எம்எச்370 தேடும்பணிக்கு அமெரிக்கா இதுவரை யுஎஸ்$3 மில்லியன் செலவிட்டுள்ளது

காணாமல்போன  மலேசிய  விமான  நிறுவனத்தின்  எம்எச்370  விமானத்தைத்  தேடுவதற்காக  அமெரிக்க  இராணுவம்  யுஎஸ்$3.3 (ரிம10.8) மில்லியனுக்குமேல்  செலவிட்டிருப்பதாக  பெண்டகன்  பேச்சாளர்  ஒருவர்  நேற்றுத்  தெரிவித்தார். “அது, தேடும்  பணியில்  ஈடுபட்டுள்ள  விமானங்கள்,  கப்பல்கள்,  ஹெலிகாப்டர்களுக்குச்  செலவான  தொகை”, என  கர்னல்  ஸ்டீவ்  வாரன்  கூறினார். விமானத்தைத்  தேடும்பணிக்குத்  தற்காப்பு …

சீன நாட்டுச் சுற்றுப்பயணி சாபாவில் கடத்தப்பட்டார்

சாபாவில், சீன நாட்டுச்  சுற்றுப்பயணி  ஒருவரையும்  தங்குவிடுதி  பணியாளர்  ஒருவரையும்  ஆயுதமேந்திய  நபர்கள்  கடத்திச்  சென்றனர். இச்சம்பவம்  நேற்றிரவு  சிங்காமாதா  ரீப்  ரிசோர்டில்  நிகழ்ந்ததாக  சைனா  மெட்ரோபோலிஸ்  டெய்லி  அறிவித்துள்ளது. நேற்றிரவு  சுமார்  10.30க்கு  ஆயுதமேந்திய  ஐந்து, ஆறு  ஆள்கள்  தங்குவிடுதிக்குள்  புகுந்து  இந்தக் கடத்தலை  நடத்திவிட்டு  சில …

சீனத் தூதர்: பெய்ஜிங்குக்கு மலேசியாமீது கோபமில்லை; எல்லாம் மேலைநாட்டு ஊடகங்களின்…

மலேசியாவுக்கான  சீனத்  தூதர்  ஹுவாங்  ஹுய்காங், எம்எச்370  நெருக்கடியைக் கையாண்ட விதம்  குறித்து  தம்  நாட்டு  அரசாங்கம்  மலேசியாமீது  கோபம்  கொண்டிருக்கவில்லை  என்றார். இன்று  செய்தியாளர்  கூட்டமொன்றில்  பேசிய  ஹுவாங்,  மேலை  நாட்டு  ஊடகங்கள்தான் சீன நாட்டுப்  பயணிகளின்  குடும்பத்தாரின்  உணர்வுகளைச்  சீண்டி  விட்டார்கள் என்றார். “சில  பொறுப்பற்ற …

போலீஸ் கடவுள் அல்லவே: குமுறுகிறார் 80-வயது முன்னாள் ஆசிரியர்

சி.சுகுமாரன்  இளவயதில்  தந்தையை  இழந்தார். அதன்பின்னர்  அவரின்  சிற்றப்பாவான  ஏ. குப்புசாமியின்  அரவணைப்பில்  வளர்ந்தார். குப்புசாமி  சொந்த  மகனைப்போல்  அவரைப்  பார்த்துக்  கொண்டார். ஆனால், 40-வது வயதில்  சுகுமாரன்,  தம்மைப்  பிரிந்துவிடுவார்  என்பதை  பணி ஓய்வுபெற்ற  80-வயது  குப்புசாமி  நினைத்துக்கூட  பார்த்ததில்லை.  கடந்த  ஆண்டு,  சுகுமாரன்,  சாலை  ஓரத்தில்…

ஷாஹிடானின் கூற்று வெற்றிபெறும் நோக்கில் தொகுதிகள் பிரிக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது

பிஎன்  அமைச்சர்  ஒருவர்  இன  அடிப்படையிலான  வாக்களிப்புத்தான்  மலேசியாவுக்கு  ஏற்றது  எனப்  பரிந்துரைத்திருப்பது  அந்த  அடிப்படையில்தான்  தேர்தல்  தொகுதிகள்  திருத்தி  அமைக்கப்படுகின்றனவோ  என்ற  கவலையைத்  தோற்றுவித்துள்ளது. பிரதமர்துறை  அமைச்சர்  ஷஹிடான்  ஹஷிம்தான்  அப்படியொரு   பரிந்துரையை  முன்வைத்தவர். “அப்பரிந்துரை  அபத்தமானது. அதுவும்  ஓர்  அமைச்சர்  அப்படிச்  சொல்லியிருப்பது  கேவலமாக இருக்கிறது.…

