இராகவன் கருப்பையா - அண்மையில் நடந்து முடிந்த சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜ.செ.க. அடைந்த படுதோல்வியானது அக்கட்சியின் தலைமைத்துவத்திற்கு வேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் பொது மக்கள், குறிப்பாக சபா மாநில வாக்காளர்கள், தாங்கள் வெகுளியானவர்களோ ஏமாளிகளோ அல்ல என மிகத் தெளிவாக, துணிச்சலாக சுட்டிக் காட்டியுள்ளனர் என்பதுதான்…
எம்னெஸ்டி : மியான்மர் நாட்டினரைத் திருப்பி அனுப்புவதை மலேசியர்கள் எதிர்க்க…
மியான்மரிலிருந்து அகதிகளாகவும் புகலிடம் கோரியும் இங்கு வந்தவர்கள், அவர்கள் நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுவதிலிருந்து காப்பாற்ற, மலேசியர்கள் பிரதமர் முஹைதீன் யாசின் மற்றும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று எம்னெஸ்டி மலேசியா அழைப்பு விடுத்துள்ளது. #MigranJugaManusia என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, அனைத்து சமூக ஊடகத் தளங்களிலும் இயங்கலையில் ஆர்ப்பாட்டங்கள் இன்று…
`மலேசிய இந்து சங்கத்தின் தலையீடு தமிழ்ப்பள்ளிகளில் தேவையில்லை!`
கருத்து | தமிழ், இந்திய மாணவர்கள் கல்வி பயிலும் தமிழ்ப்பள்ளிகளில் எந்த மதம் சார் அமைப்புகளும் மூக்கை நுழைக்கக்கூடாது; தமிழ்ப்பள்ளிகள் மதச்சார்பின்மையைப் பேணுதல் வேண்டும். தமிழ்ப்பள்ளிகள் என்பன தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழ் விழுமியங்கள் முதலியவற்றின் காப்பகங்களாகத் தொன்று தொட்டு விளங்குகின்றன. எனவே, தமிழ் சார்ந்த பற்றியங்களான தனித்தமிழ்,…
முதல் கோவிட் -19 தடுப்பூசி இன்று காலை வந்து சேரும்
ஒரு வருடத்திற்கும் மேலாக, இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற கோவிட்-19 தொற்றுநோயுடன் போராடியப் பிறகு, இறுதியாக இன்று காலை அதனைக் கையாள்வதற்கான தடுப்பூசி மலேசியாவில் 'தரையிறங்க' உள்ளது. ஃபைசர்-பயோஎன்டெக் (Pfizer-BioNTech) தடுப்பூசிகளின் முதல் தொகுதி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு, எம்.ஏ.பி.கார்கோ சென். பெர்.-ஆல் (மாஸ்கர்கோ) இயக்கப்படும்,…
‘மலேசியாகினி வழக்கின் முடிவு நியாயமற்றது’ – எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகள்
நியாயமான, சமநிலையான ஊடக வழிகாட்டுதல்களை வகுக்க, பல்வேறு தரப்பினர்கள் உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று, ஒரு கூட்டு அறிக்கையில் 76 எதிர்க்கட்சி எம்.பி.க்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது, வாசகர்களின் கருத்துகள் நீதிமன்றத்தை அவமதித்துள்ளன எனக்கூறி, மலேசியாகினி இணைய செய்திதளத்தைக் குற்றவாளி என ஃபெடரல் நீதிமன்றம்…
எம்.பி.: தடுப்பூசி பெறும் முதல் குழுவாகக் கல்வியாளர்கள் இருக்க வேண்டும்
கல்விக்குழு ஒன்றை அமைத்துள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்கள், இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் (பி.டி.பி.ஆர்.) செயல்படுத்துவதில் உள்ள பலவீனங்களையும் தடைகளையும் கண்டறிந்துள்ளனர். இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், தடுப்பூசி பெறுபவர் வரிசையில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அக்குழு வலியுறுத்தியுள்ளது. "தொற்றுநோய் முற்றிலுமாக குறையாத நிலையில், இன்னும் பள்ளிக்குத்…
