நெற்களஞ்சிய திட்டத்தில் இந்தியர்களுக்கு வாய்ப்புண்டா?, ஹிண்ட்ராப் சவால்

-வி.சம்புலிங்கம், தேசிய ஒருங்கிணைப்பாளர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி. 2013 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை அறிவித்த பிரதமர், மலேசியாவின் அரிசி உற்பத்தியை பெருக்கும் வகையில் மேலும் நான்கு  நெற்களஞ்சிய பகுதிகளை உருவாக்கப் போவதாக அறிவிப்பு செய்திருக்கிறார். சுமார் 19,000  ஹெக்டர் (46,950 ஐம்பது ஏக்கர்)  நிலப் பரப்பில்…

எண்ணெய் உரிமப் பணம்: தீர்ப்பை செவிமடுக்க சிவப்பு நிற உடைகளில்…

எண்ணெய் உரிமப் பணம் மீதான கிளந்தான் மாநில அரசாங்கக் கோரிக்கை தொடர்பில் வழக்குத் தொடருவதற்கு அனுமதி கோரி செய்து கொள்ளப்பட்டுள்ள விண்ணப்பம் மீதான தீர்ப்பைச் செவிமடுப்பதற்காக ஆயிரக்கணக்கான கிளந்தான் ஆதரவாளர்கள் புத்ராஜெயாவில் உள்ள கூட்டரசு நீதிமன்றத்துக்கு வெளியில் ஒன்று திரண்டனர். அவர்களில் பலர் சிவப்பு நிற டி சட்டைகளை…

அம்பிகா: மற்றதை மறந்து தேர்தல் சீரமைப்பில் கவனம் வைப்பீர்

மலேசியர்கள், அரசாங்க-ஆதரவு ஊடகங்களின் ஒருமித்த தாக்குதல், மற்ற திசைதிருப்பும் நாடகங்கள் போன்றவற்றில் Read More

போலீஸ் குறித்து கேள்வி கேட்பதை நிறுத்து: வழக்குரைஞர் மன்றத்துக்கு வலியுறுத்து

போலீசின் அதிகாரம் குறித்து கேள்வி கேட்பதை நிறுத்த வேண்டும் என்று கோரி  என்ஜிஓ- உறுப்பினர்கள் சுமார் 30பேர் கோலாலம்பூரில் வழக்குரைஞர் மன்றத்துக்குமுன் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், போலீஸ் மீதான தாக்குதல்களை, செப்டம்பர் 26-இல், ஜாலான் கூச்சாய் லாமாவில் நிகழ்ந்ததைப் போன்ற சம்பவங்களை வழக்குரைஞர் மன்றம் கண்டிக்கவும் வேண்டும்…

‘மலேசியாகினியின் சட்டப்பூர்வ வெற்றி பத்திரிக்கைச் சுதந்திரத்துக்குக் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்’

மலேசியாகினிக்கு வெளியீட்டு அனுமதியைக் கொடுப்பதில்லை என்ற உள்துறை அமைச்சு முடிவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது, பேச்சு சுதந்திரம் என்பது வெளியீட்டுச் சுதந்திரத்தையும் உள்ளடக்கியுள்ளது, அது அடிப்படைச் சுதந்திரம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் மலேசியாவில் பத்திரிக்கை சுதந்திரத்துக்குக் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஆகும். அந்த எண்ணங்களை வழக்கில் மலேசியாகினியை பிரதிநிதித்த…

வாக்காளர் பட்டியலில் போலி மை கார்டு வைத்திருந்த பிலிப்பினோக்காரர்

போலி மை கார்டை வைத்திருந்ததற்காக 2010ம் ஆண்டு ஜெயிலில் அடைக்கப்பட்டதாக கூறப்படும் சபாவில் உள்ள பிலிப்பினோக்காரர் ஒருவருடைய பெயர் ஜோகூர் வாக்காளர் பட்டியலில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதியிடப்பட்ட சபா டெய்லி எக்ஸ்பிரஸ் நாளேட்டின் பிரதியில் அந்த விவரம் காணப்படுவதாக 'மிலோசுவாம்' என்ற புனை…

சுவாராம்: ஸ்கார்ப்பின் சாட்சி ஒருவருக்கு சபீனா (அழைப்பாணை) வழங்கப்பட்டுள்ளது

மலேசியா பிரான்ஸை சேர்ந்த டிசிஎன்எஸ் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்ததில் ஊழல் Read More

அரசாங்கம் என்ஜிஓ-களுக்கு பண உதவி செய்து வெளிநாட்டுச் செல்வாக்கைத் தடுக்க…

அரசுசாரா அமைப்புகளில் அந்நிய நாட்டுச் செல்வாக்கு ஊடுருவுவதைத் தடுக்க அரசாங்கமே பட்ஜெட்டில் என்ஜிஓ-களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று விரும்புகிறார் இப்ராகிம் அலி (சுயேச்சை எம்பி- பாசிர் மாஸ்) . “அப்படிச் செய்தால் அவை அந்நிய நிதி உதவியை நம்பி இருக்கும் அவசியம் இருக்காது”, என்றாரவர். அவர் இன்று…

