பெர்காசா : மற்ற இன முஸ்லிம்களும் பூமிபுத்ரா அந்தஸ்துக்குத் தகுதி…

இந்திய முஸ்லிம்களுக்குப் பூமிபுத்ரா அந்தஸ்து வழங்கும் பரிசீலனையில் அரசாங்கம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என, மலாய்க்காரர்கள் உரிமை குழு (பெர்காசா) புத்ரா ஜெயாவைக் கேட்டுக்கொண்டது. தற்போது , பூமிபுத்ரா அந்தஸ்து (மண்ணின் மைந்தர்கள்) மத அடிப்படையில் இல்லாமல், ஒரு நிலத்தின் பூர்வீக உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையிலேயே,…

ஷாரிசாத்: பக்காத்தான் ஹராப்பான் தலைவராக மகாதீர் நியமனம் ஒரு ‘நாடகம்’

பக்காத்தான் ஹராப்பானின் தலைவராக டாக்டர் மகாதிர் நியமனம், எதிர்க்கட்சி கூட்டணி அரங்கேற்றும் ஒரு ‘நாடகம்’ என அம்னோ மகளிர் பிரிவு தலைவி,  ஷாரிசாத் அப்துல் ஜாலில் வர்ணித்தார். இன்று, ஜொகூர் கேலாங் பாத்தாவில், அம்னோ மகளிர் பிரிவு பிரதிநிதிகள் மாநாட்டைத் தொடக்கி வைத்தப்பின், செய்தியாளர்களிடையே அவர் பேசினார். உண்மை…

மனித உரிமை ஆர்வலர் மலேசியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு

வங்காளத் தேச மனித உரிமைகள் ஆர்வலர், அடிலுர் ரஹ்மான் கான் மலேசியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டார். இன்று காலை, சுமார் 4 மணியளவில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு, நாட்டில் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது. மரணத் தண்டனைக்கு எதிரான ஆசியப் பிணையம் (Anti Death Penalty Asia…

கைதான 28 கட்கோ குடியிருப்பாளர்களுக்கும் 3 நாட்கள் தடுப்புக் காவல்…

நேற்று மாலை, கைதான 27 கட்கோ குடியிருப்பாளர்களுக்கும் பாஹாவ் நீதிமன்றத்தில் 3 நாட்கள் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டது. கைதானவர்களிடம் விசாரணை மேற்கொள்ள தங்களுக்குக் கால அவகாசம் தேவை எனக் காவல்துறையினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இத்தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று காலை, சுமார் 9 மணியளவில் கைதான 27 பேரும், கைவிலங்கிடப்பட்டு…

13 பெண்கள் உட்பட, 28 கட்கோ குடியிருப்பாளர்கள் கைது

நெகிரி செம்பிலான், கட்கோ கிராமத்திலிருந்து ரப்பர் மரங்களை ஏற்றிச் சென்ற லாரிகளைத் தடுத்து நிறுத்திய 13 பெண்கள் உட்பட, 27 கட்கோ குடியிருப்பாளர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இன்று மதியம் 2 மணியளவில், லாரிகளை வழிமறித்த கட்கோ குடியிருப்பாளர்களைச் சுமார் 60 பேர் அடங்கிய காவல்துறை குழுவினர் கைது…

பி.எஸ்.எம். தேசியத் தலைவராக டாக்டர் நசீர் மீண்டும் தேர்வு

மலேசிய சோசலிசக் கட்சியின் தேசியத் தலைவராக டாக்டர் முகமட் நசீர் ஹசிம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று நடந்துமுடிந்த கட்சி உள்தேர்தலில், டாக்டர் நசீர் பெரும்பான்மை பேராளர்களால் வாக்களிக்கப்பட்டு தேர்வு பெற்றார். சிரம்பானில் நடந்த கட்சியின் 19-வது தேசிய மாநாட்டில், 2017/2019-ம் ஆண்டுக்கான புதிய செயலவையினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சரஸ்வதி முத்து…

14-வது பொதுத் தேர்தல்: 20 க்கும் அதிகமான இடங்களில் பி.எஸ்.எம்.…

  எதிர்வரும் 14  ஆவது பொதுத் தேர்தலில், 8 நாடாளுமன்ற தொகுதிகள் , 16 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) முடிவெடுத்துள்ளது. இன்று,  சிரம்பானில் நடந்த,  கட்சியின்  19-வது  மாநாட்டின் தொடக்க விழாவில், பி.எஸ்.எம். தனது கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்தது. டாக்டர் ஜெயக்குமார், டாக்டர்…

இடதுசாரி அரசியலே மக்களின் தேர்வு : பி.எஸ்.எம். தேசிய மாநாடு

மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) 19-வது தேசிய மாநாடு, ‘இடதுசாரி அரசியலே மக்களின் தேர்வு’ எனும் கருப்பொருளோடு இன்று தொடங்கியது. இவ்வாண்டு மாநாடு ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடப்போகும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் யார் யாரெனக் கலந்துபேசி, முடிவெடுக்கப்படும் எனக் கட்சியின் தலைமைச் செயலாளர்…

