பெட்டாலிங் ஜெயா மேயர் திடீர் மாற்றம்

பெட்டாலிங் ஜெயா மேயர் முகம்மட் ரோஸ்லான் சகிமான் 24 மணி நேரத்தில் பணிமாற்றம் செய்யப்பட்டிருப்பது அறிந்து சிலாங்கூர் அரசு வியப்படைகிறது. சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினரும் ஊராட்சி விவகாரங்களுக்குப் பொறுப்பானவருமான ரோனி லியு, தமக்கும் மந்திரி புசார் அலுவலகத்துக்கும் அது பற்றி எதுவும் தெரியாது என்றார். “அது ஐயத்துக்குரியதாகவும் வழக்கத்துக்கு…

நீதிமன்றம்: மலேசியாகினிக்கு வெளியீட்டு அனுமதி பெறுவதற்கு உரிமை உண்டு

மலேசியாகினி (Malaysiakini) செய்தி இணையத் தளத்தை நடத்துகின்ற Mkini Dotcom Sdn Bhd-க்கு வெளியீட்டு அனுமதியை வழங்குவது இல்லை என்ற உள்துறை அமைச்சு முடிவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் (முறையீட்டு, சிறப்பு அதிகாரங்கள் பிரிவு) தள்ளுபடி செய்துள்ளது. அது "பொருத்தமற்றது, நியாயமற்றது' என தீர்ப்பளித்த நீதிபதி அபாங் இஸ்காண்டார் அபாங்…

இன்னுமொரு நிறுவனச் சட்டமீறல்: டோனி புவா அம்பலப்படுத்தினார்

பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா, இன்னொரு நிறுவனம் 1965ஆம் ஆண்டு நிறுவனச் சட்டத்தை மீறியுள்ளதாகக் கூறினார்.  ஆனால், மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராமை விடாமல் துரத்தும் மலேசிய நிறுவனங்களின் ஆணையம் (சிசிஎம்), அந்த நிறுவனத்தின் விசயத்தில் கவனம் செலுத்துவதுபோல் தெரியவில்லை. நாட்டின் புதிய சிக்கன…

அன்வார்: பிஎன் கூட நிழல் அமைச்சரவையைப் பெற்றிருக்கவில்லை

பக்காத்தான் ராக்யாட் நிழல் அமைச்சரவையை ஏன் அமைக்கவில்லை என்ற பிஎன் கேள்விக்குப் பதில் அளிக்காமல் அந்த எதிர்த்தரப்புக் கூட்டணி, தான் எதிர்க்கட்சியாக இருக்கும் மாநிலங்களில் கூட நிழல் ஆட்சிமன்றத்தைப் பெற்றிருக்கவில்லை எனச் சுட்டிக் காட்டியுள்ளது. "நிழல் அமைச்சரவை பற்றிக் குறிப்பிடும் போது யார் சிலாங்கூர் மந்திரி புசார் என்பதை…

பாஸ்: பட்ஜெட் ஏற்படுத்திய மயக்கத்தைக் கணக்கறிக்கைத் தெளிய வைக்கும்

விரைவில் வெளிவரும் தலைமைக் கண்காய்வாளர் (ஏஜி) அறிக்கை. 2013 பட்ஜெட் என்னும் ‘கஞ்சா’வால் ஏற்பட்டிருக்கும்  போதையைத் தெளிய வைக்கும் என்று பாஸ் கூறுகிறது. கணக்கறிக்கையின்முன் பட்ஜெட் முக்கியத்தும் இழக்கும் என்பதால் மத்திய அரசு வேண்டுமென்றே அதன் வெளியீட்டைத் தாமதப்படுத்தியது என்று பாஸ் விளம்பரப் பிரிவுத் தலைவர் துவான் இப்ராகிம்…

பட்ஜெட் விவாதம் தொடங்கியது நஜிப் அவையில் இல்லாதது குறித்து கேள்வி…

2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தை எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று காலை மக்களவையில் தொடக்கி வைத்தார். அப்போது மக்களவையில் பிரதமர் நஜிப் காணப்படாதது குறித்து அவர் கேள்வி எழுப்பினார். "பட்ஜெட் விவாதத்தின் போது நிதி அமைச்சர் இங்கு இருப்பதுதான் வழக்கம். ஆனால் விவாதத்திற்கு…

பினாங்கை மீண்டும் கைப்பற்ற அம்னோவின் 3-3-3-1 வழி முறையை டிஏபி…

13வது பொதுத் தேர்தலில் பினாங்கு சட்டமன்றத்தில் தனக்கு தற்போது உள்ள 11 இடங்களைத் தக்க வைத்துக் கொண்டு மாநில அரசை பிஎன் மீண்டும் கைப்பற்ற அம்னோ வழங்கியுள்ள 3-3-3-1 வழி முறையை பினாங்கு டிஏபி சாடியுள்ளது. பிஎன் உறுப்புக் கட்சியான கெரக்கான் 2008ல் எந்தத் தொகுதியும் கிடைக்காமல் போன…