கல்வி செயல்திட்டம் ‘இனவெறி, மதவெறிக்குத் தீர்வு காணவில்லை’

பினாங்கு துணை முதலமைச்சர் II பி.இராமசாமி, கல்வி செயல்திட்டம், தாய்மொழிப் பள்ளிகளின் அடிப்படைப் பிரச்னைகள் குறித்து மெளனம் சாதிப்பதைக் குறை கூறியுள்ளார். அம்னோ அரசியலின் பிரதிபலிப்பாக அப்பள்ளிகளில் இனவாதமும் சமயவாதமும் மண்டிக்கிடக்கின்றன என்றாரவர். “அந்த விவகாரங்கள் தேசியப் பள்ளிகளிலும் உண்டு”. ஆனால் அவற்றை ஒழிப்பதற்கு செயல்திட்டம் வழி கூறவில்லை.…

‘பிடிபிடிஎன் கழிவு பணக்காரர்களுக்கு மட்டுமே பயனாக இருக்கும்’

பிடிபிடிஎன் கடன்களை முழுமையாக செலுத்தும் மாணவர்களுக்கு கழிவு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது பணக்காரர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என ஷா அலாம்  பாஸ் எம்பி காலித் சாமாட் கூறுகிறார். ஏனெனில் அவ்வளவு பெரிய தொகையை பணக்காரர்கள் மட்டுமே உடனடியாக திரட்டி திருப்பிக் கொடுக்க முடியும் என அவர் இன்று…

பெட்டாலிங் ஜெயா மேயருடைய இட மாற்றத்தை சிலாங்கூர் மந்திரி புசார்…

பெட்டாலிங் ஜெயா மேயர் முகமட் ரோஸ்லான் ஸாக்கிமானுடைய இட மாற்ற ஆணை இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது பொதுச் சேவைத் துறையுடன் விவாதங்கள் முடிவடையும் வரையில் சிலாங்கூர் உயர்நிலை  அதிகாரிகள் இட மாற்றங்கள் முடக்கி வைக்கப்பட்டுவதாக சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் அறிவித்துள்ளதே அதற்குக் காரணமாகும். அந்த…

தயிப்-தான் மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்கிறார் ஷானாஸ்

சரவாக் முதலமைச்சர் அப்துல் தயிப் மஹ்முட்தான் மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரர், அவரே தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய பண்காரராகவும் இருக்கலாம் என்கிறார் அவரின் முன்னாள் மருமகள். தமது முன்னாள் கணவர் மஹ்முட் அபு பெகிர் தயிப்பின் சொத்துரிமை பற்று சாட்சியமளித்த ஷானாஸ் அப்துல் மஜிட்,49, (வலம்) மஹ்முட்டுக்கு உலக…

ஸ்மார்ட்போனுக்குக் கழிவு ‘குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே’ கிடைக்கும்

ஸ்மார்ட் போனுக்கு (சுட்டிப் பேசிகள்) வழங்கப்படும் ரிம 200 கழிவைக் “குறிப்பிட்ட சில கடைகளில் மட்டுமே” பெற முடியும். “விலையில் கழிவைப் பெற மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையத்தில் (எம்சிஎம்சி) பதிவு செய்துகொண்டிருக்கும் கடைகளில் அதைப் பெறலாம்”, என்று நிதி அமைச்சின் தலைமைச் செயலாளர் முகம்மட் இர்வான் சிரேகார்…

‘சமயப் பள்ளிகள் நேர வெடி குண்டுகள்’

மலேசியாவில் சமயப் பள்ளிக்கூட முறை 'நேர வெடி குண்டு' என கூறப்பட்டுள்ளது. அந்தக் கல்வி முறையை முழுமையாக ஆய்வு செய்த தேசியத் தற்காப்பு பல்கலைக்கழகத்தின்  விரிவுரையாளர் அரிபின் ஒமாரும் அவரது சகாக்களும் அவ்வாறு முடிவுக்கு வந்துள்ளனர். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வரும் அந்தப் பள்ளிக்கூடங்களின்…

சுஹாக்காம்: அந்நிய நிதிகளைப் பெறுவதற்கு சுவாராமுக்கு உரிமை உண்டு

மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் மீதான விசாரணையை அதிகாரிகள் தொடரும் வேளையில் சுஹாக்காம் என்ற மனித உரிமைகள் ஆணையம் சுவாராமுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. மனித உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்திற்கு சுவாராம் அந்நிய நிதி உதவிகளைப் பெறுவதில் எந்தத் தவறும் இல்லை என சுஹாக்காம் கூறியது.…

நஸ்ரி: சபாவில் உள்ள அந்நியர்கள் பாதுகாப்பு மருட்டல் அல்ல

சபாவில் சட்ட விரோதமாகவும் சட்டப்பூர்வமாகவும் உள்ள கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அந்நியக் குடியேற்றக்காரர்கள் மாநிலம் அல்லது நாட்டின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் எந்த அபாயத்தையும் ஏற்படுத்தவில்லை எனப் பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். "மற்ற மாநிலங்களைப் போல அங்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது," என அவர்…

