பொது நடமாட்ட கட்டுப்பாடு ஆணை தொடருமா? மார்ச் 30 அன்று…

பொது நடமாட்ட கட்டுப்பாடு தொடருமா என்பதை தீர்மானிக்க மார்ச் 30க்கு முன்னர் தேசிய பாதுகாப்பு கவுன்சில் (Majlis Keselamatan Negara) கூட்டப்படும் என்று பிரதமர் முகிதீன் யாசின் அறிவித்துள்ளார். "இதைத் தொடரும் முன்பு, MOH மற்றும் பிற நிறுவனங்களின் உதவியுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் ஏதேனும் முன்னேற்றம் இருக்கிறதா,…

பொது போக்குவரத்து நடவடிக்கைகள் காலை 6 – 10 மணி…

நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பொது போக்குவரத்து காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். இன்று பிற்பகல் ஒரு…

கொரோனா கோர தாண்டவம்

உலக அளவில் கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 1,600 மரணங்கள் நிகழ்ந்திருப்பதை உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை வெளிக்காட்டுகிறது. உலகில் ஏற்படும் கொரோனா வைரஸ் தொற்று குறித்தும், அதனால் நிகழும் மரணங்கள் குறித்தும் ஒவ்வொரு நாளும் சூழ்நிலை அறிக்கைகளை வெளியிடுகிறது உலக சுகாதார நிறுவனம். அவற்றில் இதுவரை…

சுமார் 3 மில்லியன் பேர் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையைப் பின்பற்ற…

மலேசிய ஆயுதப்படை (ATM) நாட்டில் 10 சதவீதம் அல்லது சுமார் 3 மில்லியன் மக்கள் இன்னும் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையைப் பின்பற்ற மறுக்கின்றனர் என்று கூறியுள்ளது. "நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை 90 சதவிகித இணக்க விகிதத்தை எட்டியிருந்தாலும், இன்னும் மறுக்கும் 10 சதவிகிதத்தை நாங்கள் குறைத்து எடைபோட முடியாது”.…

கோவிட்-19: பாதிக்கப்பட்ட 70 வயது ஆடவர் மரணமுற்றார்

நாட்டில் மற்றொரு கோவிட்-19 மரணம் நிகழ்ந்துள்ளது. இம்முறை கோலாலம்பூரின் பண்டார் துன் ரசாக்கில் உள்ள துவான்கு முஹ்ரிஸ் மருத்துவமனையின் (Hospital Canselor Tuanku Muhriz HCTM) தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) 70 வயது நபர் இறந்துள்ளார். மார்ச் 18 அன்று இருமல் மற்றும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட…

தெலுக் இந்தான் மருத்துவமனை ஊழியர்கள் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்

கோவிட் -19 பாதித்ததில் பல தெலுக் இந்தான் மருத்துவமனை பணியாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா உறுதிப்படுத்தினார். "சில மருத்துவ ஊழியர்கள் கோவிட்-19 இன் பாதிப்பை உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு, வழக்கமான கண்காணிப்பு…

கோவிட்-19: இறப்பு எண்ணிக்கை 10, மொத்த பாதிப்புகள் 1,306

நாட்டில், கோவிட்-19 இன் இறப்பு எண்ணிக்கை இப்போது 10 ஆக உள்ளது. இன்று மாலை 4 மணியளவில் பினாங்கில் காலமான 74 வயதான ‘நோயாளி 259’, தப்லீக் கூட்டத்தில் கலந்து கொண்டவர் ஆவார். சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இன்று மதியம் 12 மணி…

தானியங்கும் வங்கி கருவிகள் (ATM) இரவு 10 மணி முதல்…

தானியங்கி பண இயந்திரங்களுக்கான (ATM) தினசரி செயல்பாடுகள் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலத்தில் மட்டுப்படுத்தப்படும். இதன் புதிய இயக்க நேரம் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ஆகும். "ஏடிஎம்கள், பண வைப்பு இயந்திரங்கள், காசோலைகள் மற்றும் நாணயங்கள் போன்ற சுய சேவை இயந்திரங்கள்,…

