மியான்மர் நாட்டவர் 5,000 பேரை அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் பணியின் முதற்கட்ட நடவடிக்கை செப்டம்பர் 29ஆம் தேதி தொடங்கும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக 1,476 மியான்மர் நாட்டவர்கள் இரண்டு மலேசிய போர்க்கப்பல்கள் மற்றும் ஒரு மியான்மர் மருத்துவக் கப்பல் மூலம் திருப்பி அனுப்பப்படுவார்கள்…
80 விழுக்காட்டு வாக்காளர்களை எதிர்பார்க்கிறது இசி
நாளை, காஜாங் இடைத் தேர்தலில், அங்குள்ள 38,055 வாக்காளர்களில் 80 விழுக்காட்டினர் வாக்களிக்க வருவார்கள் எனத் தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது. வார இறுதி தேர்தல்களில் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க திரண்டுவருவது வழக்கம் என்று இசி செயலாளர் அப்துல் கனி சாலே கூறினார். அது, 13வது பொதுத் தேர்தலில் பதிவான …
ஆய்வு: பிகேஆரின் பெரும்பான்மை குறையும்
நாளை காஜாங் இடைத் தேர்தலில் பிகேஆரின் பெரும்பான்மையில் 2,000 குறையலாம் என யுசிஎஸ்ஐ பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று காண்பிக்கிறது. யுசிஎஸ்ஐ கருத்துக்கணிப்பு மைய நிறுவனர் இங்கேரிங் மியாங் ஹொங், 400 பேரிடம் தொலைபேசி வாயிலாகவும் நேரடிப் பேட்டி மூலமாகவும் கருத்துக் கேட்கப்பட்டதற்கு அவர்களில் 54.25 விழுக்காட்டினர் மட்டுமே பிகேஆரின் …
எம்எச்370: ரேடாரின் பலவீனத்தை வெட்டவெளிச்சமாக்கியது
வானத்தில் பறந்துகொண்டிருந்த ஒரு பெரிய ஜெட் விமானம் மலேசிய ரேடார் கருவிகளில் பட்டு விடாமல் மாயமாய் மறைந்து விட்டது. விமானத் தயாரிப்பில் எவ்வளவோ முன்னேற்றங்கள் காணப்பட்டு அதிநவீன விமானங்கள் எல்லாம் வந்துவிட்டன. ஆனால் வேடிக்கை என்னவென்றால், அவை வானில் பறப்பதற்கு நிலத்தில் உள்ள பழைய ரேடார் கருவிகளைத்தான் நம்பி …
எம்எச்370: தேடும் பணி தொடர்கிறது
பெர்துக்குத் தென்மேற்கே, இந்தியப் பெருங்கடலில் செயற்கைக்கோள்கள் பார்த்த மிதக்கும் பொருள்களைக் கண்டுபிடிக்கும் ஆஸ்திரேலியாவின் தேடும் நடவடிக்கை இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. தேடலுக்கு உதவியாக நீண்ட தூரம் பறக்கக் கூடிய நவீன ஜெட் விமானங்கள் இரண்டைச் சேர்த்துக் கொண்டிருப்பதாக ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு ஆணையம் இன்று காலை அறிவித்தது.…
என்.எஸ்.ராஜேந்திரனின் தமிழ்ப்பள்ளிகளுக்கான மேம்பாட்டு திட்டவரைவு ஒரு தேர்தல் நாடகம்!
-அண.பாக்கியநாதன், மார்ச் 22, 2014 மலேசிய வரலாற்றில் இந்திய சமுதாயத்தை ஏமாற்ற எத்தனையோ டத்தோகளையும், பேராசிரியர்களையும், முனைவர்களையும் முன்நிறுத்தி பாரிசான் நடத்திய நாடகங்களுக்கு அளவே இல்லை. படித்தவர்கள், பட்டதாரிகள் மீது இச்சமுதாயம் கொண்டுள்ள மாயையால், மதிப்பால் எத்தனை முறை வேண்டுமானாலும் அரசாங்கம் அவர்களைப் பயன்படுத்தும்? ஆனால், பாரிசான் ஏமாற்று…
ஐயோ, நம்புங்கள்: நஜிப் சொன்னதைச் செய்வாராம்!
