அமைச்சரவையிலிருந்து விலகி அரசு சாரா அமைப்புக்குச் செல்லுங்கள் என வேதமூர்த்திக்கு…

பிரதமர் துறை துணை அமைச்சர் பி வேதமூர்த்தி அமைச்சரவையிலிருந்து விலகிக்  கொண்டு தமது அரசு சாரா அமைப்புப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்  என உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி மேலோட்டமாக  சாடியிருக்கிறார். "நீங்கள் போலீசாரைப் பற்றி குறை சொல்ல விரும்பினால்; போலீசார் பற்றி  எதிர்மறையான கருத்துக்களைச்…

ஜாஹிட்: கடுமையான சட்டங்களின்றி போலீஸ் பல்லில்லா புலி

சில சட்டங்கள், இரத்துச் செய்யப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (ஐஎஸ்ஏ),  அவசரக் காலச் சட்டம் (இஓ) போன்றவை கடுமையானவைதான் என்பதை ஒப்புக்கொள்ளும் உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி, ஆனாலும் அவை  மலேசியாவுக்குத் தேவைதான் என்கிறார். மலேசியாவை நியூ யோர்குடன் ஒப்பிட்ட அவர், அங்கு 35 பேருக்கு ஒரு போலீஸ்…

‘எழுதப்பட்ட வசனத்திற்கு ஏற்ப அல்தான்துயா முடிவு அமைந்துள்ளது’

'ஆகவே அல்தான்துயா சுயமாகவே பூஞ்சாக் அலாமுக்கு சென்று நெற்றியில் சுட்டுக் கொண்ட பின்னர் தம்மை வெடி வைத்துத் தகர்த்துக் கொண்டார்' நீதிமன்றம் கொலைக் குற்றச்சாட்டிலிருந்து அஸிலாவையும் சிருலையும் விடுவித்தது கிண்டல்: உயர் நீதிமன்றம் தவறாக வழி நடத்தியுள்ளதால் தொழில்நுட்பப்  பிரச்னை அடிப்படையில் அந்த முழு விசாரணையும் நீதிக்குப் புறம்பானதாகி விட…

சப்ரி: தேசிய கொடி பறக்கவிடுவதைக் கட்டாயமாக்க வேண்டும்

மெர்தேகா மாதம் முழுவதும் ஜாலோர் கெமிலாங் பறக்க விடுவதைக் கட்டாயமாக்க சட்டம் கொண்டுவரலாமா என்று தொடர்பு, பல்லூடக அமைச்சு ஆராயும். அதன் அமைச்சர், அஹ்மட் சப்ரி சிக், அப்படி ஒரு சட்டம் தேவை என்று நினைக்கிறார். “இப்போது,  தன்னார்வத்தின்பேரில்தான் தேசிய கொடி பறக்க விடப்படுகிறது. “ஆனாலும் தனியார் கட்டிடங்கள்…

ஆர்ஒஎஸ் 20 புதிய அரசியல் கட்சிகளை அங்கீகரித்துள்ளது

2008ம் ஆண்டு தொடக்கம் புதிய அரசியல் கட்சிகளை அமைப்பதற்குச்  சமர்பிக்கப்பட்ட 30 விண்ணப்பங்களில் 20ஐ ஆர்ஒஎஸ் என்ற சங்கப் பதிவதிகாரி  அலுவலகம் அங்கீகரித்துள்ளது. அந்த புதிய அரசியல் கட்சிகளின் பட்டியலை அடுத்த வியாழக் கிழமை அது  வெளியிடும் என அதன் தலைமை இயக்குநர் அப்துல் ரஹ்மான் ஒஸ்மான்  கூறினார்.…

1.4 மில்லியன் புதிய வங்காள தேசத் தொழிலாளர்கள் பற்றி பாஸ்…

அடுத்த ஆண்டு மலேசியாவுக்கு கூடுதலாக 1.4 மில்லியன் வங்காள தேசத்  தொழிலாளர்கள் கொண்டு வரப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து பாஸ்  ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. அந்த வங்காள தேசத் தொழிலாளர்கள் பின்னர் குடிமக்களாகி விடுவர் என்றும்  அது அஞ்சுகின்றது. அந்தத் தொழிலாளர்கள் எங்கு வேலைக்கு அமர்த்தப்படுவர் என்றும் அவர்கள்…

