மாணவர்கள் இணைய இணைப்பைப் பெற, ரனாவ் காவல்துறை உதவி

ரனாவ் மாவட்டக் காவல்துறை தலைமையகம் (ஐபிடி), இயங்கலை கற்றல் கற்பித்தலுக்கு (பிடிபிஆர்), அப்பகுதி மாணவர்கள் இணைய இணைப்பைப் பெற வசதியாக, ரானாவ், கம்போங் பாவுஸ்சில் உள்ள ஒரு மலையில், 100 மீட்டர் உயரத்தில் ஓர் இடத்தைச் சுத்தம் செய்து, கூடாரம் ஒன்றை அமைத்துள்ளது. கிராமத்தில் நல்ல இணைய சமிக்ஞைகள்…

கோவிட் 19 : இன்று 5,728 புதிய நேர்வுகள், சிலாங்கூரில்…

நாட்டில் இன்று, 5,728 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று, சிலாங்கூர் (3,285), ஜொகூர் (792), கோலாலம்பூர் (480) ஆகிய மாநிலங்களில் புதியத் தொற்றுகள் அதிகம் பதிவாகியுள்ளன. சிலாங்கூர் சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, பெட்டாலிங் மாவட்டத்தில் 1,654 பாதிப்புகள் உள்ளன - இதில்…

ஜொகூர் எம்பி அலுவலகம் துப்புரவுக்காக மூடப்பட்டது

ஜொகூர் பாரு, இஸ்கந்தார் புத்ரியில் உள்ள ஜொகூர் மந்திரி பெசார் அலுவலகம், கோவிட் -19 சங்கிலித் தொடரை உடைக்கும் பொருட்டு, துப்புரவு பணிகளைச் செய்ய வழிவிட, நாளை முதல் பிப்ரவரி 2 வரை தற்காலிகமாக மூடப்படும். இன்று ஓர் அறிக்கையின் மூலம், ஜொகூர் மந்திரி பெசார் அலுவலகம் இதனைத்…

62 தன்னார்வலர்கள் இன்று கோவிட் -19 ஆய்வு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்

தேர்ந்தெடுக்கப்பட்ட 62 தன்னார்வலர்கள், இன்று முதல் திட்டமிடப்பட்ட அட்டவணைப்படி கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சின் முகநூல் பக்கத்தில் வெளியான ஓர் அறிக்கையின்படி, மலேசியாவில் முதல் கோவிட் -19 தடுப்பூசி ஆய்வு, சுங்கை பட்டாணி, சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனையில் இன்று தொடங்கியது. "62…

ரோன்95, ரோன்97 விலையில் மாற்றமில்லை, டீசல் 2 சென் குறைந்துள்ளது

நாளைத் தொடக்கம், டீசலின் விலை லிட்டருக்கு இரண்டு சென் குறைந்து, RM2.07 ஆக, ஒரு வார காலத்திற்கு, ஜனவரி 30 முதல் பிப்ரவரி 5 வரை அமலில் இருக்கும். இருப்பினும் ரோன்95 மற்றும் ரோன்97 பெட்ரோலின் சில்லறை விலைகளில் எந்தவொரு மாற்றமும் இல்லை. நிதி அமைச்சின் அறிக்கையின்படி, ரோன்95…

பிப்ரவரி 1 – மார்ச் 31 வரை, ஓட்டுநர் உரிமத்தைப்…

பிப்ரவரி 1 முதல் மார்ச் 31 வரை, மோட்டார் வாகன உரிமம் (எல்.கே.எம்.) மற்றும் ஓட்டுநர் தகுதி உரிமம் (சி.டி.எல்.) ஆகியவற்றைப் புதுப்பித்தல் தொடர்பில், அனைத்து தனியார் வாகன உரிமையாளர்களுக்கும் அரசாங்கம் விலக்கு அளித்துள்ளது. எவ்வாறாயினும், ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களுக்குச் செல்லுபடியாகும் காப்பீட்டுத் தொகை இருப்பதை உறுதி செய்ய…

கோவிட் 19 : இன்று 5,725 புதிய நேர்வுகள், 16…

ஜனவரி 29 | நாட்டில் இன்று, 5,725 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, இது ஒட்டுமொத்த பாதிப்புகளை 203,933 ஆக உயர்த்தியுள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் (3,829, அல்லது இன்றைய மொத்தத்தில் 66.9 விழுக்காடு) பதிவாகியுள்ளன, சிலாங்கூர் 3,126 புதிய வழக்குகளைப் பதிவு செய்துள்ளது…

அமைச்சர் : மோசமான சூழ்நிலை ஏற்பட்டாலும் கூட, முழு அடைப்பு…

மிக மோசமான சூழ்நிலை ஏற்பட்டாலும்கூட, பொருளாதாரச் செயல்பாட்டிற்கு மலேசியா முழு கட்டுப்பாட்டுத் தடைகளை விதிக்காது என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் உறுதியளித்தார். அதற்குப் பதிலாக, நாட்டில் கோவிட் -19 பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால், கடுமையான செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்ஓபி) அமல்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்து…

