சீனப் பள்ளியில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இரவு உணவு நிகழ்ச்சிகுறித்து கிளந்தான் அரசு விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. பொழுதுபோக்கிற்கான உரிமம் இல்லாமலேயே இந்த நிகழ்வு நடத்தப்பட்டதாக முதற்கட்ட முடிவுகள் காட்டுகின்றன. பெரும்பாலான பங்கேற்பாளர்கள் ஒரு சுரங்க நிறுவனத்தில் பணிபுரியும் சீனப் பிரஜைகள் ஆனால் முஸ்லீம்…
எழும்புத்துண்டுக்கு வாலாட்டுவதுதான் மஇகாவின் மாபெரும் சாதனை!
கண்ணம்மா: கோமளி அவர்களே, இந்தியர்களின் பிரதிநிதியாக இருக்கும் மாஇகாவின் மபெரும் சாதனையாக எதை கருதுவீர்? கோமாளி: கண்ணம்மா, நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர் என்பார்கள். மஇகாவின் தொடக்கம் இனவாதம் ஆனால் தேசியத்தன்மை கொண்டதாக இருந்தது. அது ஒரு பணக்காரர்களின் கட்சி. அதில் மும்முரமாக ஈடுபட்டவர்கள்…
திரெங்கானு அரசின் அவதூறு வழக்கு தள்ளுபடி
திரெங்கானு அரசு, பள்ளிச் சீருடை வாங்கிய விவகாரத்தில் பாஸ் பத்து புரோக் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சைட் அஸ்மான் சைட் அஹ்மட் மற்றும் மூவருக்கு எதிராக தொடுத்திருந்த அவதூறு வழக்கை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. கடந்த டிசம்பர் 15-இல், மாநில அரசும் மந்திரி புசாரும்…
போலீஸ் குற்றங்களில்தான் கவனம் செலுத்த வேண்டும்
உங்கள் கருத்து: “சிஐடி-இன் (குற்றப் புலன் விசாரணைத் துறை) ஆள்பலம் இத்தனை குறைவாக இருக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை” போலீசார் குற்ற-எதிர்ப்பில் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதில்லை குழப்பமற்றவன்: சிஐடி-இன்(குற்றப் புலன் விசாரணைத் துறை)ஆள்பலம் இத்தனை குறைவாக இருக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை.அதனால்தான் குற்றம் நிகழ்ந்த இடத்துக்கு…
அம்னோவின் 4 ஆர் ஆட்டங்கள் அம்பலமாகி விட்டன, கிட் சியாங்
தேர்தல் வரலாற்றில் மிக மோசமானதாகவிருக்கும் என்று கருதப்படும் பதிமூன்றாவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை நிலைநிறுத்தவதற்காக அம்னோ 4 ஆர் (Race, Religion, Rulers and Riots) பொய் ஆட்டங்களை அதன் தேர்தல் வியூகத்தின் மையமாகக் கொண்டுள்ளது அம்பலமாகி விட்டது என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம்…
எம்டியுசி: புதிய பணி ஓய்வு வயதை உடனே அமல்படுத்துக
சட்டம் நடைமுறைக்கு வரும்வரை காத்திராமல் இப்போதே பணிஓய்வு வயதை 55-இலிருந்து 60-க்கு நீட்டிக்க வேண்டும் என்று மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்(எம்டியுசி) தனியார் துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. தனியார்துறை ஊழியர்களின் பணிஓய்வு வயதை 60-க்கு நீட்டிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டு அதற்கான சட்டமுன்வரைவும் கொண்டு வரப்பட்டு அண்மையில் மேலவையிலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது…
பள்ளிகளில் கைபேசிகளை அனுமதிப்பது தேவையற்றது
பள்ளிகளுக்குக் கைபேசிகளையும் மற்ற மின்னியல் கருவிகளையும் கொண்டுவர அனுமதிக்கப்படும் என்று கல்வி அமைச்சு மொழிந்துள்ளதற்கு டிவிட்டர் மக்களிடையே வரவேற்பு இல்லை. சிலர் அந்த முடிவை வரவேற்றாலும் வரவேற்பதற்குத் தகுந்த காரணங்களை அவர்களால் முன்வைக்க முடியவில்லை. ஆனால் டிவிட்டர்ஜெயாவில் பெரும்பாலோருக்கு அது அனுமதிக்கப்படுவதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதன் தொடர்பில்…
டிஏபி: “அம்னோவுக்குத்தான் கம்யூனிஸ்டுகளுடன் தொடர்பு உண்டு; எங்களுக்கு இல்லை”
