இராகவன் கருப்பையா - தந்தையரின் தியாகங்களை போற்றி, பாராட்டி, மகிழும் வகையில் வார இறுதியில் கொண்டாடப்பட்ட 'தந்தையர் தின' நிகழ்ச்சிகள் எல்லா தந்தைகளுக்கும் அர்த்தம் பொதிந்தவையாக அமைந்தனவா என்பது மிகப் பெரிய ஒரு கேள்விக்குறிதான். இந்த விவகாரம் அகநிலைக்குரிய ஒன்று. ஏனெனில் 'ஒரு நாள் கூத்துக்காக' முதியோர் இல்லத்திலிருந்து அழைத்து…
நஜிப் வழக்கில் வரம்பு மீறிய வழக்கறிஞர்கள்
இராகவன் கருப்பையா - காலங்காலமாக மருத்துவத் தொழிலை மட்டுமே புனிதமான தொழில் என்று நாம் போற்றி புகழ்ந்து வருகிறோம். சில முக்கியமான தருணங்களில், நோயுற்றிருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கோ நண்பர்களுக்கோ தீவிர சிகிச்சையளிக்கும் மருத்துவர்களை கடவுளாகக் கூட சிலர் பார்ப்பதுண்டு. அதே போல சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களும் உன்னதமான தொழில்தான் செய்கின்றனர் என்பதை மறுக்கலாகாது. அத்துறையிலும்…
சிறகொடிந்த நிலையிலும் கூட ஆணவம் அடங்காத அம்னோ
இராகவன் கருப்பையா- முன்னாள் பிரதமர் நஜிப் கடந்த வாரம் சிறை சென்றதிலிருந்து கொஞ்சம் நிலை தடுமாறிச் சிறகொடிந்த பறவையைப் போல் இருக்கும் அம்னோ நீதித் துறை மீதும் தலைமை நீதிபதி மீதும் சட்டத் துறை தலைவர் மீதும் தொடர்ந்தாற் போல் தாக்குதல் நடத்தி நாட்டிற்கே இழுக்கைத் தேடிக் கொண்டிருக்கிறது. அம்னோ…
நீதித்துறையைக் களங்கப்படுத்துவதா?- கி.சீலதாஸ்
நீதி உலகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளது ஏனென்றால் அதை எவரும் தங்கள் வீட்டில் தங்க இடம் தருவதில்லை என்பது மால்டீஸ் பழமொழி. சுவீடிஷ் பழமொழி ஒன்று நீதியைப் புகழாதவர்கள் இல்லை. ஆனால், அது வரும்போது கதவை மூடுகின்றனர் என்பதாகும். ஜனநாயகத்தில் நீதித்துறை ஒரு தூணாக விளங்குகிறது. நமது அரசமைப்புச் சட்டமும்…
நஸ்ரியின் கேவலமான சீற்றத்தை ம.இ.கா. சவாலாக ஏற்கவேண்டும்
இராகவன் கருப்பையா - சமீப காலமாக நாட்டிலுள்ள இந்தியர்களின் ஆதரவு ம.இ.கா.வுக்குத் திரும்பியுள்ளது எனவும் அவர்களில் 70 விழுக்காட்டினரைக் கவர்ந்து இழுக்கத் தாங்கள் இலக்கு கொண்டுள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர் விக்னேஸ்வரன் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். உண்மையைச் சொல்லப் போனால் அரசியல் நோக்கத்திற்காக வெறுமனே ஒரு மாயையில்தான் அக்கட்சியினர் இவ்வாறு பேசித்திரிகிறார்கள் எனும் விவரம் நம் சமூகத்தைச் சேர்ந்த அனைவருக்குமே தெரியும். ஆனால்…
நஜிப்பிற்கு மன்னிப்பு வழங்குவது நீதித்துறையை கேலிக்கூத்தாக்கிவிடும்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு அரசு மன்னிப்பு வழங்குவது நீதித்துறையை கேலிக்கூத்தாக்குவதாக அமையும் என சார்லஸ் சாந்தியாகோ தெரிவித்துள்ளார். இன்னும் சில நாட்களில் நாடு 65 வயதை எட்டவுள்ள நிலையில், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவது முக்கியம் என்கிறார் கிள்ளான் எம்.பி. "மெர்டேக்கா தினத்தை நெருங்கும் போது…
நாடாளுமன்றத்தை யாரால் கலைக்க முடியும் – அகோங், பிரதமர் அல்லது…