தண்ணீர் கட்டணத்தை அதிகரிக்க பினாங்கு அரசு அலோசனை

பினாங்கு  அரசு  நீர்  கட்டணத்தைக்  கூட்டலாமா  என்று  ஆலோசித்து  வருகிறது. தண்ணீர்  விரயமாக்கப்படுவதைத்  தடுக்க  மாநில  அரசும்  பினாங்கு  தண்ணீர்  விநியோக  நிறுவனமும்(பிபிஏபிபி)  மேற்கொண்ட  நடவடிக்கைகள்  “வெற்றி  அளிக்கவில்லை” என்பதால்  கட்டண  அதிகரிப்பு  அதற்கு  உதவுமா  என்று  ஆலோசிக்கப்படுவதாக  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  கூறினார். “தண்ணீர்  கட்டண …

பக்காத்தான்: ‘பயணம் முடிவுற்றது’ என்று கூறியதன் பொருள் என்ன? விளக்கம்…

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  மார்ச்  24-இல்,  எம்எச்370-இன்  பயணம்  “இந்தியப்  பெருங்கடலின்  தென்பகுதியில்  முடிவுற்றது”  என்று  கூறியதன்  அர்த்தம்  என்னவென்று  அரசாங்கம்  விளக்கமளிக்க  வேண்டும்  என  பக்காத்தான்  தலைவர்கள்  வலியுறுத்தியுள்ளனர். நஜிப்  அப்படி  அறிவித்ததும்  பிறகு  இடைக்காலப்  போக்குவரத்து  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேனை அழைத்து  விமானம்  கடலில் …

பயணிகள்மீது சந்தேகம் இல்லை; விமானப் பணியாளர்கள்மீது விசாரணை தொடர்கிறது

எம்எச்370-இல் சிஐஏ,  மோஸாட்  போன்ற  உளவு  அமைப்புகளின்  கையாள்கள் பயணம்  செய்து  சதிநாச  வேலையில்  ஈடுபட்டிருக்கலாம்  என்று  புரளிகள்  பரப்பப்பட்டுவரும்  வேளையில்  பயணிகளில்  எவரும்  கடத்தலில்  அல்லது  கீழறுப்பு  வேலைகளில்  ஈடுபடவில்லை  என்றும்  அவர்களில்  எவரும்  ,மனநோய்  பிரச்னைகளையோ  தனிப்பட்ட  பிரச்னைகளையோ  கொண்டவர்கள்  அல்லர்  என்று  போலீஸ்  அறிவித்துள்ளது.…

எம்எச்370 விவகாரத்தை அரசாங்கம் கையாண்ட விதத்தில் பெரும்பாலோர் அதிருப்தி

மெர்டேகா  மையம்  நடத்திய  கருத்துக்கணிப்பு  ஒன்றில்,   மலேசிய  விமான  நிறுவனத்தின்  எம்எச்370  நெருக்கடியை  அரசாங்கம்  கையாண்ட  விதத்தில்  மலேசியர்களில்  பெரும்பாலோர்  அதிருப்தி  கொண்டிருப்பது  தெரிய  வந்தது. கருத்துக்கணிப்பில்   கலந்துகொண்டோரில்  50  விழுக்காட்டினருக்கு  அதில் அதிருப்தி,  43 விழுக்காட்டினருக்குத்  திருப்தி. அரசாங்கம்  அதைக்  கையாண்ட  விதத்தில்  திருப்தியும்  அதிருப்தியும்  இன  …

அமெரிக்காவின் சூப்பர் விமானம்கூட தடுமாறுகிறது

பரந்து  விரிந்த  இந்தியப்  பெருங்  கடலில்,  சுமார்  20  கப்பல்களும்  விமானங்களும்  எம்எச்370  விமானத்தைத்  தேடும்  பணியில்  ஈடுபட்டுள்ளன.  இவற்றில்  மிகவும்  நவீனமானது  அமெரிக்கக்  கடல்படையைச்  சேர்ந்த  பி-8  புசைடோன் ரக  விமானமாகும். இது  அதிநவீன  கண்காணிப்புக்  கருவிகளைக்  கொண்ட  ஒரு  விமானம். இதன்  விலை  175 மில்லியன் …

எம்எச்370 பற்றித் தப்பான தகவல் வெளியிட்டவர்கள்மீது நடவடிக்கை: அரசாங்கம் ஆலோசனை

எம்எச்370  விமானத்தைத்  தேடும்  பணி பற்றித்  தப்பான  தகவல்களை  வெளியிட்ட  ஊடகங்கள்மீது  சட்ட  நடவடிக்கை  எடுப்பது  பற்றி  அரசாங்கம்  அலோசித்து  வருகிறது. “இதன்  தொடர்பில் ஆதாரங்களைத்  திரட்டும்படியும்  ஆலோசனை  தெரிவிக்கும்படியும்  சட்டத்துறைத்  தலைவருக்கு  அமைச்சரவை உத்தரவிட்டிருக்கிறது”, என  இடைக்காலப்  போக்குவரத்து  அமைச்சர்  ஹிஷாமுடின் உசேன்  ட்விட்டரில்  கூறினார். “தப்பான …