டிஏபி, தனக்கு கம்யூனிஸ்டுகளுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை வலியுறுத்தி சீனாவின் கம்முனிஸ்டுக் கட்சியுடன் நேரடி தொடர்பு வைத்திருப்பது பிஎன்தான் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. 2009 அக்டோபர் 12-இல்,அம்னோ இளைஞர் பகுதி, பிஎன் இளைஞர்களுக்கும் சீனாவின் கம்முனிஸ்டு இளைஞர் லீக்கு(சிஒய்எல்)க்குமிடையில் உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள நிரந்தர செயலகம் ஒன்றை அமைத்தது என்று…
மே13 மீண்டும் நிகழ அனுமதியோம்
“மே13 மீண்டும் நிகழலாம் என்ற மறைமுக மருட்டல், தங்கள் விருப்பப்படி காரியங்கள் நடக்கவில்லை என்றால் அது மீண்டும் நடப்பதை ஊக்கப்படுத்துவதுபோல் உள்ளது.” முகைதின் உண்மையிலேயே மே13-ஐத் தவிர்க்க விரும்புகிறாரா? குரல்:மே13 துயரச் சம்பவம் 1969-இல் நடந்தது.40 ஆண்டுகளுக்கு முன்பு. அதன்பின் இந்த நான்கு தசாப்தங்களாக இனங்களிடையே ஒற்றுமையை…
சரவாக் பிகேஆர் உதவித் தலைவர் ஹெலிகோப்டர் விபத்தில் கொல்லப்பட்டார்
சரவாக் மாநில பிகேஆர் உதவித் தலைவர் பீட்டர் அட்டு மாயாவ் ஒரு ஹெலிகோப்டர் விபத்தில் கொல்லப்பட்டார். அவரின் மரணத்தை பிகேஆர் புக்கிட் லான்ஜான் சட்டமன்ற உறுப்பினர் எலிசபெத் வோங் ஒரு டிவிட்டர் செய்தியில் உறுதிப்படுத்தினார். விபத்தில் கொல்லப்பட்ட நால்வரில் பீட்டரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதில் இரண்டாவதாகும். அமைதியான கொள்கைவாதி பீட்டரின்…
ஹிஷாமுடின்: பக்காத்தான் ‘ஊடுருவல்’ இன்னும் தேசிய மருட்டலாக மாறவில்லை
பக்காத்தான் ராக்யாட்டுக்குள் கம்யூனிஸ்ட், ஜெம்மா இஸ்லாமியா சித்தாந்தங்கள் ஊருருவியுள்ளதாகக் Read More
ஷபாஸை சிலாங்கூர் எடுத்துக்கொள்வதை ஆதரித்து பிகேஆர் பேரணி
சிலாங்கூர் பிகேஆர் இளைஞர்கள், மாநிலத்துக்குக் குடிநீர் வழங்க குத்தகை பெற்றுள்ள ஷியாரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூரின்(ஷபாஸ்) நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளும்படி மந்திரி புசாரை வலியுறுத்த திங்கள்கிழமை பேரணி ஒன்றை நடத்துவர். “ஷபாஸ், நல்ல முறையில்(நீர் ஆதாரங்களை)நிர்வகிக்கவில்லை, சிலாங்கூர் மக்களுக்கும் நல்ல சேவையை வழங்கவில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம். “இதன் தொடர்பில்…
குற்ற விகிதத்தை அரசியலாக்காதீர்: சிலாங்கூர் போலீஸ் தலைவர்
செர்டாங் எம்பி குற்றப் புள்ளிவிவரங்களை அரசியலாக்கக் கூடாது என்று வலியுறுத்திய சிலாங்கூர் போலீஸ் தலைவர் துன் ஹிசான் துன் ஹம்சா,அவர் குற்றச்செயல்களைக் குறைக்க போலீசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். “புள்ளிவிவரங்களைப் பற்றி ஏன் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.வாருங்கள், குற்றச்செயல்களைக் குறைக்க சேர்ந்து பாடுபடுவோம்”. இன்று காலை ஷா…
மே 13ஐ முஹைடின் உண்மையிலேயே தவிர்க்க விரும்புகிறாரா? லிம் கிட்…
எம்பி பேசுகிறார்: அடுத்த பொதுத் தேர்தலில் என்ன விலை கொடுத்தாவது அம்னோ/பாரிசான் நேசனல் ஆட்சியை நிலைத்திருக்க செய்வதற்கு அச்சத்தையும் இனத்தையும் பயன்படுத்தும் தரம் குறைந்த, பொறுப்பற்ற ஈவிரக்கமற்ற அவமதிப்பைத் தரக் கூடிய இரட்டை அரசியலில் ஈடுபடவில்லை என்பதையும் மே 13 மீண்டும் நிகழாமல் தடுக்க விரும்புவதாக கூறியுள்ளதையும் நிரூபித்து…
போலீஸ் சிறப்புப் பிரிவு நமது விவேகத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது
"வழக்கம் போல பழைய பாணியில் ஒர் அச்சுறுத்தல்: உங்கள் படுக்கைக்கு கீழே சிவப்புச் சட்டைக்காரர்கள். இப்போது வேடிக்கைக்காக ஜிஹாட் போராட்டக்காரர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்." போலீஸ் சிறப்புப் பிரிவு: கம்யூனிஸ்ட்களும் ஜெம்மா இஸ்லாமியா உறுப்பினர்களும் எதிர்க்கட்சிகளுக்குள் ஊடுருருவுகின்றனர் உங்கள் அடிச்சுவட்டில்: கம்யூனிஸ்ட்களும் ஜெம்மா இஸ்லாமியா உறுப்பினர்களும் என்றாவது ஒரு நாள்ஆட்சியைக் கைப்பற்றும்…