மஇகாவின் உதவித் தலைவர் எஸ். சோதிநாதன் இந்தியர்கள் பார்சான் நேசனலுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அரசாங்கத்திலிருந்து பணி ஓய்வு பெற்றவர்கள் அமைப்பு உறுப்பினர்களுடன் நடத்திய ஒரு சந்திப்பில் கூறியதாக நேற்றைய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கூறுகிறார். அதிகமான இந்தியர்கள் அரசாங்க…
வணிகர்கள்: ஜிஎஸ்டி எப்படி வேலை செய்யும் என்பது தெரியாது
பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) பற்றி மலேசிய, சீனர் வணிக, தொழிலியல் சங்கக் கூட்டமைப்பு (ஏசிசிஐஎம்) மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் கிட்டதட்ட பாதிப்பேர் ஜிஎஸ்டி எப்படிச் செயல்படும் என்பதை அறியாதவர்களாக இருப்பது தெரிய வந்தது. 345 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 47 விழுக்காட்டினர் ஜிஎஸ்டி செயல்படும் விதம் புரிபடவில்லை என்றனர்.…
ஆஸ்திரேலியா: மிதந்தது மூழ்கி இருக்கலாம்
இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் காணாமல்போன மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370-ஐத் தேடிக் கொண்டிருக்கும் பன்னாட்டுக் குழுவினர் இதுவரை எதையும் காணவில்லை. பன்னாட்டுக் கப்பல்களும் விமானங்களும் இந்தியாவுக்கும் தாய்லாந்துக்குமிடையில் அந்தமான் கடலில் ஏற்கனவே தேடிய பகுதியில் மீண்டும் தேடும் படலத்தை முடுக்கி விட்டுள்ளன. இரண்டு வாரங்களுக்குமுன் 239 பேருடன் காணாமல்போன …
இந்திய கடல்பகுதியில் தேடும்பணியை மேற்கொள்ள சீனாவுக்கு அனுமதி மறுப்பு
அந்தமான் -நிகோபார் தீவுகளுக்கு அருகில் காணாமல்போன எம்ஏஎஸ் விமானத்தைத் தேட தன் கப்பல்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற சீனாவின் கோரிக்கையை இந்தியா ஏற்கவில்லை. நான்கு போர்க்கப்பல்கள் இந்திய கடல்பகுதிக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று சீனா கேட்டுக்கொண்டதாகவும் இந்தியா அதற்கு “நயமாக மறுப்புத் தெரிவித்துவிட்டதாகவும்” இந்திய அதிகாரிகள்…
மசீச: ஆவி வாக்காளர்களை அடையாளம் காட்டினால் ரிம1,000 இனாம்
காஜாங்கில் ஆவி வாக்காளர்கள் குவிந்திருப்பதாக ஒரு வதந்தி. உடனே, மசீச ஆவி வாக்காளர்களைப் பிடிக்கும் இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. காஜாங்கில் ஆவி வாக்காளர்களை அடையாளம் காட்டுவோருக்கு ரிம1,000 வெகுமதி வழங்கப்படும் என அது அறிவித்துள்ளது. மசீச-வுக்கு ஆவி வாக்காளர்களை அறவே பிடிக்காது என்றும் அதற்காகத்தான் இந்தப் பரிசுத் தொகை …
பள்ளிவாசல்களில் டிஏபி படங்கள்
காஜாங்கில் வாக்களிப்புக்கு 48 மணி நேரத்துக்கும் குறைவான நேரமே இருக்கும் வேளையில், இன்று காலை பல தொழுகை இல்லங்களிலும் பள்ளிவாசல்களிலும் டிஏபி ஸ்டிக்கர்கள்(ஒட்டும் படங்கள்) ஒட்டப்பட்டிருந்தன. நான்கு பள்ளிவாசல்களிலும் தொழுகை இல்லங்களிலும் சுங்கை கந்தான், செளஜானா இம்பியான், காஜாங் பாரு ஆகிய இடங்களில் உள்ள கொடைவள்ளல் ஊஜாங் பாகோங்கின் …
காஜாங் ஸ்டேடியத்தில் ரிபோர்மாசி 2.0: அன்வார் தொடக்கி வைக்கிறார்
பிகேஆர் நடப்பில் தலைவர், அன்வார் இப்ராகிம் இன்று பிற்பகல் 3 மணிக்கு புத்ரா ஜெயா, மரியோட் தங்குவிடுதியில் நடைபெறவிருந்த செய்தியாளர் கூட்டத்தைத் தள்ளி வைத்துள்ளார். அதற்குப் பதிலாக அவர், இன்றிரவு 9 மணிக்கு காஜாங் விளையாட்டரங்கில் ரிபோர்மாசி 2.0-ஐ தொடக்கி வைத்து அதில் உரையாற்றுவார்.
