திரங்கானுவின் மராங்கில் இரண்டு மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து, பள்ளிகளில், குறிப்பாக விடுதிகள் உள்ள பள்ளிகளில், மேற்பார்வை மற்றும் பாதுகாப்பு இடைவெளிகளை மறுபரிசீலனை செய்யுமாறு சுஹாகாம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அனைத்து பள்ளி அமைப்புகளும் மாணவர்களுக்கு, குறிப்பாக சிறப்புத் தேவைகள் உள்ளவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்…
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு முன்னாள் முதலமைச்சர் அலி ருஸ்தாம் எதிர்க்கட்சிகள்…
அண்மைய காலமாக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு எதிர்க்கட்சிகளே பழியை ஏற்க வேண்டும் என முன்னாள் மலாக்கா முதலமைச்சர் அலி ருஸ்தாம் கூறுகிறார். காரணம் அந்த எதிர்க்கட்சிகள் தடுப்புக் காவல் சட்டங்கள் ரத்துச் செய்யப்பட வேண்டும் என வற்புறுத்தியதாகும். "அவசர காலச் சட்டமும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டமும்…
என்ஜிஓ: அபாண்ட குற்றச்சாட்டுக்காக துணைப் பிரதமரை விசாரிக்க வேண்டும்
நாய் பயிற்றுனரின் காணொளி தொடர்பில் தப்பான கருத்துத் தெரிவித்துள்ள துணைப் பிரதமர் முகைதின் யாசினை தேசிய நிந்தனை சட்டத்தின்கீழ் விசாரிக்க வேண்டும் என்ஜிஓ-களின் கூட்டணி ஒன்று கூறியுள்ளது. அவ்விவகாரம் தொடர்பில் விரைவில் போலீசில் புகார் செய்யப்போவதாக மலேசிய இந்தியர் முன்னேற்றச் சங்க (மிபாஸ்) தலைவர் எஸ்.பாரதிதாசன் கூறினார். “முகைதின்…
ராயா வாழ்த்து காணொளியில் நாய்களுடன் காட்சியளிப்பவர் செகாமாட் அனுப்பப்படுகிறார்
நாய்கள் உடன் வைத்துக்கொண்டு ஹரி ராயா வாழ்த்துக் கூறும் காணொளியைப் பதிவேற்றிய நாய் பயிற்றுனர் மஸ்னா முகம்மட் யூசுப், இன்று விசாரணைக்காக செகாமாட் அனுப்பப்படுவார். தாங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள புகார் செகாமாட்டில் செய்யப்பட்டது என்பதால் அங்கு அவர் அனுப்பப்படுவதாக போலீஸ் தெரிவித்தது என மஸ்னாவின் வழக்குரைஞர் என். சுரேந்திரன்…
பள்ளிக்கூடங்களில் இனவாதம்-அதற்கு முக்கியக் காரணம் அம்னோவே
"இது பெரிய பனிப்பறையின் நுனியைப் போலத் தெரிகிறது. பள்ளிக்கூடங்களில் நிலவும் இனப்பாகுபாடு பற்றிய பல சம்பவங்கள் வெளியில் தெரிவதில்லை" 'Balik India, china' எனச் சொன்னதை தலைமை ஆசிரியை ஒப்புக் கொள்கிறார் ஒடின்: நான் சீனனும் அல்ல இந்தியனும் அல்ல. ஆனால் அந்த இரண்டு வம்சாவளி மக்களும் நடத்தப்படும்…
நுருல் இஸ்ஸா லெம்பா பந்தாய் எம்பி-யாக தொடருவார்
லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நுருல் இஸ்ஸா அன்வாருக்கு எதிராக லெம்பா பந்தாய் அம்னோ செயலாளர் முகமட் சாஸாலி கமிலான் சமர்பித்த தேர்தல் மனுவைக் கோலாலம்பூர் தேர்தல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. நுருல் இஸ்ஸாவின் வழக்குரைஞர் எட்மண்ட் போன் எடுத்துரைத்த பெரும்பாலான பூர்வாங்க ஆட்சேபங்களை தேர்தல் நீதிபதி…
மலேசியாவில் சர்ச்சைக்குரிய கல்வித் திட்டம் அறிமுகம் – BBC தமிழ்