பாஸ் இஸ்லாமிய சித்தாந்தத்தை கைவிட தயாரா?, ஹிண்ட்ராப் சவால்
மலேசியாகினி மின்னூடக செய்தி அகப்பக்கத்தில் பாஸ் கட்சியின் கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் சித்தி மரியா, ஹிண்ட்ராப் இயக்கத்தை இனவாரி அமைப்பு என பொருள் படும் வகையில் கருத்து வெளியிட்டிருப்பதை நாங்கள் வன்மையாக எதிர்த்து கண்டிக்கிறோம். இந்திய வாக்காளர்களை சாமானியர்களாக கருதும் போக்கை பாஸ் மற்றும் பக்காத்தான்…
மே 13 ஒரு காலத்தில் பேசக் கூடாத விஷயமாக இருந்தது…
"இனப் பதற்றம் என்றும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள வேளையில் அந்த நிகழ்வின் ஒரு பக்கக் கதையை மட்டுமே சித்தரிக்கும் திரைப்படத்தை ஒளிபரப்புவது சரியா?" புதிய மே 13 திரைப்படம் சர்ச்சையை மூட்டியுள்ளது ஏஜிஎம்: 1990ம் ஆண்டுகளின் மத்தியில் காலஞ்சென்ற யாஸ்மின் அகமட் இயக்கிய பெட்ரோனாஸ் ஹரிராயாவி ளம்பரக் குறும்படத்துக்கு…
பக்காத்தானில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பது பற்றி ஹிஷாமுக்கு “உறுதியாகத் தெரியவில்லை”
பக்காத்தான் ராக்யாட்டுக்குள் கம்யூனிஸ்ட்களும் பயங்கரவாதிகளும் ஊடுருவியிருப்பதாக கூறப்படுவது மீது தமக்கு 'உறுதியாகத் தெரியாது' என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறியிருக்கிறார். "என்னிடம் அந்த விவகாரம் தொடர்பில் இப்போதைக்கு எந்தத் தகவலும் இல்லை. ஆகவே அது உண்மையா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியாது," என ஹிஷாமுடின் சொன்னதாக…
தண்ணீர் தட்டுப்பாடா, சபாஷ் ஆதாரங்கள் காண்பிக்க வேண்டும்
சிலாங்கூரிலும் கோலாலம்பூரிலும் மிகப் பெரிய அளவில் தண்ணீர் தட்டுப்பாட்டு நேரலாம் என்று கூறும் சபாஷ் அவ்வாறு கூறுவதற்கு அடிப்படையாகவுள்ள தகவல்களை வெளியிட வேண்டும் என்கிறார் கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு. அந்த வகையில் 2012 ஜனவரியிலிருந்து 2012 ஜூலை 15வரை அணைக்கட்டுகளிலிருந்தும் ஆறுகளிலிருந்தும் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அனுப்பப்பட்ட சுத்திகரிக்கப்படாத…
எஸ்பி கம்முனிஸ்டுகளையும் ஜேஐ ஆள்களையும் பெயர் குறிப்பிட முடியுமா?
பக்காத்தானில் கம்முனிஸ்டுகளும் ஜேஐ பயங்கரவாதிகளும் ஊடுருவி இருப்பதாகக் கூறும் போலீஸ் Read More
“பக்காத்தானுக்குப் பயங்கரவாதத் தொடர்பு என்று தேடிப் பிடித்து ஒரு குற்றச்சாட்டைச்…
பிஎன் அரசு, வேறு ஒன்றும் கிடைக்காத நிலையில் பக்காத்தானில் கம்முனிஸ் Read More
உலகத் தரங்களைப் பின்பற்றுங்கள் என தேர்தல் ஆணையத்துக்கு அறிவுரை
தேர்தல் நடைமுறைகள் குறிப்பாக அங்கீகாரம் பெற்ற பார்வையாளர்கள் தேர்வும் மற்றும் அவர்கள் மீது விதிக்கப்படும் விதிமுறைகளும் அனைத்துலகத் தரங்களுக்கு இணையாக இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவு செய்துள்ள நான்கு அமைப்புக்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. "கட்சி சார்பற்ற…
காதிர்: என்னுடைய காலத்தில் மெர்தேக்கா பிஎன்-னுக்குச் சொந்தமானதாக இல்லை
சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும் என முன்னாள் Read More
‘பக்காத்தான் ஆட்சிக்கு வந்தாலும் எந்த அநீதியையும் எதிர்த்துப் போராடுங்கள்’
எதிர்வரும் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் புதிய அரசாங்கத்தை அமைத்தாலும் மக்கள் நேர்மையற்ற ஆளுமைக்கு எதிராக போராடுவதற்கு தொடர்ந்து துணிச்சலைப் பெற்றிருக்க வேண்டும் என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கேட்டுக் கொண்டுள்ளார். "மக்களுக்கு அதிகாரம் கிடைக்கும் போது அதனை அகற்றுவது மிகவும் கடினம். அதனால்தான் யார் ஆட்சிக்கு…