விமானம் புறப்படுவதற்குமுன் விமானி தொலைபேசியில் பேசினார்
மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 விமானம் புறப்படுவதற்குமுன் விமானி யாரிடமோ தொலைபேசியில் பேசியிருக்கிறார் என்று ஒரு தகவல் கூறுகிறது.. கேப்டன் ஸஹாரி அஹ்மட் ஷா யாரிடம் பேசினார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் ஆய்வாளர்கள் இப்போது ஈடுபட்டிருக்கிறார்கள் என பிரிட்டனின் த சன் நாளேடு கூறியுள்ளது. மார்ச் 8, பின்னிரவு …
பெர்காசாவுக்கு நிதி உதவி அளிக்கும் நம்பிக்கை மன்னன் நஜிப்பின் துரோகச்…
-ஜீவி காத்தையா, மார்ச் 20, 2014 பெர்காசா ஒரு மலாய் தீவிரவாத, அரசுக்கு அனுகூலமான ஓர் அரசு சார்பற்ற அமைப்பு. அதற்கு முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட், முன்னார் ஐஜிபி மற்றும் முன்னாள் தலைமை நீதிபதி போன்றோரின் ஆதரவும் அரவணைப்பும் உண்டு. அம்மோவின் முழு ஆதரவும் உண்டு. அம்னோ…
பெர்காசாவுக்கு ‘ஒரு சிறு உதவித்தொகை’ கொடுக்கப்பட்டதை அரசாங்கம் ஒப்புக்கொண்டது
பெர்காசாவுக்கு நிதிஉதவி செய்ததை ஒப்புக்கொண்ட கூட்டரசு அரசாங்கம், அந்த வலச்சாரி என்ஜிஓ-வுக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என்பதையும் தெளிவுபடுத்தியது. பிகேஆரின் பாயான் பாரு எம்பி சிம் ட்சே ட்சின்னுக்கு வழங்கிய எழுத்து வடிவிலான பதிலில் இதனைத் தெரிவித்த பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம், ஒற்றுமை மீதான கருத்தரங்கம் …
குலசேகரன்: ஜுனாய்டி, மன்னிப்பு கேள், இல்லையேல் நடவடிக்கை
வான் ஜுனாய்டி வான் ஜாப்பார் என்ற ஒரு கீழ்த்தரனமான துணை உள்துறை அமைச்சர் சட்டரீதியான பாலியல் வன்முறை குறித்து போலீஸ் புகார் செய்யப்படுவது பற்றி தெரிவித்திருந்த கருத்துக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று ஈப்போ பாரத் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் என்று கேட்டுக்கொண்டார். அந்த வான்…
சிதைந்த பகுதிகள் உலகின் மிக மோசமான கடல்பகுதியில் காணப்பட்டன
ஆஸ்திரேலிய செயற்கைக்கோள் படங்களில் காணப்படுபவை காணாமல்போன எம்எச்370-இன் உடைந்த பகுதிகளாக இருக்கலாம் என்று கருதப்படுகின்ற வேளையில் அப்பொருள்களைத் தேடி எடுத்து உறுதிப்படுத்திக்கொள்வது இலேசுபட்ட காரியமாக இருக்காது எனத் தெரிகிறது. ஆஸ்திரேலிய கடலியல் ஆய்வாளர் ஒருவர், அந்தச் சிதைந்த பகுதிகள் மிதப்பது உலகின் மிக மோசமான கடல்பகுதியாகும் என்கிறார். அப்பகுதியில், …
பிகேஆர்: காஜாங் இடைத் தேர்தல் மத்திய அரசாங்கம் மீதான ஒரு…
பேராக்கிலிருந்தும் பினாங்கிலிருந்தும் காஜாங் வந்துள்ள பிகேஆர் கட்சியினர், 'Jom Balik Mengundi' (வீடு திரும்பி வாக்களிப்போம்) என்னும் இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். காஜாங்குக்கு வெளியில் வசிக்கும் சுமார் 2,000 வாக்காளர்களைக் குறி வைத்துத் தொடங்கப்பட்டுள்ள ஒரு இயக்கம் அது. தங்கள் வேட்பாளரான பிகேஆர் தலைவர் வான் அசீசா வான் …
