கோவிட்-19: 55 புதிய பாதிப்புகள், 71 பேர் குணமடைந்துள்ளனர்

மலேசியாவில் 55 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை 6,353 ஆக கொண்டுவந்துள்ளது. இன்று செய்தியாளர் கூட்டத்தில் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, 55 புதிய பாதிப்புகளில் ஏழு இறக்குமதி பாதிப்புகள் என்று தெரிவித்தார். மேலும் 48 புதிய பாதிப்புகள் உள்ளூர் நோய்த்தொற்றுகள் என்றும்,…

“சிறார் திருமணத்தை தடை செய்யுங்கள், பழைய அரசாங்கத்தின் நல்ல முயற்சிகளைத்…

தேசிய கூட்டணி முந்தைய அரசாங்கத்தின் நல்ல முயற்சிகளைத் தொடர வேண்டும் என்று அம்னோ உறுப்பினர் அசலினா ஓத்மான் தெரிவித்தார். குழந்தை திருமணங்களை தடை செய்வதில் பி.என். வெற்றி பெறுமா என்றும், அம்னோ இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்குமா என்றும் கேட்டபோது அவர் இதனை கூறினார். “... ஷரியா சட்டம் தொடர்பான…

பொது போக்குவரத்து பயனர்கள் கட்டாயமாக முகக்கவரி அணிய வேண்டும் –…

பொது போக்குவரத்து பயனர்கள் சேவையைப் பயன்படுத்தும் போது, முகக்கவரி அணிய வேண்டியது அவசியம் என்று போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் விளக்கினார். பொது போக்குவரத்தில் முகக்கவரிகளைப் பயன்படுத்துவது குறித்து தனது அமைச்சுக்கு நிபுணர் ஆலோசனை கிடைத்ததாக வீ கூறினார். "இது கட்டாயமானது (முகக்கவரி அணிவது) என்று சட்டபூர்வமாக…

தலைமைத்துவத்தில் தோல்விகண்டுள்ளார் பொருளாதார அமைச்சர் – அம்னோ

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (பி.கே.பி.பி.) சீராகவும் முழுமையாகவும் ஒருங்கிணைக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் அம்னோ துணைத் தலைவர் முகமட் காலீத் நோர்டின். நடமாட்டக் கட்டுப்பாடு மீதான தளர்வுகளை மத்திய அரசு அறிவிப்பு செய்த போதிலும், சில மாநிலங்கள் அதை பின்பற்றாததை தொடர்ந்து அவர் இதை கூறியுள்ளார். "அனைத்து…

மலேசியா ஒரு கூட்டாட்சி நாடு என்பதை நினைவூட்ட விரும்புகிறேன் –…

மலேசியா ஒரு கூட்டாட்சி நாடு என்பதை அரசாங்கத்திற்கு நினைவுபடுத்தினார் மாநில-கூட்டாட்சி உறவுகள் மற்றும் நாடாளுமன்றத்திற்கான சிறப்புக் குழுவின் தலைவரான ஹசான் அப்துல் கரீம். நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை தளர்த்துவதற்கும் பொருளாதாரத் துறையை மீண்டும் திறப்பதற்குமான ஒரு இறுதி முடிவை எடுப்பதற்கு முன், அனைத்து மாநிலங்களையும் சந்தித்து கலந்தாலோசிக்குமாறு மத்திய…

ஆறு மாநிலங்கள் நாளை பொருளாதாரத்தைத் திறக்காது என முடிவெடுத்துள்ளன

ஆறு மாநிலங்கள் நாளை பொருளாதாரத் துறையை மீண்டும் திறக்காமல் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளை தொடரும். அவை சரவாக், சபா, பினாங்கு, பகாங், கிளந்தான் மற்றும் கெடா ஆகிய மாநிலங்கள் ஆகும். பினாங்கு மாநிலம் மே 8 ஆம் தேதி வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும். ஆனால் மே 12…

MCO மீறல் – நூருல்ஹிதாயா மீது நீதிமன்றத்தில் வழக்கு

அம்னோ தலைவர் மற்றும் முன்னாள் துணைப் பிரதமருடைய மகளுமான நூருல்ஹிதாயா அகமட் ஜாஹிட், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறிய குற்றத்திற்காக செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்படுவார். சட்டத்துறை அலுவலகம் நூருல்ஹிதாயா மீது வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் ஹுசிர் முகமது தெரிவித்தார்.…