இன்று 2,461 புதிய நோய்த்தொற்றுகள், கிளாந்தானில் பாதிப்புகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 2,461 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும், 8 நோயாளிகள் இன்று மரணமடைந்துள்ளனர். இது மரண எண்ணிக்கையை 1,051 -ஆக உயர்த்தியுள்ளது. இறந்தவர்கள் அனைவரும் மலேசியர்கள்…
‘தமிழ் மொழி, இனம், பண்பாடு சார்ந்த பற்றியங்களில் இந்து மதச் சாயம் பூசாதே!’…
மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ மோகன் சான் தமிழ்ப்பள்ளிகளில் மூக்கை நுழைக்கும் வண்ணமாக, தமிழ்மொழி, தமிழர் இன வரலாறு போன்றவற்றில் அடிப்படை புரிதலற்ற நிலையில் அவர் வெளியிட்ட அறிக்கை இருக்கிறது. தமிழ்ப் பாடப் புத்தகத்தில், தமிழ் மொழிக்கும் எழுத்துக்கும் பங்காற்றியவர்களின் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இக்குறிப்புகள் தமிழ் மொழியின் வரலாற்றை மையப்படுத்தியதாகும். மாறாக,…
தமிழ்மொழிக் காப்பகத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ளுங்கள்!
மலேசிய வரலாற்றில் முதன் முதலாக, தமிழ்மொழியை மேம்படுத்துவதற்குக் கல்வி அமைச்சு அறிந்தேற்புடன் தமிழ்மொழிக் காப்பகத்தை மே 3, 2019-ல், முந்தையத் துணைக் கல்வி அமைச்சர் தியோ நி சிங்-ல்அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைக்கப்பட்டது. இக்காப்பகம் தமிழ்மொழியை எல்லாக்கோணங்களிலும் தரப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது என்பதனை அறிந்து மலேசியத் தமிழர்கள் எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தனர்.…
மலேசியாகினி வழக்கு சர்வதேச செய்தி நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்தது
வாசகர்கள் வெளியிட்டக் கருத்துக்கள் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி, மலேசியாகினி இணைய செய்தித்தளத்தைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த ஃபெடரல் நீதிமன்றத்தின் முடிவு சர்வதேச செய்தி நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்தது. பிபிசி-இல் வெளியான, 'மலேசிய ஊடகத் தளத்தை மாற்றிய ஒரு தீர்ப்பு' (The upstart that changed Malaysia's media landscape) …
மார்ச் 1 முதல், பள்ளிகள் கட்டங்கட்டமாகத் திறக்கப்படும்
இந்த மார்ச் மாதம் தொடங்கி, பள்ளி அமர்வுகள் கட்டங்கட்டமாகத் துவங்கும் எனக் கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் இன்று அறிவித்தார். பாலர்பள்ளி, முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான பள்ளி அமர்வுகள் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கும். மூன்றாம், நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கானப் பள்ளி…
மலேசியாகினி நன்கொடை பிரச்சாரம் இலக்கை அடைந்தது
மலேசியாகினி, அதன் RM500,000 நிதி திரட்டும் இலக்கை ஐந்து மணி நேரத்திற்குள் அடைந்துள்ளது. அதன் வாசகர்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் கருத்துகளைப் பகிர்ந்தமைக்குப் பொறுப்பேற்க வேண்டுமென்று தீர்ப்பளித்த ஃபெடெரல் நீதிமன்றம், மலேசியாகினி இணையத்தளச் செய்தி நிறுவனத்திற்கு RM500,000 தண்டம் விதித்து தீர்ப்பளித்தது. அந்தத் தண்டத்தைச் செலுத்த நிதி திரட்டும் பிரச்சாரத்தை…