கோவிட்-19: இத்தாலியில் இன்று கிட்டத்தட்ட 800 பேர் இறந்துள்ளனர்

சனிக்கிழமையன்று மட்டும் இத்தாலி 793 கோவிட்-19 இறப்புகளை பதிவு செய்துள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவல்களின் படி, இந்த தொற்றுநோய் உலகளவில் 11,184 உயிர்களைக் கொன்றது என்று தெரிகிறது. உலகளவில், ஒட்டுமொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 266,073 ஆக அதிகரித்துள்ளது. இந்த கிருமி 182 நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும்…

கோவிட்-19: இஸ்லாம் வங்கி ஊழியர் பாதிக்கப்பட்டுள்ளார்

மெனாரா பேன்க் இஸ்லாம்-மை (Menara Bank Islam) தளமாகக் கொண்ட அதன் ஊழியர்களில் ஒருவர் கோவிட் -19க்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மலேசிய இஸ்லாம் வங்கி (Bank Islam Malaysia Bhd) தெரிவித்துள்ளது. அந்த ஊழியர் மற்றும் அவரது நெருங்கிய குடும்பத்தினர்கள், மார்ச்…

கோவிட்-19 : ஒன்பதாவது இறப்பு பதிவு

கோவிட்-19 நோய்த்தொற்றின் சமீபத்திய இறப்பு எண்ணிக்கையை சுகாதார இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா அறிவித்துள்ளார். "கோவிட்-19 தொடர்பான மேலும் ஒரு புதிய மரணத்தை தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் அறிவிப்பதில் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். சமீபத்திய இறப்பு மலேசியாவின் கோவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கையை இதுவரை ஒன்பது (9) ஆக…

கோவிட்-19: பெட்டாலிங் ஜெயா, லெம்பா பந்தாய், ஹூலு லங்காட் இடங்களில்…

பெட்டாலிங் ஜாயா, லெம்பா பந்தாய் மற்றும் ஹூலு லங்காட் ஆகியவை நாட்டின் முதல் மூன்று மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 பாதிப்புகளைக் கொண்டுள்ளன என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று காலை தனது ட்விட்டர் பதிவில் இந்த விஷயத்தை வெளிப்படுத்தினார்.…

ஈரானில் இருந்து மலேசியர்கள் நாடு திரும்பினர்

கொரோனா கிருமி | கோவிட் -19 பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஈரானின் தெஹ்ரானில் இருந்து மலேசிய நாட்டினரை ஏற்றிச் வரும் சிறப்பு விமானம் இன்று அதிகாலை செப்பாங்கில் உள்ள கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (கே.எல்.ஐ.ஏ) பாதுகாப்பாக வந்து சேர்ந்தது. மலேசிய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட மனிதாபிமான…

கோவிட் -19: இறப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது

கொரோனா வைரஸ் | கோவிட்-19 கிருமியால் கொல்லப்பட்ட மலேசியர்களின் எண்ணிக்கை இப்போது எட்டாக உயர்ந்துள்ளது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா அறிவித்தார். ஏழாவது இறப்பு கோலாலம்பூரில் 57 வயதான ஒரு நபர், வியட்நாமுக்கான பயண வரலாற்றைக் கொண்டவர். மேலும் இவர் தப்லீக் சமய…

இந்தியா, ஈரானில் இருந்து மலேசியா மக்களை நாட்டிற்கு அழைத்து வர…

கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து ஈரான் மற்றும் இந்தியாவில் சிக்கியிருக்கும் 1,565 பேரை மலேசிய அரசாங்கம் திரும்ப அழைத்து வரும். இருப்பினும், இத்தாலியில் சிக்கித் தவிக்கும் மலேசியர்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். எந்த விமானமும் தரையிறங்குவதைத் தடுக்கும் ஐரோப்பிய நாடுகளின் முடிவுக்குப் பின்னர், பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றது. ஈரானின்…

