‘புத்ராஜெயாவிலிருந்து பிஎன்-னை துரத்துவதற்கு ஒரு 58 பில்லியன் ரிங்கிட்தான் காரணம்’

உங்கள் கருத்து : 'அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள மக்கள் வரிப்பணத்தை பயன்படுத்தும் இந்த கிறுக்குத்தனம் நிற்க  வேண்டும், வாக்காளர்கள் மட்டுமே நஜிப்பை நிறுத்த முடியும்' ஆதரவை வாங்குவது- நஜிப்பின் 13வது பொதுத் தேர்தல் 'வர்த்தக மயம்' கிம் குவேக்: தேர்தலை இலக்காகக் கொண்டு நஜிப் செய்து வரும்…

‘இந்திய சமுதாயம் தன்மானமுடையது என்பதை அம்னோவிற்கு உணர்த்துவோம்’

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஏப்ரல் 24, 2013. நேற்று வெளிவந்த நாளிதழ்களில் இந்திய சமுதாயம்  சூல்கிப்ளி நோர்டினை ஏற்றுக் கொண்டு விட்டது என்று பிரதமர் கூறியுள்ளது இந்தியர்களை எப்படி வேண்டுமாலானலும் ஏமாற்றலாம் என்பதில் அவர் மிகுந்த "நம்பிக்கை" கொண்டுள்ளார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. வேதமூர்த்தி பாரிசானுடன் தேர்தல் பிரகடனம் …

நம்பவைத்து நாசமாக்கிய தலைவர் இவரன்றோ!

-எம். குலசேகரன், ஏப்ரல் 23, 2012. 1980-களில் இந்திய சமுதாயத்தை ஏழ்மை நிலையில் இருந்து பொருளாதார துறையில் உயர்த்தப் போவதாக தானைத் தலைவரும் சமுதாயத் தலைவருமான டத்தோ ஶ்ரீ உத்தாமா சாமிவேலு, ஏழை எளிய , சாமானிய மக்களிடமிருந்தும் ஏறக்குறைய 106 மில்லியன் (10 கோடி) வெள்ளிப் பணத்தை வசூல்…

சுயேச்சை வேட்பாளர்களை நிராகரியுங்கள்- கிட் சியாங்

மூத்த டிஏபி தலைவர் லிம் கிட் சியாங்,  13வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களை  வாக்காளர்கள் ஒதுக்கித்தள்ள வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளார்.  அவர்கள் பக்காத்தான் ரக்யாட் உறுப்பினர்களோ,  பிஎன் உறுப்பினர்களோ கவலை இல்லை  அவர்கள் அத்தனை பேரையும் நிராகரிக்க வேண்டும். சுயேச்சை வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று…

பக்கத்தானை புத்ரா ஜெயா பக்கம் நெருங்க விடாதீர், ஹிண்ட்ராப்

'பிஎன் -னுக்கு அளிக்கும் வாக்கு உண்மையில் பெருந்திட்டத்துக்குக் கொடுக்கப்படும் வாக்கு என ஹிண்ட்ராப் தலைவர்கள் ஞாயிற்றுக் கிழமை நிகழ்ந்த  அந்த அமைப்பின் மூன்றாவது தேசிய மாநாட்டில் கூறியுள்ளனர். அதனால் ஆளும் கூட்டணியை ஹிண்ட்ராப் உறுப்பினர்கள் ஆதரிக்க வேண்டும் என அதன் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். பிஎன் -உடன் செய்து…

டமன்சாரா நெருக்கடிக்கு ‘சித்தாந்த வேறுபாடுகளே’ காரணம்

கோட்டா டமன்சாராவில் வேட்பாளர் நியமனத்தில் பிஎஸ்எம்-மும் பாஸ் கட்சியும் முட்டி மோதிக்கொண்டிருப்பதற்கு இரண்டு கட்சிகளினதும் “சித்தாந்த வேறுபாடுகள்தாம்” காரணம் என்கிறார் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம். “பாஸுக்கும் பிஎஸ்எம்முக்குமிடையில் சித்தாந்த வேறுபாடுகள் இருப்பதால் அது பற்றி விவாதிக்க மேலும் சில நாள்கள் தேவைப்படும்”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.…

