தமிழை வளர்க்கும் மாணவர்களை உதாசீனப்படுத்துகிறது சமுதாயம்

இராகவன் கருப்பையா - இந்நாட்டில் தமிழ் மொழி தொடர்ந்து செழித்தோங்கி இருப்பதற்கு அயராது பாடுபடும் தரப்பினரில் உயர் கல்வி மாணவர்களின் பங்கு அளப்பரியது. ஆனால் அவர்களுக்கு ஊக்கமளித்து உற்சாகப்படுத்தக் கடப்பாடு கொண்டுள்ள நம் சமூகத்தின் பங்கு, குறிப்பாக அரசியல் தலைவர்களின் அலட்சியப் போக்கு பெருத்த ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளது. மலாயா…

தேசிய நீரோட்டத்தில் மீண்டும் இனத்துவேசம்!

இராகவன் கருப்பையா - ஒரு நாட்டின் வரவு செலவுத்திட்டம் இன ரீதியாக வரையப்படுவது மலேசியாவில் மட்டுமே நிகழும் ஒரு அதிசயம் என பொருளாதார வல்லுநர்கள் அண்மைய காலமாக கருத்துரைத்து வருவதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாகக் காண முடிகிறது. 'சத்து மலேசியா', 'கெலுவார்கா மலேசியா', போன்ற…

இந்தியர்களுக்கென்றே ஒரு ‘லோ யாட் 3’ சாத்தியமாகுமா?

இராகவன் கருப்பையா - சுமார் 7 ஆண்டுகளுக்கு முன், தலைநகர் புக்கிட் பிந்தாங் பகுதியில அமைந்துள்ள 'லோ யாட்' பேரங்காடியில் நிகழ்ந்த ஒரு கசப்பான சம்பவத்தை நம்மில் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வளாகத்தில் மின்னியல் பொருள்களை வியாபாரம் செய்யும் ஒரு கடையில் விவேகக் கைத் தொலைபேசி ஒன்றைத் திருடியதற்காக…

வெள்ளத்திலும் தேர்தலா? – முற்றிலும் அறிவிலிதனம்!

இராகவன் கருப்பையா - வெள்ளம் வந்தால் என்ன, மக்கள் எக்கேடு கெட்டால்தான் என்ன, பொதுத் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கும் சில சுயநல  அரசியல்வாதிகளின் அறிவிலித்தனத்தால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில் நாட்டை உலுக்கிய வரலாறு காணாத வெள்ளம் மக்கள் மனங்களிலிருந்து  இன்னமும் அகலவில்லை. 50க்கும்…

அரசு அறிவித்த உதவித்தொகை உருப்படியாகச் சென்று சேருமா?

இராகவன் கருப்பையா - இந்தியச் சமூகத்தின் மேம்பாட்டுக்குப் பல்வேறு முன்னெடுப்புகளை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது எனப் பிரதமர் சப்ரி யாக்கொப் கடந்த வாரம் செய்த அறிவிப்பு நம்மில் எத்தனை பேரை உற்சாகப்படுத்தியிருக்கும் என்பது ஒரு கேள்விக்குறி. வறுமையில் வாடுவோரின் இன்னல்களைத் துடைத்தொழிப்பதற்கும் இதர வளர்ச்சித் திட்டங்களுக்கும் மித்ராவின் வழி ஒதுக்கப்பட்டுள்ள 100…

ஊழலை விரட்டுவோம், நியாயப்படுதுவதை நிறுத்துவோம் – பேராக் சுல்தான்

"ஊழல்" மற்றும் "போலித்தனம்" ஆகிய சொற்களை மலாய் அரசியலுடன் இணைத்து தனது புத்தகத்திற்கு பெயரிடும் ஒரு ஆசிரியரின் நடவடிக்கை தைரியமானது என்று பேராக் சுல்தான் நஸ்ரின் முய்சுதீன் ஷா கூறுகிறார். பேராக் ஆட்சியாளர் மலாய் அரசியலில் ஊழல் மற்றும் போலித்தனம் என்று தவறுகளை அம்பலப்படுத்த முயலும் போது ஒருவரின்…