கிம் குவேக் - பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீதுதான் தற்போது அனைத்து கவனமும் குவிந்துள்ளது. காரணம், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு அவரின் குரல் வழிதான் வரும் என்ற அதற்கான தனிச்சிறப்பு அவருக்கு உள்ளது என்பது பொதுவான அனுமானம். ஆனால் அவரிடம் இருக்கிறதா? அல்லது சிலர்…
பக்காத்தான் பிடித்தது சுறா, பாரிசான் பிடித்தது நெத்திலி
இராகவன் கருப்பையா -கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட புதுவிதமான ஒரு உற்சாக உணர்வு தற்போது மீண்டும் பிறந்துள்ளதைப் பரவலாகக் காண முடிகிறது. அன்றைய தினம் பாக்காத்தான் ஹராப்பான் அடைந்த மகத்தான வெற்றியானது ஊழலற்ற நல்லாட்சிக்காக ஏங்கித் தவித்த வெகு சன…
நாட்டின் ஊழல் அவலத்திற்கு முஸ்லிம் அல்லாதார் காரணமா!
இராகவன் கருப்பையா -நம் நாட்டில் ஊழல் நிலை தற்போது எந்த அளவுக்கு வரலாறு காணாத வகையில் மலிந்துக் கிடக்கிறது என்பது வெள்ளிடை மலை. அது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. மில்லியன் எனும் நிலை தாண்டி தற்போது பில்லியன் கணக்கில் மக்கள் பணத்தை மூட்டை மூட்டையாகக் கொள்ளையடிக்கத் தொடங்கிவிட்டார்கள்…
நீதித்துறையின் நிமிர்வுக்கு வெகுசன மக்களே காரணம்
இராகவன் கருப்பையா- நாட்டின் நீதித்துறை இன்று தலை நிமிர்ந்து நிற்பதற்குக் கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தல்தான் காரணம் என்பதில் சிறிதளவும் ஐயத்திற்கு இடமில்லை. வீறுகொண்டு எழுந்து ஊழல் படிந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்குப் பொது மக்கள் அன்று செய்த தீர்க்கமான முடிவானது இன்று நமது நீதித்துறை வரலாறு…
பிரேஸர் மலையிலும் செழித்தோங்கும் தமிழ்!
இராகவன் கருப்பையா- சுமார்1,400 மீட்டர் உயரத்தில்,10கும் குறைவான இந்தியக் குடும்பங்களே வசிக்கும ஒரு பகுதியில் அதிகச் சிரத்தையெடுத்து தமிழுக்கு உரமூட்டி வருகிறார்கள் அர்ப்பணிப்பு உணர்வுமிக்க 7 தமிழாசிரியர்கள். பஹாங் மாநிலத்தின் ரவுப் மாவட்டத்தில் உள்ள ஃபிரேஸர் மலையில்தான் இந்த அற்புதம் நிகழ்கிறது. கடந்த 1935ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது என்று நம்பப்படும்…
வைரஸா பாக்டிரியாவா எது மோசமானது? – கவிதா கருணாநிதி
அறிவியல் கட்டுரை- நம் அன்றாட வாழ்க்கையில் காய்ச்சல், சலி, இருமல், வயிற்று வலியெனப் பல காரணங்களால் நாம் மருத்துவரிடம் செல்கிறோம். அவரும் பரிசோதனைக்குப் பிறகு மாத்திரை மருந்துகளைக் கொடுத்து அல்லது மருத்தவமனையில் அனுமதித்து நம்மைக் குணப்படுத்துகிறார். நாம் நோய் நொடிக்கு ஆளாவதன் முக்கியக் காரணம் வைரஸ் மற்றும் பாக்டிரியா…
கட்சித் தலைவரின் ஏகவசனத்தால், மாசு படிகிறது மஇகா-வில்
இராகவன் கருப்பையா- ம.இ.கா. தலைவர் விக்னேஸ்வரன் எதிர்க்கட்சி தலைவர்களை சரமாரியாக மரியாதைக் குறைவாக வசைபாடியுள்ளது ஒரு மூத்த அரசியல் கட்சியானா மஇகா-வின் தோற்றதிற்கு ஏற்புடைய செயலல்ல, மாறாக அது ஒரு படி மண்ணை தன் தலையில் போட்டு கொண்டது போலாகிவிட்டது. வார இறுதியில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில் ம.இ.கா. மாநாட்டில்…
பாஸ் கட்சி ஆட்சியமைத்தால் நாட்டின் நிலை என்னவாகும்!
