தடுப்புக்காவல் மரணத்தைத் தடுக்க தனி விசாரணை மையங்கள்

அரசாங்கம் தடுப்புக்காவல் மரணங்களைத் தடுக்கும் நோக்கில் கைதிகளை  விசாரிப்பதற்குத் தனி லாக்-அப் மையங்களை அமைக்கும். அம்மையங்களில்தான் கைதிகள் விசாரிக்கப்படுவர். அங்கு கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு விசாரணைகள் பதிவு செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி கூறினார். “போலீஸ் நிலையங்களில் உள்ள லாக்-அப்பில் விசாரணை நடத்தப்படாது”. எல்லா…

சிலாங்கூர், மலாக்கா, ஜோகூர் ஆகியவற்றில் திறந்த வெளியில் எரிப்பதற்கு தடை

அடுத்த அறிவிப்பு வரை சிலாங்கூர், மலாக்கா, ஜோகூர் ஆகியவற்றில் திறந்த  வெளியில் எரிப்பதற்கு சுற்றுச்சூழல் துறை தடை விதித்துள்ளது. அந்தத் தகவலை அதன் தலைமை இயக்குநர் ஹலிமா ஹசான் இன்று கோலாலம்பூரில் வெளியிட்டார். என்றாலும் சமயச் சடங்குகள், கருமக் கிரியைகள் போன்றவற்றுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அவர் சொன்னார். "அந்தத்…

தமிழின உணர்வாளர் மணிவண்ணன் ஐயா அவர்களுக்கு மலேசியாவில் அஞ்சலி

தமிழின எழுச்சிக்காக ஓங்கி குரல் கொடுத்து வந்த தமிழ் திரைப்பட இயக்குனரும் தமிழ் மக்களின்  மனங்களில் தனி முத்திரை பதித்த நடிகரும், தமிழின உணர்வாளருமாகிய மணிவண்ணன் ஐயா அவர்களுக்கு மலேசியாவிலுள்ள தமிழ் உணர்வாளர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற இந்த அஞ்சலிக் கூட்டத்தை மலேசியாவில் புலம்பெயர்ந்து வாழும்…

மெனாரா அம்னோ உரிமையாளர் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படுவதற்கு தயாராக இருக்கிறார்

மெனாரா அம்னோ கட்டிடம் மீதான ஆய்வறிக்கையை தான் சமர்பிக்கத்  தவறியிருந்தால் கவனக் குறைவுக்காக தனக்கு எதிராக வழக்கு தொடரப்படுவதை  எதிர்நோக்க தயார் என அதன் உரிமையாளர் நிறுவனம் சொல்கிறது. பினாங்கு தீவு நகராட்சி மன்றத்துக்கு 2008ம் ஆண்டு ஆய்வறிக்கையைச்  சமர்பிக்கத் தவறி விட்டதாகக் கூறப்படுவது மீது உள் விசாரணையை…

13வது பொதுத் தேர்தல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான சீனர் வியூகம்

கடந்த பொதுத் தேர்தல் தற்போது பூமிபுத்ரா ஆதிக்கம் பெற்ற கூட்டரசு  அரசாங்கத்திற்குப் பதில் முஸ்லிம் அல்லாத சீனர் அடிப்படையிலான நிர்வாகத்தை  அமைப்பதற்கு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற சீனர்கள் வகுத்த திட்டம் என உத்துசான் மலேசியா சொல்கிறது. வேட்பாளர்களை தேர்வு செய்வது, நிறுத்துவது, தாக்குவது, தற்காப்பது ஆகிய  எல்லா ஏற்பாடுகளையும் சீனர்கள்…

அன்வார்: என் மீது பழி போடுவது தான் அம்னோ வழக்கம்

கடந்த வாரம் பினாங்கு அம்னோ கட்டிடத்தில் நிகழ்ந்த விபத்துக்கு தாம் பொறுப்பு  என அந்த மாநில அம்னோ தலைவர் கூறியுள்ளதை முன்னாள் துணைப் பிரதமர்  அன்வார் இப்ராஹிம் புன்னகையுடன் புறந்தள்ளியுள்ளார். ஜைனல் அபிடின் ஒஸ்மான் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு பற்றி வினவப்பட்ட போது  அவர்," வழக்கம் போல அவர்கள் என்…

ஜஹிட்: அமைச்சரைப் பதவி விலகச் சொல்லும் அதிகாரம் பிரதமருக்கு மட்டுமே…

உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி, தம்மைப் பதவி விலகச் சொல்லி விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிராகரித்துள்ளார். “அமைச்சரை நியமிப்பதும் விலக்குவதும் பிரதமரின் விருப்பமாகும். அந்த அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு”.இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் ஜஹிட் இவ்வாறு கூறினார். ஒரு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக சிவில் வழக்கு…