திருமண விருந்தும் – தர்மசங்கடமும் – இராகவன் கருப்பையா

நம் குடும்பத்தில் ஒரு திருமண வைபவம் நடைபெறும் போது, அந்நிகழ்ச்சிக்கு நிறைய பேர் வர வேண்டும், ஆரவாரத்துடன் மகிழ்ச்சி ததும்ப அந்நிகழ்வு அமைய வேண்டும் என்று நாம் எதிர் பார்ப்பது இயல்பான ஒன்றுதான். முன்பெல்லாம் உறவினர்கள், நண்பர்கள் ஆகிய எல்லாருடைய இல்லங்களையும் அதிகச் சிரத்தை எடுத்துத் தேடிச் சென்று…

மலேசியாவின் எதிர்காலம் –  கி.சீலதாஸ்

அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, 31.8.1957ஆம் நாள், அப்போது மலாயாவில் வாழ்ந்த எல்லா இன மக்களும் இன, சமய, மொழி, கலாச்சார வேறுபாடுகளைக் களைந்து ஏற்றத்தாழ்வு மனப்பான்மைக்கு இடம் தராது தோளோடு தோள் நின்று, கூட்டொருமையோடு சூழ்ச்சியான முறைகளால் பிற நாடுகளை ஆக்கிரமித்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, மக்களை அடக்கி,…

சாமானியரைக் கவனித்த சாமிவேலு, சமுதாயத்தை எவ்வாறு கவனித்தார்!

இராகவன் கருப்பையா - ம.இ.கா.வின் முன்னாள் தலைவர் மறைந்த சாமிவேலு அக்கட்சியின் கடந்த காலத் தலைவர்களிலேயே தனித்துவம் வாய்ந்த ஒருவர் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. தனது 31 ஆண்டுகாலத் தலைமைத்துவத்தில் நிறைய பேருக்குத் தனிப்பட்ட முறையில் உதவிகளை வாரி வழங்கியுள்ளார் என்பதும் எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவருடைய…

ஹிண்ட்ராப் பேரணி உருவாக்கமும், சாமிவேலுவின் சரிவும்

இராகவன் கருப்பையா- கடந்த 2007ஆம் வருஷம் இந்நாட்டு இந்தியர்களின் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு ஆண்டாகும். ஏனெனில் அவ்வாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த இரு சம்பவங்கள் தெரிந்தோ தெரியாமலோ நம் சமூகத்தைச் சேர்ந்த பலருடைய வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றியமைத்தது. தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 3 நாள்களே இருந்த வேளையில், சிலாங்கூரின் கிளேங் மாவட்டத்தில் உள்ள பாடாங் ஜாவா பகுதியில் அமைந்திருந்த மாரியம்மன் ஆலயம்…

நஜீப்பை மாமன்னர் மன்னிப்பாரா? – கி.சீலதாஸ்

நஜீப் ரசாக் பிரதமராக இருந்த காலத்தில் நிதி அமைச்சர் பதவியையும் தன் வசமே வைத்துக் கொண்டார். அச்சமயம் அவர் நம்பிக்கை மோசடி செய்தார் என்று உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு பன்னிரண்டு ஆண்டு காலம் சிறைத்தண்டனையும், இருநூற்றுப்பத்து மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. அவரின்…

இரும்புக் கரங்களில் ம.இ.கா: சாமிவேலு ஒரு சகாப்தம்தான்

இராகவன் கருப்பையா - தனது 86ஆவது வயதில் இயற்கை எய்திய முன்னால் ம.இ.கா. தலைவர் சாமிவேலு நம் சமுதாய மேம்பாட்டிற்குச் செய்த, செய்யாத சேவைகளை விட 31 ஆண்டுகளாக இரும்புக் கரங்களைக் கொண்டு எவ்வாறு கட்சியை வழிநடத்தினார் மற்றும் நாடாளுமன்றத்தில் எப்படிப் பேசுவார்  என்பதை வைத்தே பலரும் அவரை…