இராகவன் கருப்பையா- தீவிரச் சமயக் கோட்பாடுகளை மட்டுமே ஆயுதமாக வைத்துக் கொண்டு அரசியல் நடத்தும் பாஸ் கட்சி அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகும் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் முஸ்லிம் அல்லாதாரின் சுதந்திரம் இந்நாட்டில் எப்படி இருக்கும் என்று தெளிவாகச் சொல்ல முடியாது. சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியில்…
பேச்சு சுதந்திரம் சமயங்களைக் கொச்சப்படுத்த அல்ல!
கி. சீலதாஸ் - நமது பேரரசர் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தபா பிலா ஷா நடந்து முடிந்த வீரர்கள் தின விழாவில் தமது உரையில் சமயங்களைச் சிறுமைப்படுத்துவது, கேலி செய்வது, அவமதிப்பது போன்ற நடவடிக்கைகள் கூடாது என்ற ஆணையை வெளியிட்டார். தகவல் ஊடகங்களில் “ஆணை” என்று…
பூர்வ குடிகளுக்கு உதவ அரசியலமைப்பு வழி நில சட்டத்தை திருத்தவேண்டும்…
நாட்டிலுள்ள ஓராங் அஸ்லி பூர்வ குடிகள் சமூகம் பரம்பரை நில உரிமைக்காகப் போராடி பல சோதனைகளைச் சந்தித்துள்ளது - மரம் வெட்டும் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளுடன் சண்டை, போரட மனித சங்களி தடுப்புகள் அதோடு கைவிலங்குகளுடன் தூக்கி காவல் வண்டிகளுக்குள் எறியப்பட்டு, மிதிபட்டு காவலில் அடைக்கப்பட்ட அனுபவங்கள்…
இன அரசியலுக்கு மீண்டும் உரமூட்டும் மகாதீர்
இராகவன் கருப்பையா - இந்நாட்டில் காலங்காலமாக இருந்துவந்த ஐக்கியத்தை உடைத்து இனங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தி குளிர் காய்ந்து வருவது சுயநலமிக்க அரசியல்வாதிகள்தான். இப்படிப்பட்ட ஒரு போக்கை முன்னெடுத்தால்தான் அரசியலில் அதிக அளவில் சுயலாபம் அடைய முடியும் எனும் நிலைப்பாட்டில் கடந்த சுமார் 30 ஆண்டுகளாக சன்னம் சன்னமாக நிலைமையை…
பொய்மையும் உண்மையும் – கி. சீலதாஸ்
இணையத்தளத்தின் வளர்ச்சி, அதன் பயன் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. உண்மை நிலவரத்தை வெளிக்கொணர உதவும் அந்த விஞ்ஞானக் கருவி தவறான செய்திகள் பரவவும், பரப்புவதற்கு உதவுவதும் நமக்குச் சங்கடமான அனுபவத்தைத் தருகிறது. ஓர் அற்புதமான விஞ்ஞானக் கருவி தவறான செய்தி பரவலுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்றால் அது விஞ்ஞானக் கண்டுபிடிப்பை…
நம் நாட்டில் என்ன நடக்கிறது? – கி.சீலதாஸ்
இக்காலகட்டத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் ஊடகச் செய்திகள், அதிலும் குறிப்பாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்களுக்கு எதிரான வழக்குகளில் கொடுக்கப்படும் சாட்சியங்களைப் படிக்கும்போதும், ஊழல் தடுப்புத்துறை அடிக்கடி உயர் பதவிகளில் இருப்பவர்களை, இருந்தவர்களைக் கைது செய்து விசாரிப்பதில் காட்டும் உத்வேகம், நம்மை மட்டுமல்ல வெளியுலகத்தினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஊழல்…