இன்று 2,936 புதிய நோய்த்தொற்றுகள், ஜொகூரில் பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்ந்தது
கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 2,936 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. ஜொகூர் 730 புதிய நோய்த்தொற்றுகளுடன் கடுமையான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. 978 நேர்வுகளுடன் சிலாங்கூர் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறது. இதற்கிடையில், இறப்புகள் இன்று 13-ஆக பதிவாகியுள்ளன.…
உண்மையான அவசரநிலை இன்று தொடங்குகிறதா? – எஸ் அருட்செல்வன்
கருத்து l முன்னாள் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) தோமி தாமஸ் எழுதிய புத்தகத்திற்காக, கெராக்புடாயா பதிப்பகத்தின் கணினிகளைக் கைப்பற்றி காவல்துறை ஏன் அரசாங்கப் பணத்தை வீணடிக்கிறது. இந்தப் புத்தகத்தை எழுதியதை அவர் ஒருபோதும் மறுத்ததில்லை. அப்புத்தகம் மிகச் சிறப்பாக விற்பனையானது, அதில் அவர் மிகவும் பெருமிதம் கொண்டிருப்பார் என்று…
தோமி தாமஸ் புத்தக வெளியீட்டாளரின் கணினியைக் காவல்துறை பறிமுதல் செய்தது
முன்னாள் சட்டத்துறைத் தலைவர் தோமி தாமஸ் எழுதிய நினைவுக் குறிப்பு புத்தகத்தின் வெளியீட்டாளர் மீதான விசாரணையைத் தொடர்ந்து, கெராக்புடாயா நிறுவனத்திடமிருந்து இரண்டு கணினிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மலேசியாகினியிடம் பேசிய கெராக்புடாயா நிறுவனர் சோங் தோன் சின், என் கதை : தரிசில் தேடும் நீதி (My Story:…
RM500,000 தண்டம் : மலேசியாகினி பொதுமக்களின் உதவியை நாடுகிறது
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில், ஃபெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பான RM500,000 தண்டத்தைத் திரட்ட உதவுமாறு மலேசியாகினி பொதுமக்களை அணுகுகிறது. சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அலுவலகம் கோரிய RM200,000-ஐ விட அதிகமான தொகையை, அடுத்த புதன்கிழமை (பிப்ரவரி 24), மூன்று வேலை நாட்களுக்குள் செலுத்த வேண்டும். செய்தி நிறுவனத்தின் இணையதளத்தில், வாசகர்கள்…
நீதிமன்ற அவமதிப்பு : மலேசியாகினிக்கு RM500,000 தண்டம் விதிக்கப்பட்டது
மலேசியாகினி இணையத்தள செய்தி நிறுவன வாசகர்களின் கருத்துகள், நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி, RM500,000 தண்டம் விதிக்கப்பட்டது. இன்றைய வழக்கு விவகாரத்தின் போது, ஃபெடரல் நீதிமன்றம் அத்தண்டனையை வழங்கியது. முன்னதாக 6 -1 என்ற பெரும்பான்மை முடிவில், தனது வாசகர்களின் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துகளுக்கு மலேசியாகினி பொறுப்பேற்க வேண்டுமென…
ஒரு மேஜையில் 2-க்கும் மேற்பட்டவர்கள் அமர இன்று முதல் அனுமதி
இன்று முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் (பி.கே.பி.) கீழ் உள்ள மாநிலங்களில், உணவருந்த ஒரு மேஜையில் இருவருக்கு மேல் அமர அனுமதிக்கப்படுகிறது. மேலும், வாகனத்தின் கொள்ளளவு அடிப்படையில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை இருக்கலாம் என்றும் பாதுகாப்பு அமைச்சர், இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார். நிபந்தனைக்குட்பட்ட பி.கே.பி. மற்றும் மீட்புநிலை பி.கே.பி.…