மலேசியாவில் சர்ச்சைக்குரிய வகையில், அரசு அறிமுகப்படுத்தவுள்ள தேசிய கல்விப் பெருந்திட்டத்துக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன என்று பிபிசி தமிழ், செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு நாடு ஒரு மொழி’ எனும் கொள்கையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் சிறுபான்மை மக்களை பெரிதும் பாதிக்கும் என்றும் சீன மற்றும் தமிழ்…
ராயா வாழ்த்து தொடர்பில் நாய் பயிற்றுனர் கைது
நாய்கள் சூழ்ந்திருக்க ஹரி ராயா வாழ்த்துக் கூறுவதுபோல் காணொளி பதிவிட்டிருந்த நாய் பயிற்றுனர் மஸ்னா முகம்மட் யூசுப் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரைத் தொடர்புகொண்டு பேசியபோது புக்கிட் அமானில் பிடித்துவைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினார். போலீசின் சிறப்புப் பிரிவினரும் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணைய (எம்சிஎம்சி) அதிகாரிகளும் தம்மை விசாரித்ததாக அவர் தெரிவித்தார்.…
சொய் லெக்: கிறுக்கு பிடித்துவிட்டதா நோ ஒமாருக்கு?
குளியலறை உணவருந்தும் இடமாக பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் தகவல் அளித்தவரைத் தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரிக்க வேண்டும் என்று கூறிய சிலாங்கூர் அம்னோ தலைவர் நோ ஒமாரை மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் சாடினார். “அவருக்குக் கிறுக்குத்தான் பிடித்திருக்க வேண்டும். தேச நிந்தனைச் சட்டம் தவறாக…
சமயம் சட்டமானது! சட்டம் சமயமானது! குழப்பத்திற்கு யார் காரணம்?
கி. சீலதாஸ். செம்பருத்தி.காம் .மூத்த வழக்கறிஞர் சீலதாஸ் அவர்களின் இந்தச் சட்ட ஆய்வுக்கட்டுரை நுண்ணியமாக எழுதப்பட்டுள்ளது. எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ள இது, மதமாற்றம் சார்பாக எழுந்துள்ள பிரச்சனைகளுக்கான தீர்வுகளை ஆராய்கிறது – முதல் பகுதி உரிமை உள்ளதா? நம் உரிமைகள் எனும்போது, நமக்கு …
ஷாரியா சட்டத்துக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள் என்கிறார் பாஸ் இளைஞர்…
குற்றச் செயல்களை ஒடுக்குவதற்கு நடப்பிலுள்ள கிரிமினல் சட்ட முறை போதுமானதாக இல்லை என்றால் அதனைச் செய்வதற்கு ஷாரியா சட்டத்துக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும் என பாஸ் இளைஞர் தலைவர் நஸ்ருதின் ஹசான் சொல்கிறார். "பெருகி விட்ட குற்றச் செயல்களை சமாளிப்பதற்கு அதிகாரிகளிடம் யோசனைகள் வற்றி விட்டதாகத் தெரிகிறது. நாடும்…
AmBank வங்கி கொலையில் ‘நான்கு கண் பையனை’ போலீஸ் தேடுகின்றது
AmBank வங்கி நிறுவனர் ஹுசேன் அஹமட் நாஜாடி கொலையுண்ட சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபருடைய உருவப்படங்களை போலீசார் திங்கட்கிழமை வெளியிட்டுள்ளனர். அவை கேமிரா ஒளிப்பதிவுகளிலிருந்து பெறப்பட்டவையாகும். நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ள அந்தச் சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் முக்கிய நபர், 'Sei Ngan Chai' (நான்கு கண் பையன்) அல்லது…