நஜிப் : மலேசிய இந்தியர் பெருந்திட்டம் மாயை அல்ல, நிஜம்

மலேசிய இந்தியர் பெருந்திட்டம் (எம்.ஐ.பி.) வெறும் மாயையோ அர்த்தமற்றதோ அல்ல; மாறாக, இந்திய சமூக மேம்பாட்டுக்கான ஓர் உண்மையான திட்டம் அது என நஜிப் கூறுகிறார். வடிவமைக்கப்பட்ட அத்திட்டம் இந்திய சமூகத்திற்கு முழுமையான பலனைக் கொடுப்பதோடு, அரசாங்கத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையை வலுப்பெற செய்வதையும் அரசாங்கம் உறுதிபடுத்தும். “இத்திட்டம்…

நஜிப் : அந்த இந்திய வம்சாவளி பிரதமரைவிட, நான் அதிகம்…

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் பிரதமரைவிட, மலேசிய இந்தியர்கள் முன்னேற்றத்திற்கு  தாம் அதிகம் பங்காற்றியுள்ளதாக பிரதமர் நஜிப் கூறினார். அந்த முன்னாள் பிரதமரின் பெயரைக் குறிப்பிடாமலேயே, அவரின் சேவை காலத்தோடு, நஜிப் தம்மை ஒப்பிட்டுப் பேசினார். “நான் பிரதமரான பிறகு, கிட்டத்தட்ட 900 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டைத்…

ஊழலை எதிர்த்துப் போராட உங்களோடு நாங்கள் இருக்கிறோம், ஜொகூர் இளவரசருக்கு…

நாட்டில் ஊழல்களைத் துடைத்தொழிக்க, ஜொகூர் பட்டத்து இளவரசருக்கு ஆதரவாக இருப்போம் என அமானா கட்சி உறுதியளித்துள்ளது. துங்கு இஸ்மாயில் வெளியிட்ட அந்த அறிக்கை துணிச்சலான ஒன்று என்றும்; நாட்டில் ஊழலையும் அதிகார துஸ்பிரயோகத்தையும் துடைத்தொழிக்க விரும்பும் அவரின் முயற்சிக்கு மக்கள் ஆதரவாக இருக்க வேண்டுமென்றும் அமானா கட்சியின் துணைத்…

ரபிசி : பக்காத்தான் ஹராப்பான் 50 நாடாளுமன்ற இருக்கைகளை வெல்லும்…

14-வது பொதுத் தேர்தலில், தங்களால் வெல்லக்கூடிய  50 நாடாளுமன்ற இடங்களைப் பக்காத்தான் ஹராப்பான் அடையாளங்கண்டுள்ளது. மக்கள் நீதி கட்சியின் (பிகேஆர்) துணைத் தலைவர் ரபிஷி ரம்லி, அவற்றுள் ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு, பாசீர் கூடாங், தெப்ராவ், செம்புரோங், தஞ்ஞோங் பியாய், லாபிஸ், சிகாமாட், செகிஞ்சாங், பூலாய் மற்றும்…

கல்வி அமைச்சர் : சிலாங்கூர் முதலில் யூனிசெல்லில் இலவசக் கல்வியைச்…

இலவசக் கல்வியை அமல்படுத்துவதில் தீவிரமாக இருக்கும் சிலாங்கூர் மாநில அரசு, முதலில் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் சிலாங்கூர் பல்கலைக்கழகத்தில் (யூனிசெல்) அதனை அமல்படுத்தட்டும் எனக் கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ மாஹ்ட்ஷீர் காலிட் கேட்டுக்கொண்டார். மக்கள் நீதிக் கட்சியின் தலைமைத்துவத்தில் இருக்கும் சிலாங்கூர் அரசாங்கம், யூனிசெல்லில் இதனை நடைமுறைபடுத்தி,…

முக்ரிஸ் ‘இடைக்கால பிரதமர்’ஆக மகாதீர் விரும்புகிறார் போலும், அம்னோ உறுப்பினர்…

பக்காத்தான் ஹராப்பானுக்கு ஓர்   ‘இடைக்கால பிரதமர்’ தேவை எனும் டாக்டர் மகாதீரின் ஆலோசனை, முக்ரிஸை அந்தப் பதவியில் அமர வைக்க, அவர் செய்யும் ஒரு ‘சதி’யாக இருக்கலாம் என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் அப்துல் அஸிஸ் கப்ராவி கூறியுள்ளார். அன்வார் இப்ராஹிமை விடுதலை செய்து, பிரதமர் பதவியில்…

1எம்டிபி வட்டமேசை கலந்துரையாடல், ஜசெகாவுக்கு பாஸ் அழைப்புவிடுக்கும்

பாஸ் ஏற்பாடு செய்யவிருக்கும், 1எம்டிபி வட்டமேசை கலந்துரையாடலுக்கு, ஜனநாயகச் செயற்கட்சியின் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தான் செங் கியாவ்-ஐ அழைக்கவிருப்பதாக, பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் அறிவித்துள்ளார். தான் செங் கியாவ், 1எம்டிபி விவகாரங்களைக் கவனித்து வரும் ஏஜென்சிகளில் ஒன்றான, பொது…