முகக்கவரி அணியவில்லை என்றக் குற்றச்சாட்டுக்குச் சரவணன் விளக்கம்

பத்துமலை கோயில் தைப்பூசத்தில் கலந்துகொண்ட மனித வளத்துறை அமைச்சர் எம் சரவணன், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி) செந்தர இயங்குதல் நடைமுறையை (எஸ்ஓபி) மீறியதாக, சமூக ஊடகங்களில் பலர் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், முகக்கவரி இல்லாத சரவணன் (முகக்கவரி கன்னத்தில் விழுந்துகிடந்தது), பத்துமலைக்…

எம்.எம்.ஏ. : கோவிட் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த, தனியார் ஜி.பி.க்களின்…

மக்களுக்குக் கோவிட் -19 தடுப்பூசிகளைப் பரவலாக விநியோகிக்க, தனியார் பொது பயிற்சியாளர்களின் (ஜி.பி.) பங்கேற்பை இணைக்குமாறு மலேசிய மருத்துவச் சங்கம் (எம்.எம்.ஏ.) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அதன் தலைவர், டாக்டர் எம் சுப்பிரமணியம் முனியாண்டி, இது தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த உதவும் என்றார். "அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட இடங்களில், கோவிட்…

அவசரநிலை : கைருதீனின் சம்மன் இன்று பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டது

மாட்சிமை தங்கியப் பேரரசருக்கு அவசரநிலை தொடர்பான பிரதமரின் ஆலோசனையின் நியாயத்தன்மையைச் சவால் செய்யும் சம்மனின் நகல், இன்று முஹைதீன் யாசினுக்கும் அரசாங்கத்திற்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வழக்குரைஞர் முஹம்மது ரபீக் ரஷீத் அலி, இந்த ஆவணம் தாக்கல் செய்யப்பட்ட விவரங்களை உள்ளடக்கிய சம்மன்களின் நகல் அது என்றார். இந்த வழக்கில் முஹைதினும்…

‘கே.கே.எம்.-இன் முடிவுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் அல்லது இராஜினாமா செய்யுங்கள்’

முன்னாள் சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அஹ்மத், சுகாதார அமைச்சின் முடிவுகளுக்கு டாக்டர் ஆதாம் பாபாவும் அவரது இரு துணைகளும் பொறுப்பேற்க வேண்டும் அல்லது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, திரைக்குப் பின்னால் பணியாற்றும் அமைச்சுகளின் நிபுணர்கள்…

இன்று 4,094 புதிய நேர்வுகள், 10 மரணங்கள்

கோவிட் - 19 | நாட்டில் இன்று, 4,094 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று 4,275 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, இன்றைய எண்ணிக்கை மலேசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இரண்டாவது இடத்தில் உள்ளது. இதற்கிடையில், இன்று 10 இறப்புகள்…

கே.பி.எம். : பி.டி.பி.ஆர்.-ஐ மாணவர்கள் தவிர்க்காமல் இருக்க, ஆசிரியர்கள் ஆக்கப்பூர்வமாக…

இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் (பி.டி.பி.ஆர்.) செயல்முறையில் இருந்து எந்த மாணவர்களும் பின்வாங்காமல் இருப்பதை உறுதிப்படுத்த, ஆசிரியர்கள் அதிக ஆக்கப்பூர்வமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். துணைக் கல்வியமைச்சர் II டாக்டர் மா ஹாங் சூன், இதுபோன்ற முயற்சிகள் அவசியம் என்று கூறினார், ஏனெனில் மாணவர்கள், குறிப்பாகக் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் இயங்கலையில்…

நாளை தொடங்கி இரவு 10 மணி வரை கடை திறந்திருக்கும்

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது (பி.கே.பி.) செயல்பட அனுமதிக்கப்பட்ட அனைத்து வணிகத் துறைகளும், நாளை முதல் இரவு 10 மணி வரை தங்கள் இயக்க நேரத்தை நீட்டிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். முன்னதாக உணவகம் மற்றும் உணவக நடவடிக்கைகளின் நேரம்…

கோவிட் -19 : கெடா எம்.பி. அலுவலகம் தற்காலிகமாக மூடப்படும்

அலோர் ஸ்டார், விஸ்மா டாருல் அமானில் அமைந்துள்ள மாநில அரசு இலாகா ஒன்றில், கோவிட் -19 தொற்றுநோய் பரவியதைத் தொடர்ந்து, கெடா மந்திரி பெசார் அலுவலகமும் தற்காலிகமாக மூடப்படும். கெடா அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட தகவல்களின்படி, மந்திரி பெசார் அலுவலகம் ஜனவரி 31 முதல் பிப்ரவரி…