டாக்டர் சுல்கிப்லியின் சேவைகளை வழங்க PH தயாராக உள்ளது

கோவிட்-19 அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் பாதிப்பிற்கு எதிரான இயக்கத்தை வழிநடத்த டாக்டர் சுல்கிப்லி அகமத்தை 'திரும்ப அழைத்து வருவதற்கு' பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) இன்று விருப்பம் தெரிவித்துள்ளது. "முன்னாள் சுகாதார மந்திரி டாக்டர் சுல்கிப்லி அகமத், கோவிட்-19க்கு எதிரான ‘போரை’ வழிநடத்த தேசிய…

சிலாங்கூரில் உள்ள உணவகங்கள், பல்பொருள் கடைகள் நள்ளிரவு 12 மணி…

சிலாங்கூரில் உள்ள உணவகங்கள் (Restaurant), உணவு கடைகள், (food stalls) மற்றும் பல்பொருள் கடைகள் (convenience stores) நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலம் முழுவதும் தினமும் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கையை அறிவித்த சிலாங்கூர் மந்திரி புசார்…

கோவிட்-19: நாட்டில் ஆறு இறப்புகள் பதிவாகியுள்ளன

கொரோனா வைரஸ் | நாட்டில் கோவிட்-19ல் 6 பேர் இறந்துள்ளனர். முன்னதாக, சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இறந்தவர் தப்லீக் சமய கூட்டத்தில் கலந்து கொண்ட 50 வயதான ‘நோயாளி 238’ என்று அடையாளம் காணப்பட்டதாகவும், அவர் மார்ச் 12ம் தேதி மலாக்காவில் மருத்துவமனையில்…

குடும்பத் தலைவர் மட்டுமே வெளியே சென்று பொருட்களை வாங்க அனுமதி

பொது நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலத்தின் போது, அத்தியாவசிய பொருட்களை விற்கும் வியாபாரங்களுக்கான செயல்பாடு நேரங்களை தீர்மானிக்க அந்தந்த மாநில அரசுகளிடமே ஒப்படைக்கப்படும் என்று அமைச்சர் படில்லா யூசோப் கூறினார். இந்த முடிவை உள்ளூர் அரசாங்கத்தின் அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்று படில்லா தெரிவித்தார். “அது மாநில அரசின்…

கொரோனா வைரஸ்: 11,397 மரணங்கள் – சர்வதேச அளவில் நடப்பது…

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவலின்படி, சர்வதேச அளவில் கொரோனாவால் 2,74,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,397 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில்தான் அதிகபட்சமாக 4,032 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸின் தோற்றுவாயாக இருந்த சீனாவில் மரண எண்ணிக்கை 3,139ஆக உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் இரானும், ஸ்பெயினும் உள்ளன. இரானில்…

டாமான்சாரா மெதடிஸ்ட் தேவாலயத்தின் மூன்று உறுப்பினர்களுக்கு கோவிட்-19

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள டாமான்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயத்தில் குறைந்தது மூன்று உறுப்பினர்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் கோவிட்-19 கண்டறிதல் சோதனைக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டன என்றும் தெரிகிறது. தேவாலயத்தின் சுற்றறிக்கையின் படி, பாதரியார் டாக்டர் டேனியல் ஹோ,…

பொது நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை பின்பற்றுங்கள் – பேரரசர்

பிரதமர் முகிதீன் யாசின் செய்திக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, பேரரசர் யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா, மக்கள் பொது நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இது சிறிது நேரத்திற்கு முன்பு ஆர்.டி.எம். மற்றும் டிவி 3இல் ஒளிபரப்பப்பட்டன.…

மூன்றாவது கோவிட்-19 மரணத்தை MOH உறுதிப்படுத்தியது

மூன்றாவது கோவிட்-19 மரணத்தை MOH உறுதிப்படுத்தியது கோவிட்-19 பாதிப்பு தொடர்பாக மூன்றாவது இறப்பை சுகாதார அமைச்சகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர் ‘நோயாளி 152’, தப்லீக் சமய கூட்டத்தில் கலந்து கொண்ட 58 வயதான உள்ளூர் நபர் என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.…