ஶ்ரீலங்கா போல் மலேசியா திவாலாகுமா? – கி.சீலதாஸ்
ஶ்ரீலங்கா போன்று மலேசியா திவாலாவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவே என்கிறார் மலேசிய நிதி அமைச்சர் துங்கு ஜஃப்ருல் துங்கு அஜிஸ். அமைச்சரின் உத்திரவாதம் ஆறுதலாக இருந்தாலும் மலேசியாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பின்னடைவைச் சாதாரணமாகக் கருதுவது தவறான போக்காகும். ஶ்ரீலங்காவின் பொருளாதாரச் சீரழிவுக்கு என்ன காரணம் எனறு ஆய்ந்துப் பார்க்கும்போது…
நாட்டின் பிரதமராக வரத் துடிப்பவர்களும் – மலாய் அரசியலின் ஆதிக்கமும்
இராகவன் கருப்பையா - கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆக்ககரமான ஒரு தலைமைத்துவம் இல்லாமல் நாடு தள்ளாடிக் கொண்டிருக்கிறது - சொல்லொன்னாத் துயரில் மக்கள் வாடுகின்றனர். தகுதியும் திறமையும் ஆற்றலும் உள்ள எத்தனையோ பேர் அரசாங்கத்திற்கு வெளியே இருந்து கைக்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் சுயநல வேட்கையில் சுகம் காணத் துடிக்கும் பலர் இன்னமும் நாட்டை நாசமாக்கிக் கொண்டுதான் இருக்கின்றனர். 'ஜேக்பொட்' அடித்த மாதிரி முஹிடின், சப்ரி, போன்றோர்…
மனிதனின் உயிரும் – சட்டமும் – கி.சீலதாஸ்
அரசமைப்புச் சட்டத்தின் ஐந்தாம் பிரிவு ஒரு நபரின் உரிமைகளைப் பற்றி விளக்குகிறது. குறிப்பாக, 5(1) ஆம் பிரிவு ஒரு நபரின் உயிரையோ, தனிப்பட்ட உரிமையையோ சட்டத்திற்கிணங்கதான் இழக்கச் செய்ய முடியும். இந்தப் பிரிவுக்கு ஆதரவாகப் பக்கப் பலமாக இயங்குவதுதான் அரசமைப்புச் சட்டத்தால் அமைக்கப்பெற்ற நீதிமன்றங்கள். நாட்டில் சட்ட ஒழங்கை…
அரசியல் அவலத்தின் எல்லையில் மலேசியர்கள் – கி. சீலதாஸ்
மலேசியர்கள் எப்படிப்பட்ட அரசியல் தலைவர்களிடம் நாட்டு நிர்வாகத்தை ஒப்படைப்பது என்பதில் குழப்பமடைந்துள்ளனர். அளவற்ற ஊழல், நம்பிக்கை மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம் செய்வதில் சளைக்காதவர்கள். நீதித்துறையை மதிக்க மறுக்கும் சக்திகள், சட்ட அமலாக்கத்தைத் துச்சமென நினைப்போர், சட்டத்தைப் பிறர் பின்பற்ற வேண்டும் ஆனால், தாம் பின்பற்றாவிட்டால் குற்றமாகாது என இறுமாப்புடன்…
பக்காத்தானின் பங்காளிகள் ஒன்றிணைய இயலுமா?
இராகவன் கருப்பையா -கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் அம்னோ கவிழ்ந்ததற்கு மூல காரணம், ஊழல்வாதிகள் நிறைந்த கட்சி எனும் அவப்பெயரை அது சுமந்து நின்றதுதான் என்ற போதிலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போட்டியிட்ட அம்சத்தையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது. அரசியலிலிருந்த ஓய்வு பெற்றிருந்த முன்னாள் பிரதமர் மகாதீர், மீண்டும் களமிறங்கி தீவிரமாகப்…
