உங்கள் பேச்சு மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள், மகாதீருக்கு துணைப்பிரதமர்…

“டாக்டர் மகாதீர் தனது பேச்சு மற்றும் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும்”, என அந்த முன்னாள் பிரதமரைத் துணைப் பிரதமர் கேட்டுக்கொண்டார். பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்தை எப்போதும் பழித்துப் பேசுவது குறித்து ஸாகிட் கருத்துரைத்தார். அம்னோ மற்றும் பாரிசானின் துணைத் தலைவரான ஸாகிட், “ஓர் அரசியல்வாதி எனும் முறையில்…

சாலே சைட் கெருவாக் : மலேசியா தோல்வி கண்ட நாடு…

மலேசியாவைத் தோல்வி கண்ட அரசு எனவும், பொருளாதாரத்தில் சரிவு கண்டுவரும், திவாலாகப் போகும் அரசாங்கம் எனவும் ஒருசில தரப்பினர் கூறுவது, தனக்கு வியப்பாக உள்ளது எனத் தகவல், தொழில்நுட்ப, ஊடகத்துறை அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறியுள்ளார். “அரசியலில் வெளியிடப்படும் கருத்துகள் உண்மையாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டும். நாட்டின்…

கட்சியின் போராட்டங்களுக்கு அரணாக இருங்கள், நஜிப் அம்னோ ‘வீரர்’களைக் கேட்டுக்கொள்கிறார்

கட்சியின் நோக்கங்களை அடைய அதன் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருக்குமாறு அம்னோ தலைவர் நஜிப் ரசாக் , அம்னோ டிவிஷன் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டார். 14-வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள,  கட்சியின் தேர்தல் இயந்திரங்களை விரிவாக்கவும், யுக்திகளை அடையாளங்காணவும் இக்கூட்டத்தின் போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி…

ஷெட்டி : ஊடகங்களுக்கு இனி பேட்டியளிப்பது இல்லை

ஊடக நேர்காணல்களைத் தவிர்க்கப்போவதாக, தேசியப் பொருளகத்தின் முன்னாள் கவர்னர் ஷெட்டி அக்தார் அசிஸ் முடிவெடுத்துள்ளார். “இனி நான் பேட்டி எதுவும் கொடுக்கப்போவதில்லை. ஊடக நேர்காணல்கள் எனக்கு நல்ல பாடம் கற்றுக்கொடுத்துள்ளன,” என்று கோலாலம்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் கூறினார். இருப்பினும், அதற்கான  காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. நேர்காணல்களைத்…

ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள் அனைவரும் எஸ்.பி.எம். மலாய் தேர்வில் தேர்ச்சி…

புதிய  ‘கிரேட் யுடி41’ ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள் அனைவரும் எஸ்.பி.எம். மலாய் மொழியில், குறைந்தபட்ச ‘தேர்ச்சி’யைப் பெற்றிருக்க வேண்டும் என சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளின் நியமனங்களை ஒரே தரநிலையாக்க இம்முடிவு எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர்  டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார். எஸ்.பி.எம். தேர்வில் மற்றப்…

வழக்குரைஞர் சிவனேசனுக்கு எதிராக டாக்டர் ஜெயக்குமார் அவதூறு வழக்கு

தமிழ் மலர் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ், சுங்கை சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் அ.சிவநேசன் மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார். கடந்த மே 21-ன்றில், அப்பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் பிரசுரமான செய்தியில்,…

காணாமற்போன ‘ராடார்’ குறித்து சுங்கத்துறை ஊழியர்களிடம் விசாரணை

தஞ்ஜோங் பெலெபாஸ் துறைமுகத்தில் (பி.தி.பி.) காணாமல் போன இராணுவ ராடார் குறித்து, மலேசிய இலஞ்ச ஒழிப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) 6 நபர்களிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்தது. 37 முதல் 48 வயதுக்குட்பட்ட 6 ஆண்களை, ஜொகூர் இலஞ்ச ஒழிப்பு ஆணய அலுவலகத்தில் விசாரித்ததாக, அதன் துணை…

மலாய் மொழியில் சிறப்பு விலக்கு – 2 அமைச்சர்களும் விளக்கமளிக்க…

மருத்துவத் துறை மாணவர்களுக்கு, எஸ்.பி.எம். தேர்வில் மலாய் மொழி  தேர்ச்சிக்குச்   சிறப்பு விலக்கு அளிக்க வேண்டுமென்ற சுகாதார அமைச்சின் முடிவிற்கு, அதன் அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் மற்றும் பிரதமர் துறை அமைச்சர் ஜோசப் எந்துலு பெலாவ்ன் இருவரும் அமைச்சரவைக்கு விளக்கமளிக்க வேண்டுமெனப் பணிக்கப்பட்டுள்ளனர். டாக்டர் சுப்ரமணியம் இந்தச் சர்ச்சைக்…