நேபாளம், வங்கதேசம், மியான்மார் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆட்சேர்ப்பு சங்கங்களும், FWCMS-க்கான அணுகலைக் கட்டுப்படுத்தக்கூடிய ஏற்பாடுகள் குறித்து பாரபட்சமற்ற ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோருகின்றன. மலேசியா ஆகஸ்ட் 22 அன்று FWCMS அடிப்படையிலான ஆட்சேர்ப்பு கட்டமைப்பை நடைமுறைப்படுத்தியது. இதன் கீழ், FWCMS தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முகவர்கள்…
ஆஸி பிரதமர்: நஜிப் சொன்னது சரியே
ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பட், எம்எச்370 இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாக மலேசியப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியதைத் தற்காத்துப் பேசியுள்ளார். “கிடைத்துள்ள ஆதாரங்கள் விமானம் தொலைந்து போனதையும் இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் அது காணாமல் போயிருக்க வேண்டும் என்பதையும் காண்பிக்கின்றன. “அளவுக்கு அதிகமாகவே கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் …
புத்ராஜெயா மன்னிப்பு கோரவேண்டும், எம்எச்370 சீன பயணிகளின் உறவினர்கள் கோரிக்கை
காணாமல் போன மாஸ் எம்எச்370 தின் பயணம் இந்திய பெருங்கடலில் முடிந்து விட்டது என்று பிரதமர் நஜிப் ரசாக் வெளியிட்ட அகாலமான அறிக்கைக்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று அந்த காணாமல் போன விமானத்திப் பயணித்த சீன பயணிகளின் உறவினர்கள் கூறுகின்றனர். அதில் எவரும் உயிருடன்…
மலேசியாவுக்கு தேவை புதிய அரசாங்கம், புதிய ராடார் சிஸ்டம் அல்ல!
அரச மலேசிய ஆகாயப்படைக்கு தேவைப்படுவது புதிய ராடார் அமைவுமுறை அல்ல. மாறாக அதற்குத் தேவைப்படுவது புதிய அரசாங்கம் என்று பாஸ் கட்சியின் பாரிட் புந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் முஜாகிட் யுசுப் ராவா நேற்று பினாங்கில் கூறினார். அடையாளம் காணப்படாத விமானங்களை கண்டுபிடிப்பதற்கு அரச மலேசிய ஆகாயப்படைக்கு புதிய…
சரவாக் பாலிஞியான் தொகுதி இடைத் தேர்தலில் பிஎன் வெற்றி
சரவாக் மாநில பாலிஞியான் சட்டமன்ற இடைத் தேர்தலில் பிஎன் வேட்பாளர் யுஸ்ஸிப்நோஸ் 8,194 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிகேஆர் வேட்பாளர் அப்துல் ஜாலில் புஜாங் 1,283 வாக்குகளைப் பெற்றார். செலுத்தப்பட்ட மொத்த வாக்குகளில் யுஸ்ஸிப்நோஸ் 84 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார். பிஎன் பெரும்பான்மை வாக்குகள்…
நாட்டின் முதல் தமிழ் இடைநிலைப்பள்ளி: ம.இ.காவினற்கு ஒரு சவால் !