அன்வார்: துணை ஐஜிபி அம்னோ கையாளாக மாறக்கூடாது

துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் பக்ரி ஸினின்,  சனிக்கிழமை பாடாங் மெர்கோக்கில் நடக்கும் பேரணியைத் தடுக்க முயலக் கூடாது என பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் எச்சரித்துள்ளார். அது ஓர் அமைதிப் பேரணி.போலீஸ்  கட்டுப்படுத்துவதோ எச்சரிக்கை விடுப்பதோ கூடாது. “அவர் அம்னோ தொகுதித் தலைவர்போல் பேரணிக்கு…

எம். குலசேகரன்: அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் நியமனங்களை நீதிமன்றம் ரத்து…

கடந்த மே மாதம் அமைச்சர்களாகவும், துணையமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்ட ஐவரின் நியமனங்கள் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானவை. ஆகவே அந்நியமனங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரும் வழக்கை டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று காலை மணி 10.00 அளவில் பதிவு செய்தார்.…

பாலாவின் சத்திய பிரமாணத்தில் பிரெஞ்ச் நீதிமன்றம் ஆர்வம்

ஸ்கோர்பியன் நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதலில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுவதை விசாரணை செய்துவரும் பிரெஞ்ச் நீதிமன்றம், தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் இரண்டாவது சத்திய பிரமாணத்துடன் சம்பந்தப்பட்ட இரண்டு வழக்குரைஞர்களைத் தொடர்பு கொண்டிருப்பதாக தெரிகிறது. அதில் ஒருவர், ஜூலை 19-இல் சுவாராம் ஏற்பாடு செய்துள்ள விருந்தில் கலந்துகொண்டு பிரெஞ்ச் நீதிபதிகள் என்ன…

மேயர்: மெர்டேகா அரங்கமே பேரணிக்குப் பொருத்தமான இடம்

பக்காத்தான் ரக்யாட்டும் பல என்ஜிஓ-களும், சனிக்கிழமை ‘505 கறுப்புப் பேரணி’யை கோலாலும்பூர், பாடாங் மெர்போக்கில்தான் நடத்துவோம் எனப்  பிடிவாதமாகக் கூறிவரும் வேளையில் மெர்டேகா அரங்கமே அதற்குப் பொருத்தமான இடம் என்கிறார் கோலாலும்பூர் மேயர் அஹ்மட் பீசல். “மூன்று மாற்று இடங்களை ஏற்பாட்டாளர்களிடம் பரிந்துரைத்திருந்தாலும் மெர்டேகா அரங்கமே மிகப் பொருத்தமான…

‘சிலாங்கூர் திட்டமிட்டதைவிட கூடுதலாக செலவிட்டது’

கருமித்தனம் மிக்கவர், எளிதில் செலவு செய்யமாட்டார் என்ற பெயர் உண்டு சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமுக்கு.  அதை மறுக்கிறார் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் முன்னாள் மாநில சட்டமன்றத் தலைவருமான தெங் சாங் கிம். “2012 -இல் ரிம 1.7பில்லியன் செலவிட திட்டமிட்டிருந்தோம். ஆனால், இறுதியில் செலவிடப்பட்டது சுமார்…

‘பாஸ் கட்சியும் அம்னோவும் தனித்தனி அமைப்புக்களாக இயங்க வேண்டும்’

பாஸ் கட்சி அம்னோவுடன் 'ஒற்றுமைப் பேச்சுக்களை' நடத்துவதை எதிர்க்கும்  கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட்-டை கட்சியின்  மத்தியக் குழு உறுப்பினர் டாக்டர் சுல்கெப்லி அகமட் முழுமையாக ஆதரிக்கிறார். தேசிய அரசியலில் கண்காணிப்புப் பணியை மேற்கொள்வதற்கு பாஸ் அம்னோவுக்கு வெளியில் இருக்க வேண்டும் என…

பக்காத்தான் -பிஎஸ்எம் சந்திப்புக்கு பாஸ் ஏற்பாடு செய்யும்

பக்காத்தான் ராக்யாட் தோழமைக் கட்சிகளுக்கும் பிஎஸ்எம் என்ற மலேசிய  சோஷலிசக் கட்சிக்கும் இடையில் உயர் நிலத் தலைவர்கள் சந்திப்புக்கு பாஸ்  ஏற்பாடு செய்யும். பிஎஸ்எம் கொள்கைகள் பக்காத்தான் ராக்யாட் கொள்கைகளுக்கு ஏற்புடையதா  இல்லையா என்பது அந்தச் சந்திப்பில் விவாதிக்கப்படும். அந்த விவரங்களை பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ் அருட்செல்வன்…

ஆகவே இடி தாங்கி விழுந்ததற்கும் அன்வார் காரணமா ?