எஸ்யூபிபி இப்போதைக்கு சரவாக் பிஎன்-னில் தொடர்ந்து இருக்கும்

எஸ்யூபிபி என்னும் சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி இப்போதைக்கு மாநில பிஎன் -னில் இருந்து வரும் என அதன் தலைவர் பீட்டர் சின் அறிவித்துள்ளார். கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள விஷயங்கள் மீது கூட்டணித் தலைமைத்துவத்துடன் 'கலந்தாய்வு' செய்வதற்கு மத்திய செயற்குழு முடிவு செய்துள்ளது என…

அன்பளிப்புகளுடன் வரும் அம்னோ தலைவர்கள் விசயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்

உங்கள் கருத்து:  “நஜிப் அவர்களே, எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் நீங்கள் விட்டெறியலாம். பணத்தால் Read More

ஊடகங்கள் ‘வி கழுத்து தினத்தை’ பதிவு செய்யத் தடை

கேஎல்சிசி என்ற Suria Kuala Lumpur City Centre வளாகத்தில் நடத்தப்பட்ட   'வி கழுத்து தின' கூட்டத்தைப் பதிவு செய்ய ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை. அந்தக் கூட்டத்தைப் பதிவு  செய்து கொண்டிருந்த ஊடகவியலாளர்களை அணுகிய இரண்டு கேஎல்சிசி காவலர்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டனர். அந்த நிகழ்வு…

மலேசியாகினி நாளிதழ் வெளியீட்டிற்கான உரிமம்: தீர்ப்பு இன்று

மலேசியாவின் முன்னணி செய்தி இணையதளமான மலேசியாகினி ஒரு நாளிதழை வெளியிடுவதற்கான உரிமத்திற்கு உள்துறை அமைச்சிடம் மனு செய்திருந்தது. அம்மனுவை உள்துறை அமைச்சு நிராகரித்ததைத் தொடர்ந்து மலேசியாகினி உள்துறை அமைச்சின் மீது வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கின் விசாரணை முடிவுற்றதைத் தொடர்ந்து கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் மணி 4.30…

நீண்ட காலத்திற்குப் பின்னர் ஹிண்ட்ராப்- பிகேஆர் சந்திப்பு நிகழ்ந்தது

2008 மார்ச் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எழுந்த வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கு ஹிண்ட்ராப்பும் பிகேஆரும் முதல் நடவடிக்கையை எடுத்துள்ளன. ஹிண்ட்ராப் ஆலோசகர் என் கணேசன் கடந்த வாரம் கோலாலம்பூரில் பல பிகேஆர் தலைவர்களைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பு இரு தரப்புக்கும் இடையிலான வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள ஆக்கப்பூர்வமான…

பினாங்கில் வெற்றிபெற அஹ்மட் ஜஹிடியின் ‘3-3-3-1 சூத்திரம்’

13வது பொதுத் தேர்தலில் பிஎன் பினாங்கில் வெற்றிபெற விரும்பினால் அம்னோ அதன் 11சட்டமன்ற இடங்களைத் தக்க வைத்துக்கொண்டு  3-3-3-1 சூத்திரத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். அந்தச் சூத்திரத்தை விளக்கிய அம்னோ உதவித் தலைவர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி, அதன்படி அம்னோ, மசீச, கெராக்கான் ஆகியவை மூன்று இடங்களையும் மஇகா ஓர்…

‘அதற்குப் பதில் உத்துசான் மலேசியர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’

"யார் துரோகி ? அதிகாரத்தைத்தையும் மக்கள் பணத்தையும் தவறாகப் பயன்படுத்தும் மக்களா அல்லது உண்மைகளை வெளியிடும் மக்களா?" உத்துசான்: மலேசியாகினி 'மலேசியர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்' ஒய்கே சுவா: உத்துசான் மலேசியா அம்னோ குரலாக திகழுவதால் மலேசியாகினி சுதந்திரம் குறித்து கருத்துரைக்க அதற்கு அருகதை இல்லை. மலேசியாகினி நல்ல…

அலி ரூஸ்தாம் புதல்வர் திருமணம் மலேசியச் சாதனை

மலாக்கா ஆயர் குரோ டேவான் துன் அலி புக்கிட் கட்டில் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற மலாக்கா முதலமைச்சர் முகமட் அலி ரூஸ்தாம் மூத்த புதல்வருடைய திருமண விருந்தில் கிட்டத்தட்ட 130,000 பேர் கலந்து கொண்டனர். மணமகன் 26 வயதான முகமட் ரித்வான், மணமகள் 26 வயதான நூர் அஸிஹா…