-மு. குலசேகரன், மார்ச் 29, 2014. தமிழ் இடைநிலப்பள்ளி ஒன்று இந்த நாட்டில் கட்டப்பட வேண்டுமென்பது இந்நாட்டில் உள்ள தமிழர்களின் நெடு நாளைய வேண்டுகோள். இந்தக் கனவு நிறைவேறினால் இந்திய மாணவர்கள் தங்களின் கல்வியை தொடக்கத் தமிழ்ப்பள்ளிகளில் இருந்து இடைநிலைப்பள்ளிகளில் அதே சூழலில் தொடர வாய்ப்பு அளிக்கும். …
இம்மார்சாட்: கடலில் விழுந்ததாக நாங்கள் சொல்லவில்லை
பிரிட்டனைச் சேர்ந்த செயற்கைக்கோள் நிறுவனமான இம்மார்சாட், எம்எச்370 “இந்தியப் பெருங்கடலில் விழுந்தது” என்ற மலேசிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அறிவிப்புக்கும் தனக்கும் தொடர்பில்லை எனக் கூறியுள்ளது. இம்மார்சாட் வழங்கிய தகவல்களை வைத்து அப்படியொரு முடிவை எடுத்தது மலேசிய அரசாங்கம்தான் என இம்மார்சாட் பேச்சாளர் ஜோனதன் சின்னாட் தெரிவித்தார்.…
பாலிங்கானில் பாதிக்கு மேற்பட்டோர் காலை 11 மணிக்குள் வாக்களித்தனர்
பாலிங்கான் இடைத் தேர்தலில் தகுதிபெற்ற வாக்காளர்களில் பாதிக்கு மேற்பட்டோர் வாக்களித்து விட்டனர். காலை மணி 11-க்கு, 13,233 வாக்காளர்களில் 7,085 பேர் வாக்களித்து விட்டனர் என உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது. பாலிங்கானில், 12-நாள் பரப்புரைக்குப் பின்னர் இன்று காலை 8மணிக்கு வாக்களிப்பு தொடங்கியது. பாலிங்கான் இடைத் தேர்தல் பிஎன்னின் …
பிகேஆர் தலைவர் பதவிக்கு அன்வார் போட்டி
பிகேஆர் தலைவரான பின்னர் சங்கப் பதிவதிகாரியால் அதிலிருந்து நீக்கப்படும் அபாயம் உள்ளபோதிலும் அன்வார் இப்ராகிம் அப்பதவிக்குப் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை அவர் சார்பாக பிகேஆரின் துணை பொருளாளர் லோ சீ சோங் கட்சித் தலைமையகத்தில் இன்று காலை சமர்ப்பித்தார். அன்வாரின் நடவடிக்கைக்கு நேர்முரணாக கர்பால் சிங், அரசநிந்தனை வழக்கில் …
கடப்பிதழ்களை இண்டர்போலின் தரவுத்தளத்தில் சரிபார்க்க 0.2 வினாடி போதும்
அனைத்துலக போலீஸ் அமைப்பான இண்டர்போல், அதன் தரவுத்தளத்தில் கடப்பிதழ்களைச் சரிபார்ப்பது சிக்கலான வேலை என்று மலேசியா கூறி இருப்பதை நிகாரித்துள்ளது. மலேசிய உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி, புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இண்டர்போலின் தரவுத்தளத்தில் கடப்பிதழ்களைச் சரிபார்க்கத் தொடங்கினால் குடிநுழைவுத்துறையின் வேலை வேகமாக நடக்காது என்று கூறியதை அடுத்து அது …
கர்பால் டிஏபி தலைவர் பதவியிலிருந்து விலகினார்
அரசநிந்தனைச் சட்டப்படி குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதால் டிஏபி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கர்பால் சிங் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். “இப்போதைய (குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்) சூழ்நிலையில் குற்றச்சாட்டுக்கும் தீர்ப்புக்கும் எதிராக நான் செய்துள்ள மேல்முறையீட்டின் முடிவு தெரியும்வரை டிஏபி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துக் கொள்கிறேன். “அதற்கிடையில், துணைத் தலைவர் …