மூடாவை புறக்கணித்தால் எதிர்மறை விளைவுகள் 

இராகவன் கருப்பையா- அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றிபெற வேண்டுமாயின் முடிந்த அளவுக்குத் தனது பலத்தை அது வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். பி.கே.ஆர்., ஜ.செ.க. அமானா மற்றும் கிழக்கு மலேசியாவின் அப்கோ, ஆகிய 4 கட்சிகள் உறுப்பியம் பெற்றுள்ள அக்கூட்டணியில் இணைவதற்கு 'மூடா' அண்மையில் செய்த விண்ணப்பம் இன்னமும்…

அழிந்து கொண்டிருக்கும் கோலசிலாங்கூரின் அலையாத்தி காடுகள் – ம. நவீன்

மலேசியாவின் கடலோரப்பகுதிகளில் காணப்படும் அலையாத்தி காடுகள் (மாங்குரோவ் காடுகள்) நமது நாட்டுக்கு இயற்கை கொடுத்த ஒரு பாதுகாப்பு அம்சமாகும். இவை சூறாவளி போன்ற இயற்கை பேரிடர்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. அதோடு நில அரிப்புகளை நிவர்த்தி செய்கின்றன, காற்றில் உள்ள கரியமிலவாயுவை வடிகட்டுகின்றன, எண்ணற்ற கடலோர உயிரியலின் பன்முகத்தன்மையைப் பாதுகாத்து…

ஆட்சியைக் கைப்பற்ற மீண்டும் பக்காத்தானுக்கு ஒரு வாய்ப்பு

இராகவன் கருப்பையா - கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் 1MDB ஊழல் தொடர்பான சர்ச்சை முக்கியப் பங்காற்றியது என்பது நாடறியும். இன்னும் சொல்லப் போனால் பாரிசான் வீழ்ந்ததற்கு அந்த ஒரு விவகாரம்தான் பிரதானக் காரணமாக இருந்தது. முன்னாள் பிரதமர் நஜிப்தான் அதற்குக் காரணகர்த்தா…

இஸ்லாமிய நீதியில் எந்த சலுகைகளும் விதிவிலக்குகளும் இல்லை

இஸ்லாமிய நீதியானது, தவறு செய்யும் நபர், யாராக இருந்தாலும், அவர்களுக்காகவோ, நெருங்கிய நண்பர்களுக்கோ , குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது பெற்றோராகவோ இருந்தாலும் எந்தச் சலுகையையும் விதிவிலக்கையும் அளிக்காது என்பதை நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு யாங் டி-பெர்துவான் அகோங், சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா  நினைவூட்டியுள்ளார். இஸ்லாமிய நீதியின் கொள்கை…

மகாபாரதம் முதல் மலேசியா வரை – நீதி வெற்றி பெற…

கி.சீலதாஸ் - நாம் எப்பொழுதும் வெற்றியை மட்டும்தான் விரும்புகிறோம், எதிர்பார்க்கிறோம். அது மனிதனின் இயல்பான குணம், மனிதனின் தனி பண்பாகும். தோல்வியை வெறுக்கிறோம். தோல்விதான் வெற்றிக்கு வித்திடுகிறது என வெற்றி பெற்றவர்கள் சொல்வார்கள். ஏனெனில், அவர்கள் தோல்வியைக் கடந்தவர்கள். ஒரு செயலில் இறங்கும்போது முடிவைத்தான் எண்ணுகிறோம். அதை அடையும்…