அகமட் ஸாஹிட் இரட்டைத் தரத்தை பின்பற்றுவதாக டிஏபி குற்றம் சாட்டுகின்றது
டிஏபி சரி செய்து விட்ட தவறுக்காக புதிய தேர்தலை நடத்துமாறு அந்தக் கட்சிக்கு ஆணையிடப்பட்டுள்ள வேளையில், எளிதாக அழியக் கூடிய மை மீது தேர்தல் ஆணையம் தவறு செய்துள்ளதற்காக ஏன் புதிய தேர்தல்கள் நடத்தப்படவில்லை என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் வினவியுள்ளார். ஆகவே அந்த…
பாஸ்: துப்பாக்கி உரிமையாளர்களுடைய அடையாளங்களை வெளியிடுங்கள்
துப்பாக்கிகள் தவறான மக்களுடைய கரங்களில் விழுந்து விடாமல் தடுக்க போலீசார், வழங்கப்பட்டுள்ள எல்லாத் துப்பாக்கி அனுமதிகளையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என பாஸ் கேட்டுக் கொண்டுள்ளது. அண்மைய காலமாக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அது அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளது. அனுமதி பெற்ற துப்பாக்கி உரிமையாளர்களுடைய…
முக்ரிஸ்: ‘தாண்டா புத்ரா’வைத் திரையிடுங்கள்
கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர், ‘த நியு வில்லேஜ்’ திரைப்படம் மலாயா கம்முனிஸ்டு கட்சியின் புகழ்பாடுவதுபோல் இருந்தால் அதைத் திரையிடக்கூடாது என்று கூறியுள்ளார். அதற்குப் பதிலாக நாட்டின் உண்மையான வரலாற்றையும், நாட்டின் அமைதியையும் இறையாண்மையையும் பாதுகாக்கும் பணியில் பாதுகாப்புப் படைகள் செய்துள்ள தீரச் செயல்களையும் தியாகங்களையும் போற்றிப்புகழும்…
புதிய தடுப்புச் சட்டத்தை எதிர்க்க பிகேஆர் தயாராகிறது
அவசர காலச் சட்டத்தின் (EO) எந்த புதிய பதிப்பையும் பிகேஆர் கடுமையாக ஆட்சேபிக்கும். காரணம் கடந்த காலத்தில் அந்தச் சட்டம் அரசியல் எதிர்ப்பை குலைப்பதற்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. குற்றங்களை குறைப்பதற்கு அல்ல என்று அந்தக் கட்சியின் உதவித் தலைவர் என் சுரேந்திரன் கூறினார். புதிய தடுப்புச் சட்டம் குற்றச் செயல்களைச்…
எம்பி: திரைப்படங்களுக்குத் தடை விதிக்க வேண்டாம்
‘நியு வில்லேஜ்’ திரைப்படம் மீது சர்ச்சை தொடரும் வேளையில், பிகேஆர் எம்பி ஒருவர், நியு வில்லேஜ் அல்லது தாண்டா புத்ரா போன்ற வரலாற்றுப் படங்களைத் தடை செய்யக்கூடாது என்கிறார். “திரைப்படங்களோ, நூல்களோ கலைப்படைப்புகளைத் தடை செய்வதை எதிர்க்கிறேன். அது பேச்சுரிமைக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் எதிரானது”, என பாயான் பாரு…
நான் இஸ்லாத்தை அவமானப்படுத்தவில்லை என்கிறார் நாய் பயிற்சியாளர்
முஸ்லிம் மாது ஒருவர் தமது நாய்களுடன் ஹரி ராயாவைக் கொண்டாடுவதைக் காட்டும் காணொளிப் பதிவு ஒன்று கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தை தாம் அவமானப்படுத்தியதாக தம்மைக் கண்டிக்கின்றவர்கள் சொல்வதை 38 வயதான மஸ்னா முகமட் யூசோப் என்ற அந்த மாது மறுத்தார். உண்மையில் தம்மை பழிக்கின்றவர்கள் தான் தங்கள் சமயத்தை இழிவுபடுத்துகின்றனர்…
டிஏபி மறு தேர்தல் நடத்த வேண்டும் என்ற ஆணைக்கு காரணம்…