ஐரின் தீமைகளை எதிர்த்தவர், தன்னலமற்று வாழ்ந்தவர்

உங்கள்  கருத்து: ‘அவர்  ஒருவர். ஆனால், பலரை  எதிர்த்து  நின்றார். அவர், மலைபோன்ற கோலியாத்தை எதிர்த்து  வென்ற   நவீன-கால  டேவிட்’   மூத்த சமூக  ஆர்வலர்  ஐரின்  ஃபெர்னாண்டஸ் மறைந்தார்    அதிசயித்து  போனவன்:  தெனாகானிதா  தலைவர்  ஐரின்  பெர்னாண்டஸ்  அரிதினும்  அரிதாக வந்துதித்தவர். மலேசியா  பெற்றெடுத்த  வீரதீர  பெண்மணி. …

நஜிப்: நிதிப் பற்றாக்குறை என்பது கெடுதலான ஒன்றல்ல

உள்நாட்டு  நிதிப்  பற்றாக்குறை  என்பது  கெடுதலான  ஒன்றல்ல  என்கிறார்  பிரதமரும்  நிதி  அமைச்சருமான  நஜிப்  அப்துல்  ரசாக். தேசிய  கடன்   பெருகி  வருவதை  எதிரணியினர்  குறைகூறி  இருப்பதற்கு  பிரதமர்  இவ்வாறு  கூறினார். அஹ்மட்  ஹம்சா (பிஎன் -ஜாசின்)வுக்குப்  பதிலளித்த  நஜிப், “1990-களின்  பிற்பகுதியிலிருந்து  நிதிநிலை  பற்றாக்குறையாகத்தான்  வந்துள்ளது.  ஆனாலும், …

ஐஏடிஏ: விமானங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவீர்

அனைத்துலக  விமானப்  போக்குவரத்து  சங்கம் (ஐஏடிஏ),  அரசாங்கங்கள்  அனைத்துலக  சிவில்  விமானப்  போக்குவரத்து  அமைப்பு (ஐசிஏஓ) வரையறுத்துள்ள  பாதுகாப்பு நடைமுறைகளைப்  பின்பற்ற  வேண்டும்  என்று  கோரிக்கை  விடுத்துள்ளது. “நடந்துவிட்ட  துயரச்  சம்பவத்துக்குப்  பாதுகாப்பு  அம்சம்  ஒரு  காரணமோ  இல்லையோ,  இரண்டு  பயணிகள்  போலிக்  கடப்பிதழ்களை  வைத்து  ஒரு விமானத்தில்…

தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுத் திட்ட வரைவு – காலத்தின் கட்டாயம், ஆனால்…

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான மேம்பாட்டுத் திட்ட வரைவு, பிரதமர் துறையின் கீழ் 2012-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்டு இந்த ஆண்டோடு ஈராண்டுகள் ஆகிவிட்டன. இன்றைய நிலையில், இந்த மேம்பாட்டுத் திட்ட வரைவு உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை மீள்பார்வையிட வேண்டியது அவசியம்  என்கிறார் செம்பருத்தி கட்டுரையாளர் தமிழினி.   மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான மேம்பாட்டு…

செம்பனைத் தோட்டத் தொழிலாளர்களில் 77 விழுக்காட்டினர் வெளிநாட்டவர்

செம்பனைத்  தோட்டங்களில்  வேலை  செய்யும் 442,094  தொழிலாளர்களில்  77  விழுக்காட்டினர்  அந்நியர். இதனைத்  தெரிவித்த  தோட்டத்  தொழில்  மூலப்பொருள்  அமைச்சர்  டக்லஸ்  உக்கா எம்பா,  இது  செம்பனைத்  துறை  அந்நிய  தொழிலாளர்களையே  அதிகம்  நம்பி  இருப்பதைக்  காண்பிக்கிறது  என்றார். இப்பிரச்னைக்குத்  தீர்வுகாண  அத்துறையில்  உள்ளூர்  மக்களைக்  குறிப்பாக  இளைஞர்களைப் …