நஜிப் வழக்கில் வரம்பு மீறிய வழக்கறிஞர்கள்

இராகவன் கருப்பையா - காலங்காலமாக மருத்துவத் தொழிலை மட்டுமே புனிதமான தொழில் என்று நாம் போற்றி புகழ்ந்து வருகிறோம். சில முக்கியமான தருணங்களில், நோயுற்றிருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கோ நண்பர்களுக்கோ தீவிர  சிகிச்சையளிக்கும் மருத்துவர்களை கடவுளாகக் கூட சிலர் பார்ப்பதுண்டு. அதே போல சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களும் உன்னதமான தொழில்தான் செய்கின்றனர் என்பதை மறுக்கலாகாது. அத்துறையிலும்…

சிறகொடிந்த நிலையிலும் கூட ஆணவம் அடங்காத அம்னோ

இராகவன் கருப்பையா- முன்னாள் பிரதமர் நஜிப் கடந்த வாரம் சிறை சென்றதிலிருந்து கொஞ்சம் நிலை தடுமாறிச் சிறகொடிந்த பறவையைப் போல் இருக்கும் அம்னோ நீதித் துறை மீதும் தலைமை நீதிபதி மீதும் சட்டத் துறை தலைவர் மீதும் தொடர்ந்தாற் போல் தாக்குதல் நடத்தி நாட்டிற்கே இழுக்கைத் தேடிக் கொண்டிருக்கிறது. அம்னோ…

நீதித்துறையைக் களங்கப்படுத்துவதா?- கி.சீலதாஸ்

நீதி உலகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளது ஏனென்றால் அதை எவரும் தங்கள் வீட்டில் தங்க இடம் தருவதில்லை என்பது மால்டீஸ் பழமொழி. சுவீடிஷ் பழமொழி ஒன்று நீதியைப் புகழாதவர்கள் இல்லை. ஆனால், அது வரும்போது கதவை மூடுகின்றனர் என்பதாகும். ஜனநாயகத்தில் நீதித்துறை ஒரு தூணாக விளங்குகிறது. நமது அரசமைப்புச் சட்டமும்…

நஸ்ரியின் கேவலமான சீற்றத்தை ம.இ.கா. சவாலாக ஏற்கவேண்டும்

இராகவன் கருப்பையா - சமீப காலமாக நாட்டிலுள்ள இந்தியர்களின் ஆதரவு ம.இ.கா.வுக்குத் திரும்பியுள்ளது எனவும் அவர்களில் 70 விழுக்காட்டினரைக் கவர்ந்து இழுக்கத் தாங்கள் இலக்கு கொண்டுள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர் விக்னேஸ்வரன் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். உண்மையைச் சொல்லப் போனால் அரசியல் நோக்கத்திற்காக வெறுமனே ஒரு மாயையில்தான் அக்கட்சியினர் இவ்வாறு பேசித்திரிகிறார்கள் எனும் விவரம் நம் சமூகத்தைச் சேர்ந்த அனைவருக்குமே தெரியும். ஆனால்…

நஜிப்பிற்கு மன்னிப்பு வழங்குவது நீதித்துறையை கேலிக்கூத்தாக்கிவிடும்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு அரசு மன்னிப்பு வழங்குவது நீதித்துறையை கேலிக்கூத்தாக்குவதாக அமையும் என சார்லஸ் சாந்தியாகோ தெரிவித்துள்ளார். இன்னும் சில நாட்களில் நாடு 65 வயதை எட்டவுள்ள நிலையில், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவது முக்கியம் என்கிறார் கிள்ளான் எம்.பி. "மெர்டேக்கா தினத்தை நெருங்கும் போது…

நாடாளுமன்றத்தை யாரால் கலைக்க முடியும் – அகோங், பிரதமர் அல்லது…

  கிம் குவேக் - பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீதுதான் தற்போது அனைத்து கவனமும் குவிந்துள்ளது. காரணம், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு அவரின் குரல் வழிதான் வரும் என்ற  அதற்கான தனிச்சிறப்பு அவருக்கு உள்ளது என்பது பொதுவான அனுமானம். ஆனால் அவரிடம் இருக்கிறதா? அல்லது சிலர்…