‘ஒட்டுநர் தகவல் முறை’ உருவாக்கப்படும்

பொது தரைப் போக்குவரத்து ஆணையம் பொதுப் போக்குவரத்து வாகன  ஓட்டுநர்கள் பற்றிய பின்னணித் தகவல்களை வழங்கும் முறை ஒன்றை உருவாக்கி  வருகின்றது. அதில் கிடைக்குமானால் அவர்களுடைய கிரிமினல் பதிவுகளும் இருக்கும் என  அந்த ஆணையத்தின் தலைவர் சையட் ஹமிட் அல்பார் கூறினார். ஆணையத்துக்குக் கொடுக்கப்படும் தகவல்கள் அடிப்படையில் அந்த…

சிறுநீர் கழிக்கும் காட்சி பற்றி விளக்க இயக்குநர் மறுப்பு

தண்டா புத்ரா திரைப்படத்தில் கொடிக்கம்பம் ஒன்றின் மீது சீன இளைஞர்கள் குழு  ஒன்று சிறுநீர் கழிக்கும் காட்சியை தாம் சேர்த்ததற்கான காரணத்தை விளக்க அதன்  இயக்குநர் ஷுஹாய்மி பாபா மறுத்துள்ளார். மலேசியாகினி அந்தத் திரைப்படத்தை இன்னும் பார்க்காததே விளக்கமளிக்க மறுப்பதற்குக் காரணம்  எனப் பல பட விருதுகளைப் பெற்றுள்ள…

விடுவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அஸிலா சிறையிலிருந்து மாயமானார்

மங்கோலிய பெண்மணி அல்டான்துயா ஷாரிபுவைக்  கொலை  செய்த  குற்றச்சாட்டிலிருந்து முறையீட்டு  நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட போலீஸ் சிறப்பு நடவடிக்கை பிரிவின்  முன்னாள் தலைமை  இன்ஸ்பெக்டர் அஸிலா ஹட்ரி,   தீர்ப்பளிக்கப்பட்ட  சிறிது நேரத்திலேயே காஜாங் சிறையிலிருந்து  வெளியேறி விட்டார். அவரைச் சந்திப்பதற்காக சிறை வாயிலில் செய்தியாளர்களும் படப்பிடிப்பாளர்களுமாக சுமார் 20 பேர்…

ஜைட்: முறையீட்டு நீதிமன்றம் மறு விசாரணைக்கு ஆணையிட்டிருக்க வேண்டும்

மங்கோலிய மாது அல்தாந்துயா கொலை வழக்கில் முறையீட்டு நீதிமன்றம் மறு விசாரணைக்கு ஆணையிடாதது குறித்து முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட்  இப்ராஹிம் ஏமாற்றம் தெரிவித்துள்ளார். "நாம் உண்மையை அறிந்து கொள்வதற்கு அந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட  வேண்டும் என நிச்சயம் நீதி நடைமுறை வலியுறுத்தும். அல்தான்துயா ஏன்  கொல்லப்பட்டார் என்பது…

‘நெடிம் நியமனத்துக்கும் பொதுச் சேவைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’

சுற்றுப்பயண, பண்பாட்டு அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸின் புதல்வர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதற்கும் பொதுச் சேவைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அரசாங்கத் தலைமைச் செயலாளர் டாக்டர் அலி ஹம்சா சொல்கிறார். சுற்றுப்பயண, பண்பாட்டு அமைச்சின் நிர்வாக அமைப்பு வழியாக அந்த நியமனம் செய்யப்படவில்லை என அவர் சொன்னார். "உண்மையில் அது…