கருப்புப் பெட்டியைக் கண்டுபிடிக்க முடியுமா? சந்தேகம் என்கிறார் அதன் தயாரிப்பாளர்

மலேசிய  விமான  நிறுவத்தின்  எம்எச்370  விமானத்தில்  இருந்த  கருப்புப்  பெட்டியைக்  கண்டெடுப்பது  சிரமமான  செயலாகும்  என்கிறார்  கருப்புப்  பெட்டி  தயாரித்த  குழுவில்  இடம்பெற்றிருந்த  ஓர்  அறிவியலாளர். “விழுந்தது  எந்த  இடம்  எனத்  தெரியாத  நிலையில்  ஆயிரம்  சதுர  கிலோ  மீட்டர்  பரப்பில்,  ஆழமான  கடலில்  கருப்புப்  பெட்டியைக்  கண்டெடுப்பது …

2வது பாலத்துக்குக் கட்டணம் ரிம8.50 மிக அதிகம் என்று மக்கள்…

சுல்தான்  அப்துல்  ஹாலிம்  மு’ஆட்ஸாம்  ஷா  பாலத்தைப்  பயன்படுத்தும்  கார்களுக்கு  ரிம8.50  கட்டணம்  என்று  அறிவிக்கப்பட்டிருப்பது  குறித்து  பினாங்கு  மக்கள்  அதிருப்தி  அடைந்துள்ளனர். மார்ச்  முதல்  நாள்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கால்  திறந்து  வைக்கப்பட்ட  அப்பாலத்தை  மோட்டாரோட்டுனர்கள்  ஒரு  மாத  காலமாக  இலவசமாக  பயன்படுத்தி  வந்தனர். அந்த …

ஸ்ரீபிரடானா ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு…ரிம2.8மில்லியன்!

  கடந்த 2009 ஆண்டிலிருந்து ஸ்ரீபிரடானா ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்புக்கு அரசாங்கம் செலவிடும் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார். சாதாரண குடிமக்களுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் இவ்வேளையில் பிரதமரும் அவரது அமைச்சர்களும் வீணாகச் செலவு செய்யக்கூடாது என்று…

“வாக்காளர் இன ஒதுக்கீடு” விவகாரம்: ஷகிடான் காசிம் உடனடியாக பதவி…

  பிரதமர்துறை அமைச்சர் ஷகிடான் காசிம் "வாக்காளர் இன ஒதுக்கீடு" முறை வேண்டும் என்று ஆலோசனை கூறியதற்காக அவர் உடனடியாக அவரது அமைச்சர் பதவியத் துறக்க வேண்டும் என்று டிஎபி செரடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, நாட்டில் நல்லிணக்கத்தை நிலைநாட்ட மலேசியர்கள்…

கர்பாலும் அன்வாரும் எம்பி-களாக தொடர்ந்து இருக்கலாம்

அன்வார்  இப்ராகிமும்  கர்பால் சிங்கும்  குற்றவாளிகள்  எனத்  தீர்ப்பளிக்கப்பட்டிருந்தாலும்  அவ்விருவரும்  முறையே  பெர்மாத்தாங்  பாவ்  மற்றும்  குளுகோர்  எம்பிகளாக  தொடர்ந்து   இருக்கலாம்  என  மக்களவை  துணைத்  தலைவர்  இஸ்மாயில்  முகம்மட்  சைட்  கூறினார். நீதிமன்ற  நடைமுறைகள்  முடிவுறும்வரை  அவ்விருவரும்  எம்பிகளாக  இருக்கத்  தடையில்லை. கூட்டரசு  அரசமைப்பின்படி  தங்களின்  எம்பி …

அன்வார் தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம், தப்பில்லை

அன்வர் இப்ராகிம்  குதப்புணர்ச்சி  வழக்கில்  குற்றவாளி  என்று  தீர்ப்பளிக்கப்பட்டிருந்தாலும்  கட்சித்  தலைவர்  பதவிக்குப்  போட்டியிடலாம்  என்கிறார்  பிகேஆர்  இளைஞர்  பகுதி:  உதவித்  தலைவரும்  ஒரு  வழக்குரைஞருமான  ரட்ஸ்லான்  ஜலாலுடின். குற்றவாளி  என்று  தீர்ப்பளிக்கப்பட்டவர்  ஓர்  அமைப்பில்  பொறுப்பான  பதவி  வகிக்கக்கூடாதுதான்.  ஆனால், சங்கப்  பதிவதிகாரியிடமிருந்து  விலக்குபெற்று  தலைவராக  பதவி …

ஐரின் ஃபெர்னாண்டஸ் காலமானார்

மூத்த  சமூக  ஆர்வலர் ஐரின்  பெர்னாண்டஸ்,67,  இன்று  காலமானார். இருதயக்  கோளாறு  காரணமாக  அவர்  கடந்த  செவ்வாய்க்கிழமை  செர்டாங்  மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டிருந்தார். ஐரின்  இன்று காலை  10.50க்குக்  காலமானதாக  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்  கூறினார். ஐரின்,  அரசுசாரா  அமைப்பான  தெனாகானிதா-வை  நிறுவிய  மலேசியாவில்  குடியேறியவர்களின் …