இணைந்து…

இன்று 2,192 புதிய நோய்த்தொற்றுகள், பாதிக்கும் மேற்பட்ட நேர்வுகள் கிள்ளான்…

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 2,192 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை கிள்ளான் பள்ளத்தாக்கில் பதிவாகியுள்ளன. "இன்று பதிவான ஆறு இறப்புகளில், சிலாங்கூரில் இரண்டு, சபா, சரவாக், பஹாங் மற்றும் ஜொகூரில்…