எரிசக்தி அமைச்சர்: மின் கட்டண உயர்வைத் தவிர்க்க முடியாது

நிலக்கரி, இயற்கை எரி வாயு உட்பட எரிபொருட்களின் விலைகள் உலக அளவில் கூடிக் கொண்டே போகின்றன. அதனால் எதிர்காலத்தில் மின் கட்டணத்தை மாற்றம் செய்வதைத் தவிர்க்க முடியாது என எரிசக்தி, பசுமைத் தொழில்நுட்ப, நீர் வள அமைச்சர் பீட்டர் சின் கூறியிருக்கிறார். மின் கட்டண உயர்வு எப்போது எந்த…

பிரதமர்: மலேசியாவில் மகளிர் உரிமை போராட்ட அமைப்புக்கள் தேவை இல்லை

மலேசியாவில் மகளிருக்கு தொடக்க காலத்திலிருந்தே சம நிலை கொடுக்கப்பட்டு வந்துள்ளதால் " மலேசியாவில் மகளிர் உரிமை போராட்ட அமைப்புக்கள் தேவை இல்லை" பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறிக் கொண்டுள்ளார். அவர் இன்று காலை 50வது தேசிய மகளிர் தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். அந்த வகையில்…

உங்கள் கருத்து : நஜிப்புக்கு எல்லாம் குரைப்புத் தான் கடிப்பு…

"நிதி அமைச்சரும் எல்லா முதுநிலை அமைச்சர்களும் இல்லாத சூழ்நிலையில் ஒரு நாட்டின் பட்ஜெட் விவாதம் நிகழ்வது இதுவே உலகில் முதல் முறையாக இருக்கும்" பட்ஜெட் விவாதம் தொடங்கியது நஜிப் இல்லாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது கேஎஸ்என்: பட்ஜெட் விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளுடைய கருத்துக்களைச் செவிமடுக்க நிதி அமைச்சரும் மற்ற…

பெட்டாலிங் ஜெயா மேயர் திடீர் மாற்றம்

பெட்டாலிங் ஜெயா மேயர் முகம்மட் ரோஸ்லான் சகிமான் 24 மணி நேரத்தில் பணிமாற்றம் செய்யப்பட்டிருப்பது அறிந்து சிலாங்கூர் அரசு வியப்படைகிறது. சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினரும் ஊராட்சி விவகாரங்களுக்குப் பொறுப்பானவருமான ரோனி லியு, தமக்கும் மந்திரி புசார் அலுவலகத்துக்கும் அது பற்றி எதுவும் தெரியாது என்றார். “அது ஐயத்துக்குரியதாகவும் வழக்கத்துக்கு…

நீதிமன்றம்: மலேசியாகினிக்கு வெளியீட்டு அனுமதி பெறுவதற்கு உரிமை உண்டு

மலேசியாகினி (Malaysiakini) செய்தி இணையத் தளத்தை நடத்துகின்ற Mkini Dotcom Sdn Bhd-க்கு வெளியீட்டு அனுமதியை வழங்குவது இல்லை என்ற உள்துறை அமைச்சு முடிவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் (முறையீட்டு, சிறப்பு அதிகாரங்கள் பிரிவு) தள்ளுபடி செய்துள்ளது. அது "பொருத்தமற்றது, நியாயமற்றது' என தீர்ப்பளித்த நீதிபதி அபாங் இஸ்காண்டார் அபாங்…

இன்னுமொரு நிறுவனச் சட்டமீறல்: டோனி புவா அம்பலப்படுத்தினார்

பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா, இன்னொரு நிறுவனம் 1965ஆம் ஆண்டு நிறுவனச் சட்டத்தை மீறியுள்ளதாகக் கூறினார்.  ஆனால், மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராமை விடாமல் துரத்தும் மலேசிய நிறுவனங்களின் ஆணையம் (சிசிஎம்), அந்த நிறுவனத்தின் விசயத்தில் கவனம் செலுத்துவதுபோல் தெரியவில்லை. நாட்டின் புதிய சிக்கன…

அன்வார்: பிஎன் கூட நிழல் அமைச்சரவையைப் பெற்றிருக்கவில்லை

பக்காத்தான் ராக்யாட் நிழல் அமைச்சரவையை ஏன் அமைக்கவில்லை என்ற பிஎன் கேள்விக்குப் பதில் அளிக்காமல் அந்த எதிர்த்தரப்புக் கூட்டணி, தான் எதிர்க்கட்சியாக இருக்கும் மாநிலங்களில் கூட நிழல் ஆட்சிமன்றத்தைப் பெற்றிருக்கவில்லை எனச் சுட்டிக் காட்டியுள்ளது. "நிழல் அமைச்சரவை பற்றிக் குறிப்பிடும் போது யார் சிலாங்கூர் மந்திரி புசார் என்பதை…