போலீஸ் எல்ஆர்டி நிலையங்களை மூடச் சொல்லவில்லை

பெர்சே 3.0 பேரணியின்மீது கண்ணீர் புகைக் குண்டுகள் பாய்ச்சப்பட்ட பிறகு டாட்டாரான் மெர்டேகாவைச் சுற்றியுள்ள இரயில் நிலையங்களை மூட வேண்டும் என்று போலீஸ் உத்தரவிடவில்லை என்று ப்ராசரானா அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார். இரயில் நிலையங்களை மூடப்பட்டதற்குத் தாமே பொறுப்பு என்று ப்ராசரானா இரயில் பிரிவு இயக்குனர் கைரானி…

விபத்து அதிகம் நடக்கும் இடங்களில் ஏஇஎஸ் இல்லையே, ஏன்?

விபத்துகளைத் தடுக்கும் நோக்கில்தான் போக்குவரத்துக் குற்றங்களைக் கண்காணிக்கும் தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்) கொண்டுவரப்பட்டது. ஆனால், அது விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களில் இல்லாதது ஏன் என்று பாஸ் தொடர்புள்ள என்ஜிஓ-வான Kempen Anti Saman Ekor (கேஸ்) கேள்வி எழுப்பியுள்ளது. “அது அமைந்துள்ள இடங்களைப் பார்த்தால் எங்களுக்கு…

ஹூடூட் அமலாக்கத்தை ஆராய்க: வழக்குரைஞர் மன்றத்திடம் மசீச கோரிக்கை

ஹூடூட் சட்டத்தின் அமலாக்கம் பற்றியும் அதனால் முஸ்லிம்- அல்லாதாருக்கு ஏற்படும் பாதிப்புகள் உள்பட Read More

ஹாங்காங்கிலிருந்து ரிம40 மில்லியன் கடத்தப்பட்டது மூசாவுக்காக அல்ல சாபா அம்னோவுக்காக

ஹாங்காங்கில் ரிம40 மில்லியனுடன்  சாபா வணிகர் ஒருவர் பிடிபட்ட விவகாரத்தை ஆராய்ந்த மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) சட்டத்துறைத் தலைவரிடம் தாக்கல் செய்துள்ள ஆய்வு ஆவணங்கள் அப்பணம் சாபா முதலமைச்சர் மூசா அமானுடையது அல்ல என்றும் அது மாநில அம்னோவுக்கான பணம் என்றும் கூறுகின்றன. “அப்பணம் சாபா அம்னோ…

பிரதமர் நஜிப் சோரோஸை நியு யோர்க்கில் சந்தித்தார்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அம்னோ விசுவாசிகளால் முதல் நம்பர் எதிரியாகக் கருதப்படும் கோடீஸ்வரரான ஜார்ஜ் சோரோஸை ஈராண்டுகளுக்குமுன் நியு யோர்க்கில் தனிப்பட்ட முறையில் சந்தித்திருக்கிறார். இந்தக் கமுக்கமான சந்திப்பு மேன்ஹட்டனில் உள்ள ஆடம்பர தங்குவிடுதியான பிளாசா ஹோட்டலில் நடந்தது. கடந்த வாரம் பெர்காசா தகவல் பிரிவுத் தலைவர்…

ஷாரிசாட்: ஃபீட்லோட் மையம் மீதான கணக்கறிக்கையின் குறிப்பு கண்டு நான்…

முன்னாள் அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலில், தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை நேசனல் ஃபீட்லோட் மையத்தின் பிரச்னைகளைக் கவனத்துக்குக் கொண்டபோது அது எவ்விதத்திலும் தமக்கு சங்கடத்தை உண்டு பண்ணவில்லை என்றார். பிகேஆர் தலைவர்கள் இருவருக்கு எதிராக அவர் தொடுத்துள்ள ரிம100 மில்லியன் அவதூறு வழக்கில், இன்று வழக்குரைஞர் ரஞ்சிட் சிங்கால்…

பாஸ் தலைவர்கள்: நஷாவின் கூற்றுக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை

பாஸின் உதவித் தலைவர் சலாஹுடின் ஆயுப்பும், மத்திய செயற்குழு உறுப்பினர் காலிட் சமட்டும், கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் நஷாருடின் மாட் ஈசாவின் கூற்றுக்கும் பாஸுக்கும்  எவ்வித சம்பந்தமுமில்லை என்றார்கள். இன்று செய்தியாளர் கூட்டமொன்றில், டிஏபி கிறிஸ்துவ அரசாங்கத்தை நிறுவ முயல்வதாக நஷாருடின் பேசியிருப்பது பற்றிக் கருத்துரைத்த காலிட்,…

அம்பிகா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்

பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். “இன்றிரவு 10 நிமிடங்களுக்கு குடிநுழைவுத் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டேன். ஆட்டோ-கேட் வழியாக போக முடியவில்லை.இது பெர்சே இயக்கக்குழு உறுப்பினர்களுக்குத் தொல்லைகொடுக்க முனைகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. “என்னைத் தடுத்து நிறுத்தியதற்கு குடிநுழைவு அதிகாரிகளால் சரியான…

நஷாருடினின் குற்றச்சாட்டு தீய நோக்கம் கொண்டது

2011 சரவாக் மாநிலத் தேர்தலுக்குப் பின் நடைபெற்ற நன்றிநவிலும் நிகழ்வில் கிறிஸ்துவ அரசு அமைய பிரார்த்தனை செய்யப்பட்டதாக பாஸ் தலைவர் ஒருவர் கூறியிருப்பதை சரவாக் டிஏபி மறுத்துள்ளது. “அக்கூற்றில் உண்மையில்லை, அது தீய நோக்கம் கொண்டது, பொறுப்பற்றது”, என இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சரவாக் டிஏபி…

மாட் சாபு கெடாவில் போட்டியிடுவதையே விரும்புகிறார்

 பாஸ் துணைத்தலைவர் முகம்மட் சாபு, பினாங்கு, கோலாலம்பூர் ஆகிய இடங்களில் களம் இறக்கப்படும் வாய்ப்பு இருந்தாலும் கெடாவில் நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடுவதையே விரும்புகிறார். ஆனாலும், எங்கு போட்டியிடுவது என்ற முடிவைக் கட்சி செயலவையிடமே விட்டுவிட மாட் சாபு என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் முகம்மட் தீர்மானித்திருக்கிறார்.  பல…

விதைநெல் விநியோகிப்பாளர்: தகுதி இல்லை என்றாலும்…..

நாட்டில் விதைநெல் விநியோகிக்கும் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றுக்கு அண்மையில் அரசாங்கக் குத்தகை கிடைத்தது. டெண்டரில் குறிப்பிடப்பட்டிருந்த தகுதிகள் அதனிடம் இல்லை என்றாலும் அதற்குக் குத்தகை கொடுக்கப்பட்டதைப் பல தரப்புகள் குறைகூறின. ஆனால்,  அந்நிறுவனம் அந்தக் குறைகூறல்களை ஒதுக்கித் தள்ளியது. அந்தக் குத்தகை பெறுவதற்கு விண்ணப்பித்திருந்த மற்ற நிறுவங்களிடமும்…

அந்நியச் செலாவணி மீதான கேள்விகளுக்கு மகாதீர் மௌனம்: ‘முதுமை மறதி’…

1990ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அந்நிய செலாவணி வாணிகத்தின் மூலம் ஏற்பட்ட 5.7 பில்லியன் ரிங்கிட்  இழப்புக்கு பொறுப்பு எனக் கூறப்பட்ட முன்னாள் பாங்க் நெகாரா துணை ஆளுநர் நோர் முகமட் யாக்கோப்புக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டது மீதான கேள்வியை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தவிர்த்துள்ளார். அதற்குப்…

வீட்டுக்கடன் குறித்து கியூபெக்ஸ் வங்கிகளுடன் பேச்சு நடத்தும்

அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான கியூபெக்ஸ், அரசு ஊழியர்களுக்கு வீட்டுக் கடன்கள் வழங்க அரசாங்கத்தால் அமர்த்தப்படும் நிதி நிறுவனங்களுடன் விரிவான பேச்சுகள் நடத்தத் திட்டமிடுகிறது. பேச்சுகள் அரசு ஊழிர்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் அமைந்திருக்கும் என கியூபெக்ஸ் தலைமைச் செயலாளர் லொக் இம் பெங்  ஓர் அறிக்கையில் கூறினார்.…