சிலாங்கூர் இருக்கட்டும், முதலில் இயற்கை வள பேரழிவிலிருந்து பகாங்கை காப்பாற்றுங்கள்

சிலாங்கூர் மாநிலத்தின் மீது பரிவும் கருணையும் காட்டுவது இருக்கட்டும். முதலில், பகாங் மாநிலத்தை இயற்கை வள பேரழிவிலிருந்து காப்பாற்றுங்கள் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் இன்று விடுத்த ஓர் அறிக்கையில் பகாங் மாநில அரசுக்கு அறிவுரை கூறியுள்ளார். பகாங்கிலிருந்து சிலாங்கூரின் உத்தேச லங்காட் 2…

உத்துசான்: மலேசியாகினி ‘மலேசியர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’

மலேசியாகினி செய்தி இணையத் தளத்துக்கு நாணய ஊக வணிகர் ஜார்ஜ் சோரோஸ் நிதி அளித்தார் என்று கூறப்படுவது மீது அது எல்லா மலேசியர்களிடமும் 'மன்னிப்பு' கேட்க வேண்டும் என உத்துசான் மலேசியா கேட்டுக் கொண்டுள்ளது. 'அந்நியர்களுடைய கருவியாக இருப்பதை நிறுத்திக் கொள்ள' மலேசியாகினி எண்ணம் கொண்டுள்ளதா என அந்த…

2013 பட்ஜெட் உண்மையிலேயே மக்கள் பட்ஜெட்தானா?

கடிதம்- Chris Anthony மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2013 பட்ஜெட் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம் போலவே அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. மாற்றரசுக் கட்சி, அது தேர்தல் பட்ஜெட் என்றும் நாடும் மக்களும் நலமே வாழ அதில் புதிதாக எதுவுமில்லை என்றும் கூறி  ஒதுக்கித்தள்ளியது. சுருங்ககூறின்,…

கோ: பினாங்கில் ஒன்றும் இல்லாதிருக்கும் நிலையை உடைத்தெறிய வேண்டும்

கெராக்கான் தலைவர் கோ சூ கூன், பினாங்கில் கடந்த பொதுத் தேர்தலில் ஒரு இடத்தைக்கூட வெல்ல முடியாதபடி முற்றாக துடைத்தொழிக்கப்பட்ட களங்கத்தைத் துடைக்கக் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் ஒன்றுசேர வேண்டும் என  உருக்கமாக வேண்டிக் கொண்டிருக்கிறார். “பினாங்குதான் என்றுமே கெராக்கானின் இதயம்.அம்மாநிலத்தையும் மலேசியாவையும் மாற்றுவதற்குச் சேவையாற்ற நமக்குக் கிடைத்த…

பிரதமர்: புக்கு ஜிங்கா அது அச்சிடப்பட்ட காகித மதிப்புக் கூட…

புக்கு ஜிங்கா- பக்காத்தான் ராக்யாட் கொள்கை அறிக்கை பொருத்தமான கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். அதே வேளையில் பிஎன் கொள்கைகள் நிரூபிக்கப்பட்டவை என்றார் அவர். "புக்கு ஜிங்கா அது அச்சிடப்பட்ட காகித மதிப்புக் கூட இல்லாதது," எனக் கூறிய அவர் கோலாலம்பூரில் 44வது…

உங்கள் கருத்து: ஆர்ஒஎஸ் அலுவலகம் அம்னோவுக்காக ஆடுகிறது

"எல்லா அரசாங்க அமைப்புக்களும் அம்னோ நிறுவனங்களா ? தங்கள் அரசியல் எஜமானர்களை திருப்திப்படுத்த அவை எதனையும் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது." சுவாராமை இழுப்பதற்கு ஆர்ஒஎஸ் அலுவலகம் போலீசை சேர்த்துக் கொண்டுள்ளது பெர்ட் தான்: ஒரு நிறுவனத்தின் மீது கட்டுப்பாட்டு அதிகாரத்தைப் பெற்றுள்ளது சிசிஎம் என்ற  மலேசிய நிறுவன…

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஆட்சேபித்து பெங்கெராங்கில் பேரணி

ஜோகூர் பெங்கெராங் வட்டாரத்தில் உள்ள மீனவர் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு அருகில் கட்டப்படவிருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று பேரணி ஒன்றை நடத்துகின்றனர். 'Himpunan Hijau Lestari Pengerang' ( பெங்கெராங் நிலையான பசுமைப் பேரணி) என அது அழைக்கப்பட்டுகின்றது. அந்தத் திட்டம்…