கோவிட்-19: 122 புதிய பாதிப்புகள், 87 பேர் குணமடைந்துள்ளனர், 2…

மலேசியாவில் இன்று மதிய நிலவரப்படி 122 புதிய கோவிட்-19 பாதிப்புகள் இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்தது. இது தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக 100க்கும் மேற்பட்ட புதிய பதிப்புகளைக் குறிக்கிறது. சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இந்த புதிய பாதிப்புகளில் மொத்தம் 70 உள்நாட்டு பாதிப்புகளும்,…

மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம் – இஸ்மாயில் சப்ரி

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு நாளை முதல் தளர்த்தப்பட்டாலும், கோவிட்-19 பாதிப்பைத் தடுக்க மாநில அரசு மற்றும் வணிகத் துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், வளாகத்தின் உரிமையாளர் ஏற்கனவே நடைமுறையில்…

முகிதீன் மீண்டும் அம்னோவில் இணைய வேண்டும் – தாஜுதீன்

பெரிக்காத்தான் கூட்டணி நிலையற்று இருந்தாலும் முகிதீன் யாசின் தொடர்ந்து பிரதமராக இருக்க முடியும் என்று அம்னோவின் தாஜுதீன் அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார். முகிதீன் அம்னோவில் சேர்ந்தால் அது சாத்தியமாகும் என்கிறார் தாஜுதீன். இதனால் வரும் பொதுத் தேர்தலில் இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்றை எதிர்த்து போட்டியிட தேவையில்லை என்று தாஜுதீன்…

பி.கே.பி.பி: கெடா, சிலாங்கூர் உடனடியாக நடமாட்டத் தளர்வுகளை அனுமதிக்காது

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை (பி.கே.பி.பி) அமல்படுத்துவதை கெடா மாநிலம் ஒத்திவைக்கும் என்று கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் அறிவித்திருக்கிறார். அதே நேரத்தில் மே 4-ல் அனைத்து தொழில்களையும் மீண்டும் தொடங்க சிலாங்கூர் அனுமதிக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில தேவைகளுக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்வதற்காக, மத்திய…

கெராக் மலேசியா சுமார் 500,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது

ஊர்களில் உள்ளவர்களிடமிருந்து நகரத்திற்கு திரும்புவதற்காக 500,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை காவல்துறை பெற்றுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். இன்னும் தங்கள் சொந்த ஊர்களில் இருக்கும் தொழிலாளர்கள் வீடு திரும்புவது, கெராக் மலேசியாவின் அங்கீகாரத்தைப் பொறுத்துள்ளது, என்றார். “7 மே 2020 முதல் 10 மே…

கோவிட்-19: மீண்டும் பாதிப்புகளில் அதிகரிப்பு

மலேசியாவில் 105 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 16 நாட்களில் பதிவான மிக அதிகமான தினசரி அதிகரிப்பு ஆகும். இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளில், 11 இறக்குமதி பாதிப்புகள் மற்றும் 94 உள்ளூர் தொற்று…

MCO-வின் தளர்வு, அரசாங்கத்தின் அவசர முடிவு இல்லை – இஸ்மாயில்

திங்களன்று அரசாங்கத்தின் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் பொருளாதாரத்தின் அனைத்து துறைகளும் செயல்பட அனுமதிக்கும் முடிவு, ஒரு சிறிய தளர்வு மட்டுமே என்றார் பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், கோவிட்-19 நோய்த்தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்க இன்னும் பல துறைகள் செயல்படுவதைத் தடைசெய்துள்ளதாக அவர் கூறினார்.…

பெந்தோங் மஞ்சள் மண்டலம், நான்கு மாநிலங்கள் கோவிட்-19 பாதிப்பு இல்லாத…

சுகாதார அமைச்சு வழங்கிய தரவுகளின்படி, கோவிட்-19 இல்லாத பச்சை மண்டல பகுதிகளின் எண்ணிக்கை 91 ஆக குறைந்துள்ளது. செயலில் உள்ள கோவிட்-19-இன் புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்ட பின்னர் பெந்தோங் இப்போது மஞ்சள் மண்டலமாக மாறியுள்ளது. மஞ்சள் மண்டலம், ஒன்று முதல் 40 செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளைக்…

வங்கிகள் வட்டியை தள்ளுபடி செய்ய நிதி அமைச்சர் பரிந்துரை

கடனை திருப்பிச் செலுத்துவதில் ஆறு மாத தாமதகாலப்பகுதியில் (மொராட்டோரியம் திட்டம்) விதிக்கப்படும் வட்டியை (வாடகை கொள்முதல் கடன்களுக்கு) அல்லது இலாபத்தை (நிலையான இஸ்லாமிய நிதிக் கடன்களுக்கு) தள்ளுபடி செய்ய வங்கிகள் பரிசீலிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் கேட்டுக்கொண்டார். "இதை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதையும், மற்றும்…