வேதமூர்த்தி: நான் வெறும் பார்வையாளராக மட்டும் இருக்க முடியாது

அரசாங்கத்தில் இருப்பதால் ஒதுக்கப்பட்ட சமூகத்தின் தலைவர் என்னும் முறையில்  அக்கறையில்லாத பார்வையாளராக மட்டும் தாம் இருக்க முடியாது என மலேசிய  ஹிண்டராப் சங்கத் தலைவர் பி வேதமூர்த்தி சொல்கிறார். அரசாங்கம் வகுத்த பாதையில் வேதமூர்த்தி செல்ல வேண்டும் என உள்துறை  அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி கூறியுள்ளதற்கு பிரதமர்…

செட்டேவ் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளார் மங்கோலிய அரசாங்கம் தலையிட வேண்டும் என…

மங்கோலிய மாது அல்தான்துயா ஷாரிபு கொலையுண்டதின் தொடர்பில் 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் கொலைக்  குற்றம் சாட்டப்பட்ட இரண்டு முன்னாள் போலீஸ்காரர்களை முறையீட்டு  நீதிமன்றம் விடுவித்துள்ளது குறித்து அல்தான்துயா-வின் தந்தை செட்டேவ் ஷாரிபு  மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார். "அந்தத் தீர்ப்பு மீது மங்கோலிய அரசாங்கம் அறிக்கை விட வேண்டிய…

முஹைடின்: கல்வித் தரம் சரிவதைக் காண டோங் ஜோங் விரும்புகிறதா…

மலேசிய ஐக்கிய சீனப் பள்ளிக் குழுக்கள் சங்கம் (டோங் ஜோங்) தேசியக் கல்விப்  பெருந்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில் தீய நோக்கம் ஏதும் உள்ளதா என  துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கேள்வி எழுப்பியுள்ளார். "நாங்கள் அந்தப் பெருந்திட்டத்தில் செய்வது சட்டத்திற்கு எதிரானது அல்ல. தாய்  மொழிப் பள்ளிக்கூடங்களுக்கு தேசியக்…

ஈசா சமாட் வீட்டில் கொள்ளை

பெல்டா தலைவர் முகமட் ஈசா அப்துல் சமாட் வீட்டில் இன்று அதிகாலை  திருட்டுப் போனது. நெகிரி செம்பிலான் சிராம்பானில் உள்ள நிலாய் ஸ்பிரிங்-கில் உள்ள அவரது  வீட்டில் அந்தக் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக சின் சியூ டெய்லி தகவல்  வெளியிட்டுள்ளது. அதிகாலை மணி 4.00 வாக்கில் பாரங்கத்திகளை வைத்திருந்த…

கோவிலில் திருடர்கள் கைவரிசை

பினாங்கு குயின் ஸ்திரிட் ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்துக்குள் திருடர்கள் புகுந்து அங்கிருந்த தெய்வச் சிலைகளை உடைத்து நகைகளைக் களவாடிச் சென்றதாக ஆலய அதிகாரிகளில் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார். திருடர்கள் பின்புற கம்பிக் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்திருக்கிறார்கள் எனப் புகார்தாரர் கூறினார். “பல தெய்வ உருவச் சிலைகளும் மேசைகளும்…

அஸிலா, சிருல் விடுதலை: சுவாராம் அதிர்ச்சி

மனித உரிமைக்காக போராடும் என்ஜிஓ-வான சுவாராம், மங்கோலியரான அல்டான்துயா ஷரிபுவின் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் இருவர் விடுவிக்கப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளது. “அதிர்ச்சிதரும் தீர்ப்பு...அப்படியென்றால் அவரைக் கொன்றவர்கள் யார்?”, என்று சுவாராம் இயக்குனர் சிந்தியா கேப்ரியல் கேள்வி எழுப்பினார். “அவர் எப்படிக் கொல்லப்பட்டார் என்ற கேள்வியும் எழுகிறது.…