1.3 பில்லியன் ரிங்கிட் திட்டம் கொடுக்கப்பட்டது மீது பிகேஆர் கேள்வி…

பேராக்கில் நாடாளுமன்றத் தொகுதி ஒன்றுக்குப் போட்டியிடும் பிஎன் வேட்பாளர்களில் ஒருவரும் அந்தத் தொகுதிக்கான நடப்பு உறுப்பினருமான ஒருவருக்கு கல்வி அமைப்பு ஒன்றைக் கட்டி பராமரிப்பதற்கு உதவும் 1.3 பில்லியன் ரிங்கிட் பெறும் திட்டம் கூட்டரசு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது பற்றி பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கேள்வி எழுப்பியுள்ளார்.…

வாக்காளர் பட்டியலில் 28,000க்கும் மேற்பட்ட ‘அந்நிய’ வாக்காளர்கள்

தேர்தல் வாக்காளர் பட்டியலில் அந்நிய வம்சாவளியைச் சேர்ந்த குறைந்தது 28,593 வாக்காளர்கள் உள்ளனர்.  அவர்களில் பெரும்பாலோர் மிக நெருக்கமான போட்டி நிகழும் சிலாங்கூர், சபா மாநிலங்களில் உள்ளனர். அந்தத் தகவலை மெராப் எனப்படும் மலேசியத் தேர்தல் வாக்காளர் பட்டியல் ஆய்வு திட்ட அமைப்பு வெளியிட்டுள்ளது. அவர்கள் அனைவரும் 2012…

அன்வார்: ஒர் இந்தியர் கொடுத்த முத்தம் சுல் நூர்டினைக் காப்பாற்றாது

ஒரு முத்தம் வெறும் முத்தம் தான். பிஎன் ஆதரவாளரான ஒர் இந்தியர் கொடுத்த முத்தம் பிஎன் ஷா அலாம் நாடளுமன்றத் தொகுதி வேட்பாளர் சுல்கிப்லி நூர்டினைக் காப்பாற்றப் போதுமானது அல்ல என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். "முழுக்க முழுக்க இன வெறி, மற்ற சமயங்களை இழிவுபடுத்துவது…

கிட் சியாங் குறித்து சொன்ன கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க மகாதிருக்குக்…

டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங் குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் மூன்று நாள்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வழக்குரைஞர் கர்பால் சிங் கோரிக்கை கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரான…

வேட்பாளர் நியமன நாளன்று பிஎன் ரொக்கப் பற்றுச் சீட்டுக்களைக் கொடுத்தது

பிஎன் அலோர் ஸ்டார், நிபோங் திபால் ஆகியவற்றிலுள்ள வேட்பாளர் நியமனங்களுக்கு அருகில் பொது மக்களுக்கு ரொக்கப்பற்றுச் சீட்டுக்களை கொடுத்ததாக  Pemantau எனப்படும் தேர்தல் கண்காணிப்புக் குழு கூறிக் கொண்டுள்ளது. அலோர் ஸ்டாரில் விநியோகிக்கப்பட்ட ரொக்கப்பற்றுச் சீட்டுக்களின் மதிப்பு 80 ரிங்கிட் என்றும் அந்தக் குழுவில் ஒர் உறுப்பினரான மரியா…

பக்காத்தான் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால் சரவாவுக்கு ஒரு புதிய சிஎம்?

வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால் சரவாவுக்கு ஒரு புதிய முதலமைச்சர் கிடைக்கலாம் என்கிறார் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங். பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால், மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அரசாங்கக் கட்டுப்பாடின்றி முதலமைச்சர் அப்துல் தாயிப் மஹ்மூட் பற்றி விசாரிக்க…

ஜோகூர் பாருவில் முன்னாள் இராணுவத் தளபதியின் ‘போஸ்னியா போர் திட்டம்’

முன்னாள் இராணுவத் தளபதி ஹஷிம் உசேன், 1990-இல் போஸ்னியா-ஹெசகோவினாவின் உள்நாட்டுப் போரில் செயல்படுத்தி வெற்றிகண்ட அதே போர் திட்டத்தை ஜோகூர் பாருவில் அம்னோவின் மூத்த தலைவரான ஷாரிர் அப்துல் சமட்டுக்கு எதிராகவும் கடைப்பிடிப்பார். “அதை இப்போது விவரிக்கப்போவதில்லை. ஆனால் (போஸ்னியாவில் கடைப்பிடித்த) அதே போன்ற திட்டம்தான். ஜோகூர் பாரு…

ஹலோ.. ஹாடி, பிஎஸ்எம் மார்க்சிஸ்ட் கட்சியா?

ஒரு  யுடியூப் வீடியோவில் பாஸ் கட்சி தலைவர் ஹாடி அவாங் ஓர் இஸ்லாமிய கட்சி ஒரு "மார்க்சிஸ்ட்" கட்சியுடன் ஒத்துழைக்க முடியாது என்று குற்றம் சாட்டியுள்ளது குறித்து பிஎஸ்எம் (மலேசிய சோசலிசக் கட்சி) அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கடும் தோரணையில் கேட்டுக் கொண்டது. ஹாடிநேரடியாக பெயர் குறிப்பிட்டு  கூறாவிட்டாலும்,…

பாரிசான் வேட்பாளர் : நாடற்ற இந்தியர்களே பொறுமையாக இருங்கள்!

ஜொகூர், பாசீர் கூடாங் நாடாளுமன்ற தொகுதி பின் வேட்பாளர் நாடற்ற இந்தியர்களின் பிரச்னை விவகாரத்தில் பொறுமையைக் கடைபிடிக்குமாறு அத்தொகுதி இந்திய வாக்காளர்களிடம் கூறினார். இந்த விசயத்தில் அரசாங்கம் இன்னொரு சாபாவை உருவாக்க அரசாங்கம் விரும்பவில்லை என்றாரவர். சபாவுக்குள் நுழைந்த சட்டவிரோத குடியேற்றக்காரர்களுடன் நாடற்ற இந்தியர்களை இணைத்துப் பேசிய அந்த…

நஜிப்: சுல் நோர்டின் இந்தியர் நலனுக்காக பாடுபடுவார்

பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக், பெர்காசா உதவித் தலைவர் சுல்கிப்ளி நோர்டின் இந்துக்கள் குறித்துத் தெரிவித்த கருத்துகளால் ஏற்பட்டுள்ள  ஆத்திரத்தைத் தணிக்கும் முயற்சியில் இன்று  ஈடுபட்டார்.  இந்தியர்கள் இப்போது சுல்கிப்ளியுடன் நட்புடன் இருப்பதாக அவர் கூறினார். “இந்தியர்களில் சிலர் அவருக்கு முத்தம்கூட கொடுத்திருக்கிறார்கள்”, என்று குறிப்பிட்ட நஜிப்,…

சாபாவில் 11 நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்ல பக்காத்தான் நம்பிக்கை

சாபாவில் பல இடங்களில் பல்முனை போட்டிகளை எதிர்நோக்கினாலும் குறைந்தது 11 நாடாளுமன்றத் தொகுதிகளையாவது கைப்பற்ற முடியும் என்று சாபா பக்காத்தான் திடமாக நம்புகிறது. செய்தியாளர்களிடம் பேசிய சாபா டிஏபி தலைவர் ஜிம்மி வோங், இப்போது கைவசமுள்ள கோட்டா கினாபாலு, துவாரான், பியுஃபோர்ட் ஆகியவற்றைத் தக்கவைத்துக்கொள்வதில் பிரச்னை இருக்காது என்று…