விபத்தை அடுத்து லைனாஸ் பொருள்கள் சாலையில் சிதறின
இன்று காலை, பாகாங், லஞ்சாங்கில், லைனாஸ் தொழிற்சாலையின் பொருள்களை ஏற்றிச் சென்ற ஒரு லாரி விபத்துக்குள்ளானதை அடுத்து அப்பொருள்கள் சாலையில் சிதறிக் கிடந்தன. அச்சாலைப் பகுதி போக்குவரத்துக்கு மூடப்பட்டது. அச்சம்பவத்தை உறுதிப்படுத்திய லைனாஸ் மலேசியா பொது உறவு மற்றும் தொடர்பு மேலாளர் அமின் அப்துல்லா, அப்பொருள்கள் ஆபத்தற்றவை என்றும் …
சீனப் பயண நிறுவனங்கள் எம்ஏஎஸ் பயணச் சீட்டு விற்பனையை நிறுத்தின
சீனாவில் இணையத்தளத்தில் செயல்படும் சில பயண நிறுவனங்கள் மலேசிய விமான நிறுவனத்தின் பயணச் சீட்டுக்களை விற்பனை செய்வதை நிறுத்திக் கொண்டிருக்கின்றன. “எம்எச் விமானப் பயணத்துக்கு என்ன ஆனது என்ற உண்மை தெரியும்வரை” எம்ஏஎஸ்-ஸைப் புறக்கணிக்கப் போவதாக சீனாவின் பயண நிறுவனங்கள் பல தெரிவித்துள்ளதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் …
எம்எச்370: தேடும் பணி தொடர்கிறது
காணாமல்போன மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 விமானத்தைத் தேடும் பணி இன்று மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. நேற்று வானிலை மோசமாக இருந்ததால் தேடும் பணி இரத்துச் செய்யப்பட்டது. இன்றும் வானிலை மோசமாகத்தான் இருந்தது. ஆனாலும் பகலில் நிலைமை சீரடையலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. வானிலை மோசமடைந்திருந்தாலும் ஆறு கப்பல்கள் …
அன்வாரைத் தடுப்பதா, கூடாதா- அடினானின் தடுமாற்றம்
சரவாக் முதலமைச்சர் அடினான் சதேம், பிகேஆர் ‘சிறு’ தலைவர்கள் சரவாக்கினுள் நுழைவதைத் தடுத்து நிறுத்தினார். ஆனால் அதன் பெருந் தலைவர் அன்வார் இப்ராகிமைத் தடுக்கவில்லை. இது அரசியல் பார்வையாளர்களுக்குப் பெரும் வியப்பாக இருந்தது. மார்ச் 25-இல், பாலிங்கான் இடைத் தேர்தலில் பரப்புரை செய்வதற்காக சென்ற பிகேஆர் தலைமைச் செயலாளர்…
லிம்: குளறுபடி செய்த துணை அமைச்சரைத் தூக்குவீர்
அரசாங்கத்தின்மீதும் நாட்டின்மீதுமுள்ள நம்பிக்கையைக் கெடுக்கும் வகையில் நடந்துகொண்ட தற்காப்புத் துணை அமைச்சர் அப்துல் ரஹிம் பக்ரி பதவி விலக வேண்டும் அல்லது பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று குமுறுகிறார் லிம் கிட் சியாங். மார்ச் 8-இல் எம்எச்370 விமானத்தை அரச மலேசிய ஆகாயப்படை இடைமறிக்காததற்கு துணை அமைச்சர் கூறிய …
நாளை முதல் பருவநிலையில் மாற்றம் ஏற்படலாம்
மலேசிய வானிலை ஆய்வுத்துறை மார்ச் 29-இலிருந்து மே மாதத் தொடக்கம் வரை பருவநிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கிறது. பருவநிலை மாற்றத்தால், தீவகற்ப மலேசியாவின் மேற்கு கரையோர மாநிலங்களில் அடிக்கடி இடியுடன்கூடிய கனத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வுத்துறை ஆருடம் கூறியுள்ளது. பெரும்பாலும் பகலிலும் மாலை நேரங்களிலும் …
அமெரிக்காவின் தீர்மானம் அமோக வெற்றி! சங்கடத்தில் இலங்கை!