கொள்முதல் ஆவணங்களை இரகசியப் பட்டியலிலிருந்து அகற்ற வேண்டும்: டிஐ-எம்

அரசாங்கம், தானியக்க செயலாக்கக் கட்டகம் (ஏஇஎஸ்) உள்பட, அதன் கொள்முதல் ஆவணங்கள் அனைத்தையும் இரகசியப் பட்டியலிலிருந்து அகற்ற வேண்டும் என ட்ரேன்பேரன்சி இண்டர்நேசனல்- மலேசியா (டிஐ-எம்) கேட்டுக்கொண்டிருக்கிறது. “அதிகாரத்துவ இரகசியம் என்பதை இராணுவத் தற்காப்புத் தளவாடக் கொள்முதல்  ஆவணங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற ஆவணங்கள் அனைத்தையும் மக்கள்…

நெகாரா கூவை அவமதிப்போர் சிறையில் தள்ளப்படலாம்

நாட்டுப் பண்ணை அவமதித்தால் சிறையில் தள்ளப்படலாம், தெரியுமோ? நாட்டுப் பண் சட்டம் 1968-இன்படி ‘நெகாரா கூ’ இசைக்கப்படும்போது அதற்கு மரியாதை அளித்து எழுந்து நிற்காவிட்டால் ரிம100 அபராதம் விதிக்கப்படலாம் அல்லது ஒரு மாதம்வரை சிறையில் தள்ளப்படலாம். எழுந்து நிற்பது மட்டும் போதாது, நாட்டுப் பண்ணை அவமதிப்பதுபோல் நடந்துகொள்ளவும் கூடாது…

அல்டான்துயா கொலை வழக்கில் அஸிலா, சிருல் விடுதலை

மங்கோலிய பெண்மணி அல்டான்துயா ஷாரிபுவைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த போலீஸ் சிறப்பு நடவடிக்கை பிரிவைச் சேர்ந்த தலைமை இன்ஸ்பெக்டர் அஸிலா ஹட்ரி, கார்ப்பரல் சிருல் அஸ்ஹார் உமர் ஆகிய இருவரையும் முறையீட்டு நீதிமன்றம் இன்று விடுவித்தது. நீதிபதி முகம்மட் அபாண்டி அலி தலைமையில் மூவரடங்கிய நீதிபதிகள் குழு…

அரசாங்கம் வகுத்த பாதையில் செல்லுமாறு வேதமூர்த்திக்கு ஸாஹிட் அறிவுரை

பிரதமர் துறை துணை அமைச்சர் பி வேதமூர்த்தி அரசாங்கம் வகுத்த பாதையைப்  பின்பற்ற வேண்டும் என்றும் அரசாங்கக் கொள்கைக்கு முரணான அறிக்கைகளை  வெளியிடக் கூடாது என்றும் உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி அவருக்கு ஆலோசனை கூறியுள்ளார். "அவர் (வேதமூர்த்தி) தம்மை அரசு சார்பற்ற அமைப்பு ஒன்றின் தலைவராக…

போலீசார் கெடாவில் ’04’ ரகசியக் கும்பல் உறுப்பினர்களை அடையாளம் காண்கின்றனர்

கெடாவில் இன்னும் எஞ்சியுள்ள '04' ரகசியக் கும்பல் உறுப்பினர்களை  அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆகஸ்ட் 18ம் தேதி Ops Cantas தொடங்கப்பட்டது முதல் போலீசார் 58 ரகசியக்  கும்பல் உறுப்பினர்களைக் கைது செய்துள்ளதாக கெடா போலீஸ் தலைவர் அகமட்  இப்ராஹிம் சொன்னார். அவர்களில் '04' ரகசியக்…

சிறுநீர் கழிக்கும் காட்சி ‘கற்பனையானது’ என்கிறார் மே 13 சாட்சி

சர்ச்சைக்குரிய தண்டா புத்ரா திரைப்படத்தில் முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார்  இல்லத்தில் இருந்த கொடிக் கம்பத்தின் மீது சீன இளைஞர்கள் குழு ஒன்று சிறுநீர்  கழிப்பதை காட்டும் காட்சி 'கற்பனையானது' 'முடியாத காரியம்' என மே 13  கலவரத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவர் சொல்கிறார். அந்த கொடிக்…