ஒராங் அஸ்லி ‘வனக் கல்வி குடிசை’யில் இயங்கலை வகுப்புகள்

புகைப்படக் கட்டுரை | இயங்கலை வகுப்புகளுடன் இந்த மாதம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், எல்லா இடங்களிலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அவ்வகுப்புகளில் இணைவதை உறுதிசெய்யப் போராட வேண்டியிருக்கிறது. சிலருக்கு, இப்போராட்டம் என்பது, அடர்த்தியான எண்ணெய் பனை காடுகளால் சூழப்பட்ட ஒரு தனிமையான சாலையில், 15 கி.மீ. மோட்டார் சைக்கிள்…

போலி கோவிட் -19 திரையிடல் சீட்டுகள் – விசாரணைக்குக் கே.பி.ஜே.,…

கேபிஜே ஹெல்த்கேர் பெர்ஹாட்டும் (கேபிஜே), அக்குழுவின் நோயியல் ஆய்வகப் பிரிவு, லேப்லிங்க் (ம) சென். பெர்ஹாட்டும், போலி கோவிட் -19 திரையிடல் சீட்டுகளை விற்றது தொடர்பிலான கும்பலை விசாரிக்கும் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகக் கூறியுள்ளன. நாட்டின் எல்லை தாண்டியப் பயணங்களுக்குப், போலி லேப்லிங்க் கடிதத்தாள்களில், கள்ள அல்லது பொய்யான…

பி.டி.பி.ஆர். : குவா முசாங் ஒராங் அஸ்லி மாணவர்கள் இன்னும்…

கிளாந்தானின் உட்புறக் கிராமப்புறங்களில் வாழும் சமூகத்திற்குப் பொருத்தமான கற்றல் முறைகளை அடையாளம் காண்பதில், ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறை (ஜாகோவா) மலேசியக் கல்வி அமைக்சுடன் இன்னும் விவாதித்து வருகிறது.   இவ்விவகாரத்தை இன்னும் ஆராய்ந்து வருவதாகவும், இப்போதைக்கு – நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) இன்னும் நடைமுறையில் இருக்கும்போது…

இன்று 3,680 புதிய நேர்வுகள், அவசரப் பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை…

கோவிட் 19 | நாட்டில் இன்று, 3,680 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்தது. தீவிரச் சிகிச்சைப் பிரிவில், நோயாளிகளின் எண்ணிக்கை இன்று 314 ஆக உயர்ந்தது, 122 பேர் சுவாசக் கருவியின் உதவியுடன் சுவாசிக்கின்றனர். கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிக எண்ணிக்கையிலானப் புதிய பாதிப்புகள்…

அறிவுறுத்தலுக்குக் கீழ்ப்படியவில்லை : கோயில் நிர்வாகத்தைக் கையகப்படுத்த பி.எச்.இ.பி. முன்மொழிவு

நாளை, தைப்பூசக் கொண்டாட்டத்துடன் இணைந்த வெள்ளி தேரோட்டத்தை நடத்தக்கூடாது என்ற மாநில அரசின் உத்தரவை மீறியதற்காக, ஜார்ஜ்டவுனில் அமைந்துள்ள நாட்டுகோட்டைச் செட்டியார் கோயிலின் நிருவாகத்தைப் பினாங்கு இந்து அறவாரியம் (பி.எச்.இ.பி.) ஏற்க திட்டமிட்டுள்ளது. பினாங்கு இந்து அறவாரியத்தின் தலைவர் இராமசாமி, அனைத்து பினாங்கு குடியிருப்பாளர்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் அந்தத்…

‘அரசாங்கக் கடிதங்களில் புதிய சுலோகம், வெறும் பிரச்சாரம்’ – எம்.பி.

இன்று முதல், அதிகாரப்பூர்வ அரசாங்க கடிதங்களில் "மக்கள் மீது அக்கறை : கோவிட் 19-ஐ ஒழிக்க அவசரநிலை" என்ற வாசகத்தைச் சேர்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை, கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கண்டித்துள்ளார். கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான அவசரகால அறிவிப்புக்கு அந்தச் சுலோகம் இணங்குவதாகக் கூறப்பட்டாலும்,…

சுஹாகாம் : இலவசத் தடுப்பூசிகள் – கைதிகளுக்கும் வெளிநாட்டினருக்கும்கூட வழங்கப்பட…

பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கும் தடுப்புக்காவலில் உள்ளவர்களுக்கும், இலவசத் தடுப்பூசிகளை வழங்குமாறு மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு இல்லையெனில், குடியுரிமை அந்தஸ்தின் அடிப்படையில் மனிதர்களிடம் பாகுபாடு காட்டாத அந்தக் கிருமியிலிருந்து அந்தச் சமூகம் பாதுகாக்கப்படாது என அது கூறியுள்ளது. "பாதிக்கப்படக்கூடிய மக்கள், அகதிகள், குடியேறியவர்கள், குடியுரிமையற்ற மக்கள்,…