ஐக்கிய நாட்டு மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நேற்று அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் அமோக வெற்றி பெற்றது. அமெரிக்கா, பிரிட்டன், மெஸிடோனியா, மொரீஷியஸ், மொன்டேநேக்ரோ ஆகிய நாடுகள் முன்னின்று கொண்டுவந்த தீர்மானத்திற்கு 47 உறுப்பு நாடுகளில் 23 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, சவூதி…
இரண்டாவது பாலத்துக்கான கட்டணம் பரம இரகசியம்
பினாங்கின் இரண்டாவது பாலம் திறக்கப்பட்டு 27 நாள்கள் ஆனாலும்கூட அதற்கான சாலைக்கட்டணம் இன்ன்மும் “மர்மமாகவே” இருப்பது வருத்தமளிப்பதாக பிகேஆர் பாயான் பாரு எம்பி சிம் ட்சே ட்ஸின் கூறினார். இதன் தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் பொதுப்பணி துணை அமைச்சர் ரோஸ்னா அப்துல் ரஷிட் ஷிர்லினுடன் “காரசாரமாக விவாதம்” நடத்தியதாக …
‘மலேசியாகினி, FZ ஆகியவை பத்திரிகை வடிவில் வந்தால் மக்களைக் குழப்பும்’
மலேசியாகினி செய்தித் தளம், FZ.com ஆகியவை செய்திதாள் உரிமம் கேட்டு செய்திருந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு விளக்கமளித்த உள்துறை அமைச்சர் “அளவுக்கு அதிகமான” செய்தித்தாள்கள் இருந்தால் மக்கள் “குழப்பமடைவர்” என்றார். நாடாளுமன்றத்தில் ஜோஹாரி அப்துலுக்கு (பிகேஆர்- சுங்கை பட்டாணி) வழங்கிய எழுத்துப்பூர்வமான பதிலில் அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, “நாட்டில் …
பாஸ்: ‘ராஜா போமோ’ இன்னும் சடங்குகள் செய்ய அனுமதிக்கப்படுவது ஏன்?
தம்மை ‘ராஜா போமா’ (போமோக்களின் அரசன்) என்று கூறிக்கொள்ளும் இப்ராகிம் மாட் ஜைன், எம்எச்370 தொடர்பில் தொடர்ந்து சடங்குகள் செய்ய அனுமதிக்கப்படுவது ஏன் என பாஸ் இளைஞர் பகுதி கேள்வி எழுப்பியுள்ளது. பேராக், பூலாவ் செம்பிலானில், “கடலிலிருந்து பிணங்களை மேலே கொண்டு வருவதற்கான” சடங்கு ஒன்றை அவர் செய்வதாகக்…
ஒவ்வொரு பயணிக்கும் ரிம580,000 இழப்பீடு கொடுக்க வேண்டியிருக்கும்
பன்னாட்டு சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டப்படி எம்எச்370 பயணிகள் ஒவ்வொருவருக்கும் மலேசிய விமான நிறுவனம் சுமார் ரிம580,000 இழப்பீடு கொடுக்க வேண்டியிருக்கும். பயணத்தின்போது இறக்கும் பயணிகளுக்கு சட்டப்படியான கோரிக்கை எதுவுமின்றியே விமான நிறுவனங்கள் யுஎஸ்$175,800 வழங்க வேண்டும் என மொண்ட்ரியோல் சட்டம் கூறுகிறது. பயணிகளின் குடும்பத்தார் வழக்கு தொடுத்து …
தாய் செயற்கைக்கோள் 300 பொருள்களைக் கடலில் கண்டது
காணாமல்போன மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 விமானத்தைத் தேடும் இடத்துக்கு 200 கிலோ மீட்டர் தென்மேற்கே சுமார் 300 பொருள்கள் இந்தியப் பெருங்கடலில் மிதப்பதை தாய்லாந்தின் செயற்கைக்கோள் கண்டிருக்கிறது. கடலில் மிதக்கும் பொருள்கள் பற்றிய செயற்கைக்கோள் படங்களைக் காண்பிக்கும் ஐந்தாவது நாடு தாய்லாந்து. ஏற்கனவே ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், …
மோசமான வானிலையால் தேடும் பணி இரத்து
தென் இந்தியப் பெருங்கடலில் காணாமல்போனதாக ஊகிக்கப்படும் மலேசிய விமான நிறுவனத்தின் விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த விமானங்கள் அனைத்தும் திருப்பி அழைக்கப்பட்டிருக்கின்றன. அப்பகுதியில் கடலில் கொந்தளிப்பு மிகுந்திருப்பதாகவும் எதையும் பார்ப்பதற்கே சிரமமாக இருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. “அங்குள்ள விமானங்கள் எல்லாம் திரும்பி வருகின்றன. மேற்கொண்டு தேடும்பணி இரத்துச் செய்யப்பட்டுள்ளது”, …


