மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை உறுதி, சிலாங்கூர் எம்பி நம்பிக்கை

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடக்காதிருக்கலாம், ஆனால், பக்காத்தான் ரக்யாட் சிலாங்கூரில் ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்வதுடன் கூடுதல் இடங்களையும் கைப்பற்றும் என்ற நம்பிக்கை மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் நெஞ்சு நிறைய நிரம்பியுள்ளது. “எங்களுக்குக் கிடைத்த ஆய்வுத் தகவல்கள் பக்காத்தான் இப்போதிருப்பதைவிட கூடுதல் இடங்களைக் கைப்பற்றும்…

முர்தாட் வீடியோவை இன்னும் 2 வாரங்களில் வெளியிட ஜாத்தி வாக்குறுதி

இந்த நாட்டில் முஸ்லிம்கள் மதம் மாற்றம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதற்கு ஆதாரம் எனத் தாம் கூறிக் கொள்ளும் வீடியோவை இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடுவதாக ஹசான் அலி வாக்குறுதி அளித்துள்ளார். அந்த வீடியோ ஒளிபரப்பப்படுவதற்கு முன்னர் "இறுதி நேர நடைமுறைகளை" மேற்கொள்ள வேண்டியிருப்பதாக ஜாத்தி என அழைக்கப்படும்…

அமைச்சு ‘ஏற்பாடு’: மாஹ்புஸ் மீது வழக்குப் போடப் போவதாக ஹசான்…

முன்னாள் சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலி, தமக்கு இளைஞர் விளையாட்டு அமைச்சு ஆதரவு வழங்குவதாகக் கூறியுள்ள பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் மீது வழக்குப் போடப் போவதாக இன்று மருட்டியுள்ளார். "பாஸ் புல்லுருவிகளின் கருவி" என மாஹ்புஸை வருணித்த அவர், பிஎன் பக்கம் இளைஞர்களைக்…

பாஹ்ரோல்ராஸி பேசுவதற்கு கெடா கூட்டத்துக்கு முன்னதாக தடை

கடந்த வியாழக்கிழமை கோலாலம்பூரில் பாஸ் தலைமையகத்தில் கூட்டம் நடைபெற்ற பின்னர் தாம் பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டதாக கெடா மாநில பாஸ் துணை ஆணையாளர் பாஹ்ரோல்ராஸி  ஸாவாவி கூறுகிறார். பாஹ்ரோல்ராஸிக்கும் அவரது எஜமானரான கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக்-கிற்கும் இடையிலான தகராறைத் தீர்க்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட அந்தக்…

“ஆக, பினாங்கு முதலமைச்சரையும் குறை சொல்ல வேண்டுமா?”

"கை தட்டுவதற்கு இரண்டு கரங்கள் தேவை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒரு கை மடங்கியுள்ள வேளையில் அது எப்படி தட்ட  முடியும்?" பினாங்கு வன்முறையில் சம்பந்தப்பட்ட பிஎன் இளைஞர்கள் நீக்கப்படுவர் கொதிக்கும் மண்: பினாங்கில் லினாஸ் எதிர்ப்பு பேரணி நிகழ்ந்தது முதல் முதலைமைச்சர் மீது பழி…

நஜிப்: லினாஸ் கழிவுப் பொருட்கள் கெபெங்கிலிருந்து வெளியே கொண்டு செல்லப்படும்

குவாந்தான் கெபெங்கில் அமையும் லினாஸ் அரிய மண் தொழில் கூடத்தின் கழிவுப் பொருட்கள் எந்த ஒரு குடியேற்றப் பகுதியிலிருந்தும் வெகு தொலைவில் உள்ள இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லப்படும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளார். உள்ளூர் சமூகத்தின் கவலையை பரிசீலித்த பின்னர் அந்த முடிவு செய்யப்பட்டதாக…

எம்ஆர்டி, இடிப்பதில்லை என்னும் உடன்பட்டை ஆறு நில உரிமையாளர்களுடன் செய்து…

எம்ஆர்டி கார்ப்பரேஷன், கோலாலம்பூர் ஜாலான் சுல்தான் நில உரிமையாளர்கள் ஏற்கனவே விடுத்த கோரிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்கு உத்தரவாதம் அளிக்கும் ஒப்பந்த அம்சங்களில் (POA) கையெழுத்திட்டுள்ளது. பின்னர் கையெழுத்தாகும் இரு தரப்பு உடன்பாட்டில் இணைக்கப்படும் அம்சங்களை அந்த எம்ஆர்டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்ஹார் அப்துல் ஹமிட் நேற்று…

என்எப்சி இயக்குனர்கள் ரிம81.4 மில்லியனை எடுத்துள்ளனர்

என்எப்சி நிறுவனத்தின் இயக்குனர்கள் 2009 ஆண்டு வரையில் கிட்டத்தட்ட ரிம81.4 மில்லியனை அந்நிறுவனத்தின் கணக்கிலிருந்து வேறு நிறுவனங்களுக்கு மாற்றியுள்ளனர் என்று டிஎபி தேசிய விளம்பர தலைவர் டோனி புவா இன்று கூறினார். அத்தொகையை தனியார் நிறுவனங்களின் இயக்குனர்கள் வைத்துள்ளனர். அத்தொகை என்எப்சியிடம் திருப்பிக் கொடுக்கப்படும் என்பதற்கான எந்த உத்தரவாதமும்…