அமைச்சு: அன்வார் ஜப்பான் செல்ல உதவினோம்
வெளியுறவு அமைச்சு மேற்கொண்ட விடாமுயற்சியின் காரணமாகத்தான் அன்வார் இப்ராகிம், பிப்ரவரி 26ஆம் நாள் எந்தப் பிரச்னையுமின்றி ஜப்பானுக்குச் சென்று உரையாற்றித் திரும்பிவர முடிந்தது என வெளியுறவு துணை அமைச்சர் ஹம்சா சைனுதின் கூறினார். மக்களவையில் ஷம்சுல் அகின் (பிகேஆர்- புக்கிட் கட்டில்) கேட்டிருந்த கெள்விக்குப் பதிலளித்த ஹம்சா, அமைச்சு …
செய்தியாளர்கள்: பயணிகளின் உறவினர்கள் எங்களுடன் பேசக்கூடாதா?
நேற்று நடந்த ஒரு நிகழ்வால் மலேசிய அரசாங்கம் மீண்டும் பன்னாட்டு ஊடகங்களின் குறைகூறலுக்கு இலக்கானது. வழக்கம்போல் அன்றாட செய்தியாளர் கூட்டம் நேற்றும் நடந்தது. அப்போது காணாமல்போன விமானப் பயணிகளின் உறவினர்கள் செய்தியாளர்களுடன் பேச முனைந்தனர். அதை மலேசிய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இது ஏனென்று வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்குப் புரியவில்லை. அதிகாரிகள் …
செயற்கைக்கோள் கண்ட பொருள்கள் எம்எச்370-இன் உடைந்த பகுதிகளா?
ஆஸ்திரேலிய பிரதமர் டோனி எப்பட், செயற்கைக்கோள் இரண்டு பொருள்களைப் படம்பிடித்திருப்பதாகவும் அவை மார்ச் 8-இல், 239 பேருடன் காணாமல்போன எம்ஏஎஸ் விமானத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். “தேடும் பணியில் புதிதாக, நம்பத்தக்க தகவல் வந்திருக்கிறது......இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியிலிருந்து”, என எப்பட் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். விமானங்கள் பொருள்கள் …
எம்எம்ஏ: பாலியல் வல்லுறவு பற்றி அமைச்சர் ‘அள்ளிவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது’
பாலியல் வல்லுறவு என்பதை மலாய்க்காரர்-அல்லாதார் சகஜமானது என்று ஏற்றுக்கொள்வதாக உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி வான் ஜாபார் அள்ளி விட்டிருப்பதைக் கண்டு மலேசிய மருத்துவச் சங்கம் “நம்ப முடியாத அளவுக்கு அதிர்ச்சி அடைந்திருப்பதாக” அதன் தலைவர் டாக்டர் என்.கே.எஸ். தர்மசீலன் கூறியுள்ளார். வான் ஜுனாய்டியின் கூற்று “இழிவானது,…
ஆத்திரமுற்ற சீன நாட்டவர் செய்தியாளர் கூட்டத்தில் அத்துமீறி நுழைந்தனர்
சீன நாட்டவர் அடங்கிய ஒரு சிறு கும்பல், எம்எச்370 விமானம் பற்றி விளக்கமளிக்கப்படும் அரங்குக்குள் அத்துமீறி நுழைந்து செய்தியாளர்களிடம் பேச முற்பட்டதால் அரங்கினில் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. தங்களைக் காணாமல்போன விமானப் பயணிகளின் உறவினர்கள் என்று கூறிக்கொண்ட அந்த ஒரு டஜன் பேரும், மலேசியாவுக்கு அழைத்துவரப்பட்ட தங்களுக்கு …