பி.கே.பி.பி. பகுதிகளில் திரையரங்குகளைத் திறக்க அரசாங்கத்திற்கு வலியுறுத்து
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி) பகுதிகளில், சினிமா பொழுதுபோக்குத் துறையை மீண்டும் திறக்குமாறு, திறையரங்க உரிமையாளர் ஒருவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார். லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் (எல்.எஃப்.எஸ்) குழுமத்தின் உரிமையாளர், ஆர் துரைசிங்கம் பிள்ளை, பி.கே.பி.பி. அமலில் இருக்கும் மாநிலங்களில் கூட்டங்கள், திருமணங்கள் மற்றும் பிற சமூக ஒன்றுகூடல்களை…
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி போடத் தவறும் முதலாளிகளுக்குச் சிறை
அரசாங்கம் தீர்மானித்தபடி, விடுதிகளில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் கோவிட் -19 தடுப்பூசி வழங்கப்படுவதை முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும். முதலாளிகள் அவ்வாறு செய்யத் தவறினால், அவர்கள் வீட்டுவசதி மற்றும் வேலைவாய்ப்பு வசதிகளுக்கான குறைந்தபட்ச தரநிலைகள் (திருத்தம்) சட்டம் 2019-ஐ (சட்டம் 446) மீறியதாகக் குற்றம் சாட்டப்படலாம்; இது…
இன்று 2,712 புதியத் தொற்றுகள், 25 இறப்புகள்
கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 2,712 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகளையும், 25 இறப்புகளையும் மலேசிய சுகாதார அமைச்சு அறிவித்தது. அண்மைய காலமாக இரட்டை இலக்க புள்ளிவிவரங்களில் இருந்த பேராக் (198) மற்றும் கெடா (182), இன்று மூன்று இலக்க பதிவைக் காட்டியுள்ளன. கடந்த…
பி.டி.பி.ஆர். 2.0: மிக நீண்ட நேரம், ஈக்காத்தான் இளைஞர் அமைப்பு…
இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் 2.0 (பி.டி.பி.ஆர்.) செயல்பாட்டை இரத்து செய்யுமாறு, மலேசிய ஈக்காத்தான் இளைஞர் மன்றம் (டி.பி.ஐ.எம்) கல்வி அமைச்சை வலியுறுத்துகிறது. அதன் துணைத் தலைவர் ஷாஹிர் அட்ணான், பி.டி.பி.ஆர். 2.0-இன் அதிகபட்ச காலம் மிக நீண்டது, நடைமுறைக்கு மாறானது மட்டுமல்லாமல், இயங்கலை கற்றலுக்கு யதார்த்தமானதாக இல்லை…
மக்களவையைக் கூட்ட அதிகமாக எம்.பி.க்கள் வலியுறுத்து
கோவிட் -19 பாதிப்பின் காரணமாக விதிக்கப்பட்டத் தடைகளைத் தளர்த்தி, பல்வேறு பொருளாதாரத் துறைகள் திறக்கப்பட்டுள்ளதால், மக்களவையையும் கூட்டுமாறு பல எம்.பி.க்கள் வலியுறுத்துகின்றனர். இஸ்கண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங், அவசரநிலை குறித்து பேரரசருக்கு ஆலோசனை வழங்கும் இருகட்சி சார்ந்த குழு, சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறுவதை…
சூரிய ஆற்றல் திட்ட ஊழல் வழக்கு – தற்காத்துக் கொள்ள…
சரவாக்கில், 369 கிராமப்புறப் பள்ளிகளில், சூரிய ஆற்றல் வழங்கல் மற்றும் நிறுவல் திட்டங்களுக்கான நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியக் குற்றச்சாட்டில் தன்னைத் தற்காத்துக் கொள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி மொஹமட் ஜெய்னி மஸ்லான், மூன்று வழக்குகளுக்கும் முதற்தோற்றத்தை உருவாக்குவதில்…
