கிம் ஜாங் உன்: மீண்டும் வந்தார் வட கொரியா தலைவர்

வட கொரியா அரசு ஊடகம் தரும் தகவலின் படி, கடந்த இருபது நாட்களில் முதல் முறையாக பொது வெளியில் தோன்றி இருக்கிறார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். உர தொழிற்சாலை ஒன்றினை கிம் ஜோங் உன் தொடங்கி வைத்தார் என்கிறது வட கொரியா அரசு ஊடகமான கே.சி.என்.ஏ.…

AMK: பாக்காத்தானில் மீண்டும் ஒன்றிணைவதற்கான பெர்சத்துவின் யோசனை ஏற்புடையது அல்ல

பக்காத்தான் ஹராப்பான், ஜோகூரின் பெர்சத்துவை மீண்டும் ஏற்க தயாராக உள்ளது என்று அமானா துணைத் தலைவர் சலாஹுதீன் அயூப் கூறிய அறிக்கையை பி.கே.ஆர். இளைஞர் குழு (ஏ.எம்.கே.) கண்டித்துள்ளது. பெர்சத்துவை மீண்டும் பாக்காத்தான் ஹராப்பான் உறுப்பினராக இணைக்க வேண்டும் என்ற கருத்தை ஏ.எம்.கே. உறுதியாக நிராகரிக்கிறது என்று ஏ.எம்.கே.…

மஸ்ஜித் இந்தியாவில் அதிகாரிகள் அதிரடி சோதனை

300க்கும் மேற்பட்ட சட்ட அமலாக்க அதிகாரிகள் இன்று கோலாலம்பூரில் தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளுக்கு (பி.கே.பி.டி) கீழ் உட்பட்டுள்ள மஸ்ஜித் இந்தியாவில் பல பகுதிகளில் சோதனை நடத்தினர். முறையான ஆவணங்கள் இல்லாத அந்நிய நாட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்கு இச்சோதனை நடந்துள்ளது என்று ஒரு குடியிருப்பாளர் கூறினார். குடிவரவுத்துறை, காவல்துறை, மலேசிய…

ஒரு மேசைக்கு 4 பேர் மட்டுமே – உணவகங்களில் ‘புதிய…

மே 4 ஆம் தேதி தொடங்கி, நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.பி) கீழ், உணவகங்களில் வாடிக்கையாளர்கள் நான்கு பேருக்கு மேல் இல்லாத வகையில் சாப்பிட அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து வாடிக்கையாளர்களும் தங்கள் பெயர், மைக்கேட் எண், தொலைபேசி எண் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றும் மற்றும் உடல் வெப்பநிலையை…

69 புதிய பாதிப்புகள், 1 இறப்பு, 39 பேர் குணமடைந்துள்ளனர்

மேலும் 69 நோயாளிகள் கோவிட்-19க்கு நேர்மறையாக சோதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,071 ஆகும். சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளில், 12 இறக்குமதி பாதிப்புகள் மற்றும் 57 உள்ளூர் நோய்த்தொற்றுகள் என்றுள்ளார். சமீபத்திய இறப்பு, மொத்த இறப்புகளின்…

ERL மே 4 முதல் சேவையைத் தொடங்குகிறது

நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (பி.கே.பி.பி) விதிமுறைகளின் கீழ் பெரும்பாலான வணிகங்களை மீண்டும் திறக்க முடியும் என்று பிரதமர் முகிதீன் யாசின் அறிவித்ததைத் தொடர்ந்து, எக்ஸ்பிரஸ் ரயில் இணைப்பு (ஈ.ஆர்.எல்)/Express Rail Link Sdn Bhd (ERL), மே 4 முதல் வரையறுக்கப்பட்ட சேவை அட்டவணையை அறிமுகப்படுத்தும். KLIA…

நோம்புப் பெருநாள் விடுமுறை காலத்தில் ‘பாலேக் கம்போங்’ அனுமதிக்கப்படாது

நோம்புப் பெருநாள் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பிரதம மந்திரி முகிதீன் யாசின் இன்று சிறப்பு செய்தியில் அறிவித்தார். மார்ச் 18 ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை (பி.கே.பி) அமல்படுத்தியதைத் தொடர்ந்து, ஊர்களில் அல்லது வேறு இடங்களில் இருந்து வீடு…