டிஏபி கட்சியின் மத்திய நிர்வாகக் குழுத் தேர்தலைச் செல்லாது என அறிவிக்கும் கடிதத்தை ஆர்ஒஎஸ் என்னும் சங்கப்பதிவதிகாரி அலுவலகம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதம் டிஏபி தலைமையகத்தில் நேற்று மாலை மணி 5 வாக்கில் நேரடியாகக் கொடுக்கப்பட்டது என அதன் அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக் கூறினார். அந்தக் கடிதத்தில்…
மேலும் நான்கு தேர்தல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி
தேர்தல் நீதிமன்றம், சிலாங்கூரில் பதிவு செய்யப்பட்ட நான்கு தேர்தல் முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளது. அவற்றில் ஒன்று செப்பாங் நாடாளுமன்றத் தொகுதிக்காக பிஎன் செய்த முறையீடு. பாஸ் கோலா சிலாங்கூர், சுங்கை புசார் நாடாளுமன்றத் தொகுதி முடிவுகளை எதிர்த்து மனு செய்திருந்தது. பிகேஆர் சாபாக் பெர்னாம் தொகுதிக்காக மனு…
துணைப் பிரதமர்: இஸ்லாத்தைப் பழித்துரைப்பது நாட்டில் பதற்றத்தை உருவாக்கும்
முஸ்லிம்களை ஆத்திரப்படவைக்கும் செயல்கள் நிற்காவிட்டால் மற்ற முஸ்லிம் நாடுகளில் நடப்பதுபோல் இங்கும் நெருக்கடி நிலை உருவாகலாம். இவ்வாறு எச்சரித்துள்ள துணைப்பிரதமர் முகைதின் யாசின், அமைதியை அனுபவிக்கும் ஒரு நாட்டில் அப்படிப்பட்ட நிலை உருவாகக் கூடாது என்றார். “இது, சமுதாயத்தில் ஆழ்ந்த புரிந்துணர்வு இல்லை என்பதைத்தான் காண்பிக்கிறது. முஸ்லிம்கள் கிறிஸ்துவத்தையோ…
அவதூறு கூறியதற்காக ஆர்பிகே ரிம 300,000 கொடுக்க உத்தரவு
மலேசியா டுடே வலைப்பதிவு ஆசிரியர் ராஜா பெட்ரா கமருடின் (ஆர்பிகே), மூத்த வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லாவுக்கு ரிம300,000 இழப்பீடு கொடுக்க வேண்டும் என கோலாலும்பூர் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008-இல், ஆர்பிகே அவரது வலைப்பதிவில் வெளியிட்டிருந்த மூன்று கட்டுரைகள் தொடர்பில் அவருக்கு எதிராக ஷாபி வழக்குத் தொடுத்திருந்தார்.
பல ஆண்டு போராட்டத்துக்குப் பின்னர் யனேஷாவுக்குக் குடியுரிமை கிடைத்தது
என்.யனேஷா, நாடற்றவராக இருந்த நிலை பத்தாண்டுப் போராட்டத்துக்குப் பின்னர் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது. தேசியப் பதிவுத்துறை (என்ஆர்டி) அவருக்கு குடியுரிமையும் அடையாள அட்டையும் வழங்கி உள்ளதாக அவரின் வழக்குரைஞர் அன்னவ் சேவியர்(இடம்) உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ரோசிலா யோப்பிடம் தெரிவித்தார். “ஆனால், அவரின் பிறப்புச் சான்றிதழில் மட்டும் குடியுரிமை-அற்றவர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது”, …
தலைமையாசிரியர் ‘பாலே இந்தியா, சீனா’ என்று சொன்னதை ஒப்பினார்
ஷா ஆலம் எஸ்எம்கே ஆலாம் மெகா தலைமையாசிரியர், இந்திய, சீன மாணவர்களை நோக்கி ‘இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிப் போங்கள்’ என்று சொன்னதை ஒப்புக்கொண்டார். இதைத் தெரிவித்த மஇகா தொகுதித் துணைத் தலைவர் ஏ.பிரகாஷ் ராவ், (வலமிருந்து இரண்டாவதாக இருப்பவர்) அவ்வாறு கூறியதற்காக அவர் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார் என்றார். மலாய்…