கோத்தா டமன்சாரா தவிர, பிகேஆர்-பாஸ் தொகுதி மோதல்கள் தீர்க்கப்பட்டுள்ளன

ஆறு தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்கள் நிற்பதால் உருவான தகராற்றை பாஸ் கட்சியும் பிகேஆர் கட்சியும் தீர்த்துக் கொண்டுள்ளன. தலா ஒவ்வொன்றும் மூன்று தொகுதிகளை ஏற்றுக் கொண்டுள்ளன. என்றாலும்  கோத்தா டமன்சாரா சட்டமன்றத் தொகுதி மீதான தேக்க நிலை தொடருகின்றது. லாபுவான் (சபா) நாடாளுமன்றத் தொகுதி சுங்கை ஆச்சே (பினாங்கு)…

போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக டிஏபி-இன் சிம் அறிவிப்பு

மலாக்காவில் மாநிலச் சட்டமன்றதுக்காக கோட்டா லக்‌ஸ்மணா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த டிஏபி-இன் சிம் தொங் ஹிம், மனு செய்த 48-மணி நேரத்துக்குப் பின்னர் தாம் போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார். இன்று மலாக்கா கட்சித் தலைமையகத்தில் டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட்…

டிவி3 மூத்த நிர்வாகிகளை ஜெயிலில் போடுவேன்; அன்வார் மருட்டல்

மே 5ம் தேதி பக்காத்தான் ராக்யாட் அடுத்த அரசாங்கத்தை அமைக்குமானால் டிவி3 என அழைக்கப்படும்  Sistem Televisyen (M) Bhd-ன் உயர் நிலை நிர்வாக அதிகாரிகளை அவதூறு சொன்னதற்காக சிறையில் அடைக்கப் போவதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். பக்காத்தான் அவதூறுகளை அனுமதிக்காது. காரணம் அதன் அரசாங்கம்…

‘என் குடும்பத்தை இழுக்க வேண்டாம்’; நுருல் இஸ்ஸாவுக்கு நொங் சிக்…

லெம்பா பந்தாயில் நுருல் இஸ்ஸாவை எதிர்க்கும் ராஜா நொங் சிக் ராஜா சைனல் அபிடின், தனிப்பட்ட விவகாரங்களைப் பொதுவில் விவாதிக்க வேண்டாம் என  எச்சரிக்கை விடுத்துள்ளார் “அவர் அண்மையில் என் தந்தை, என் மகள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் பற்றிப் பேசியுள்ளார். அவற்றை நான் பல தடவை ஊடகங்களுக்கு விளக்கிச்…

இசி: மீட்டுக் கொள்வது அனுமதிக்கப்பட மாட்டாது- பெயர்கள் வாக்குச் சீட்டுக்களில்…

வேட்பாளர் நியமனங்கள் இறுதி முடிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் 13வது பொதுத் தேர்தலில்  போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொள்ள முடியாது. போட்டியிலிருந்து விலகிக் கொள்வதற்கு அனுமதித்த சட்ட விதி ரத்துச் செய்யப்பட்டு விட்டதாக தேர்தல்  ஆணையத் (இசி) வான் அகமட் வான் ஒமார் இன்று கூறினார். "1980ம் ஆண்டுக்கான தேர்தல் விதிமுறைகளில்…

அம்னோவிலிருந்து கட்சி நீக்கம் செய்யப்பட்ட கமிலியாவுக்கு பிகேஆர் அழைப்பு

கோலா கங்சார் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கும் அம்னோவிலிருந்து கட்சி நீக்கம் செய்யப்பட்ட அதன் மகளிர் துணைத் தலைவர் கமிலியா இப்ராகிமுக்கு  தன்னுடன் சேர்ந்துகொள்ளுமாறு பிகேஆர் அழைப்பு விடுத்துள்ளது. கமிலியாவுக்கு அந்த அழைப்பை விடுத்த பிகேஆர் துணைத் தலைவர் ரோட்சியா இஸ்மாயில் அந்த முன்னாள் அம்னோ தலைவி…