மலேசிய அரசியல்வாதிகள் ஒருவர் மீது ஒருவர் பழி போடுவதில் வல்லவர்கள்.  இறுதியில் எதுவும் நடக்காது மெனாரா அம்னோ பற்றிக் கேட்பதற்கு அன்வாரே சரியான மனிதர் அடையாளம் இல்லாதவன்#15694624: உங்களுக்கு சொந்தமாக ஒரு கட்டிடம்  இருந்தால் நீங்கள் அதனை அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். கோளாறுகள்  இருந்தால் சரி செய்ய…

கோலாலம்பூர் ‘505 கறுப்பு தின’ பேரணிக்கு ஒன்று கூடும் இடங்கள்

பக்காத்தான் ராக்யாட், அரசு சாரா அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோர்  கோலாலம்பூரில்  சனிக்கிழமை ஏழு இடங்களில் ஒன்று கூடி '505 கறுப்பு தின' பேரணிக்காக'  பாடாங் மெர்போக் திடலை நோக்கிச் செல்வர். ஒன்று கூடும் இடங்கள்: பிரிக்பீல்ட்ஸ், தேசியப் பள்ளிவாசல், ஜாலான் புடு, ஜாலான் ராஜா லாவுட்டில்  இரண்டு இடங்கள்,…

‘இசி விலகும் வரை பேரணிகள் ஒயாது’

தேர்தல் ஆணைய நடப்புத் தலைமைத்துவம் விலகும் வரையில் பக்காத்தான்  ராக்யாட்டின் '505 கறுப்பு தின' பேரணிகள் தொடரும் என பிகேஆர் உதவித்  தலைவர் தியான் சுவா கூறுகிறார். மே 5 பொதுத் தேர்தலுக்கு அந்தப் பேரணிகள் நாடு முழுவதும் நடைபெற்று  வருகின்றன. "மக்கள் விருப்பத்துக்கு எதிராக இசி போக…

நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாதவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு

கடந்த மே மாதத்தில் நாடாளுமன்றத்தின் தேவான் ரக்யாட் அல்லது தேவான் நெகாரா ஆகியவற்றின் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் அமைச்சர்களாகவும், துணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டனர். இவர்களது நியமனம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும், அந்த நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது. இதுவரையில் இது சம்பந்தமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால்,…

மகாதீர்: சிறந்த மலேசியாவுக்கு சுதந்திரங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்

சிறந்த மலேசியாவை நிர்மாணிக்க வேண்டுமானால் மலேசியர்கள் குறைவான  சுதந்திரங்களுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என டாக்டர் மகாதீர் முகமட்  கூறுகிறார். "நாம் நமது சுதந்திரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். நம்மைக் கட்டுப்படுத்திக்  கொள்ள வேண்டும். சுய கட்டுப்பாடு அவசியமாகும்," என அவர் இன்று  கோலாலம்பூரில் சொன்னார். அதிகமான…

மஇகா தலைவர் தேர்தல் செப்டம்பர் 22ல் நிகழும்

பெரிதும் எதிர்பார்க்கப்படும் மஇகா தலைவர் தேர்தல் செப்டம்பர் 22ல் நிகழும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. சங்கப்பதிவதிகாரி அலுவலக நிபந்தனைகளுக்கு ஏற்ப கட்சியின் எல்லாப்  பதவிகளுக்கான தேர்தல் இவ்வாண்டுக்குள் நிகழும் என்று மஇகா தலைவர் ஜி  பழனிவேல் தெரிவித்தார். அவர் இன்று கோலாலம்பூரில் மஇகா மத்திய செயற்குழுக் கூட்டத்துக்குப் பின்னர்  நிருபர்களிடம்…

‘மெனாரா அம்னோ பற்றி அன்வாரிடம் கேளுங்கள்’

மெனாரா அம்னோ பற்றிய கேள்விகளுக்குப் பதில் தரக் கூடிய சரியான மனிதர்  பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் என பினாங்கு அம்னோ தலைவர்  ஜைனல் அபிடின் ஒஸ்மான் கூறுகிறார். "காரணம் அந்தக் கட்டிடம் கட்டப்பட்ட நேரத்தில் துணைப் பிரதமராகவும் பினாங்கு அம்னோ தலைவராகவும் இருந்தவர் அவர் தான்,"…

கருணாநிதி மரணம் குறித்து சுயேச்சை விசாரணை தேவை: குடும்பத்தார் கோரிக்கை

முன்னாள் பொறியாளரான பி.கருணாநிதி தடுப்புக் காவலில் இறந்தது பற்றி விசாரிக்க போலீசார் சுயேச்சை விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என அவரின் குடும்பத்தார் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். “அவர் போலீஸ் காவலில் இருந்தபோது போலீசால் அடிக்கப்பட்டதால்தான்  இறந்தார்  என சந்தேகிக்கிறோம்”, என அக் குடும்பம் இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில்…

கேஎல்ஐஏ2 குத்தகையாளருக்குக் கடும் அபராதம்

கேஎல்ஐஏ2 விமான நிலையத்தைக் கட்டி முடிக்கும் பணி தாமதமடைந்திருப்பதால் அதன் குத்தகை நிறுவனத்துக்கு மலேசிய விமான நிலைய ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எம்ஏஎச்பி) கடும் அபராதம் விதித்துள்ளது. ஜூன் 16 தொடங்கி தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் அந்நிறுவனம்  ரிம199,445. 40 அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். குத்தகை நிறுவனமான யுஇஎம்சி-பீனா…