2013 ஜுன் வரை மின் கட்டணம் மாறாது

அடுத்த ஆண்டு ஜுன் மாதம் வரையில் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது என எரிசக்தி, பசுமைத் தொழில் நுட்பம், நீர்வள அமைச்சர் பீட்டர் சின் பா ஹுய் கூறுகிறார். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணத்தை மறு ஆய்வு செய்ய அரசாங்கம் முதலில் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால்…

பெங்கெராங் மீது அதிகாரத்துவ பக்காத்தான் நிலை இன்னும் முடிவாகவில்லை

ஜோகூரில் பக்காத்தான் ஆட்சியைப் பிடிக்குமானால் பெங்கெராங்கில் ரபிட் என்ற சுத்திகரிப்பு பெட்ரோல் ரசாயன ஒருங்கிணைக்கப்பட்ட மேம்பாட்டுத் திட்டத்தை முடக்குவதா இல்லையா என்பது மீது பக்காத்தான் ராக்யாட் இன்னும் பொதுவான நிலையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. இவ்வாறு ஜோகூர் பிகேஆர் தலைவர் சுவா ஜுய் மெங் கூறுகிறார். அந்த விஷயம் கூட்டணியின்…

டாக்டர் மகாதீர் சாட்சியத்தைத் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களைக் கைவிடுவதற்கு முயற்சி

டாக்டர் மகாதீர் முகமட் நேற்றும் இன்றும் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்களை கைவிடுவது பற்றிப் பரிசீலிக்குமாறு டாக்டர் லிங் லியாங் சி-கின் பிரதிவாதித் தரப்பு சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்கு பிரதிநிதித்துவம் ஒன்றை அனுப்புவதற்கு லிங் தரப்பு விண்ணப்பித்துக் கொண்டுள்ளது. அந்த விவரத்தை லிங்-கின் வழக்குரைஞர் வோங் கியான் கியோங்…

வெளிநாட்டிலிருந்து வாக்களித்தல்: மற்ற நாடுகளில் விதிமுறைகள் இன்னும் கடுமையானவை

வெளிநாட்டில் வசிக்கும் மலேசியர்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெற  ஐந்தாண்டுகளுக்கு ஒரு Read More

சுவாராம் விசாரணை: இறந்துவிட்ட நிறுவனருக்கும் ‘நோட்டீஸ்’ அனுப்பியது ROS

சங்கப் பதிவகம், மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாராமின் உயர் அதிகாரிகளுக்கு வாக்குமூலம் பதிவுசெய்ய வெள்ளிக்கிழமை வர வேண்டும் என்று அறிவிக்கை அனுப்பி வைத்துள்ளது. அது அறிவிக்கை அனுப்பிய ஒருவர் ஈராண்டுக்கு முன்பே காலமாகி விட்டார். அக்டோபர் 8 தேதியிடப்பட்ட அந்த அறிவிக்கை சுவாரா இனிஷியேடிப் சென். பெர்ஹாட்…

உத்துசான் நிருபர்: நான் தேவாலயத் தலைவர்களுடைய வார்த்தைகளை திரிக்கவில்லை

இரண்டு கிறிஸ்துவத் தலைவர்களை மேற்கோள் காட்டி தாம் எழுதிய செய்தி 'முற்றிலும் பொய்' என அவர்கள் இருவரும் கூறிக் கொள்வதை உத்துசான் மலேசியா நிருபர் கஸ்தூரி ஜீவாந்திரன் நிராகரித்துள்ளார். தேவாலயம் அரசியல் மேடையாக பயன்படுத்தப்படுகிறது என தமது செய்தியில் கூறப்பட்ட அவர்கள் கருத்துக்கள் பொருத்தமில்லாமல் கையாளப்பட்டுள்ளதாக கூறப்படுவதை கஸ்தூரி…